Wednesday, December 5, 2012

வரலாற்றில் இன்று Today in History 5/12

வரலாற்றில் இன்று   
Today in History  திசம்பர் 5

  1.     உலகத் தொண்டர் நாள்.
  2.     1360 - பிரெஞ்சு நாணயம் பிராங்க் அறிமுகப்படுத்தப்பட்டது.
  3.     1492 - கொலம்பசு இசுபனியோலா தீவை அடைந்தார். இத்தீவை அடைந்த முதலாவது ஐரோப்பியர் இவரே.
  4.     1746 - இசுபானிய ஆட்சிக்கெதிராக  செனோவாவில் கிளர்ச்சி ஆரம்பமானது.
  5.     1848 - கலிபோர்னியாவில் பெருமளவு தங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக அமெரிக்க அதிபர்  சேம்சு போக் அறிவித்தார்.
  6.     1863 - இங்கிலாந்தில் கால்பந்தாட்டத்திற்கான விதிமுறைகள் வெளியிடப்பட்டன.
  7.     1893 - மின்சாரத்தில் இயங்கும் தானுந்து அறிமுகமானது.
  8.     1896 - சென்னை கன்னிமாரா பொது நூலகம் ஆளுநர் சர் ஆர்தர்  ஆவுலக்கு என்பவரால் பொது மக்களுக்காகத் திறந்து விடப்பட்டது.
  9.     1933 - யூட்டா 36வது மாநிலமாக ஐக்கிய அமெரிக்காவுடன் இணைந்தது.
  10.     1936 - சோவியத் ஒன்றியம் தனது புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தியது. கிர்கிஸ்தான் சோவியத் ஒன்றியத்திற்குள் முழுமையான குடியரசாக அறிவிக்கப்பட்டது.
  11.     1941 - இரண்டாம் உலகப் போர்: பின்லாந்து, ஹங்கேரி, ருமேனியா நாடுகளின் மீது பிரித்தானியா போரை அறிவித்தது.
  12.     1958 - STD தொலைபேசி இணைப்பு சேவை ஐக்கிய இராச்சியத்தில் இரண்டாம் எலிசபெத் மகாராணியால் ஆரம்பிக்கப்பட்டது.
  13.     1969 - அமெரிக்க படைத்துறை உயர் ஆய்வு நிறுவனத்தால் இணையம் நிறைவேறியது.
  14.     1969 - மை லாய் படுகொலைகள் தொடர்பான தகவல்களை லைஃப் இதழ் வெளியிட்டது.
  15.     1983 - அர்செண்டீனாவில் இராணுவ ஆட்சி கலைக்கப்பட்டது.
  16.     1995 - இலங்கை அரசு யாழ்ப்பாணத்தை விடுதலைப் புலிகளிடம் இருந்து தாம் முழுமையாகக் கைப்பற்றியதாக அறிவித்தது.
  17.     2003 - இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் குளிர்திரவ ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்திருப்பதாக அறிவித்தது.
  18.     2006 - பிசியில் இராணுவப் புரட்சி மூலம் அதன் இராணுவத் தளபதி வொரெக் பைனிமரமா அரசைக் கைப்பற்றினார்.
  19.     2006 - இந்திய நடுவண் அரசில் நிலக்கரித்துறை அமைச்சராக இருந்த சிபு சோரன் 1994 இல் அவரது உதவியாளரைக் கொலை செய்த குற்றத்துக்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார்.

No comments:

Post a Comment