Monday, September 30, 2013

பழங்களின் அரசி என்றழைக்கப்படும் திராட்சை

பழங்களின்  அரசி 

என்றழைக்கப்படும் 

 

திராட்சை

பழங்களின் ராணி என்றழைக்கப்படும் திராட்சை, மூன்று நிறங்களில் காணப்படுகிறது. சிவப்பு, பச்சை, கறுப்பு, என  நாட்டிற்கு ஏற்றவாறு நிறங்கள் மாறுபடுகின்றன. 
இந்த பழத்தில் வைட்டமீன் பி1, பி2, பி3, பி6, பி12, சி, இரும்புச்சத்து, பாஸ்பரஸ் ஆகிய சத்துக்கள் அதிகம் உள்ளன. இதன் நிறம் கண்களை கவரும் வகையிலும், சாப்பிடுவதற்கு விரும்பதக்கதாகவும் இருக்கின்றது.
திராட்சை பழத்தில் இருந்து மருந்து, ஒயின், கிரேப் சீட் எண்ணெய், சாக்லேட், ஜூஸ் என பலவற்றை தயாரிக்கலாம். உடலுக்கு தேவையான தாதுக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட், வைட்டமீன் போன்ற சத்துக்களை உடலுக்கு வழங்கி ஆரோக்கியமாக வைக்க உதவுகின்றது.
இப்பழத்தை உண்பதால்.....
* உடல் வறட்சி, பித்தம் நீங்கும். ரத்தம் தூய்மை பெறும். இதயம், கல்லீரல், மூளை, நரம்புகள் வலுப்பெறும்.
* பித்தத்தால் ஏற்படும் வாந்தி, தலைச்சுற்றல், ஒற்றை தலைவலி ஆகிய பிரச்னைகளுக்கு இது நல்ல தீர்வாக இருக்கும்.
* திராட்சைப் பழத்துடன் மிளகை சேர்த்து அரைத்து சாப்பிட்டு வர, நாக்கு வறட்டுதல் நீங்கும்.
* உடல் அசதி, பயணத்தின் போது ஏற்படும் உஷ்ணத்திற்கு திராட்சைப் பழம் ஏற்றது.
* திராட்சை சாறுடன் சர்க்கரை சேர்த்து தினமும் சாப்பிட்டு வர மாதவிடை கோளாறுகள் சரியாகும். வயிற்றுப்புண், வாய்ப்புண் ஆறுவதற்கு சிறந்த மருந்தாகும்.
* கண்பார்வையை அதிகரிக்கிறது. உடலில் தேவையில்லாத கொழுப்புகளை நீக்கவும், சிறுநீரக பிரச்னையை அகற்றவும் இது பயன்படுகிறது.
* இளம் பெண்களுக்கு ஏற்படும் முகப்பரு பிரச்னைக்கு, இதன் சாறு  எடுத்து தடவினால் விரைவில் பரு கொட்டிவிடும். முகத்தில் ஏற்படும் கருவளையத்தை போக்கவும், தோல் வியாதியை கட்டுப்படுத்தவும் திரட்சை பயன்படுகிறது.
திரட்சைப்பழம் உடல் நலத்திற்கு மிக மிக நல்லது. ஆகவே தினமும் இதை உண்டு வந்தால் இளமையாகவும், அழகாகவும் இருக்கலாம்.

Tuesday, September 17, 2013

நீரிழிவில் இருந்து விடுபட.....

நீரிழிவில் இருந்து விடுபட.....


* நீரிழிவு நோய் உள்ளவர்கள் நெல்லிக்கனிச் சாற்றை இனிப்பு சேர்க்காமல் தினமும் சாப்பிட்டு வர படிப்படியாய் குறைந்து குணமாகும்.
* கொன்றைப் பூவை 200 கிராம் எடுத்து நன்கு அரைத்து மோரில் கலக்கி குடித்து வந்தால் நீரிழிவு நோய் குணமாகும்.
* வெள்ளை மருதம் பட்டைக்கு நீரிழிவு நோயைத் தணிக்கும் ஆற்றல் உண்டு.
* அடிக்கடி முருங்கைக் கீரையைச் சாப்பிட்டால் நீரிழிவைக் கட்டுப்படுத்த முடியும்.
* செம்பருத்திப் பூ கஷாயத்தில் தேன் சேர்க்காமல் மிளகு சேர்த்துப் பருகினால் நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதோடு சர்க்கரை நோயையும் கட்டுப்படுத்தும்.
* இரத்தத்தில் உள்ள சர்க்கரையையும் சிறுநீரில் உள்ள சர்க்கரையையும் வெந்தயம், வெந்தயக் கீரை குணமாக்கும்.
* முருங்கை இலை, எள்ளு பிண்ணாக்கு, உப்பு, மிளகாய் அனைத்தும் அவித்துச் சாப்பிட நீரிழிவு நோய் குணமாகும்.

இதய நோயாளிகளுக்கு உடற்பயிற்சியும், மனப் பயிற்சியும்

இதய நோயாளிகளுக்கு உதவும் உடற்பயிற்சியும், மனப் பயிற்சியும்

இதய நோயாளிகள் சீரான உடற்பயிற்சியோடு எதையும் நேர்மறையாக எடுத்துக் கொள்ளும் மனப் பயிற்சியையும் மேற்கொண்டால் நீண்ட ஆயுளோடு வாழலாம்.
எதற்கெடுத்தாலும் பயந்து, இதய நோய் வந்து விட்டதே என்று நினைத்து வருந்தி எப்போதும் முடங்கிப் போயிருப்பவர்களை விட, எதையும் சாதிக்க முடியும், எது நடந்தாலும் அதில் நன்மையே இருக்கும் என்று நேர்மறையான சிந்தனையுடன் வாழ்பவர்கள், பயப்படுபவர்களை விட அதிக ஆண்டுகள் வாழ்வதாக ஆய்வுகள் கூறுகின்றன.
பயம் கொள்ளும் போது, இதயத்தின் வேகம் அதிகமாகி அதனால் உடலுக்கு அதிகமான ரத்த ஓட்டம் பாய்கிறது. அதே சமயம், எதையும் தைரியமாக எதிர்கொண்டு, நம்மால் முடியும் என்ற மனப்பான்மையோடு வாழும் போது, இதயத்துக்கு அதிக பாதிப்புகள் ஏற்படுவதில்லை.
இந்த மனப்பயிற்சியோடு, இதய நோயாளிகள் அவர்களுக்கு என்று உள்ள ஒரு சில உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்து வந்தால் நல்ல ஆரோக்கியத்தோடு நீண்ட நாட்களுக்கு உயிர் வாழலாம் என்கிறது மருத்துவம்.
மேலும், நேர்மறை எண்ணங்களால், இதய நோயாளிகளும், நம்மால் உடற்பயிற்சி செய்ய முடியும் என்ற நம்பிக்கை வந்து, உடற்பயிற்சி செய்வதாகவும், ஒரு சிலர், மருத்துவர்களின் ஆலோசனைப்படி உடற்பயிற்சி செய்து, அதனால் உடல் ஆரோக்கியத்தைப் பெற்று நேர்மறையான எண்ணத்தைப் பெறுவதாகவும் கூறப்படுகிறது.
எது எப்படியோ, ஒன்றை முயற்சி செய்து துவக்கிவிட்டால் மற்றொன்று தானாகவே வந்து வருகிறது.
எனவே மனப்பயிற்சியும், உடற்பயிற்சியும் எப்போதும் கைகொடுக்கும் என்பதை மறவாதீர்.

வாரத்தில் ஒரு நாள் உடற்பயிற்சியே போதும்

வாரத்தில் ஒரு நாள் உடற்பயிற்சியே போதும்

சுமார் 60 வயதைக் கடந்த பெண்மணிகள் வாரத்தில் ஒரு நாள் உடற்பயிற்சி மேற்கொண்டாலே ஆரோக்கியமான உடலைப் பெறலாம் என்கிறது புதிய மருத்துவ ஆய்வு ஒன்று.
பிர்மிங்காமில் உள்ள அலபாமா பல்கலைக்கழகத்தினர்,  60 வயதைக் கடந்த பெண்களை வைத்து இந்த ஆய்வை நடத்தினர்.
அதில் ஒரு குழுவை வாரத்தில் 3 நாட்களும், மற்றொரு குழுவை வாரத்தில் 2 நாட்களும், அடுத்த குழுவை வாரத்தில் 1 நாளும் உடற்பயிற்சி மேற்கொள்ள வைத்தனர்.
சுமார் 16 வாரங்கள் ஆன நிலையில், மூன்று குழுவில் இருப்பவர்களின் உடல் ஆரோக்கியமும் ஒரே சீராக இருந்தது. அவர்களது தசைகளும் வலுப்பெற்று இருந்தது.
இதன் மூலம், வயதான பெண்மணிகள், வாரத்தில் ஒரு நாளாவது உடற்பயிற்சி செய்தால் அவர்கள் ஆரோக்கியத்தை பெறலாம் என்றும், இதுவரை வாரத்தில் 5 அல்லது 6 நாட்களாவது உடற்பயிற்சி செய்யுங்கள் என்று வயதானவர்களை மருத்துவர்கள் பரிந்துரைத்து வந்ததை மாற்றிக் கொள்ளவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

நாம் நினைப்பது போல அல்ல பழச்சாறுகள்

நாம் நினைப்பது போல அல்ல 

பழச்சாறுகள்

பழச்சாறு.. உடலுக்கு மிகவும் நல்ல உணவு வகையில் முதலிடத்தில் இருப்பது. மிகவும் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கும் சரி, அதிக நாள் சாப்பிடாமல் இருப்பவர்களுக்கும் சரி முதலில் கொடுப்பது பழச்சாறு தான்.
மேலும், வீட்டில் இருக்கும் நோயாளிகளுக்கும் நாம் அடிக்கடி பழச்சாறு கலந்து கொடுத்து வருவோம். பழச்சாறு என்பது உடலுக்கு மிகவும் நல்லது. அதனால் உடலுக்கு மிக அதிக நன்மை கிடைக்கும் என்று நாம் நினைக்கிறோம்.
ஆனால், பழச்சாறு என்பது நாம் நினைப்பது போல மிகவும் நல்ல உணவாக இல்லாமல், அதில் சில குறைபாடுகளும் இருக்கின்றன என்கிறார்கள் மருத்துவர்கள்.
அதாவது, பழச்சாறு தயாரிக்கும் போது, பழத்தை நன்கு மசித்து அதில் உள்ள நார் சத்துக்களை எல்லாம் தூக்கி எறிந்து விடுகிறோம். இதனால், பழத்தின் முக்கிய நன்மையான நார்சத்து நமக்குக் கிடைக்காமலேயே போய் விடுகிறது.
அடுத்ததாக ருசிக்கு பழச்சாறில் சர்க்கரையை சேர்க்கிறோம். இது உடலுக்கு கெடுதலை ஏற்படுத்தும். அதுவும் நோயாளி ஒருவர் தொடர்ந்து பழச்சாறை அருந்தி வந்தால், அவரது உடலில் சர்க்கரையின் அளவு கண்டபடி ஏறி இறங்க வாய்ப்பு ஏற்படும்.
எனவே, மிகவும் முடியாத நிலையில் இருக்கும் போது பழச்சாறு கொடுப்பதில் தவறில்லை. ஒருவரால் நன்கு பழத்தை மென்று சாப்பிட முடியும் என்ற நிலையில் இருக்கும் போது அவருக்கு பழச்சாறு தேவையில்லை. பழத்தை சாப்பிடும் போது, ஒரு வகையில் வாய் சுத்தம் செய்யப்படுகிறது. ஜீரண உறுப்புகளுக்கு எளிதாக ஜீரணம் செய்யக் கூடிய உணவு பொருள் கிடைக்கிறது. தேவையற்ற சர்க்கரை சேர்வதில்லை.

Monday, September 16, 2013

தமிழ் வளர்த்த பெருமகன்கள்!வள்ளல் பாண்டித்துரை அவர்களிடம் திருக்குறளைத் திருத்தி அளித்தவர் இசுகாட் (Scot) என்பவர். எல்விசு எனக் குறித்துள்ளதால் முழுப் பெயரையும் தெரிவிக்கவும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/


பூ. கொ. சரவணன்
Comment   ·   print   ·   T+  
சிகமணி டி.கே.சிதம்பரநாதனின் மகனான தீர்த்தாரப்பன் இளம் வயதிலேயே இறந்துவிட்டார். ஆற்ற முடியாத துயரத்தில் அமர்ந்திருந்த டி.கே.சி.க்கு ஒரு கடிதத்தை தந்தார்கள். அதை வாங்கி, கண்களை இடுக்கி மெதுவாக படித்தார். திடீரென்று கண்கள் பிரகாசமாகின. மகனின் மரணத்தை மீறியும் அவரின் குரலில் ஓர் உற்சாகம். “ஆஹா! ஆஹா” என்று அவர் பூரித்துப்போக, 'என்ன சங்கதி' என்று அவர் கையில் இருந்த தாளை வாங்கிப்பார்த்தார்கள். கவிமணி அவரின் மகனின் மறைவுக்கு எழுதியிருந்த இரங்கற்பா அது. “இப்படி ஓர் இரங்கற்பா கிடைக்க எத்தனை மகனை வேண்டுமானாலும் இழக்கலாம்!” என்று சொன்னாராம் ரசிகமணி. பெயருக்கு ஏற்ற ஆள்தான் அவர்.
சுசுமு ஓனோ எனும் ஜப்பானிய பேராசிரியர் தமிழ்நாட்டை சேர்ந்த பேராசிரியர் பொற்கோவுடன் இணைந்து எண்ணற்ற ஆய்வுகளை தமிழ் மொழி மற்றும் ஜப்பானிய மொழி ஆகியவற்றுக்கிடையே உள்ள ஒற்றுமை சார்ந்து செய்தார்கள். அந்த ஆய்வு வெகுகாலம் நகர்ந்தது. அப்போது எண்பது வயதில் இருந்த ஓனோ, “நான் அறுபது வயதிலேயே இறந்திருக்க வேண்டியவன். தமிழ் கொடுத்த ஆற்றல்தான் என்னை இத்தனை தூரம் உயிரோடு வைத்திருந்திக்கிறது. உயிர் தந்த மொழி தமிழ்” என்று கண்ணீர் மல்க அந்த ஆய்வு முடிகிறபோது சொன்னது வரலாறு.
பாண்டித்துரைத் தேவர் நான்காம் தமிழ்ச் சங்கம் ஆரம்பித்து, கடந்த நூற்றாண்டில் தமிழ் வளர்த்தது வரலாறு. அவரை எல்விஸ் துரை எனும் ஆங்கிலேயர் சந்தித்தார். அவர் திருக்குறள் தவறாக எழுதப்பட்டு இருப்பதாகவும், அதை மாற்றிக் கொண்டுவந்திருப்பதாகவும் சொன்னார். உள்ளுக்குள் எழுந்த அதிர்ச்சியை சற்றும் காட்டிக்கொள்ளாமல், “எத்தனை பிரதிகள் போட்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார். “ஐநூறு!” என்று ஆர்வம் கொப்பளிக்க விடை வந்து விழுந்தது. அத்தனை பிரதியையும் அப்படியே பணம் கொடுத்து வாங்கிக்கொண்டார் பாண்டித்துரை தேவர். வேலையாளை அழைத்தார். “எல்லாத்தையும் குழி தோண்டி சீமெண்ணெய் ஊத்தி கொளுத்திடு!” என்றார். ஒரு தவறான திருக்குறள் பிரதிகூட தமிழனுக்கு போய் சேர்ந்துவிடக்கூடாது என்று அத்தனை கவனம் இருந்தது அவரிடம்.
Keywords: தமிழ்மொழிஅறிஞர்கள்ரசிகமணிபாண்டித்துரை தேவர்திருக்குறள்
 - தமிழ் இந்து

காந்திக் கணக்கு என்றால் என்ன?

காந்திக்கணக்கு என்றால், ஏப்பம் விட்டு விட்டான், நாமம் போட்டு விட்டான் என்பன போன்ற மரபுத் தொடர்போல் பணம் தராமல் ஏமாற்றுவதை அல்லது மோசடி  செய்வதை எனச் சரியான பொருளில் தான் கையாளுகிறோம். காங்கிரசுக்காரர்கள் கட்சி   மாநாடு நடக்கும் பொழுது காந்தி விடுதலை வாங்கித்தந்ததும் பணத்தைத் தந்துவிடுகிறோம். அதுவரை காந்திக்கணக்கில் வைத்துக் கொள் எனக் கூறி உணவகங்களில்  பணம் தராமல் உண்பதைக் காந்திக் கணக்கு என்றனர். ஒரு வேளை அதற்கு மூலமாக இச்செய்தியில் குறிப்பிட்ட தகவல் இருக்கலாம்.  புதிய தகவலுக்கு நன்றி.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/காந்தி க் கணக்கு என்றால் என்ன?

எம். எல். இராசேசு
Comment (3)   ·   print   ·   T+  

காந்தி கணக்கு என்றாலே கிட்டதட்ட 'நாமம்' என்கிற அர்த்தத்தைதான் நாம் உருவாக்கி வைத்திருக்கிறோம். ஆனால், காந்தி கணக்கு என்றால் என்ன என்பதற்கான உண்மையான அர்த்தம் என்னவென்று பலருக்கும் தெரியாது. அதை இப்போது தெரிந்துகொள்வோம்.
மகாத்மா காந்தி உப்பு சத்தியாகிரகம் மேற்கொண்டிருந்தபோது, அவருக்கு வியாபாரிகள் அத்தனை பேரும் தார்மீக ஆதரவு அளித்தார்கள். அவர்கள் காந்தியிடம் “நேரடியாக எங்களால் இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ள முடியாது. ஆனால், எப்படியாவது உங்கள் போராட்டத்திற்கு நாங்கள் ஆதரவு அளிப்போம். இதில் கலந்துகொள்ள வரும் தொண்டர்களை எங்கள் கடைகளில் எது வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ள சொல்லுங்கள். பணம் தர வேண்டாம். அடையாளம் தெரியாமல் பணம் கேட்க நேரும்போது, 'காந்தி கணக்கு' என்று எங்களுக்கு புரியும்படி சொன்னால் போதும். நாங்கள் அவர்களிடம் பணம் கேட்க மாட்டோம்” என்றார்களாம் அந்த வியாபாரிகள்.
அப்படி வந்ததுதான் காந்தி கணக்கு. ஆனால், நாம் இதற்கு அர்த்தம் வைத்திருப்பதோ புரியாத கணக்கு. ஒவ்வொரு சொல்லிலும் அதன் உள் அர்த்தத்தை புரிந்து செயல்பட்டால் அறிவு விசாலமாகும்.

Tuesday, September 3, 2013

காய்கறிகளின் மருத்துவக் குணங்கள்


தினஇதழ் Home / அபூர்வ தகவல்கள் / காய்கறிகளின் மருத்துவ குணங்கள்
காய்கறிகளின்  மருத்துவ  குணங்கள்

காய்கறிகளின் மருத்துவக் குணங்கள்

நாம்அன்றாடம் (விலையைப் பார்க்காமல்!) காய்கறிக் கடைகளில் பார்க்கும் வாழைப்பூ, வாழைத்தண்டு, வாழைக்காய்,பாகற்காய், சேப்பங்கிழங்கு, பீட்ரூட், வெண்டைக்காய், கோவைக்காய், முருங்கைக்காய், சுண்டைக்காய், சுரைக்காய், குடைமிளகாய், சௌசௌ, அவரைக்காய், கேரட், கொத்தவரங்காய் மற்றும் பிஞ்சு கத்தரிக்காய் ஆகியவற்றின் மருத்துவகுணங்களையும் பார்ப்போமா..?
வாழைப்பூ:
வாழைப்பூவின் ஒவ்வொரு இதழிலும் நமக்கு இரும்புச்சத்து, போலிக் அமிலம், வைட்டமின் ஏ, பி, சி சத்துக்கள் நிறைந்துள்ளன. இவைநமக்கு ரத்தச் சோகையை வராமல் தடுத்து, நம் உடலுக்கு தெம்பையும் புத்துணர்வையும் தரவல்லது.
வாழைத்தண்டு:
வாழைத்தண்டில் ஏராளமான கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி, சி நிறைந்துள்ளது. அவை நம் உடலில் ரத்தத்தை சுத்தப்படுத்துவதுடன், ரத்தத்தில் சேர்ந்துள்ள தேவையற்ற அசுத்த நீரையும் பிரித்தெடுக்கும். நம் சிறுநீரகத்தின்செயல்பாடுகளையும் சீராக்குவதோடு, சிறுநீரக கல் அடைப்பையும் தடுக்கும்.
வாழைக்காய்:
வாழைக்காயில் இரும்புச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் பி, சி, சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. இவை வாயுவை அதிகம் தூண்டும் குணமுள்ளதால், இவற்றை சமைக்கும்போது அதிகளவில் பூண்டையும் சேர்த்துக் கொள்வது நல்லது. இவை தீராத மலச்சிக்கலையும் தீர்க்கவல்லது.
பாகற்காய்:
பாகற்காயில் ஏராளமான வைட்டமின் ஏ, பி, சி, பாஸ்பரஸ், இரும்புச்சத்து மற்றும் கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை நமக்கு நன்குபசியைத் தூண்டும். மேலும், நம் உடலில் சர்க்கரையின் அளவையும் கட்டுப்படுத்தும்.
சேப்பங்கிழங்கு:
சேப்பக்கிழங்கில் அதிக அளவில் கால்சியம், பாஸ்பரஸ் நிறைந்துள்ளது. இவை நம் எலும்புகளையும் பற்களையும் மேலும் உறுதிப்படுத்துகிறது.
பீட்ரூட்:
பீட்ரூட்எந்தளவுக்கு சிவந்து காணப்படுகிறதோ, அதே அளவு கால்சியம், சோடியம் மற்றும் பொட்டாசியம் சத்துக்களும் நிறைந்துள்ளன. இவை மலச்சிக்கலைப் போக்குவதுடன், ரத்த சோகையையும் சரிப்படுத்துகிறது.
வெண்டைக்காய்:
வெண்டைக்காயில்மிருதுவான தன்மைக்கேற்ப போலிக் அமிலம், கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துகளும் நிறைந்துள்ளன. அவை நம் மூளை வளர்ச்சியைத் தூண்டுவதோடு. நமக்கு நன்கு பசியையும் உண்டாக்கும். மேலும் நம்மிடம் உள்ள மலச்சிக்கலையும் போக்கும்.
கோவைக்காய்:
கோவைக்காய்பார்க்க சிறிதாக இருந்தாலும், அவற்றில் வைட்டமின் ஏ, கால்சியம், போலிக் அமிலம், பாஸ்பரஸ், இரும்புச் சத்துக்கள்நிறைந்துள்ளன. இவை நம்மிடம் உள்ள வயிற்றுப்புண், வாய்ப்புண் மற்றும் மூலநோயின் தாக்குதல் போன்றவற்றையும் அறவேநீக்கும்.
முருங்கைக்காய்:
முருங்கைக்காய் எந்தளவுக்கு நீண்டுள்ளதோ, அதே அளவு வைட்டமின் ஏ, பி, சி, பாஸ்பரஸ் மற்றும் இரும்புச் சத்துகள் நிறைந்துள்ளன. பெண்களுக்கு மாதவிலக்கின்போது உண்டாகும் அதிகளவு உதிரப்போக்கைத் தடுக்கும். ‘முந்தானை முடிச்சு’ படத்தில் வருவதுபோல, முருங்கைக்காயில் பல அயிட்டங்கள் செய்து சாப்பிட்டால், ஆண்களுக்கு விந்து உற்பத்தியையும் பெருக்கும்.
சுண்டைக்காய்:
‘ மூர்த்திசிறிதானாலும் கீர்த்தி பெரிது ‘ என்பதைப் போல, சுண்டைக்காய் சிறிதானாலும் அதில் உள்ள புரதம், கால்சியம், இரும்புச்சத்து போன்றவற்றால், அதன் கீர்த்தி உயரே உள்ளது. நம் உணவில் அடிக்கடி சுண்டைக்காயைச் சேர்த்து வந்தால், நம்வயிற்றில் உள்ள அனைத்து புழுக்களையும் கொல்லக்கூடிய சக்திவாய்ந்தது. நம் உடல் வளர்ச்சியையும் அதிகளவில் தூண்டும்.
சுரைக்காய்:
சுரைக்காய்எந்தளவு குண்டாக உள்ளதோ, அந்தளவுக்கு புரதம், கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் பி, நிறைந்துள்ளது. இவை நம் உடல் சோர்வை நீக்குவதுடன், நம் உடலுக்குப் புத்துணர்ச்சியையும் கொடுக்கிறது.
குடைமிளகாய்:
கொக்கிபோன்ற கொம்பு உடைய குடைமிளகாயில் வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கணிசமாக உள்ளது. அவை நமக்கு அஜீரணக் கோளாறை நீக்கி, செரிமான சக்தியை அதிகரிக்கத் தூண்டும்.
செளசௌ:
பார்ப்பதற்குமெல்லிய முட்களுடன் சௌசௌ என்றிருந்தாலும், இவற்றில் கால்சியம், வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை நம்பற்களுக்கும் எலும்புகளுக்கும் உறுதியைக் கொடுக்கும்.

நள்ளிரவுப் பாடகன்


தினஇதழ் Home / அபூர்வ தகவல்கள் / நள்ளிரவுப் பாடகன்
நள்ளிரவுப்  பாடகன்

நள்ளிரவுப் பாடகன்

நாம் எப்படி இரவில் தூங்கி பகலில் விழித்திருக்கிறோமோ அது போல்சில உயிரினங்கள் பகலில் தூங்கி இரவில் விழித்திருக்கும் வித்தியாசமான ஜந்துக்களும் இருக்கத் தான்செய்கின்றன (மறுபடியும் ஐடி, பிபிஓ க்காரர்களை சொல்லலிங்க). நமக்குத் தெரிந்த சில ஆந்தை, வௌவால் போன்றவை. இதே போன்ற ஒரு பறவையை நீங்கள் நள்ளிரவில் உலகிலேயேஅடர்ந்த காடான அமேசான் காடுகளுக்குப் போகும்போது பார்க்கலாம். (நடு ராத்திரிக்கு நான் ஏன்யா அங்க போறேன் என்று எல்லாம் கேட்கக் கூடாது).
அந்த பறவையின் பெயர் பூடோ. சில வகைப் பூடோவை இரவுக் குயில் என்றுஅழைக்கிறார்கள் ஆந்தை மாதிரியான அளவீடுகளில் ஒலி எழுப்பினாலும் அந்த ஒலி ஆந்தை அளவுக்கு அச்சத்தைத் தருவதில்லை, அது ஒரு பெரிய விசில் போல் இருக்கும்(கிட்ட தட்ட நம்மஊர் கூர்க்கா ஊதுவது மாதிரி ). அனால் பெரிய வால் பூடோ என்கிற வகை எழுப்பும் ஒலி மயிர் கூச்செறியும் அளவுக்கு பயத்தை ஏற்படுத்தும். இவற்றின் உடல் மரப் பட்டையைப் போல்இருப்பதால் இவற்றை எளிதாக அடையாளம் காணமுடியாது. உடைந்து தொங்கும் ஒரு மரக்கட்டை போல தான் இவை இருக்கும். இவற்றின் அலகு சிறியது என்றாலும் இவற்றின் வாய் அதாவது அலகை விரிக்கும் அளவு அதிகம் அதனால் இது எளிதாக பூச்சிகளைப் பிடித்து உண்டு விடும், எல்லா இரவுப் பூச்சிகளையும் இது உண்ணும் என்றாலும் இவற்றின் விருப்ப உணவு அந்துப் பூச்சி, விட்டில்ஆகியவை.
முழு நிலவு வரும் நாளில் குஷியினால் இவற்றின் ஒலிஅதிகமாகவும் நீண்டதாகவும் இருக்கும். இதற்கு ஒருசுவாரஸ்யமான தேவதைக் கதை கூட சொல்லப்படுகிறது. ஒருகாலத்தில் நிலவில் வசித்த தேவதை ஒன்றுதான் சாபத்தால் பூடோவாகி பூமியில் இருக்கிறது. மீண்டும் தனது பழைய வீடான நிலவைப் பார்த்ததும் அழுது ஒலி எழுப்புகிறது என்று போகிறதுஅந்த கதை.இருபத்தி ஒன்றில் இருந்து ஐம்பத்தி எட்டு சென்டிமீட்டர் வரை நீளம் உடைய பூடோவை மனிதர்களால் அவ்வளவு சுலபமாக பார்த்துவிட முடியாது. அதனால் தான் இன்னும் அழிவுப் பாதைக்குப் போகாமல் இருக்கிறதோ என்னவோ…