Friday, January 25, 2013

வரலாற்றில் இன்று Today in History 25 /1

வரலாற்றில் இன்று  
Today in History
சனவரி 25


 1.     மொழிப்போர் ஈகிகள் நாள்.
 2.     1327 - 14 வயது மூன்றாம் எட்வர்ட் இங்கிலாந்தின் மன்னனாக முடி சூடினான்.
 3.     1498 - போர்த்துக்கீச நாடுகாண்பயணி வாசுகோ ட காமா தென்கிழக்கு ஆபிரிக்காவை அடைந்தார்.
 4.     1755 - மாசுகோ பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.
 5.     1881 -  தாமசு ஆல்வா எடிசன், அலெக்சாண்டர் கிரகாம் பெல் ஆகியோர் இணைந்து ஓரியண்டல் தொலைபேசி நிறுவனம் (டெலிபோன் கம்பெனி) என்ற நிறுவனத்தைத் தொடங்கினர்.
 6.     1882 - வேல்சு இளவரசர்கள் அல்பேர்ட் விக்டர்,  சார்சு ஆகியோர் கொழும்பு வந்து சேர்ந்தனர்.
 7.     1917 -  (இ)டானிசு மேற்கிந்தியத் தீவுகள் ஐக்கிய அமெரிக்காவுக்கு $25 மில்லியன்களுக்கு விற்கப்பட்டது.
 8.     1918 - உக்ரேன் மக்கள் போல்செவிக்இரசியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தனர்.
 9.     1924 - உலகின் முதல் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் France-ன் Alps மலைத் தொடரில் உள்ள  சாமனீக்சு (Chamonix) என்ற இடத்தில் நடந்தன.
 10.     1955 - சோவியத் ஒன்றியம்  செருமனி மீது அதிகாரபூர்வமாக போரை நிறுத்தியது. 1961 - அமெரிக்காவின் முதன் முதலில் அதிபர் செய்தியாளர் கூட்டம் நேரடியாக ஒலி. ஒளிபரப்பப்பட்டது. அந்தப் பெருமையைப் பெற்றவர்  சான். எப். கென்னடி.
 11.     1971 - உகண்டாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் மில்ட்டன் ஓபோட் அதிபர் பதவியில் இருந்து அகற்றப்பட்டு இடி அமீன் தலைவரானார்.
 12.     1971 - இந்தியாவின் 18 ஆவது மாநிலமாக இமாசலப் பிரதேசம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
 13.     1981 - மா சே துங்கின் மனைவி  சியாங் கிங் இற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இது பின்னர் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.
 14.     1986 - தேசிய எதிர்ப்பு இயக்கத்தினரால் உகாண்டா அரசு கவிழ்க்கப்பட்டது.
 15.     1995 - யோசப் வாசு அடிகளார் பாப்பரசர் இரண்டாம் அருளப்பர் சின்னப்பரால் முத்திப்பேறு பெற்றவராக அறிவிக்கப்பட்டார்.
 16.     1998 - கண்டியின் தலதா மாளிகையில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டு 25 பேர் படுகாயமடைந்தனர்.
 17.     1999 - மேற்கு கொலம்பியாவில் இடம்பெற்ற 6.0 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் 1000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
 18.     2005 - இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தில் மந்திராதேவி என்ற இடத்தில் கோயில் ஒன்றிமக்கள் நெரிசலில் சிக்கிப் பெண்கள், குழந்தைகள் உட்பட 258 பேர் கொல்லப்பட்டனர்.


Thursday, January 24, 2013

வரலாற்றில் இன்று Today in History 24/01

வரலாற்றில் இன்று   
Today in History  சனவரி 24

 1.     1897 - சுவாமி விவேகானந்தர் சிக்காகோவிலிருந்து நாடு திரும்பும் வழியில் யாழ்ப்பாணம் வருகை தந்தார். யாழ் இந்துக் கல்லூரியில் பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
 2.     1939 - சிலியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 30000 பேர் கொல்லப்பட்டனர்
 3.     1950 -  இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராகப் பாபு  இராசேந்திர பிரசாத்து தேர்ந்தெடுக்கப்பட்டார் . அதே நாள் இந்தியாவின்  நாட்டுப்பாடலாகச்  சனகணமன அறிவிக்கப்பட்டது.
 4.     1966 - இந்திராகாந்தி  தலைமையமைச்சராகப் பொறுப்பேற்றார்.
 5.     1973 - வியட்நாம் போர் முடிவு.
 6.     1984 - முதலாவது ஆப்பிள் மாக்கின்டொசு கணினி விற்பனைக்கு வந்தது.
 7.     1996 - மாசுகோவுக்கு உளவு பார்த்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில் போலந்துப் பிரதமர்  சோசப்பு அலெக்சுகி தனது பதவியைத் துறந்தார்.
 8.     2007 - சூடானிலிருந்து 103 பயணிகளுடன் சென்ற விமானம் நடு வானில் கடத்தப்பட்டது.

Wednesday, January 23, 2013

வரலாற்றில் இன்று Today in History 23 / 11

வரலாற்றில் இன்று   
Today in History  சனவரி 23

 1.     1556 - உலக வரலாற்றிலேயே மிக மோசமான நிலநடுக்கம் சீனாவின் Shansi மாநிலத்தை உலுக்கியது. இயற்கையின் அந்தக் கோரத் தாண்டவத்தில் 8,30,000 பேர் மரித்ததாக வரலாறு  கூறுகிறது.
 2.     1570 -  இசுகாட்லாந்தில் உள்நாட்டுப் போர் வெடித்தது.
 3.     1639 - பெருவைச் சேர்ந்த யூதக் கவிஞர் பிரான்சிசுகோ மல்டொனால்டோ டி சில்வா எரியூட்டிக் கொல்லப்பட்டார்.
 4.     1789 - ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது கத்தோலிக்கக் கல்லூரியான சியார்சுநகர்  பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.
 5.     1793 -இரசியாவும் பிரசியாவும் போலந்தைப் பிரித்தனர்.
 6.     1870 - மொன்டானாவில் அமெரிக்கப் படைகளினால் பெண்கள், குழந்தைகள் உட்பட 173 செவ்விந்தியர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
 7.     1924 - விளாடிமிர் லெனின் சனவரி 21 இல் இறந்ததாகச் சோவியத்து ஒன்றியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
 8.     1943 - இரண்டாம் உலகப் போர்: ஆசுதிரேலிய,  அமெரிக்கக் கூட்டுப் படைகள் பப்புவாவில் யப்பானியப் படைகளைத் தோற்கடித்தனர். இது பசிபிக் போரில் யப்பானியரின் வீழ்ச்சிக்கு வழிகோலியது.
 9.     1950 - இசுரேலின் சட்டசபை  செருசலேமை இசுரேலின் தலைநகராக அறிவித்தது.
 10.     1957 - சென்னை மாநிலத்தில், தமிழ் ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டது.
 11.     1973 - வியட்நாமில் அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டதாக அமெரிக்க அதிபர் ரிச்சார்ட் நிக்சன் அறிவித்தார்.
 12.     1978 - இயற்கையைப் பாதுகாக்கவும் ஓசோன் படல அழிவைத் தடுக்கவும் 1978இல் aerosol sprays எனப்படும் தெளிப்பு மருந்துகளையும், திரவங்களையும் தடை செய்தது  சுவீடன்.
 13.     1996 -  சாவா நிரலாக்க மொழியின் முதற் பதிப்பு வெளியானது.
 14.     1998 - யாழ்ப்பாணம், புங்குடுதீவில் ஈழ மக்கள் சனநாயகக் கட்சி துணை இராணுவக்குழுவின் முகாம் விடுதலைப்புலிகளால் தாக்கியழிக்கப்பட்டதில் அம்முகாமில் இருந்த ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்.
 15.     2005 - திருச்சி சிரீரங்கத்தில் கல்யாண மண்டபத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் மணமகன் உள்பட 62 பேர் கொல்லப்பட்டனர்.

Monday, January 21, 2013

வரலாற்றில் இன்று Today in History 21/01

வரலாற்றில் இன்று   
Today in History   சனவரி 21

 1.     1793 - பிரெஞ்சுப் புரட்சி உச்சக்கட்டத்தில் இருந்த போது பதினாறாவது லூயி மன்னன் சிரச்சேதம் செய்யப்பட்டார்.
 2.     1861 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: செபர்சன் டேவிசு ஐக்கிய அமெரிக்காவின்  பேரவையில்(செனட்டில்) இருந்து விலகினார்.
 3.     1925 - அல்பேனியா குடியரசாக அறிவிக்கப்பட்டது.
 4.     1941 - இரண்டாம் உலகப் போர்:  ஆசுதிரேலிய- பிரித்தானியப் படைகள்  இலிபியாவின் டோபுருக் நகரைத் தாக்கின.
 5.     1947 - முதலாவது சிங்களத் திரைப்படம் (கடவுணு பொரன்டுவ) திரையிடப்பட்டது.
 6.     1954 - உலகின் முதலாவது அணுசக்தியாலான நீர்மூழ்கிக் கப்பல், USS நோட்டிலசு, ஐக்கிய அமெரிக்காவில் வெள்ளோட்டம் விடப்பட்டது.
 7.     1960 - மேர்க்குரி விண்கலத்தில் சாம் என்ற பெண் குரங்கு விண்வெளிக்குப் பயணமானது.
 8.     1972 - திரிபுரா, மேகாலயா, மணிப்பூர் ஆகியன இந்தியாவின் தனி மாநிலங்களாக்கப்பட்டன.
 9.     1976 - ஒலியை மிஞ்சும் வேகத்தில் செல்லக்கூடிய கன்கார்டு  வகை விமானம் முதன் முதல் பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்றது. அந்த விமானம் ஆங்கிலோ பிரெஞ்சு கூட்டணியில் உருவானது.

Saturday, January 19, 2013

அழிந்துவரும் தமிழர் பண்பாட்டுப் பொருள்கள்

அழிந்துவரும் தமிழர்

 பண்பாட்டுப் 

பொருள்கள்
அரிக்கன் விளக்கு
காற்றால் சுடர் அணைந்துவிடாதபடி கண்ணாடிக் கூண்டு பொருத்தப்பட்ட கைப்பிடியுடன் கூடிய மண்ணெண்ணெய் விளக்கு.
அம்மி
குழவி கொண்டு மிளகாய், தேங்காய் முதலியவற்றைச் சமையலுக்கு ஏற்றவாறு அரைக்கப் பயன்படுத்தும் நீள்சதுரக் கல்.
அண்டா
அகன்ற வாயும் அதே அளவிலான அடிப்பாகமும் உடைய பெரிய பாத்திரம்.
அடுக்குப்பானை
ஒன்றின் மேல் ஒன்றாக (கீழே பெரியதிலிருந்து மேலே சிறியது வரை) வைக்கப்பட்ட பானைகளின் தொகுப்பு. இதில் உப்பு, புளி, தானியங்கள் போன்றவற்றை சேமித்து வைத்திருப்பர்.
அடிகுழாய்
கைப்பிடியைப் பிடித்து அடிப்பதன் மூலம் நிலத்தின் அடியிலிருந்து நீரை வெளியே கொண்டுவரப் பயன்படும் குழாய்.
ஆட்டுக்கல்
வட்ட அல்லது சதுர வடிவக் கல்லின் நடுவே குழியும், குழியில் பொருந்தி நின்று சுழலக்கூடிய குழவியும் உடைய மாவு அரைக்கும் சாதனம்.
அங்குஸ்தான்
தைக்கும்போது கையில் ஊசி குத்தாமல் இருக்க நடுவிரல் நுனியில் அணியும் உலோக உறை.
ஓட்டியாணம்
பெண்கள் இடுப்பைச் சுற்றி ஆடையின் மேல் அணிந்து கொள்ளும் பொன்னால் அல்லது வெள்ளிப் பட்டையால் செய்யப்பட்ட ஒருவகை ஆபரணம்.
எந்திரம்
(அரிசி, உளுந்து முதலிய தானியங்களை அரைக்கவோ உடைக்கவோ பயன்படுத்தப்படும்) கீழ்க்கல்லில் நடுவில் உள்ள முளையில் சுற்றும்படியாக மேல்கல் பொருத்தப்பட்ட வட்டவடிவச் சாதனம். இதைத் திரிகல், திரிகை, இயந்திரம் என்றும் கூறுவர்.
உரல்
வட்ட வடிவ மேற்பரப்பின் நடுவில் கிண்ணம் போன்று குழியுடையதும் குறுகிய இடைப் பகுதியை உடையதும் தானியங்களைக் குத்த அல்லது இடிக்கப் பயன்படுத்துவதுமான கல்லால் அல்லது மரத்தால் செய்யப்பட்ட சாதனம்.
உரி
(வீடுகளில் பால், தயிர், வெண்ணெய் முதலிய பொருள்களை வைத்திருக்கும் பானைகளைத் தாங்கி இருக்கும்) உத்தரத்திலிருந்து தொங்கவிடப்பட்டிருக்கும் கயிறு அல்லது சங்கிலியால் ஆன கூம்புவடிவ அமைப்பு.
குஞ்சம் - குஞ்சலம்
(பெரும்பாலும் பெண்களின் சடையில் இணைத்துத் தொங்கவிடப்படும்) கயிற்றில் இணைக்கப்பட்ட நூல் கொத்து அல்லது துணிப்பந்து போன்ற அலங்காரப் பொருள்.
கூஜா
(குடிப்பதற்கான நீர், பால் முதலியவற்றை வைத்துக் கொள்ளப் பயன்படுத்தும்) புடைத்த நடுப்பகுதியும் சிறிய வாய்ப் பகுதியும் அதற்கேற்ற மூடியும் கொண்ட கலன்.
கோகர்ணம்
(ரசம், மோர் முதலியவற்றை ஊற்றப் பயன்படும் விதத்தில்) ஒரு பக்கத்தில் மூக்கு போன்ற திறப்பை உடைய ஒருவகைப் பாத்திரம்.
கொடியடுப்பு
ஒரு பெரிய அடுப்பும் அதிலிருந்து கிடைக்கும் வெப்பத்தைப் பயன்படுத்தும் வகையில் இணைக்கப்பட்ட சிறிய அடுப்பும் கொண்ட அமைப்பு.
சுளகு
வாய்ப்பகுதி குறுகளாகவும் கீழ்ப்பகுதி அகலமாகவும் இருக்கும்படி ஓலை முதலியவற்றால் பின்னப்பட்ட (தானியங்களைப் புடைப்பதற்குப் பயன்படும், முறத்தைவிடச் சற்று நீளமான) ஒரு சாதனம்.
தாவணி
(இளம் பெண்கள் அணியும்) ஒரு சுற்றே வரக்கூடிய அளவுக்கு இருக்கும் சேலையின் பாதி நீளத்திற்கும் குறைவான ஆடை.
தொடி
பெண்கள் தோளை அடுத்த கைப் பகுதியில் அணிந்து கொள்ளும் பிடித்தாற்போல் (அழுத்தம்) இருக்கும் அணி வகை.
நடைவண்டி
(குழந்தை நடைபழகுவதற்காக) நின்று நடப்பதற்கு ஏற்றவகையில் மரச் சட்டத்தை உடைய மூன்று சிறிய சக்கரங்களைக் கொண்ட விளையாட்டுச் சாதனம்.
பஞ்சமுக வாத்தியம்
கோயில்களில் பூஜையின் போது வாசிக்கப்படுவதும் ஐந்து தட்டும் பரப்புகளைத் தனித்தனியாகக் கொண்டிருப்பதுமான, பெரிய குடம் போன்ற ஒரு தாள வாத்தியக் கருவி.
பாக்குவெட்டி
(பாக்கு வெட்டுவதற்குப் பயன்படும்) சற்றுத் தட்டையான அடிப்பகுதியையும் வெட்டுவதற்கு ஏற்ற கூர்மை உடைய மேற்பகுதியையும் கொண்ட சாதனம்.
பிரிமணை
(பானை போன்றவை உருண்டுவிடாமல் இருப்பதற்கு ஏற்ற வகையில் அவற்றின் அடியில் வைக்கும்) பிரிகளைக் (வைக்கோல்) கொண்டு வளையம் போல பின்னப்பட்ட சாதனம்.
புல்லாக்கு
மூக்கு நுனியில் துவாரங்களுக்கு இடையில் தொங்கவிடப்படும் பெண்களின் அணி வகைகளுள் ஒன்று.
முறம்
(தானியங்களைப் புடைப்பதற்குப் பயன்படும்) நுனிப்பகுதி சற்று அகலமாக இருக்கும்படி மெல்லிய மூங்கில் பிளாச்சு முதலியவற்றால் பின்னப்பட்ட தடித்த விளிம்புடைய சாதனம்.
லோட்டா
நீர் குடிப்பதற்கான நீள் உருண்டை வடிவக் குவளை.
மரப்பாச்சி
பெண் குழந்தைகளுக்கான, மனித உருவம் செதுக்கப்பட்ட மரப் பொம்மை.
மின் சாதனங்கள் வந்துவிட்ட பிறகு இத்தகைய நம் தமிழர் பண்பாட்டுப் பொருள்கள் எல்லாம் இப்பொழுது அழிந்துகொண்டே வருகின்றன. முக்கால்வாசி புழக்கத்தில் இல்லை என்றே கூறலாம். அவற்றையெல்லாம் சேமித்து, பாதுகாத்து, அடுத்தடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டிய கடமை ஒவ்வொரு தமிழருக்கும் உண்டு என்பதை நினைவில் நிறுத்துவோம்.
தொகுப்பு: சிவமானசா

வரலாற்றில் இன்று Today in History 19 / 1

வரலாற்றில் இன்று   
Today in History 
சனவரி 19


 1.     1966 - காங்கிரசு நாடாளுமன்றக் கட்சியின் தலைவராக இந்திராகாந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போதைய தலைமை அமைச்சர் இலால் பகதூர் சாசுத்திரி சனவரி 11ஆம்  நாள்  மறைந்ததைத் தொடர்ந்து இந்திராகாந்தி அப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 2.     1967 -எர்கார்டாசு என்பவர் செக் மொழியில் எல்லாம் என் மனைவிக்கே என்று மூன்றே சொற்களில் ஓர் உயில் எழுதினார். உலகிலேயே மிகச் சிறிய உயிலாக அது கருதப்படுகிறது.
 3. ஆங்கிலோ எகிப்திய சூடான் அமைக்கப்பட்டது(1899)
 4. அமெரிக்காவிற்கும் இங்கிலாந்திற்கும் இடையே முதலாவது வானொலி ஒலிபரப்பு ஆரம்பமாயிற்று (1903)
 5. கிழக்கிந்திய நிறுவனம், ஏமனின் ஏடென் நகரைக் கைப்பற்றியது(1839)
 6. நன்னம்பிக்கை முனையை பிரிட்டிசு அரசு கைப்பற்றியது(1806)

Friday, January 18, 2013

வெள்ளரியின் மகிமை

வெள்ளரியின் மகிமைநம்மில் பலருக்கும் வெள்ளரி சாப்பிடப் பிடிக்கும். வெள்ளரியில் காய், பிஞ்சு என்று இரு வகையுண்டு. மருத்துவக் குணங்கள் நிறைந்தது வெள்ளரி. இது ஒரு நல்ல நீரிளக்கி, செரிமானத்துக்கு உதவுவது. வெள்ளரிப்பிஞ்சு பித்தத்தைத் தணித்து குடலுக்கு குளிர்ச்சியூட்டுகிறது. சிறுசீரகக் கோளாறைச் சரிசெய்கிறது. தலை சுற்றலைத் தடுக்கிறது.
சமீபத்திய ஓர் ஆய்வின்படி மூட்டு வீக்க நோய்களை வெள்ளரி குணமாக்குகிறது என்று கண்டறிந்துள்ளனர். எனவே வெள்ளரி ஒரு முக்கிய காய்கறி வகை என்று கூறலாம். வெள்ளரியில் கலோரிகள் குறைவாக உள்ளதால், உடல் பருமனைக் குறைக்க விரும்புவோருக்கு நல்லது. வெள்ளரிச் சாறுடன் விதைகளையும் சேர்த்துச் சாப்பிட்டால் நல்ல பலன்கள் ஏற்படும். வாதத்தைப் போக்கவும் இது உதவுகிறது. சிறுநீரகத்துக்கும் நன்மை புரிகிறது. நீரிழிவு நோயாளிகளும், உடல் பருமனைக் குறைக்க விரும்புபவர்களும் வெள்ளரிப் பிஞ்சுகளை அதிகமாகச் சாப்பிடுவது நன்மை பயக்கும்.

இன்றைய மருத்துவக் குறிப்புகள்

இன்றைய மருத்துவக் குறிப்புகள்

 1. * ஆப்பிள் பழம், தேன், ரோஜா இதழ், குங்குமப்பூ, ஏலக்காய் ஆகியவை ஒரு மாதம் தொடர்ந்து சாப்பிட்டு வர சுகப்பிரசவம் ஆகும்.
 2. * கர்ப்பிணிப் பெண்கள் வெற்றிலை பாக்குடன் குங்குமப்பூவை சேர்ந்து சாப்பிட்டால் குழந்தை, சுகப்பிரசவம் ஆகும்.
 3. * துளசி இலையை கசக்கி முகத்தில் தேய்த்து ஊரவிட்டு, குளித்து வந்தால் முகம் அழகு பெறும்.
 4. * குழந்தைகளுக்கு ஏற்படும் தொடர் இருமலுக்கு சிறிது பெருங்காயத்தை வெந்நீரில் கரைத்து தெளிந்த நீரை கொடுத்து வர, இருமல் குறையும்.
 5. * மனத்தக்காளி கீரை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண் குணமாகும்.
 6. * கோவைப்பழம் சாப்பிட பல் வலிக்கு நிவாரணம் பெறலாம்.

பயன் தரும் மருத்துவக் குறிப்புகள்

பயன் தரும் மருத்துவக் குறிப்புகள்

 1. * எலுமிச்சம்பழத்தின் சாறை ஓரிரு துளிகள் காதில் விட காது வலிதீரும்.
 2. * குடல்புண் குணமாகவும், வயிற்றுப்புழுக்கள் அழியவும் அகத்திகீரை நல்ல உணவு.
 3. * தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் தினசரி ஒன்று சாப்பிட்டு வர நுரையீரல் பலப்படும்.
 4. * அத்திபழம் தினந்தோறும் 5 சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி சரியாகும்.
 5. * முற்றிய வெண்டைக்காயை சூப் செய்து குடித்து வந்தால் இருமல் உடனே நிற்கும்.

வரலாற்றில் இன்று Today in History 18/1

வரலாற்றில் இன்று   
Today in History  சனவரி 18

 1.     1778 - புகழ்பெற்ற கடலோடியான Captain Jamea Cook அவாய் தீவுகளைக் கண்டுபிடித்தார்.  சாண்டுவிச்சு (Sandwich) தீவுகள் என்று அவர் பெயரிட்டார்.
 2.     1995 - தெற்கு பிரான்சில் தொடர் குகைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அந்தக் குகைளில் ஏறத்தாழ 17 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஓவியங்களும் கற்சிற்பங்களும் இருந்தன.
 3.     தாய்லாந்து  இராணுவ நாள்
 4.    (இ)லீமா நகரம் அமைக்கப்பட்டது(1535)
 5.    ஊடுகதிர் (எக்சுரே) இயந்திரம்  முதல் முறையாக காட்சிப்படுத்தப்பட்டது(1896)
 6.    வளைமட்டை(ஆக்கி)க் கழகத்துடன் நவீன வளைமட்டை  (ஆக்கி)ப் போட்டிகள் இங்கிலாந்தில் உருவாக்கப்பட்டன(1886)

Thursday, January 17, 2013

வரலாற்றில் இன்று Today in History 17/1

வரலாற்றில் இன்று   
Today in History   சனவரி 17

 1.     1871 - சான் பிரான்சிசுகோவைச் சேர்ந்த ஆன்ட்ரூ  ஆலிடை என்பவர்  கம்பிவட உந்து (கேபிள் கார்) முறைக்குக் காப்புரிமத்தைப் பெற்றார்.
 2.     உலகச் சமய நாள்.
 3. மொனாகா தேசிய நாள்
 4. தமிழக முன்னாள் முதல்வர்  எம்ஞ்சியார்  பிறந்த நாள்(1917) (உண்மையி்ல் 1967 இல் குண்டடிபட்டு மறு  பிறவி எடுத்த நாள்.)
 5. வளைகுடாப் போர்  தொடங்கியது(1991)
 6. ஐ.நா., சபையின் முதல் கூட்டம் நடைபெற்றது(1946)

Wednesday, January 16, 2013

வரலாற்றில் இன்று Today in History 16 / 1

வரலாற்றில் இன்று   
Today in History   சனவரி 16

 1.     1970 - தன்னை இலிபியாவின் அதிபராக முடிசூட்டிக் கொண்டார் (கர்னல்) கடாபி.
 2.     1994 - ஈராக்கிற்கு எதிராக Operation Desert Storm நடவடிக்கைக்கு வெள்ளை மாளிகை அங்கீகாரம் அளித்தது. குவைத்திலிருந்து ஈராக்கியப் படைகளை விரட்டியடிக்கும் முயற்சி அது.
 3.     மாவீரன் கிட்டு கொலை.
 4.     தாய்லாந்து ஆசிரியர் நாள்
 5.     இசுரேல் கொடி நாள்
 6.     கொலம்பியா விண்ணோடம் தனது கடைசிப் பயணத்தைத் தொடங்கியது.(2003)
 7.     வெர்மொண்ட், நியூயார்க்கில் இருந்து விடுதலையை அறிவித்தது(1777)
 8.     பாண்டிச்சேரியைப் பிரான்சிடம் இருந்து பிரிட்டிசார் கைப்பற்றினர்(1761)

Monday, January 14, 2013

வரலாற்றில் இன்று Today in History 14/1

வரலாற்றில் இன்று   
Today in History  சனவரி 14

 1.    பொங்கல்திருநாள்  - தமிழர் திருநாள்
 2.  திருவள்ளுவர் ஆண்டுத் தொடக்கம் (கி.மு.31)
 3. 1918 - சோவியத்து ஒன்றியத்தில் இலெனினைக் கொல்ல முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
 4.     1985 - தனது 100 ஆவது  பூப்பந்தாட்ட(டென்னிசு) விருதை வென்று வரலாற்றில் இடம் பிடித்தார் மார்ட்டினா நவரத்திலோவா. அதுவரை அது போன்ற சாதனையை Jimmy Connors, Chris Evert Lloyd ஆகிய இருவர் மட்டுமே நிகழ்த்தியிருந்தனர்.
 5.     தாய்லாந்து தேசிய வனப் பாதுகாப்பு  நாள்
 6.     தமிழகச் சீருந்துப் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் பிறந்த நாள்(1977)
 7.     திருச்சி, தஞ்சை மாவட்டங்களிலிருந்து பிரித்து புதுக்கோட்டை மாவட்டம் உருவாக்கப்பட்டது(1974)
 8.    இசுபெயின் கியூபாவை இணைத்துக் கொண்டது(1539)
 9.     உலகின் முதலாவது 24 மணி நேரத் தமிழ் வானொலி ஒலிபரப்பு  ‌தொடங்கப்பட்டது(1996)Saturday, January 12, 2013

வரலாற்றில் இன்று, Today in History, 13/1

வரலாற்றில் இன்று   
 
Today in History  சனவரி 13

 1.     1893 - பிரிட்டனில் தொழிற்கட்சி தொடங்கப்பட்டது.
 2.     1942 - நெகிழியை(பிளாசுடிக்கை)ப் பயன்படுத்திச்சீருந்து உற்பத்தி செய்யும் முறைக்கு காப்புரிமம் பெற்றார் என்றி போர்டு. அதனால்  சீருந்தின்(காரின்) எடையை முப்பது விழுக்காடு வரை குறைக்க முடிந்தது.
 3.     1992 - சிறுவாச்சிக் கலவரம்.
 4.     மிக்கி மவுசு கேலிப்படத் துணுக்குகளாக முதன் முதலாக வெளிவரத் தொடங்கியது(1930)
 5.     கானாவில் இராணுவ புரட்சி இடம்பெற்றது(1972)
 6.     அரிமா சங்கத்தை நிறுவிய மெல்வின் சோன்சு பிறந்த நாள்(1879)
 7.     விண்வெளியில் பறந்த முதல் இந்தியரான  இராகேசு சர்மா பிறந்த நாள்(1949)

வரலாற்றில் இன்று Today in History 12/1

வரலாற்றில் இன்று   
Today in History   சனவரி 12

 1.     1966 - சிங்கப்பூர் குடும்பக் கட்டுப்பாடு ஆணையம் (Singapore Family Planning and Population Board) நிறுவப்பட்டது.
 2.     இந்திய த் தேசிய இளைஞர் நாள்
 3.     இந்திய ஆன்மிகவாதி சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள்(1863)
 4.     முதல் முறையாகத் தொலைவிட வானொலிச் செய்தி ஈஃபெல் கோபுரத்தில் இருந்து அனுப்பப்பட்டது(1908)
 5.     நைசீரியாவில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது(1970)

Friday, January 11, 2013

கடி

கடி
ஒருவர்: பாயை எடுத்துக்கிட்டு ஏன் அந்தப் பையன் ஆபிசுக்குப் போறான்..?
 மற்றவர்: அவன் ஆபீஸ் பாயாம்...
 -த.கிருஷ்ணஜோதி, சென்னை.

 பாபு: ரெண்டு நாளா ஒரே இருமல்டா....
 கோபு: அப்ப, கடைசி வரைக்கும் ரெண்டாவது இருமல் வரவே இல்லையா?
 -ஜி.செல்லம்மாள்,
 கோவைகுளம்.

 ஏ மருமகள்: நான் கால் டாக்ஸியிலே போனாலும் போவேனே தவிர ஆட்டோவுல போக மாட்டேன்...
 மாமியார்: உன்னை மாதிரி கஞ்சத்தனமா கால் டாக்ஸியிலே போக மாட்டேன். போனா முழு டாக்ஸியிலேதான் போவேன்... தெரிஞ்சுக்கோ...
 -வேங்கடலட்சுமிராமர்,
 27/24, விநாயகர் கோவில் 2-வது வீதி,
 அறிஞர் அண்ணா நகர்,
 மூலச்சத்திரம், மாதவரம்,
 சென்னை 600 051.

 மன்னர்: மந்திரியாரே, நம் அரண்மனைக்கு வந்த வேற்று நாட்டு தூதுப் புறாவுக்கு ஒரு கால் இல்லையே?
 மந்திரி: மன்னா, இதுக்குப் பேர்தான் "மிஸ்டு கால்..!'
 -சி.குணசேகரன், நெடுங்குணம்.

 ஏ ரமேஷ்: உழைச்ச காசு உடம்பிலே ஒட்ட என்ன செய்யணும்?
 சுரேஷ்: ஃபெவிகால் வாங்கி ஒட்டணும்..!
 -பே.மாரிசங்கர்,
 12-பி, புது அம்மன் கோவில் தெரு,
 அம்பாசமுத்திரம் 627 401.
 திருநெல்வேலி மாவட்டம்.

 டைரக்டர்: என்னப்பா இது? முகத்துல வெட்டுக் காயத்தோட வந்து நிக்கிறே?
 வந்தவர்: நீங்கதானே சினிமாவுல நடிக்க நல்ல முகவெட்டு உள்ள புதுமுகம் தேவைன்னு சொன்னீங்க..!
 -ப.திருமுருகன், திருப்பூர்.

 

தெரிந்து கொள்ளுங்கள்

தெரிந்து கொள்ளுங்கள்தெரியுமா?
 
• அண்டார்டிக் கண்டம் உலக நாடுகளுக்குத் தெரிய வந்தது 1820-ஆம் ஆண்டில்தான்.

 • ஒவ்வோராண்டும் 160 லட்சம் இடி, மின்னல்கள் பூமியில் ஏற்படுகின்றன.

 • தவளைகள் தண்ணீரில் வாழ்ந்தாலும் அந்தத் தண்ணீரைக் குடிக்கவே குடிக்காது.

 • 11 நாடுகளை எல்லையாகக் கொண்ட நாடு சீனா.

 • பிறந்த குழந்தை என்னதான் அழுதாலும் கண்ணீர் மட்டும் வராது. ஏனென்றால் கண்ணீர் சுரப்பி வளர்ந்து செயல்படுவதற்குக் குறைந்தது 15 நாட்களாவது ஆகும்.

 • சேரன் தீவு என்றழைக்கப்பட்ட நாட்டின் இன்றைய பெயர் இலங்கை.

 • காந்திஜி முதன்முதலில் சென்ற வெளிநாடு இங்கிலாந்து.

 • அமெரிக்காவில் காணப்படும் லாமா என்னும் விலங்கு எதிரியின் மேல் எச்சிலைத் துப்பும் பழக்கம் உடையது. இது ஓட்டகக் குடும்பத்தைச் சேர்ந்தது.

 • மனித உடலிலேயே மூக்கின் நுனிதான் மிகவும் குளிர்ச்சியான பாகம்.

 • பிரேசில் நாட்டில் ஒருவகை வண்ணத்துப்பூச்சி உள்ளது. இது சாக்லேட் நிறத்தில் காணப்படும். இது பறந்து செல்லும்போது சாக்லேட் வாசனை அடிக்குமாம்!

 • காபி பொடியில் கலக்கப்படும் சிக்கரித்தூள், சூரியகாந்தி செடி வகையைச் சேர்ந்த காசினி என்னும் செடியின் வேராகும்.

 • கைரேகைகளை வைத்து அடையாளம் கண்டுபிடிக்கும் பழக்கத்தைச் சீனர்கள் கி.மு. 7-ஆம் நூற்றாண்டில் கடைப்பிடித்திருக்கிறார்கள்.

 • ஒரே ஆண்டில் 7 புலிட்சர் விருதுகளை வென்ற அமெரிக்கப் பத்திரிகை நியூயார்க் டைம்ஸ்.
 
 • பிறந்த அன்றைக்கே நிற்கவும் நடக்கவும் முடிகிற விலங்குகள் வரிக்குதிரையும் ஆடுகளும்.

 • தர்பூஸ் பழங்களை இந்தியாவில் முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர் முகலாய மன்னர் பாபர்.

 -தொகுப்பு: முக்கிமலை நஞ்சன்.


 • யூதர்களின் காலண்டரில் முதல் மாதம் செப்டம்பர்.

 • செடி விதைகளில் அதிக காலம் ( 30 ஆண்டுகள் ) கெட்டுப் போகாமல் இருப்பது தாமரைப்பூ விதைதான்.
 
 • ஆஸ்பெஸ்டாஸ் தகடுகளின் பிறப்பிடம் கிரேக்க நாடு.

 • ஆக்ஸ்ஃபோர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்
 கழக ஆசிரியர்களுக்கு டான் என்று பெயர்.

 • எழுத்தாளர் மாக்ஸிம் கார்கி, அமெரிக்க எழுத்தாளர் மார்க் ட்வெயின் ஆகியோர் ஆரம்பப்
 பள்ளிக்கு மேல் தாண்டியதில்லை.

 • கண்ணாடியால் சாலைகள் போட்ட முதல் நாடு ஜெர்மனி.
 
 • ஆண்களுக்கான சட்டையைக் கண்டுபிடித்த நாடு எகிப்து.
 
 • இரண்டு செட் உடைகள் மட்டுமே பிடிக்கும் ஜேம்ஸ்பாண்ட் பாணி சூட்கேஸ்கள் முதன்முதலில் பிரேசில் நாட்டில் தயாரிக்கப்பட்டன.

 • மாரடைப்பால் நின்றுபோன இதயத்தை மீண்டும் இயக்க உதவும் கருவியின் பெயர் மார்க்விட் ரெஸ்பாண்டர் 1200.
 
 • இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற சர்.சி.வி.ராமன், திருச்சிக்கு அருகிலுள்ள "திருவானைக்காவல்' என்ற ஊரில் பிறந்தவர்.
 
 • பூனைகளை வளர்ப்பது அதிர்ஷ்டமானது என்று கருதுபவர்கள் ஐஸ்லாந்து மக்கள்.
 
 • உலகில் ஐம்பது சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் விரும்பும் நிறம் சிவப்பு.

 • சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற மனிதனின் அடிப்படைத் தத்துவத்தை முதன்முதலில் சொன்னவர் பிரான்ஸ் நாட்டு தத்துவஞானி ரூஸோ.

 • பூமியின் வயது 4,610 மில்லியன் ஆண்டுகள் என்று தோராயமாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

 • ஒரு கிலோவில் சுமார் 2000 ரப்பர் பேண்டுகள் இருக்கும்.

 • ரோஜாக்களிலிருந்து பன்னீர் எடுத்து அதைப் பிரபலமாக்கிய பெண்மணி, முகலாய அரசர் ஜஹாங்கீரின் மனைவியான நூர்ஜஹான்.

 • பெட்ரோலை "கேúஸôலின்' என்று அமெரிக்கர்கள் அழைக்கிறார்கள்.

 • ஜப்பானியரும் பிலிப்பைன்ஸ் நாட்டவரும் தோற்றத்தில் ஒரே மாதிரி இருப்பார்கள்.
 
 • தொடக்கப் பள்ளியிலேயே படிப்பை நிறுத்தியவர் விஞ்ஞானி ஜி.டி.நாயுடு.
 
 • இங்கே வீட்டுக்கு வீடு கிணறுகள் இருப்பது போல அமெரிக்காவின் புறநகர்ப் பகுதிகளில் வீட்டுக்கு வீடு நீச்சல் குளங்கள் இருக்கும்.

 • தேங்காய் என்பது காயும் அல்ல; கனியும் அல்ல. அது விதை.

 • முன்னாள் இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலுக்கு மிகவும் பிடித்த மலர் ரோஜா.
 
 • ஜூடோ என்ற மற்போர்க் கலையை முதன்முதலி கண்டுபிடித்தவர் ஜப்பானைச் சேர்ந்த டாக்டர் ஜிராரே கானா.

 • வானம்பாடிப் பறவைகளில் 75 வகைகள் உள்ளன.
 
 • எல்லைப் பிரச்னை காரணமாக எறும்புகளும் சண்டை போட்டுக் கொள்கின்றனவாம்.
 
 • ஆசியா கண்டத்தில் முதன்முதலில் கார் தயாரித்த நாடு ஜப்பான்.
 
 • நிலக்கடலையின் பிறப்பிடம் தென் அமெரிக்கா.
 
 • சூரியனை மிக வேகமாக (மணிக்கு 1,72,248 கி.மீ.) சுற்றும் கிரகம் புதன்.
 
 • பூட்டுகள் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு மிருகங்களின் நரம்பினால் செய்யப்பட்ட உறுதியான கயிறுகளைக் கொண்டு வீட்டுக் கதவுகளைக் கட்டி வைத்தார்கள்.
 
 • "கிராம் பெர்ரி' என்ற ரஷ்ய நாட்டுப் பழம் ஓராண்டு வரையிலும் கெட்டுப் போகாமல் இருக்குமாம்.

 • தாஜ்மஹால் இருக்கும் ஆக்ரா நகரின் முந்தைய பெயர் "அக்பராபாத்'.
 
 • புயல் உருவாகப் போவதை முன்கூட்டியே அறிவிக்கும் கருவி சீஸ்மோகிராஃப்.

 • உலகத்திலேயே மிக விலையுயர்ந்த பூவைத் தரும் செடி குங்குமப் பூச்செடிதான்.

 கெய்ரோவிலுள்ள பல்கலைக்கழகம்தான் உலகில் முதன்முதலில் ஏற்படுத்தப்பட்டது.
 -தொகுப்பு: ஏ.கவிப்ரியா, எம்.சங்கமித்ரா,
 எம்.பூங்குழலி, எம். சக்தி, ஏ.சிண்ட்ரெல்லா,
 ஏ.மதுமதி, ஏ.முத்து, ஏ.ரோஜா, வேலூர்.

உலகப்பெரும் பாலைவனங்கள்

உலகப்பெரும் பாலைவனங்கள்


1. சஹாரா - வட ஆப்பிரிக்கா
 2. அரேபியன் - மத்திய கிழக்கு
 3. கோபி - சீனா
 4. படகோனியன் - அர்ஜென்டினா
 5. கிரேட் விக்டோரியா - ஆஸ்திரேலியா
 6. கலாஹாரி - தென் ஆப்பிரிக்கா
 7. கிரேட் பாசின் - அமெரிக்கா
 8. தார் - இந்தியா, பாகிஸ்தான்
 9. கிரேட் சாண்டி - ஆஸ்திரேலியா
 10. காரா-கும் - மேற்கு ஆசியா
 11. கொலராடோ - மேற்கு அமெரிக்கா
 12. இப்சன் - ஆஸ்திரேலியா
 13. சொனோரன் - அமெரிக்கா
 14. இசில்-கும் -மேற்கு ஆசியா
 15. தாக்ளா மக்கான் - சீனா
 16. ஈரானியன் - ஈரான்
 17. சிம்ப்சன் / ஸ்போனி - வட ஆப்பிரிக்கா
 18. மோஹேவ் - அமெரிக்கா
 19. அட்டகமா - சிலி
 20. நமீப் - ஆப்பிரிக்கா
 -தொகுப்பு:
 மா.கல்பனா, கூத்தப்பாடி.
 

விவேகானந்தர் பொன்மொழிகள்


விவேகானந்தர் பொன்மொழிகள்

First Published : 11 January 2013 01:21 PM IST


1. எந்த வேலையையும் தனது விருப்பத்துக்கு ஏற்றவாறு மாற்றுபவன் அறிவாளி.
 2. மலை போன்ற சகிப்புத்தன்மை, இடைவிடாத முயற்சி, எல்லையற்ற நம்பிக்கை இவைதாம் நற்காரியத்தில் வெற்றி தரும்.
 3. உண்மைக்காக எதையும் தியாகம் செய்யலாம்; ஆனால் எதற்காகவும் உண்மையைத் தியாகம் செய்யக்கூடாது.
 4. நீங்கள் மகத்தான பணியைச் செய்யப் பிறந்தவர்கள் என்பதில் நம்பிக்கை வையுங்கள்.
 5. மக்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். நீங்கள் உங்களது சொந்த, உறுதியான முடிவில் பிடிப்புடன் இருங்கள்.
 6. நான் எதையும் சாதிக்க வல்லவன் என்று சொல்லுங்கள். நீங்கள் உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம்கூட சக்தியற்றதாகிவிடும்.
 7. நீ உன் குறிக்கோளில் வெற்றியடைய வேண்டுமானால் அதைப் பற்றிய எண்ணம் உன் உடல் முழுவதும் பரவி இருக்க வேண்டும்.
 8. உங்களுக்குத் தேவையான எல்லா வலிமைகளும் உங்களுக்குள்ளேயே குடிகொண்டிருக்கின்றன என நம்புங்கள்.
 9. நமது நெற்றியில் சுருக்கங்கள் விழட்டும்; ஆனால் இதயத்தில் சுருக்கம் விழவேண்டாம். ஏனெனில் இதயம் கிழடு தட்டக்கூடாது.
 10. மனிதன் எந்த அளவுக்கு உயர்ந்தவனாகிறானோ அந்த அளவுக்குத் தக்கபடி அவன் கடுமையான சோதனை
 களைக் கடந்து செல்லவேண்டும்.
 -தொகுப்பு: மா.கோவிந்தசாமி, கூத்தப்பாடி.

மாட்டுப் பொங்கல்

மாட்டுப் பொங்கல்...உழவர்கள் நெல் அறுவடை செய்து மகிழ்ந்திருக்கும் வேளையில் விவசாயத்திற்குத் துணை புரிந்த கதிரவன், பணியாட்கள் மற்றும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விதத்தில் அமைந்த விழா பொங்கல் விழா. கால்நடைகளுக்குரிய நாளாக மாட்டுப் பொங்கல் அமைந்துள்ளது.
உழவுத் தொழிலுக்கு மிகவும் அவசியமாகக் கால்நடைகள் விளங்குகின்றன. ஆகவே அவைகளைத் தக்க முறையில் பராமரித்துப் போற்ற வேண்டும் என்பதால் பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
கால்நடைகள் மக்களின் செல்வங்களாக விளங்குகின்றன. மாடு என்னும் சொல்லுக்கே செல்வம் என்றும் பொருள் உண்டு.
கேடில் விழுச் செல்வம் கல்வி ஒருவற்கு
மாடு அல்ல மற்றையவை
என்னும் திருவள்ளுவர் அருளிய தமிழ்மறையாம் திருக்குறளில் 'மாடு' என்னும் சொல் "செல்வம்' என்னும் பொருளில் வந்துள்ளதைக் காணலாம்.
எனவே நாட்டு வளத்தை மனத்தில் வைத்தே கால்நடைச் செல்வங்களைப் போற்றும் வகையில் மாட்டுப் பொங்கல் பாரம்பரியமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
 
இந்நாளில் கால்நடைகள் குறித்த தமிழ்ப் பழமொழிகளையும் உலக நாடுகளின் பார்வையில் கால்நடைகள் குறித்த கருத்துகளையும் பார்ப்போம்.
• எருது இளைத்தால் எல்லாம் இளைக்கும்.

• அருங்காட்டை விட்டவனும் கெட்டான்; ஆன மாட்டை விற்றவனும் கெட்டான்.

• மாட்டுக்கு மேய்ப்பும் குதிரைக்குத்
தேய்ப்பும்.

• உள்ளூர் மருமகனும் உழுகிற கிடாவும் சரி.

• மாட்டை நடையில் பார்; ஆட்டைக் கிடையில் பார்.

• உழுகிறவன் இளப்பமானால் எருது மைத்துனன் முறை கொண்டாடும்.

• அடியாத மாடு படியாது.

• உழுத மாட்டை முகத்தில் அடிக்கலாமா?

• உழவு மறந்தால் எருது படுக்கும்.

• வீட்டுக்குச் செல்வம் மாடு; தோட்டத்துக்குச் செல்வம் முருங்கை.

• கறக்கிற பசுவையும் கைக்குழந்தையையும் கண்ணாகப் பார்க்க வேண்டும்.

• கறவை உள்ளவன் விருந்துக்கு அஞ்சான்.

• கறவை மாடு கண்ணுக்குச் சமம்.

• பாலைப் பார்த்துப் பசுவைக் கொள்ளு; தாயைப் பார்த்து மகளைக் கொள்ளு.

• பாடிக் கறக்கிற மாட்டை பாடிக் கறக்க வேண்டும்; ஆடிக் கறக்கிற மாட்டை ஆடிக் கறக்க வேண்டும்.

• இளங்கன்று பயமறியாது.

• எருமைக் கன்று அருமைக் கன்று.

• முன்னே ஆட்டைப் பிடி; பின்னே மாட்டைப் பிடி.

• கண்டதெல்லாம் ஓடித் தின்னும் ஆடு. நின்று நின்று மேய்ந்து போகும் மாடு.

• உலக நாடுகள் பார்வையில் கால்நடை பழமொழிகள்
 
• பால் கறக்கும் முன் பசுவைத் தட்டிக் கொடு. - ஆப்ரிக்கா.

• பாலும் முட்டையும் வேண்டுமென்றால் பசுவையும் கோழியையும் துன்புறுத்தக் கூடாது. - திபெத்.

• மாடு தொலைத்தவனுக்கு மணியோசை கேட்டுக் கொண்டே இருக்கும். - ஸ்பெயின்

தொகுப்பு: நா.கிருஷ்ணவேலு, புதுச்சேரி.


பறவையைத் தொடர்வோம்

பறவையைத் தொடர்வோம்...

 
 
காட்டுக் கோழி
 காட்டுக் கோழி, இந்தியக் கோழி இனத்தைச் சேர்ந்த பறவை. ஆனால் வீடுகளில் இதை வளர்க்க முடியாது.
 இந்திய தீபகற்பத்தில் அதிகமாகக் காணப்படும் பறவை. பெரும்பாலும் மாமிசத்துக்காகவும் கழுத்துச் சிறகுகள் மீன் பிடி தூண்டிலில் மீனைக் கவர்வதற்காக பொறியாகவும் பயன்படுகின்ற பறவை.
 சிவந்த கொண்டையைக் கொண்டிருக்கும். கால்களும் செந்நிறத்தில் இருக்கும். கழுத்தில் மஞ்சள், வெள்ளை, கருப்பு நிறப் புள்ளிகளைக் கொண்டிருக்கும். கருநீல வால் பகுதியில் சில சிறகுகள் மட்டும் நீண்டு வளைந்து பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும்.
 தானியங்களையும் மூங்கில் விதைகளையும் சிறிய பழங்களையும் பூச்சிகளையும் விரும்பிச் சாப்பிடும்.
 பெரும்பாலும் காடுகளில் வசிக்கும். சிறிய குழுக்களாக வாழும்.
 மஞ்சள் நிற முட்டைகளை இடும். ஒரு சமயத்தில் 4 முதல் 7 முட்டைகள் வரை போடும். முட்டையிலிருந்து குஞ்சுகள் வெளிவருவதற்கு 21 நாட்கள் ஆகும்.

 நீலமயில்
 நீலமயில் தெற்கு ஆசியப் பறவை. இங்கிருந்துதான் மற்ற நாடுகளுக்கு இந்தப் பறவை சென்றது. மாவீரன் அலெக்ஸôண்டர்தான் இந்தப் பறவையை ஐரோப்பாவுக்கு அறிமுகம் செய்து வைத்தான் என்று ஒரு கதை இருக்கிறது. இப்போது பரவலாக உலகெங்கும் காணப்படுகின்றது.
 இதைப் பற்றி வர்ணிக்கவே தேவையில்லை. இதன் அழகு உங்களுக்கெல்லாம் நன்றாகத் தெரியும். ஆனால் ஆண் மயில்கள்தான் தோகையுடன் அழகாக இருக்கும். பெண் மயில்கள் பார்ப்பதற்கு சாதாரணமாக, பெரிய கோழியைப் போல இருக்கும்.
 திறந்த வெளிக் காடுகளிலும் வயல்வெளிகளிலும் அதிகம் காணப்படும்.
 தானியங்களையும் சிறிய பழங்களையும் குட்டிப் பாம்புகள், பல்லிகள் ஆகியவற்றையும் விரும்பிச் சாப்பிடும்.
 ஆண் பறவை அளவில் மிகப் பெரிதாக இருக்கும். 100 முதல் 225 செ.மீ. நீளம் இருக்கும். எடை 6 கிலோ வரை இருக்கும்.
 சிறிய குழுக்களாகவும் குடும்பமாகவும் வாழும் பறவை. வெள்ளை நிற முட்டைகளாக ஒரு சமயத்தில் 4 முதல் 8 முட்டைகள் வரை இடும். 28 நாட்களில் குஞ்சுகள் முட்டைகளிலிருந்து வெளிவரும். குஞ்சுகள் சிறிது காலம் வரை தாயின் முதுகில் ஏறிப் பயணம் செய்யும்.

 வர்ணக் கெளதாரி
 வர்ணக் கெüதாரி தென் இந்தியாவிலும் இலங்கையிலும் அதிகம் காணப்படும். இதன் குரலே இது இருக்குமிடத்தைக் காட்டிக் கொடுத்துவிடும்.
 சற்றே உயரமான பறவை. தலையில் முகம் மட்டும் ஆரஞ்சு வண்ணம் மிகுந்து காணப்படும். சிறிய கருப்பு நிற அலகைக் கொண்டிருக்கும். உடல் முழுவதும் வெள்ளையும் கருப்பும் கலந்து புள்ளிகளாகக் காணப்படும். சிறகுகளில் மட்டும் வெளிர் ஆரஞ்சு நிறம் வண்ணம் பூசியது போல இருக்கும். நீண்ட உறுதியான ஆரஞ்சு வண்ணக் கால்களைக் கொண்டிருக்கும். நன்றாகப் பறக்கும்.
 புல்வெளிகளில் வசிக்கும். ஒரு சமயத்தில் 6 முதல் 7 முட்டைகள் வரை இடும்.
 புல்லின் விதைகளையும் அரிசியையும் விரும்பிச் சாப்பிடும்.
 இலங்கை அரசு இந்தப் பறவையின் படத்தைப் போட்டுத் தபால் தலை வெளியிட்டிருக்கிறது.

 கெளதாரி
 வர்ணக் கெüதாரி போலவே கெüதாரியும் இருக்கும். ஆனால் உடல் முழுவதும் வெளிர் ஆரஞ்சு நிறம் நிறைந்து காணப்படும். ஐரோப்பாவிலும் தெற்கு ஆசியாவிலும் இலங்கையிலும் அதிகம் காணப்படும் பறவை.
 இதுவும் புல்வெளிகளில் வசிக்கும் பறவைதான். சிறிய குழுக்களாக வசிக்கும்.
 பெரும்பாலும் புதர்களில் கூடு கட்டி வசிக்கும்.
 ஒரு சமயத்தில் 6 முதல் 8 முட்டைகள் வரை இடும்.
 தானியங்களையும் புழு பூச்சிகளையும் விரும்பிச் சாப்பிடும்.
 வீடுகளில் இதை வளர்க்கலாம். ஏறக்குறைய ஒரு கிலோ வரை எடை இருக்கும்.
 மிக வேகமாக நடக்கும் பறவை. ஆனால் நின்று, நின்று நடக்கும்

வரலாற்றில் இன்று Today in History 11 / 1

வரலாற்றில் இன்று   
Today in History   சனவரி 11

    1963 - உலகின் முதல் டிசுகோதீக் எனப்படும் டிசுகோ நடன அரங்கு  இலாசு ஏஞ்சலில் திறக்கப்பட்டது.
    1980 -  சதுரங்க வரலாற்றில் மிக இளைய வயதில் அனைத்துலகத் தலைமைப்  பட்டத்தை வென்றார், பிரிட்டனைச் சோந்த நைகேல் சார்ட்
இன்று

    அல்பேனியா குடியரசு நாள்(1946)
    இந்திய விடுதலை போராட்ட தியாகி திருப்பூர் குமரன் இறந்த நாள்(1932)
    இந்திய முன்னாள் பிரதமர் இலால் பகதூர் சாசுதிரி இறந்த நாள்(1966)
    இந்திய தொழிலதிபர் பிர்லா இறந்த நாள்(1983)
    நீரிழிவுக்கு மருந்தாக மனிதர்க்கு இன்சுலின் முதன் முறையாகப் பயன்படுத்தப்பட்டது(1922)

Thursday, January 10, 2013

வரலாற்றில் இன்று Today in History 10 / 1

வரலாற்றில் இன்று

Today in History  

சனவரி 10

  • 1946 - ஐக்கிய நாட்டுப் பொதுச் சபையின் முதல் கூட்டம் நடைபெற்றது.
  • 1945 - ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு கிடைத்தது.
  • 1974 - யாழ்ப்பாணம் உலகத் தமிழ் மாநாட்டில் 9 பேர் படுகொலை.

Wednesday, January 9, 2013

வரலாற்றில் இன்று Today in History 9/1

வரலாற்றில் இன்று   
Today in History   சனவரி 9
 1.     1951 - டாக்டர் அலெக்சாண்டர் ஃபிளெமிங் முதன் முதலாக தனது உதவியாளரான இசுஸ்டூவர்டு கிராட்டாக் என்பவருக்குப் பென்சிலின் மூலம் சிகிச்சை அளித்தார்.
 2.     1980 - மெக்காவிலுள்ள மசூதியைத் தாக்கியதற்காக சவூதி அரேபியாவில் 63 பேரின் தலைகள் துண்டிக்கப்பட்டன.
 3.     1995 - விண்வெளியில் அதிகக் காலம் வாழ்ந்த பெருமையைப் பெற்றார்  இரசிய விண்வெளி வீரரான வலேரி பொலியகோவ்.

Tuesday, January 8, 2013

வரலாற்றில் இன்று Today in History 8 / 1

வரலாற்றில் இன்று

Today in History  

சனவரி 8 

  • 1917 - பிரிட்டனில் நாடெங்கும் ஒரே நேரத்தில் 2 மில்லியன் மரங்கள் நடப்பட்டன. மரத்திற்குத் தட்டுப்பாடு ஏற்பட்டதே அதற்குக் காரணம்.
  • 1938 - இந்தியாவில் முதல் வண்ணத் திரைப்படம் வெளியானது. இம்பீரியல் பிலிம் கம்பெனிக்காக அர்தேஷிர் இரானி என்பவர் தயாரித்த அந்தப் படத்தின் பெயர் "கிஸான்கன்யா."
  • 1664 - கலிலியோ தூக்குமேடையைச் சந்தித்த நாள்.

Monday, January 7, 2013

வரலாற்றில் இன்று Today in History 7 / 1

வரலாற்றில் இன்று   
Today in History   சனவரி 7
 1.     1610 - இத்தாலிய வானியலாளரும் இயற்பியலாளருமான கலிலியோ கலிலி வியாழன் கோளைச் சுற்றி வரும் நான்கு நிலாக்களைக் கண்டுபிடித்தார்.
 2.     1949 -    மரபணுக் கூறின் (ஜீன்ஸ் )முதல் புகைப்படத்தை வெளியிட்டது தெற்கு லிபோர்னியா பல்கலைக்கழகம்.
 3.     1990 - உலகப் புகழ் பெற்ற கட்டடமான பைசாவின் சாய்ந்த கோபுரம் பொது மக்களுக்கு மூடப்பட்டது. சுமார் 11 ஆண்டுகள் 11 மாத சீரமைப்புப் பணிகளுக்குப் பிறகு 2001இல் மீண்டும் சுற்றுலாப் பயணிகளுக்குத் திறந்து விடப்பட்டது.

Sunday, January 6, 2013

வரலாற்றில் இன்று Today in History 6 / 1

வரலாற்றில் இன்று   
Today in History   சனவரி   6

 1.     1752 - ஆம் ஆண்டு வரை சிலநாடுகளில் இன்று தான் கிறித்துமசு கொண்டாடப்பட்டு வந்தது.
 2.     1959 - உலகின் முதல் செயற்கைக் கோள் ஏவப்பட்டது.  இரசியாவின் காசுமிக் ஏவுகணை  எனும் அந்தச் செயற்கைக் கோள் புவியை விட்டு 800 ஆயிரம்அயிரைக் கோல் (கிலோ மீட்டர்) தூரம் மேலே சென்று சுற்றுப் பாதையை அடைந்தது.

Saturday, January 5, 2013

எவ்வளவு நாள் தண்கலனில் வைக்கலாம்?

எந்தக் காயை எவ்வளவு நாள்  தண்கலனில்  வைக்கலாம்?
By dn First Published : 02 January 2013 03:30 PM IST
·புகைப்படங்கள்
பெரும்பாலான வீடுகளில், இன்று கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல்பவர்களாகவே உள்ளனர். இதனால், அன்றாடம் வீட்டிற்குத் தேவையான காய்கறிகள், பழங்கள் மற்றும் உணவுப்பொருட்கள் ஆகியவற்றைத் தினசரிக் கடைக்குச் சென்று வாங்க முடியாத நிலை நிலவுகிறது. அவ்வாறானவர்களுக்கு வரப்பிரசாதமாகக் கைகொடுக்கும் ஒரு சாதனம், குளிர்சாதனப்பெட்டியான "பிரிட்ஜ்" என்பதை யாராலும் மறுக்க முடியாது.
வாரத்திற்கு ஒரு முறை கடைக்குச் சென்று உணவுப்பொருட்களை வாங்கி, அவற்றைப் பிரிட்ஜில் சேமித்து வைத்து விடுகின்றனர்.  எனினும், பிரிஜில் எவ்வளவு நாட்கள் உணவுப் பொருட்கள், பிரஷ்ஷாக இருக்கும் என்பது, நம்மில் பலருக்குத் தெரியாது. பிரிட்ஜில் 4 டிகிரி பாரன்ஹீட்டுக்கு இடைப்பட்ட அளவில், வெப்பநிலை இருக்குமாறு, பராமரிக்க வேண்டியது அவசியம்.
பிரிட்ஜில் வைக்கும் உணவு பொருட்கள் பற்றி தகவல்:
பழங்கள்:
திராட்சை, ஏப்ரிகாட், பேரிக்காய், பிளம்ஸ் 3-5 நாட்கள் 
ஆப்பிள் - ஒரு மாதம்
சிட்ரஸ் பழங்கள் - 2 வாரங்கள்
அன்னாசி - 1 வாரம்
காய்கறிகள்:
பிரோக்கோலி, காய்ந்த பட்டாணி  3-5 நாட்கள்
முட்டைகோஸ், கேரட், முள்ளங்கி, ஓம இலை 1-2 வாரங்கள்
வெள்ளரிக்காய் - ஒரு வாரம்
தக்காளி 1-2 நாட்கள்
காலிபிளவர், கத்தரிக்காய் - 1 வாரம்
காளான்  1-2 நாட்கள்
அசைவ உணவுகள்:
சமைத்த மீன்  3-4 நாட்கள்
பிரஷ் மீன் 1-2 நாட்கள்
ஓட்டுடன் கூடிய நண்டு - 2 நாட்கள்
பிரஷ்ஷான கோழி இறைச்சி துண்டுகள் 1-2 நாட்கள

தகவல்கள்-3

தகவல்கள்-3

அகிம்சை கற்பித்த குறள்!
உலகப் புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய். இவரை மகாத்மா காந்தியடிகள் தன் குருவாக ஏற்றுக் கொண்டார். டால்ஸ்டாயின் "போரும் அமைதியும்' அகிம்சை தத்துவத்தின் பிரதிபலிப்பே. அத்துடன் அவர் எழுதிய "அன்னா கரீனா' என்ற நூலும் அகிம்சைத் தத்துவத்தின் விளக்கமே.
 காந்தியடிகள் ஒருமுறை டால்ஸ்டாயைச் சந்தித்தபோது, ""அகிம்சையை மையப்படுத்தி நவீனங்கள் படைத்துள்ளீர்களே, அது எப்படி?'' என்று வினவினார்.
 அதற்கு டால்ஸ்டாய் சொன்ன பதில் -
 ""உங்கள் நாட்டில் தோன்றிய திருக்குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பைப் படித்துத்தான் அகிம்சை பற்றி நான் தெரிந்து கொண்டேன்!''
 - அ.சா.குருசாமி, செவல்குளம்.
 
 முதல் வந்த நினைவு
 பழம்பெரும் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான டாக்டர் பி.சி.ராய், தம்முடைய எண்பதாவது பிறந்த நாளின்போது தம்மை வாழ்த்த வந்த பற்பல அரசியல் தலைவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு நிருபர் டாக்டர் ராய் அவர்களிடம், ""இந்தப் பிறந்த நாளின்போது யாருடைய நினைவு முதலில் வந்தது?'' என்று கேட்டார்.
 அதற்கு ராய் அவர்கள், ""சுதந்திரப் போராட்ட காலங்கள் மற்றும் பல சந்தர்ப்பங்களில் காந்தி அடிகள், பண்டித நேரு, வல்லபாய் படேல், அபுல்கலாம் போன்ற தலைவர்களுடன் நெருங்கிப் பழகியுள்ளேன். அவர்களுடைய நினைவுகள் எல்லாம் எனக்கு வராமல், எளிய உருவமுடன் ஏழை மக்களின் நலனில் அக்கறையும் கொண்டு சதாசர்வகாலமும் தொண்டுசெய்துவரும் அன்னை தெரசா அவர்களின் கருணை நிரம்பிய முகம்தான் என் நினைவில் வருகிறது...'' என்று ஒளிவுமறைவின்றிக் கூறியது, அனைவருடைய நெஞ்சத்தையும் நெகிழவைத்தது.
 - ஜி.பென்னி, விழுப்புரம்.

 நேர்மைக்கு இலக்கணம்!
 காமராசர் முதலமைச்சராக இருந்த நேரம். ராஜாஜி எதிரணியில் இருக்கிறார். மாம்பலம் சி.ஐ.டி. நகரில் "ராஜாஜி சேவா சங்கம்' என்ற அமைப்பைச் சார்ந்த கட்டடம் கட்டியிருந்தார்கள். ஆனால் சி.ஐ.டி. நிறுவனத்தினர் அந்தக் கட்டடம் தங்களுடைய விதிமுறைகளுக்கு முரணாக கட்டப்பட்டிருப்பதாகக் கூறி அந்தக் கட்டடத்தை இடித்துவிட்டார்கள். இந்த விஷயம் பெருந்தலைவருக்குத் தெரியவந்தது. ராஜாஜி எதிரணி என்பதால் பெருந்தலைவர் இதைக் கண்டுகொள்ளமாட்டார் என்று எல்லாரும் நினைத்தார்கள். ஆனால் காமராசர், சி.ஐ.டி. நிறுவனத்தினரை அழைத்து விசாரித்து அவர்கள் அதிகாரத் துஷ்பிரயோகம் பண்ணியிருப்பதைச் சுட்டிக்காட்டி, அவர்கள் செலவிலேயே உடனடியாக அந்தக் கட்டடத்தைப் புதிதாகக் கட்டிக் கொடுக்க வேண்டும் என்று அறிக்கையோடு உத்தரவு பிறப்பித்தார். அதேபோல சி.ஐ.டி. நிறுவனத்தினர் புதிய கட்டடத்தைக் கட்டிக் கொடுத்தனர். இப்போதும் அந்தக் கட்டடம் மாம்பலம் சி.ஐ.டி. நகரில் இருக்கிறது. பெருந்தலைவரின் நேர்மைக்கு இதுவும் ஒரு சான்றாகும்.
 (ஆதாரம்: இளசை சுந்தரம் எழுதிய "காமராஜ் - நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள்' என்ற நூலிலிருந்து.)
 - என். கணேசன், வேலூர்.

பொன்மொழிகள் சனவரி 04

பொன்மொழிகள்

• எந்த நாட்டில் சுதந்திரம் உள்ளதோ அது எனது நாடு. - மில்டன்

• தாய்நாட்டை நேசிக்காதவன் எதையும் நேசிக்க முடியாது. - பைரன்

• நல்ல நாட்டில் அன்பு திகழவேண்டும். - ரஸ்ஸல்

• நாட்டின் நன்மை கருதி வாழ்வதுதான் நாட்டுப்பற்று. - ஒüவையார்

• நாடு இல்லாவிடில் வாழ்க்கை இல்லை. - மாஜினி

• உலகமே என் நாடு; நன்மை செய்வதே என் சமயம். - தாமஸ் பெயின்

• ஒரு நாட்டின் முன்னேற்றம் கல்வியைப் பொறுத்தே அமைகிறது. அரிஸ்டாட்டில்
 • நாடு உனக்கு என்ன செய்தது என்று கேட்காதே; நாட்டிற்கு நீ என்ன செய்தாய் என்று கேள்.
- ஜான் கென்னடி

• நாட்டுப்பற்றைவிட அதிக நெருக்கமான அன்பு வேறில்லை. - பிளேட்டோ

• நாட்டிலிருந்து நீ ஏற்பது குறைவாகவும் நாட்டிற்கு நீ வழங்குவது அதிகமாகவும் இருக்கட்டும்.
- வால்டேர்
தொகுப்பு: நெ.இராமன், சென்னை.

தெரிந்து கொள்ளுங்கள்

வெள்ளி பைபிள்!
சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் உள்ள உப்சலா பல்கலைக்கழகத்தில் ஆறாம் நூற்றாண்டில் இருந்த வெள்ளி பைபிள் ஒன்று உள்ளது. இந்த பைபிள் முழுவதும் கையினால் எழுதப்பட்டதாகும்.
தங்கம் மற்றும் வெள்ளியை உருக்கி அதனால் தயாரிக்கப்பட்ட மையினால் எழுதப்பட்டுள்ளது. பைபிளின் அட்டைப் பகுதி தங்க முலாம் பூசப்பட்டுள்ளது. கி.பி. 1648-ஆம் ஆண்டு இந்த பைபிள் "பிராக்' என்ற நகரில் இருந்து சுவீடனுக்கு எடுத்து வரப்பட்டது.
இந்த பைபிளின் சில பக்கங்கள் 6-5-1995 அன்று திருடு போயின. ஆனால் அவை 7-5-1995 அன்றே கண்டுபிடிக்கப்பட்டன. தற்பொழுது பைபிளின் மற்ற பகுதிகள் பல்கலைக்கழகத்தின் நூலகத்தில் வெவ்வேறு இடங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.

• வீரமா முனிவர் - சுப்பிரதீபக் கவிராயர்.

• ஜி.யு.போப் - மகாவித்துவான்
இராமானுஜ கவிராயர்.

• சீகன் பால்கு ஐயர் - தரங்கம்பாடி எல்லப்பா.

• எல்லீஸ் துரை - இராமச்சந்திரக் கவிராயர்.

• ஹெச்.எ. கிருஷ்ணபிள்ளை - மகாவித்துவான் திருப்பாற்கடல் நாத கவிராயர்.

• உமறுப் புலவர் - கடிகைமுத்துப் புலவர்.

• செய்கு தம்பிப் பாவலர் - சங்கரன் நாராயணன், அண்ணாவி.

• காசிம் புலவர் - மதுரை தமிழாசிரியர்
மாக்காயனார்.

• கணிமேதாவியார் - மதுரை தமிழாசிரியர்
மாக்காயனார்.

ஐந்தின் ரகசியங்கள்!
• பஞ்சலோகம் - இரும்பு, பொன், வெள்ளி, செம்பு, ஈயம்.
• பஞ்சவர்ணம் - கருப்பு, சிவப்பு, பச்சை, மஞ்சள், வெள்ளை.
• பஞ்சவாசம் - ஏலம், இலவங்கம், கற்பூரம், திப்பிலி, ஜாதிக்காய்.
• பஞ்சரத்தினம் - பொன், சுகந்தி, மரகதம்,
• மாணிக்கம், முத்து.
• பஞ்சபூதம் - ஆகாயம், காற்று, நிலம், நீர், நெருப்பு.
• பஞ்சபாண்டவர் - தர்மர், பீமன், அர்ஜுனன்,
நகுலன், சகாதேவன்.
• ஐவகை நிலங்கள் - குறிஞ்சி, முல்லை, மருதம்,
நெய்தல், பாலை.
• ஐம்பெருங் குழு - மந்திரியர், புரோகிதர்,
சேனாதிபதியர், தூதர், சாரணர்.
• ஐம்பெருங்காப்பியம் - சிலப்பதிகாரம்,
மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி.
• ஐஞ்சிறு காப்பியங்கள் - நாக குமார காவியம், யசோதர காவியம், உதயன குமார காவியம்,
நீலகேசி, சூளாமணி.

சிலை வடித்தவர்கள்
• கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை - கணபதி ஸ்தபதி.
• சென்னையில் உள்ள உழைப்பாளர் சிலை -
ராய் செளத்ரி.
• சுதந்திர தேவி சிலை (நியூயார்க்) - பர்த் தோல்டி.
• ஈபிள் கோபுரம் (பாரிஸ்) -
அலெக்ஸôண்டர் ஈஃபிள்.
• திருவண்ணாமலை கோபுரங்கள் -
அச்சுதப்பா நாயக்கர்.
 • திருச்சி மலைக்கோட்டையை வடிவமைத்தவர் - மகேந்திர பல்லவன்.
தொகுப்பு : ஆர். மகாராஜன், பெரியமுத்தூர்.

வெந்நீர் மீன்
நியூசிலாந்தில் வாழும் கோவாரா என்ற மீன், தான் வாழும் தட்பவெப்ப நிலைக்குத் தக்கவாறு வாழும் இருப்பிடத்தை மாற்றிக் கொள்கிறது. கோடைக் காலங்களில் வெந்நீர் ஊற்றுகளில் வாழ்கிறது. குளிர்காலம் வந்துவிட்டாலோ, வெந்நீர் ஊற்றுக்களை விட்டு வெளியேறுகிறது. பூமிக்கடியில் உள்ள குகைகளுக்குத் தனது இருப்பிடத்தை மாற்றிக் கொண்டு சுகமாகக் குளிர்காலம் முடிந்து கோடைக்காலம் வந்துவிட்டாலோ திரும்பவும் வெந்நீர் ஊற்றுகளுக்கே வந்துவிடுகிறது.

• மீன்களில் நீளமான மீன் லுர் பிஷ். விலாங்கு மீன் போன்ற தோற்றத்தில் இருக்கும் இந்த மீன் அதிகபட்சம் 46 அடி நீளம் வளரும்.

• மிக உயரமானது சூரிய மீன். இதன் உயரம் 14 அடிகள். அந்த மீன் 2 டன் எடைக்கும் அதிகமாக இருக்கும்.

• "டுவார்ப் கூபி' என்னும் மீன்தான் மீன் இனத்திலேயே மிகச் சிறியது. நன்கு வளர்ச்சி அடைந்த டுவார்ப் கூபி மீனின் நீளம் 1 சென்டிமீட்டர்தான் இருக்கும். இந்த வகை மீன்கள் இந்திய பெருங்கடல் பகுதியில் அதிகம் காணப்படுகின்றன.

• உலகிலேயே மிகப் பெரிய நண்டு எது தெரியுமா? ஜப்பானிஷ் ஸ்பைடர் என்னும் சிலந்தி நண்டுதான். இதன் உடல் பகுதி நீளம் மட்டும் ஓர் அடி. கால்களின் நீளம் 11 அடி ஆகும்.

• குட்டியான நண்டின் நீளம் எவ்வளவு தெரியுமா? துல்லியமாக அளவு சொல்ல முடியாது. ஒரு பட்டாணியை விட கொஞ்சம் பெரிதாக இருக்கும்.
- கா. முருகேஸ்வரி, கோவை.

விந்தை உயிரினங்கள்
• மண்புழு தோல் மூலமாக சுவாசிக்கிறது.
• மூக்கில் பல் உள்ள உயிரினம் முதலை.
• வயிற்றில் பல் கொண்ட பறவை கிவி.
• காலில் காதுள்ள உயிரினம் வெட்டுக்கிளி.
• நத்தை, அரம் போன்ற நாக்கினால்
இரை உண்கிறது.
• சிலந்தி எதையும் சாப்பிடாமல் 10 வருடங்கள் வரை உயிர் வாழும்.
• நீர் குடிக்கத் தெரியாத விலங்கு ஓணான்.
• பின்னோக்கிப் பறக்கும் பறவை கிங்கப்.
• குக்குஜோ என்னும் வண்டினம் ஒளிரும்
தன்மையுடையது.
• இமையுள்ள பறவை நெருப்புக் கோழி.
("அறிவியல் அறிவோம்' நூலிலிருந்து...)
தொகுப்பு: என். கணேசன், வேலூர்.

கடி சனவரி 04, 2013

கடி

பாபு: நேற்றுதான் பிளாக் பெல்ட் வாங்கினியா? நீ கராத்தே சாம்பியன்னு சொல்லவே இல்லையே...
 கோபு: டிராயர் லூசா இருக்குன்னு பிளாக்பெல்ட் வாங்கினேன்!
 - எஸ்.பி.நவீன் பாரதி,
 திருநெல்வேலி.

 சிறுவன்: அப்பா செய்யிற தப்பு, பிள்ளையைப் பாதிக்கும்கிறது சரிதாம்பா...
 தந்தை: என்னடா... பெரிய பெரிய பேச்செல்லாம் பேசறே?
 சிறுவன்: வீட்டுக் கணக்கை நீங்க தப்பா போட்டுக் கொடுத்ததுக்கு எனக்குல்ல உதை விழுகுது!
 - தஞ்சை சுபா

 ஏ சோமு: எங்க தொகுதி எம்.பி.க்கு மக்கள் கஷ்டப்படறதைப் பார்த்துட்டு சும்மா இருக்கமுடியாது!
 ராமு: என்ன பண்ணுவார்?
 சோமு: வெளிநாட்டுக்கு டூர் போயிடுவார்!!
 - வெ.நரேந்திர குமார்,
 த/பெ. இரா. வெங்கடாசலம், 43, முடுக்குத் தெரு,
 தெற்கு பஜார்,
 கோவில்பட்டி } 628501.

 ""அழாதேடா கண்ணா, உன்னை அடிச்ச பையனை அடையாளம் காட்ட முடியுமா?''
 ""அவனுக்கு ஒரு காது இருக்காது. அது என் பாக்கெட்ல இருக்கு!''
 - புருஸ்லி ஓவியாலயம், சிவகங்கை.

 ராகுல்: காக்கைக்கும் அண்டங்காக்கைக்கும் என்ன வித்தியாசம்னு சொல்லு?
 கோகுல்: தெரியாதுடா, நீயே சொல்லு...
 ராகுல்: காக்கா கருப்பா பயங்கரமா இருக்கும்! அண்டங்காக்கா பயங்கரக் கடுப்பா இருக்கும்!!
 - ஜே. செய்யது அலி, திருவாரூர்.

 ஏ ""டாக்டர்... எனக்கு இரண்டு நாளா பயங்கரமான தலைவலி! பொறுக்கவே முடியலே...''
 ""நீங்க தலைவலியோட ஏன் பொறுக்கப் போறீங்க...?!''
 - வி. வாசுதேவன்,
 4/ ச6- வைத்தியர் வீதி,
 பீடம்பள்ளி அஞ்சல், ஒண்டிப்புதூர்- 641 016. கோவை மாவட்டம்.

வரலாற்றில் இன்று Today in History 5 / 1

வரலாற்றில் இன்று   
Today in History  சனவரி 5

    1925 - திருமதி. நெலி டெய்லர் இராசு அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் ஆளுநர்.
    1933 - அமெரிக்காவின் புகழ் பெற்ற கோல்டன் கேட் பாலத்தின் கட்டுமானப் பணி தொடங்கியது.
    1940 - கத்தோலிக்க  நாட்காட்டியின்படி செயிண்ட் சைமன்  இசுடைலெட்சு  நாள். தனக்குக் கடவுளிடத்திலுள்ள தீவிர பக்தியைக் காட்டுவதற்காக ஒரு தூணின் உச்சியிலேயே 37 ஆண்டுகள் வாழ்ந்தவர்.
    1999 - அரியானாவில் கிறித்தவர் வெளியேறக் காலக்கெடு விதித்தல்.

Friday, January 4, 2013

வரலாற்றில் இன்று Today in History 4 / 1

வரலாற்றில் இன்று   
Today in History  சனவரி 4

    1981- ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு
    1885 -மருத்துவர் வில்லியம் வெசுட் கிராண்ட் என்பவரால் அப்பென்டிக்சு எனப்படும் குடல்வால் அறுவை சிகிச்சை மேரி கார்ட்சைடு என்ற பெண்ணுக்கு முதன் முதலில் செய்யப்பட்டது.
    1948 - பர்மா குடியரசு உதயமானது.
    1974 - வாட்டர் கேட் ஊழலின் தொடர்பில் சில  ஒலிப்பேழைகளை கேசட்டுக்களை விசாரணை ஆணையத்திடம் ஒப்படைக்க மறுத்ததால் அமெரிக்க அதிபர் நிக்சன் பதவி துறக்க நேர்ந்தது.