Saturday, December 1, 2012

வரலாற்றில் இன்று Today in History திசம்பர் 1

                                         வரலாற்றில் இன்று   
Today in History 
திசம்பர்
1


    உலக எய்ட்சு விழிப்புணர்வு நாள்.
    1420 - இங்கிலாந்தின் ஐந்தாம் என்றி மன்னன் பாரிசை முற்றுகையிட்டான்.
    1640 - போர்த்துக்கல் இசுபெயினிடம் இருந்து விடுதலை பெற்றது. நான்காம்சொவாவோ மன்னனானான்.
    1783 -  உயிர்வளி நிரம்பிய வான்கூண்டில் (பலூனில்)  சார்லசு எயினி எனும் இருவர் இரண்டு மணி நேரம் பறந்து காண்பித்தனர்
    1822 - முதலாம் பீட்டர் பிரேசிலின் பேரரசன் ஆனான்.
    1875 - வேல்சு இளவரசர் (இங்கிலாந்தின் ஏழாம் எட்வேர்டு மன்னர்) கொழும்பு வந்தார்.
    1918 - ஐசுலாந்து  தென்மார்க்கு முடியாட்சியின் கீழ்த்தன்னாட்சி உரிமை பெற்றது.
    1918 - சேர்பிய, குரொவேசிய, சிலவேனிய இராச்சியம் (பின்னர் யூகொசுலாவிய இராச்சியம்) அமைக்கப்பட்டது.
    1924 - எசுதோனியாவில் கம்யூனிசப் புரட்சி தோல்வியில் முடிந்தது.
    1939 - புகழ் பெற்ற ஆங்கிலத் திரைப்படமான "Gone with the wind" முதன் முதலில் நியூயார்க்கில் திரையிடப்பட்டது.
    1958 - பிரான்சிடம் இருந்து மத்திய ஆபிரிக்கக் குடியரசு விடுதலை பெற்றது
    1959 - பனிப்போர்: அண்டார்டிக்கா கண்டத்தில் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தவும் அக்கண்டத்தை அறிவியல் ஆராய்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டது.
    1960 - கொங்கோ அதிபர் பத்திரிசு லுமும்பா இராணுவத் தளபதி மொபுட்டுவினால் கைது செய்யப்பட்டார்.
    1961 - இந்தோனீசியாவின் மேற்கு நியூ கினியில் மேற்கு பப்புவா குடியரசு அறிவிக்கப்பட்டது.
    1963 - நாகாலாந்து இந்தியாவின் 16வது மாநிலமானது.
    1965 - இந்தியாவில் எல்லைக் காவற்படை அமைக்கப்பட்டது.
    1971 - இந்திய இராணுவம் காசுமீரின் ஒரு பகுதியைப் பிடித்தது.
    1973 - பப்புவா நியூ கினி ஆசுதிரேலியாவிடம் இருந்து  தன்னாட்சி பெற்றது.
    1981 - எயிட்ஸ் நோக்கொல்லி அதிகாரபூர்வமாக கண்டறியப்பட்டது.
    1982 - முதலாவது செயற்கை இருதயம் யூட்டா பல்கலைக்கழகத்தில் பார்னி கிளார்க்கு என்பவருக்குப் பொருத்தப்பட்டது.
    1989 - பனிப்போர்:  பொதுவுடைமைக்  கட்சியின் ஏகபோக அதிகாரத்தை அகற்ற கிழக்குச் செருமனி நாடாளுமன்றம் அதன் அரசியலமைப்பைத் திருத்தியது.
    1989 - பிலிப்பீன்சு அதிபர் கொரசோன் அக்கீனோவை பதவியில் இருந்து அகற்ற எடுக்கப்பட்ட முயற்சி தோல்வியடைந்தது.
    1990 - பிரிட்டனையும், பிரான்சையும் இணைக்கும் Channel Tunnel எனப்படும் கடலடி சுரங்கப் பாதை தோண்டும் பணி நிறைவு பெற்றது.
    2006 - இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய  இராசபக்ச மீது கொழும்பில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் அவர் காயமெதுவுமின்றி தப்பினார்.

No comments:

Post a Comment