Tuesday, December 11, 2012

Today in History 11/12 வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று   
Today in History  திசம்பர் 11

  1.     1789 - ஐக்கிய அமெரிக்காவின் மிகப் பழமையான பொதுப் பல்கலைக்கழகம் வட கரொலைனா பல்கலைக்கழகம் (சாப்பல்ஃகில்) அமைக்கப்படட்து.
  2.     1792 - பிரெஞ்சுப் புரட்சி: பிரான்சின் பதினாறாம் லூயி மன்னன் நாட்டுத்துரோகக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டான்.
  3.     1816 - இந்தியானா ஐக்கிய அமெரிக்காவின் 19 ஆவது மாநிலமானது.
  4.     1907 - நியூசிலாந்தின் நாடாளுமன்றக் கட்டடம் தீயில் எரிந்து சாம்பரானது.
  5.     1917 - பிரித்தானியப் படைகள் ஓட்டோமான் பேரரசிடம் இருந்து ஜெருசலேமை மீட்டன.
  6.     1927 - சீனாவின் குவாங்சூ நகரை கம்யூனிசுட்டுகள் கைப்பற்றி அதனைக் குவாங்சூ சோவியத்து என மாற்றியிருப்பதாக அறிவித்தனர்.
  7.     1931 - ஆஸ்திரேலியா, கனடா, அயர்லாந்து, நியூசிலாந்து, மற்றும் தென்னாபிரிக்கா ஆகியவற்றுக்குத் தமது முழுமையான அரசியலமைப்புகளைப் பேணும் சட்டமூலம் வெசுட்மின்சுடர் சட்டம் 1931 பிரித்தானிய நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது.
  8.     1936 - ஐக்கிய இராச்சியத்தின் மன்னன் எட்டாம் எட்வேர்ட் முடி துறந்தான்.
  9.     1941 - இரண்டாம் உலகப் போர்:  செர்மனியும் இத்தாலியும் ஐக்கிய அமெரிக்காமீது போரை அறிவித்தன
  10.     1946 - UNICEF எனப்படும் ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் சிறுவர்கள் அவசர நிதி அமைப்பு நிறுவப்பட்டது
  11.     1957 - சிங்கப்பூரின் புதிய கவர்னராக Sir William Goode நியமிக்கப்பட்டார்.
  12.     1958 - அப்பர் வோல்ட்டா பிரான்சிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
  13.     1964 - நியூயோர்க் நகரில் ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் சே குவேரா உரையாற்றினார். இவர் உரையாற்றிக் கொண்டிருந்தபோது ஐநா கட்டடத்தின் மீது குண்டுத் தாக்குதல் இடம்பெற்றது.
  14.     1972 - அப்பல்லோ 17 சந்திரனில் இறங்கியது.
  15.     1981 - எல் சல்வடோரில் இராணுவத்தினர் நாட்டின் உள்நாட்டுப் போரின் ஒரு கட்டமாக கிட்டத்தட்ட 900 பொதுமக்களை கொன்றனர்.
  16.     1981 - ஐக்கிய நாட்டுச் சபையின் பொதுச் செயலாளராகப் பதவியேற்றார் பெருவின் Perez De Cuellar.
  17.     1988 - முதல் போட்டியிலேயே 100 ஓட்டங்கள் எடுத்து சாதனை படைத்தார்  தெண்டுல்கர்

No comments:

Post a Comment