Saturday, December 15, 2012

கடி 14/12

கடி

 ஒருவர்: பாம்புகளுக்கு லெட்டர் வந்தா, போஸ்ட்மேன் ரொம்ப கஷ்டப்படுவாரா, ஏன்..?
 மற்றவர்: எந்தப் புத்துல எந்தப் பாம்பு இருக்குமோ..?
 -எம்.செல்லம்மாள்,
 கோவைகுளம்.

  பாபு: ஏண்டா, எங்க வீட்டுல மட்டும் கொசு அதிகமா வந்து கடிக்குது..?
 கோபு: நீ எதுக்குடா, கொசுவுக்கெல்லாம் உங்க வீட்டு அட்ரசை கொடுக்கிறே..?
 -ஏ.எஸ்.இராஜேந்திரன்,
 த/பெ. சங்காமுத்து,
 41848, கிழக்கு தெரு,
 வெள்ளூர் 626 005.
 விருதுநகர் மாவட்டம்.

  டாக்டர்: தூக்க மாத்திரை குடுத்தேனே, நல்லா வேலை செஞ்சுதா..?
 நோயாளி: தெரியலை டாக்டர்... மாத்திரை போட்டதும் நல்லாத் தூங்கிட்டேன்...!
 -டி.பச்சமுத்து,
 1076, லட்சுமி இல்லம்,
 பாரதியார் நகர்,
 கிருஷ்ணகிரி 635 001.

 ஆசிரியர்: கணக்குப் பாடத்துல, ஏண்டா சைபர் மார்க் எடுத்திருக்கே..?
 மாணவன்: கணக்குல சைபருக்குத்தான் மதிப்பு அதிகம்னு நீங்கதானே சார் சொன்னீங்க.. அதனாலதான்...
 -ஜி.எஸ்.சபரி,
 கோபிசெட்டிபாளையம்.

 தந்தை: பள்ளிக்குப் போகும் நேரத்தில் தெருநாயிடம், புத்தகப் பையை வீசி விளையாடாதே... பிடுங்கி வைக்கப் போகுது... ஏற்கெனவே உனக்கு ஏழரை நாட்டுச்சனி வேற...
 மகன்: எனக்கு ஏழரை நாட்டு சனி நடப்பது அந்த நாய்க்குத் தெரியுமா, டாடி?
 -என்.வி.சீனிவாசன்,
 புதுப்பெருங்களத்தூர்.

 ராமு: நம்ம பள்ளிக்கூடத்துல எல்லா வாத்தியாரும் சைவமாக இருந்தால் நல்லது என்கிறாயே... ஏன்?
 பாலு: பரீட்சையில நமக்கு முட்டை போட மாட்டாங்களே..!
 -எம்.ராஜாமணி,
 விக்கிரமசிங்கபுரம்.
 

No comments:

Post a Comment