Thursday, January 14, 2010

விடுகதைகள்



1. அரைச்சாண் ராணி;​ அவளுக்குள்ளே ஆயிரம் முத்துக்கள். அது என்ன?2. ஆனை விரும்பும்,​ சேனை விரும்பும்;​ அடித்தால் வலிக்கும்,​ கடித்தால் இனிக்கும். அது என்ன?3. இரவெல்லாம் பூங்காடு;​ பகலெல்லாம் வெறுங்காடு. அது என்ன?4. உருவத்தில் பெரியவன்;​ ஊருக்கு உயர்ந்தவன். அவன் யார்?5. உருவத்தில் சிறியவன்;​ உழைப்பில் பெரியவன். அவன் யார்?6. ஊரெல்லாம் வம்பளப்பான்;​ ஓர் அறையில் அடங்குவான். அவன் யார்?7. எட்டி நின்று பார்ப்பான்;​ பெட்டியில் போட்டுக் கொள்வான். அவன் யார்?8. ஏறினால் வழுக்கும். இனிய கனி தரும். காயைத் தின்றால் துவர்க்கும். அது என்ன?9. ஐந்து ஊர்களுக்கு ஒரே மந்தை. அது என்ன?10. ஓயாது இரையும் இயந்திரம் அல்ல;​ உருண்டோடி வரும் பந்தும் அல்ல. அது என்ன?11. கடிக்கத் தெரியாதவனுக்கு உடம்பெல்லாம் பற்கள். அது என்ன?12. ஊசி நுழையாத கிணற்றிலே ஒரு பிடி தண்ணீர். அது என்ன?13. தரையில் தாவுவான்;​ தண்ணீரில் மிதப்பான். அவன் யார்?14. ஊரெல்லாம் சுற்றும் பாய். அது என்ன பாய்?15. ஊரெல்லாம் சுற்றும் தலை. அது என்ன தலை?தி.சே.அறிவழகன்,​ சி.ஆனந்தன்விடைகள்:1.வெண்டைக்காய்2.கரும்பு 3.வானம் 4.கோபுரம் 5.எறும்பு 6.நாக்கு 7.கேமரா 8.வாழை 9.உள்ளங்கை 10.கடல் அலை11.சீப்பு 12.இளநீர் 13.தவளை14.ரூபாய்
உங்கள் பக்கம்



ஜனாதிபதி பதவி தகவல்கள்!* ​ போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் நீலம் சஞ்சீவ ரெட்டி.* ​ குடியரசுத் தலைவர்களான ராதாகிருஷ்ணன்,​ வி.வி.கிரி,​ சஞ்சீவ ரெட்டி,​ வெங்கட்ராமன்,​ கே.ஆர்.நாராயணன்,​ டாக்டர் அப்துல்கலாம் ஆகியோர் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள்.* ​ 1967-ம் ஆண்டுதான் குடியரசுத் தலைவர் பதவிக்கு மிக அதிகபட்சமாக 17 பேர் போட்டியிட்டனர்.* ​ மிக அதிகமாக அவசரச் சட்டங்களை பிறப்பித்த குடியரசுத் தலைவர் பக்ருதீன் ​ அலி அஹமது. அவர் தனது பதவிக் காலத்தில் 29 அவசரச் சட்டங்களை பிறப்பித்தார்.* ​ குடியரசுத் தலைவர் தேர்தலில் மிக அதிகம் வாக்கு வித்தியாசத்தில் அதாவது,​ 9,05,659 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் கே.ஆர். நாராயணன்.* ​ குடியரசுத் தலைவர் பதவிக்கு வந்த மிகக் குறைந்த வயதுக்காரர் நீலம் சஞ்சீவ ரெட்டி ​(64-ம் வயதில்).அ.அப்துல்காதர்,​ தாம்பரம்.ஸ்நூக்கர்!​​* ​ கிரிக்கெட் ஸ்டம்ப்பின் உயரம் 28 அங்குலம்.* ​ ஸ்நூக்கர் விளையாட்டில் 22 பந்துகள் பயன்படுத்தப்படுகிறது.* ​ பார்கின்சன் என்ற நோய் மனித மூளையைத் தாக்குகிறது.* ​ ஒரு சதுர மைல் என்பது 640 ஏக்கர் ஆகும்.* ​ நியூசிலாந்தின் தேசியப் பறவை கிவி.* ​ ஒட்டகச் சிவிங்கிகள் 16 அடி உயரத்துக்கு வளரும்.நெ.இராமன்,​ சென்னை-74.சீனப் பெருஞ்சுவர்!* ​ உலகிலேயே ​பால் பண்ணைத் தொழிலில் முதலிடம் வகிக்கும் நாடு டென்மார்க்.* ​ பாலஸ்தீனத்திலுள்ள சாக்கடலில் தான் உப்பு அதிகமாக விளைகிறது.* ​ நியூயார்க் நகரிலுள்ள விநாயகர் கோயில் முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது.* ​ கடலில் வாழும் மீன்களில் பல் வலி வரக் கூடிய விலங்கு மொரே எனும் விலாங்கு மீன். ​* ​ சீனப் பெருஞ்சுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.* ​ சினிமாவுக்கு சென்சார் இல்லாத நாடு பிரான்ஸ்.ஆர்.கே.லிங்கேசன்,​ மேலகிருஷ்ணன்புதூர்.இனிப்பான தாவரம்!​​* ​ ஒரு யூனிட் ரத்தம் என்பது 350 மில்லி லிட்டர் ஆகும்.* ​ வானவில் 3 நிமிடம் மட்டுமே தோன்றும்.* ​ உலக முதியோர் தினம் அக்டோபர் முதல் தேதியன்று கொண்டாடப்படுகிறது.* ​ இரண்டு தேசிய கீதங்கள் கொண்டு நாடு ஆஸ்திரேலியா.* ​ பராகுவே நாட்டில் வளரும் யுடோரியம் ரெபாண்டியானம் என்ற தாவரம் உலகிலேயே மிக இனிப்பான தாவரமாகும். இது சர்க்கரையை விட 300 மடங்கு தித்திப்பானது.ஏ.மாலதி,​ வேலூர்.மீனம்மா... மீனம்மா..!* ​ உலகில் 368 வகையான சுறா மீன்கள் உள்ளன.* ​ இந்தியக் கடலில் உள்ள ஹில்சா என்ற மீன் இனம் ஜாலியானது. கடல் பகுதியிலிருந்து ஆற்றுப் பகுதிக்கும் இவை வந்து போகும். ஆற்றுப் பகுதியில் குஞ்சு பொரிப்பதையே இவை அதிகம் விரும்புகின்றன.* ​ லிங் என்ற ஒரு வகை கடல் மீன் ஒரே நேரத்தில் 16 கோடி முட்டைகளை இடும்.* ​ தெற்கு அமெரிக்காவில் உள்ள எலக்ட்ரிக் ஈல் மீன்களின் உடலில் பத்து மின்சார பல்புகளை ஒரே நேரத்தில் எரிய வைக்கக் கூடிய அளவு மின்சாரம் உள்ளது. ​* ​ சுறா மீன்களுக்கு 8 நாள்களுக்கு ஒரு முறை பற்கள் விழுந்து புதுப் பற்கள் முளைக்கின்றன.ஆ.விஜயலஷ்மி,​ பத்தமடை.விலங்குகளின் தாவல் தூரம்!​​* ​ சிங்கம் 20 அடி தூரம் பாயும்.* ​ தவளை ஒரே தாவலில் 14 அடி தூரம் தாண்டும்.* ​ முயல் 13 அடி தூரம் தாண்டும்.* ​ குதிரை 37 அடி தூரம் பாயும்.* ​ கங்காரு 25 அடி தூரம் பாயும்.* ​ கிரேட் ஆக் பறவை தண்ணீருக்குள் நீந்திச் செல்லும்.சு.இலக்குமண சுவாமி,​ திருநகர்.நிலக்கரியைக் கண்டுபிடித்தவர்கள்!* ​ தீயில் எரிந்து போன காகிதங்களில் எழுதியுள்ள எழுத்துகளை தெளிவாக தெரிந்துக் கொள்ள அகச்சிவப்பு கதிரை பயன்படுத்துகின்றனர்.* ​ நொதிகளைப் படிமங்களாக மாற்ற முடியும் என்பதை முதன்முதலில் கண்டறிந்தவர் ஜேம்ஸ் பி.சம்னெர். இவர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்.* ​ நிலக்கரியை முதன்முதலில் சீனர்கள்தான் கண்டுபிடித்தனர்.​ * ​ மாவீரன் நெப்போலியன் ஆர்செனிக் என்ற விஷம் கொடுத்துதான் கொல்லப்பட்டார்.* ​ அமெரிக்க அதிபர் ரீகன் வானொலி அறிவிப்பாளராக பணியாற்றியவர்.பி.ஜி.குருசாமிப் பாண்டியன்,​ சத்திரப்பட்டி.ஆரஞ்சு பழம்!​​* ​ இந்தியாவில் உள்ள மிக உயரமான சிலை கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள கோமதீஸ்வரர் சிலை.* ​ மிகப் பெரிய துறைமுகம் மும்பைத் துறைமுகம்.* ​ உலகில் அதிகமாக விளைவிக்கப்படும் பழம் திராட்சைப் பழம்.* ​ ஆரஞ்சு பழத்தை அதிகம் உற்பத்தி செய்யும் நாடு பிரேசில்.* ​ இருபது கோடி வருடங்களுக்கும் மேலாக உள்ள தாவரம் மூங்கில்.* ​ உலகப் புகழ்பெற்ற ஓவியர் லியனார்டோ டாவின்சி சிறந்த பொறியியல் வல்லுநரும் ​ ஆவார்.* ​ பைசா கோபுரத்தில் 293 படிக்கட்டுகள் உள்ளன.பா.ராதாகிருஷ்ணன்,​ சென்னை.
உங்கள் பக்கம்



வெடிமருந்து!​​* கிராண்ட் திட்டுப் பகுதி உலகின் முக்கிய மீன் பிடித் துறையாக விளங்குகிறது.​ இது வட அமெரிக்காவில் உள்ளது.* விண்மீன்களில் ஒன்று ஹெர்க்குலிஸ்.​ இது சூரியனை விட மிகப் பெரியது.* மாக்ஸ் முல்லர் என்ற வெளிநாட்டவர் வேதத்தை முதன்முதலில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்.* உடலில் ரத்த ஓட்டம் இடைவிடாமல் நடைபெறுகிறது என்பதைக் கண்டுபிடித்தவர் வில்லியம் ஹார்வி.* சூரியனின் பரப்பில் சுமார் 11 ஆயிரம் டிகிரி பாரன்ஹீட் வெப்பம் உள்ளது.* வெடி உப்பு,​​ கந்தகம் இவற்றின் கலவையே வெடிமருந்தாகும்.இரா.பாலகிருஷ்ணன்,​​ வரக்கால்பட்டு.வண்டுகள் மொய்க்காத பூ!​​* செண்பகப் பூ,​​ வேங்கைப் பூவில் வண்டு மொய்க்காது என்று ஒரு நம்பிக்கை உள்ளது.* மிகச் சிறிய தாவரம் உல்ஃபியா,​​ உயரமான மரம் யூகலிப்டஸ்.* இந்தியாவின் தேசிய மரம் ஆலமரம்.* மரம்,​​ காய்கறி வளர்ப்புப் பற்றி படிக்கும் கலைக்கு ஆர்போரிக் கல்ச்சர் என்று பெயர்.* நமது நாட்டில் தேசிய தாவரவியல் பூங்கா லக்னோவில் உள்ளது.* உருது மொழி முதலில் ரீக்கா என அழைக்கப்பட்டது.அ.சா.குருசாமி,​​ செவல்குளம்.மேட்டூர் அணை!​​* மேட்டூர் அணைக்கு முதன்முதலில் இட்ட பெயர் ஸ்டான்லி ரிசர்வாயர்.​ இந்த அணையைக் கட்டியவர் ஸ்டான்லி என்ற ஆங்கிலேயர்.​ பிறகு மேட்டூர் என்ற ஊரின் பெயராலேயே அணையின் பெயர் நிலைத்துவிட்டது.* ஒலிம்பிக் வளையங்களில் ஐந்தும் ஐந்து வண்ணங்களில் இருக்கின்றது.​ நீலவண்ணம் ஐரோப்பாவிற்கும்,​​ மஞ்சள் ஆசியாவிற்கும்,​​ கருப்பு ஆப்பிரிக்காவிற்கும்,​​ பச்சை அமெரிக்காவிற்கும்,​​ சிகப்பு ஆஸ்திரேலியாவையும் குறிக்கின்றன.* நைலான் 1938-ல் கண்டுபிடிக்கப்பட்டது.* இந்தியாவிலேயே முதன்முறையாக கனரா வங்கியில் தான் பொதுமேலாளர் பதவிக்கு பெண் ஒருவர் நியமிக்கப்பட்டார்.​ அவரது பெயர் கமலா.* பெல்ஜியம் நாட்டில் பேசப்படும் மொழி பிளமிஷ்.வெண்ணெய்வேலவன்,​​ திருவெண்ணெய்நல்லூர்.கங்காரு செய்திகள்!​​* கங்காருக்களில் 56 இனங்கள் உள்ளன.* பெரிய கங்காரு 90 கிலோ வரை எடையிருக்கும்.* வாலிலிருந்து மூக்கு வரை 10 அடி நீளமிருக்கும்.* ஆபத்து காலத்தில் மணிக்கு 48 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும்.* இரண்டு மீட்டர் உயரமும்,​​ 6 மீட்டர் நீளமும் ஒரே மூச்சில் தாண்டவல்லது.* பிறக்கும் போது கங்காரு குட்டியின் நீளம் ஓர் அங்குலமே.நெ.இராமன்,​​ சென்னை-74.பனிச் சிறுத்தைகள்!​​* கையெழுத்துகளை வைத்து எழுதுபவரின் குணாதிசயங்களைக் கண்டறிய உதவும் படிப்புக்கு கிராஃபோலஜி என்று பெயர்.* பெண் வண்ணத்துப் பூச்சிகள் முட்டையிட்டவுன் இறந்து விடும்.* பனிச் சிறுத்தைகள் இமயமலைப் பிரதேசத்தில் அதிகளவில் காணப்படுகின்றன.* 1915-ம் ஆண்டில் நடைபெற்ற போரின் போதுதான் முதன்முறையாக ரசாயன குண்டுகள் பயன்படுத்தப்பட்டன.* ஈரான் நாட்டில் பேசப்படும் மொழி பாரசீக மொழியாகும்.* இந்தியாவில் இந்திக்கு அடுத்து தெலுங்கு மொழியே அதிகம் பேசப்படுகிறது.த.ஜெயபிரகாஷ்,​​ கலவை.வாயில் சுரக்கும் நொதியின் பெயர்!* கர்நாடக மாநிலத்தில் கூர்க் என்ற இடத்தில் தான் காவிரி ஆறு உற்பத்தியாகிறது.* வேதிப் பொருளின் அரசன் கந்தக அமிலம்.* வாயில் சுரக்கும் நொதியின் பெயர் டயலின்.​* டாக்ஸிகள் அதிகம் உள்ள நகரம் மெக்ஸிகோ.* சைக்கிள்கள் அதிகம் உள்ள நகரம் சீனாவில் உள்ள பீஜிங்.* உலகில் முதல் அணுசோதனையை நடத்திய நாடு அமெரிக்கா.பிரபாலிங்கேஷ்,​​ மேலகிருஷ்ணன்புதூர்.மலர்ந்ததும் உடனடியாக வாடும் பூ!​​* முதன்முதலில் நாடக அரங்கத்தை அமைத்தவர்கள் கிரேக்கர்கள்.* நர்மதா பள்ளத்தாக்கின் பக்க சுவர்கள் எனப்படுபவை விந்திய மலை.* சிவப்பு அனுக்கள் 90 முதல் 120 நாட்கள் வரை உயிர் வாழும்.* மனிதன் உடலில் உள்ள விலா எலும்புகளின் எண்ணிக்கை 24.* முதலைகளால் தங்கள் நாக்கை அசைக்க முடியாது.* மலர்ந்ததும் உடனடியாக வாடி விடும் பூ பாகலிப் பூ.முருகேசன்,​​ தேனி.அதிக உயரத்துக்கு அலை அடிக்கும் இடம்!​​* புகழ்பெற்ற சாய்வு கோபுரமான பைசா கோபுரத்தின் முழுப் பெயர் டார்ரே பென்டென்டே டீ பைசா.* சி.என்.டவர் டோரன்டோ என்ற கோபுரம்தான் உலகிலேயே மிக உயரமான கோபுரம்.* கனடாவில் உள்ள ஃபன்டி வளைகுடா பகுதியில் 53 அடி உயரத்துக்கு அலை அடிக்கிறதாம்.​ உலகிலேயே உயரமாக அலை அடிப்பது இங்குதானாம்.* ஒளிபுகக் கூடிய உலோகம் மைக்கா.* கப்பல் மேல் தளம் தேக்கு மரத்தல் செய்யப்படுகிறது.* மிளகுக்கு வாசனைப் பொருள்களின் அரசன் என்று பெயர்.கே.கவின்,​​ பொள்ளாச்சி.​
கடி



""ஏன் பள்ளிக்கூடத்துக்கு லேட்டா வந்தே?''""கடிகாரத்தை ரிப்பேர் பண்ணிக் கொண்டே இருந்தேன். நேரம் போனதே தெரியவில்லை டீச்சர்!''ஞா.செ.சேரலாதன், பொழிச்சலூர்.-----------------------------------------------------------------------------""அந்த சைக்கிள் கடை வச்சிருக்கிறவரு கத்தினா கூட தொழில் ரீதியாதான் கத்துவாரு!''""எப்படி?''""வீல் வீல்'னு!ஜி.ரெஜினா பானு, பழனி.-----------------------------------------------------------------------------""டாக்டருக்கும், இ.பி.காரருக்கும் என்ன ஒற்றுமை?''""தெரியலையே?''""ரெண்டு பேரும் ஃபீஸ் பிடுங்கறவங்க!''பு.நிவேதா, பொலம்பாக்கம்.-----------------------------------------------------------------------------""ஏன் உங்க பையன் லைட் முன்னாடி இப்படி வாயை திறந்துக்கிட்டு நிக்கிறான்?''""நான் லைட்டா சாப்பிடுன்னு சொன்னதை அவன் தப்பாப் புரிஞ்சிக்கிட்டான் போல இருக்கு.''பி.கவிதா, 240, வேளாளர் தெரு, கோவிலாம்பூண்டி, சிதம்பரம்-608 002.-----------------------------------------------------------------------------""தேங்காய் மட்டை நாரைக் கூட விடறதில்லையே ஏன்?''""நார்ச்சத்துள்ள ஆகாரம் சாப்பிடச் சொன்னாராம் டாக்டர்!''செல்.பச்சமுத்து, மேட்டுச்சேரி.-----------------------------------------------------------------------------""ஏன் சாப்பிடும் போது ஃபேனை ஆஃப் பண்ணிடுறே?''""எங்க அப்பா என்னை வேர்வை சிந்தி சாப்பிடச் சொன்னாரு, அதான்!''கே.கவின், 10-ம் வகுப்பு, 47, நேதாஜி ரோடு, பொள்ளாச்சி, கோவை மாவட்டம்-642 001.-----------------------------------------------------------------------------
விடுகதைகள்



1. விண்ணில் முட்டும்; மண்ணில் கொட்டும். அது என்ன?2. நாக்கினால் நகரும்; நல்லது பல உணர்த்தும். அது என்ன?3. தலையுண்டு முடியில்லை; உடல் உண்டு காலில்லை; நிறுத்தினால் நிற்பான். அவன் யார்?4.நிம்மதிக்கு விரியும்; நிலை மாறினால் சுருங்கும். அது என்ன?5. ஓடும் குதிரை, ஒளியும் குதிரை; தண்ணீரைக் கண்டால் தவிக்கும் குதிரை. அது என்ன?6. காதைப் பிடித்து அழுத்தினால் கண்ணீர் விட்டு அழும். அது என்ன?7. ஊரெல்லாம் ஊளையிட்டுச் செல்வான். அவன் யார்?8. பிறர் மானம் காப்பான். அவன் யார்?9. உலர்ந்த கொம்பிலே மலர்ந்த பூ. அது என்ன?10. அன்றாடம் தேயும் ஆண்டி. அவன் யார்?11. நீர் ஊற்றினால் மறையும்; நீர் வற்றினால் விளையும். அது என்ன?12. நாலு கட்டையில் உருவாகி நடுச்சுவரில் குடியிருப்பான். அவன் யார்?13. நீந்தத் தெரிந்தவனுக்கு குளிக்கத் தெரியாது. அவன் யார்?14. அழகு தர நெருப்பில் குதிக்கும். அது என்ன?15. உடல் எரியும்; உயிர் போகாது. அது என்ன?இரா.பாலகிருஷ்ணன்விடைகள்:1.மழை2.பேனா3.குண்டூசி4.பாய்5.செருப்பு6.தண்ணீர் குழாய் 7.ரயில்8.ஆடை9.குடை10.தினசரி காலண்டர்11.உப்பு12.ஜன்னல்13.கப்பல்14.தங்கம்15.மின்மினிப்பூச்சி
கடி



* ""ஏன் தினமும் பூரி,​​ இட்லி,​​ தோசைன்னு டிபன் அயிட்டங்களாகவே சாப்பிடற?''""என்னை யாரும் "தண்டச் சோறு'ன்னு சொல்லிடக் கூடாதுல்ல!''டி.பச்சமுத்து,​​ 5/1076,​ பாரதியார் நகர்,​​ சந்தைப்பேட்டை,​​ கிருஷ்ணகிரி-635 001.* ""அந்தத் திருடனிடம் பீரோ சாவி கொடுத்தீங்க...​ சரி.​ அவனுக்கு ஏன் சல்யூட் அடிச்சீங்க..?''""அவன்தான் "மரியாதையா பீரோ சாவிய கொடு'ன்னு சொன்னானே!''ஏ.பஷீர் அஹமது,​​"சுசிலா நிலையம்'பழைய எண்:12/4,​ சி.என்.கே.​ சாலை,​​ சேப்பாக்கம்,​​ சென்னை-600 005.""அரண்மனைப் புலவர்கள் 64 பேரின் வாய்களையும் தைத்து விடுமாறு மன்னர் உத்தரவிட்டாரே...​ ஏன்?''""மன்னரை பாடிப் பாடியே போண்டி ஆக்கி விட்டார்களாம்!''சி.பி.செந்தில்குமார்,​​ சென்னிமலை.""தலைமுடிக்கும்,தேளுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு.''""என்னது?''""ரெண்டுமே கொட்டும்.''எம்.அசோக்ராஜா,​​ திருச்சி.""டேய்...​ ரவி,​​ வினாத்தாள் "அவுட்' ஆயிடுச்சாம்!''""என்ன "டக்' அவுட்டா?​ இல்ல "செஞ்சுரி' அடிச்சிட்டு "அவுட்' ஆச்சா..?''டி.பசுபதி பாண்டியன்,​​ அவ்வையார்பாளையம்.""என் நண்பருக்கு மூணு காது!''""எப்படி?''""வலக்காது, இடக்காது. ரெண்டும் கேக்காது!''தி.ஆ.டேவிட்,​​ தென்காசி.
விடுகதைகள்



1.​ ஆள் இல்லாத வீட்டில் தலைகீழாக தொங்கும்.​ அது என்ன?2.​ நீரில் பிறந்தவன்,​​ நீரிலே வேகிறான்.​ அவன் யார்?3.​ உணவை உள்ளே தள்ளியவன்,​​ உடையை வீசி எறிவான்.​ அவன் யார்?4.​ தலையில் வைக்காத பூ;​ உடலுக்கு சத்தான பூ.​ அது என்ன பூ?5.​ காலைக் கடிக்கும் செருப்பு இல்லை;​ காவலுக்கு உதவும் நாயும் இல்லை.​ அது என்ன?6.​ மழைக்குப் பிறந்தவன் குடைக்கு எடுத்துக்காட்டு.​ அவன் யார்?7.​ தண்ணீரிலே வாழ்வான்;​ தலைகுளிக்க மாட்டான்.​ அவன் யார்?8.​ விறகுக்கு ஆகாத மரம்;​ வீணாக நிற்காத மரம்.​ அது என்ன?9.​ வசப்படும் என்று வால் கட்டிப் பறந்தாலும்,​​ எதுவும் புலப்படாமல் போய்க் கொண்டே இருக்கும்.​ அது என்ன?10.​ நிமிர்த்தினாலும் வளைந்து விடும்;​ துரத்தினாலும் தொடர்ந்து வரும்.​ அது என்ன?11.​ பெட்டிக்குள் இருந்தாலும் கெட்டுப் போகாத இடம்.​ அது என்ன?12.​ பெரிய உருவம் கொண்ட அண்ணாச்சிக்கு,​​ சிறிய கண்கள்.​ அது என்ன?13.​ அடுக்கடுக்காய் சீப்பு இருக்கும்;​ ஆனால் தலைவார முடியாது.​ அது என்ன?14.​ கையில் எடுத்தால்தான் வாயைத் திறக்கும்.​ தைப்பவரிடம் உதவியாய் இருக்கும்.​ அது என்ன?​​சிவன்,​​ வெண்ணெய்வேலன்விடைகள்:​​1.வெள​வால் ​ 2.மீன் 3.வாழைப்பழம் 4.வாழைப் பூ 5.முள் 6.நாய்க்குடை 7.தாமரை இலை 8.மின்கம்பம் 9.வானம் ​ 10.நாய் ​11.குளிர்சாதனப் பெட்டி ​ 12.யானை ​ 13.வாழை சீப்பு ​ 14.கத்தரிக்கோல்