Thursday, December 13, 2012

வரலாற்றில் இன்று Today in History 13 / 12

வரலாற்றில் இன்று   
Today in History  திசம்பர் 13

    1577 - சேர் பிரான்சு  டிரேக் இங்கிலாந்தின் பிளைமவுத்தில் இருந்து தனது உலகத்தைச் சுற்றிவரும் பயணத்தை ஆரம்பித்தார்.
    1642 - டச்சுக் கடலோடியான அபெல் டாசுமான் நியூசிலாந்தைக் கண்டுபிடித்தார்.
    1884 - காசு போட்டு எடை பார்க்கும் எந்திரத்தைத் தயாரித்து அதற்கான காப்புரிமத்தை பெற்றார் பெர்சி எவர்ரைட்.
    1941 - இரண்டாம் உலகப் போர்:  அங்கேரி, ருமேனியா ஆகியன ஐக்கிய அமெரிக்கா மீது போரை அறிவித்தன.
    1943 - இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்காவின் 710 போர் விமானங்கள் செர்மனியின் "கீல் நகர் மீது தாக்குதலை நடத்தின.
    1949 -இசுரேலின் சட்டசபை நாட்டின் தலைநகரை செருசலேம் நகருக்கு மாற்ற முடிவெடுத்தது.
    1959 - மக்காரியோசு சைப்பிரசின் முதலாவது குடியரசுத்தலைவர் ஆனார்.
    1972 - அப்பல்லோ 17 விண்வெளி வீரர்கள் யூசீன் செர்னன், அரிசன் சுமித் ஆகியோர் சந்திரனில் இறங்கினர். 20 ஆம் நூற்றாண்டில் சந்திரனில் இறங்கிய கடைசி மனிதர்கள் இவர்களே.
    1974 - மோல்ட்டா குடியரசானது.
    1981 - போலந்தில் இராணுவ ஆட்சி ஏற்படுத்தப்பட்டது.
    1989 - உழைக்கும் மக்கள் விடுதலை இயக்கம் துவக்கம்.
    1996 - ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளராக கோஃபி அன்னான் தெரிவு செய்யப்பட்டார்.
    2001 - இந்திய நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற தீவிரவாதிகளின் தாக்குதலில் தீவிரவாதிகள் உட்பட 15 பேர் கொல்லப்பட்டனர்.
    2003 - முன்னாள் ஈராக் அரசுத் தலைவர் சதாம் உசேன் அவரது சொந்த ஊரான திக்ரித்துக்கு அருகே அமெரிக்கப் படையினரால் கைது செய்யப்பட்டார்.
    2004 - முன்னாள் சிலி சர்வாதிகாரி ஆகுசுடோ பினோச்சே வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.
    2006 - பாய்சீஎன்ற சீன ஆற்று டால்ஃபின் அருகிய இனமாக அறிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment