Saturday, July 3, 2010


இரண்டு நிமிடத்தில் மொபைல் போன் மூலம் கண் பரிசோதனை செய்யலாம்

ஜூலை 2, 2010
கண்களை பரிசோதித்து கண்ணாடி அணிவது எல்லாம் ஒரு காலம்
ஆனால் இப்போது மொபைல் மூலம் எளிதாக மருத்துவமனைக்கே
செல்லாமல் நம் கண்னை பரிசோதிக்கலாம் எப்படி என்பதைப்பற்றி
தான் இந்த பதிவு.

கண்களை பரிசோதிக்க எத்தனையோ பல புதிய வழிமுறைகள்
இருந்தாலும் அத்தனையும் தாண்டி இப்போது புதிதாக ஒரு
மொபைல் போன் மற்றும் சிறிய கருவி துனை கொண்டு நம்
கண்ணை பரிசோதித்துக்கொள்ளலாம் எந்த மருத்துவரும்
தேவையில்லை எந்த மருத்துவமனைக்கும் செல்ல வேண்டாம்
காலத்தின் வேகமான வளர்ச்சியால் விஞ்ஞானிகள் இந்த
புதுவித கருவியை உருவாக்கியுள்ளனர்.இந்த கருவியை நம்
மொபைல் போனில் பொருத்திவிட வேண்டும் இதற்க்கான
அப்ளிகேசனும் இலவசமாக கிடைக்கிறது. இதை நிறுவிக்கொண்டு
நம் கண்னை எளிதாக சோதிக்கலாம். எந்த கண்ணாடி லென்ஸ்
அளவு என்ன என அனைத்தையும் நமக்கு காட்டிவிடும் இந்த
கருவியின் ஹார்டுவேர் சிக்கிராப் 2010 கொண்டும் இதற்க்கான
பெயர் நெட்ரா என்றும் வைத்துள்ளனர். அனைத்து ஸ்மார்ட்போன்
மற்றும் சேம்சங்,கூகுள் நெக்சஸ் போனிலும் இது சோதிக்கப்பட்டு
சோதனை ஓட்டத்திலே அனைவரின் கவனத்தை மட்டுமல்ல
நம்பிக்கையையும் பெற்றுள்ளது. இந்த மாத இறுதியில் இந்த
கருவி விலைக்கு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கபடுகிறது.
இது எப்படி வேலை செய்கிறது என்பது பற்றிய சிறப்பு
விடியோவையும் இத்துடன் இணைத்துள்ளோம்.

வின்மணி சிந்தனை
கடவுள் சில நேரங்களில் சிறிய பிரச்சினைக்கு கூட நம்மை
முழவதுமாக சோதிப்பான் ஆனால் இறுதியில் வெற்றியை
நம் பக்கம் தருவான்.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.ஆயுள் முழுவதும் மாறாதது எது ?
2.பெல்ஜிய விமான சர்வீஸின் பெயர் என்ன ?
3.பிராகிருதமும் தமிழும் கலந்த மொழி எது ?
4.குதுப்மினார் கோவிலின் நிழல் விழாத நாள் எது ?
5.காசி ராங்கோ என்னும் சரணாலயம் எங்குள்ளது ?
6.சுந்தரவனக்காடுகள் காணப்படும் இடம் எது ?  
7.ஓரிசாவில் மீன்பிடிப்பு பகுதியாக விளங்குவது எது ?
8.சணலின் சிறப்புப் பெயர் என்ன ?
9.இந்தியாவில் கரும்பு அதிக அளவில் பயிரிடப்படும்
  மாநிலம் எது ?
10.ஆக்டோபஸிக்கு எத்தனை இதயங்கள் ?
பதில்கள்:
1.ரத்தவகை, 2.சபீனா,3.தெலுங்கு மொழி,4.ஜீலை 20,
5.அஸ்ஸாம் மாநிலத்தில், 6.கங்கை டெல்டா பகுதி,
7.சில்கா ஏரி, 8.தங்க இழை,9.உத்திரப்பிரதேசம்,
10.மூன்று.
இன்று ஜூலை 1 
பெயர் : கல்பனா சாவ்லா,
பிறந்ததேதி : ஜூலை 1, 1961
இந்தியாவில் பிறந்து விண்வெளியில் பறந்த
முதல் பெண்மணி. STS-107 என்ற கொலம்பியா
விண்ணோடத்தில் பறந்து பூமிக்குத் திரும்பும்
பொழுது விண்கலம் வெடித்துச் சிதறியதில்
உயிரிழந்தார்.கல்பனா சாவ்லாவை கௌரவிக்கும் விதமாக
நியூயார்க் நகரிலுள்ள ஒரு வீதிக்கு அவரது பெயர் வைத்துள்ளனர்.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

2 Comments Add your own


  • 1. s.n.ganapathi  |  ஜூலை 3, 2010 at 5:01 மு.பகல்
    அன்புடன் நண்பருக்கு வணக்கம் என்ன ஒரு அருமையான கண்டுபிடிப்பு.அதை விட இந்த விஷயத்தை உடனடியாக எல்லோரும் பயன்பட வேண்டும் என கொண்டு வந்து தருவது ..அதுக்குதான் பாராட்டு ..விண்மணி சிந்தனை ஒண்ணு எழுதி இருக்கீங்க பாருங்க… இந்த காலத்தில் தெய்வ நம்பிக்கை!!! மிக மிக அருமை. இதுபோன்ற தெய்வ நம்பிக்கை உள்ளவர்களை பார்த்தாலே இறைவனை கண்ட மாதிரி.. (உங்க எழுத்தை பார்த்தாலே உங்களை பார்த்த மாதிரி.)வாழ்த்துக்கள்
    பதில்

    • 2. winmani  |  ஜூலை 3, 2010 at 9:27 மு.பகல்
      @ s.n.ganapathi
      நன்றி
      பதில்

  • 3. Ilakkuvanar Thiruvalluvan  |  ஜூலை 4, 2010 at 12:00 மு.பகல்
    Your comment is awaiting moderation.
    மொபைல் / மொபைல் போன் -அலைபேசி
    கண்னை பரிசோதிக்கலாம் – கண்ணை ப் பரிசோதிக்கலாம் (கண்களை ஆய்வு செய்யலாம்)
    என்பதைப்பற்றிதான் – என்பதைப்பற்றித்தான்
    கண்களை பரிசோதிக்க – கண்களைப் பரிசோதிக்க
    துனை – துணை
    புதுவித கருவியை – புதுவிதக் கருவியை
    இதற்க்கான – இதற்கான
    அப்ளிகேசனும் – விண்ணப்பமும்
    எளிதாக சோதிக்கலாம் – எளிதாகச் சோதிக்கலாம்
    எந்த கண்ணாடி லென்ஸ் – எந்தக் கண்ணாடி வில்லை
    ஹார்டுவேர்- கருவியம்
    - இவ்வாறு அறிவூட்டும் விண்மணியின் ஒரு பத்தியில் இத்தனைப் பிழைகள் மலிந்து இருக்கலாமா? திருத்துக. பதியுநர் அல்லது எழுதுநர் விழைந்தால் பிழையின்றி எழுதுவதற்குப் பயிற்சி அளிக்கின்றேன்.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

மைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்த இருக்கும் விநோதமான பேட்டரி ஜார்சர்

ஜூலை 3, 2010
பேட்டரி-ஐ ஜார்ச் செய்வதற்க்கு ஜார்ச்சரில் இப்படி தான் மாட்ட
வேண்டும் என்ற நிலையை மாற்றி எப்படி வேண்டுமானாலும்
பேட்டரியை மாட்டலாம் ஜார்ச் ஆகும் என்ற புதுவகை ஜார்ச்சரை
மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது இதைப்பற்றிய
சிறப்பு பதிவு.


ஆப்ரேட்டிங் சிஸ்டம் உலகில் இன்றுவரை முதல் இடத்தில் இருக்கும்
மைக்ரோசாப்ட்-ன் புரட்சியாக எந்த துறையில் வேண்டுமானாலும்
புதுமையை படைக்க தயார் என்று அடுத்தக்கட்ட புதிய வகை
பேட்டரி ஜார்ச்சரை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதன் சிறப்பம்சம்
என்னவென்றால் நாம் இந்த ஜார்சரில் பேட்டரியை எந்த
கோணத்தில் போட்டாலும் ஜார்ச் ஆகும் வண்ணம் வடிவமைக்கப்
பட்டுள்ளது. பேட்டரி ஜார்ச் போடவேண்டும் என்றால் + பார்த்து
போடு என்று சொன்ன காலமெல்லாம் மலையேறிவிட்டது.
இதில் இருக்கும் இரண்டு பக்கத்திலும் பாஸிட்டிவ் நெகட்டிவ்
இருக்கும் இதனால் எப்படி பேட்டரியை மாற்றி போட்டாலும்
ஜார்ச் ஆகும்.
வின்மணி சிந்தனை
சோதனை என்பது மனதை பக்குவப்படுத்த மட்டுமல்ல
மனிதன் செய்த பாவத்தை நீக்கவும் தான் என்பதை
உணர வேண்டும்.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.குங்குமப்பூவை அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடு எது ?
2.ஹோமியோபதி வைத்தியம் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது ?
3.ஜப்பானில் கடல்கள் எவ்வளவு ஆழம் உள்ளது ?
4.எரிமலைக் குழம்புகளால் உருவாக்கப்பட்ட தீவு எது ?
5.விண்வெளியில் மிதந்த முதல் வீரர் யார் ?
6.சூரியனை பெண் தெய்வமாக வணங்கும் நாடு எது ?
7.பொருளாதாரத்தின் தந்தை எனப்போற்றப்படுபவர் யார் ?
8.பசுமை மாறாக்காடுகள் எப்பகுதியில்அதிகம் காணப்படுகின்றன?
9.டீசல் ரயில் என்ஜின்கள் எங்கு தயாரிக்கப்படுகின்றன ?
10.பெட்ரோலியம் எந்த மொழிச்சொல் ? அதன் பொருள் என்ன?
பதில்கள்:
1.ஸ்பெயின், 2.சாமுவேல் ஹானிமேன்,3.1667 மீட்டர் ,
4.ஹாவாய்த் தீவு,5.ஏ.லியனெவ், 6.ஜப்பான்,
7.ஆடம் ஸ்மித், 8.பூமத்திய ரேகைப் பகுதியில்,9.வாரணாசி,
10.லத்தீன் மொழிச் சொல் - பாறை எண்ணெய்.
இன்று ஜூலை 2
பெயர் : ஹேர்மன் ஹெசே,
பிறந்ததேதி : ஜூலை 2, 1962
இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற
கவிஞர், நாவலாசிரியர், ஓவியர்.1946 இல்
நோபல் பரிசு பெற்றார். கவிதைகள், நாவல்கள்,
கட்டுரைகள் எழுதிய இவரது Steppenwolf,
Siddhartha, The Glass Bead Game ஆகிய படைப்புக்கள்
முக்கியமானவை. சித்தார்த்த தமிழிலும்
மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

Leave a Comment Add your own

1. Ilakkuvanar Thiruvalluvan  |  ஜூலை 3, 2010 at 11:40 பிற்பகல்
Your comment is awaiting moderation.
charger என்பதைக் கிரந்த எழுத்தில் தவறுதலாகக் குறிப்பதை விடத் தமிழில் மின்னேற்றி எனக் குறிக்கலாம். அடிக்கடிப் பயன்படுத்தும் ஆங்கிலச் சொற்பட்டியலை எனக்கு அனுப்பி வைத்தால் தமிழ்க் கலைச் சொற்களைக் குறிப்பிட்டு அனுப்புகிறேன். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்