
நள்ளிரவுப் பாடகன்
நாம் எப்படி இரவில் தூங்கி பகலில் விழித்திருக்கிறோமோ அது போல்சில
உயிரினங்கள் பகலில் தூங்கி இரவில் விழித்திருக்கும் வித்தியாசமான
ஜந்துக்களும் இருக்கத் தான்செய்கின்றன (மறுபடியும் ஐடி, பிபிஓ க்காரர்களை
சொல்லலிங்க). நமக்குத் தெரிந்த சில ஆந்தை, வௌவால் போன்றவை. இதே போன்ற ஒரு
பறவையை நீங்கள் நள்ளிரவில் உலகிலேயேஅடர்ந்த காடான அமேசான் காடுகளுக்குப்
போகும்போது பார்க்கலாம். (நடு ராத்திரிக்கு நான் ஏன்யா அங்க போறேன் என்று
எல்லாம் கேட்கக் கூடாது).
அந்த பறவையின் பெயர் பூடோ. சில வகைப் பூடோவை இரவுக் குயில்
என்றுஅழைக்கிறார்கள் ஆந்தை மாதிரியான அளவீடுகளில் ஒலி எழுப்பினாலும் அந்த
ஒலி ஆந்தை அளவுக்கு அச்சத்தைத் தருவதில்லை, அது ஒரு பெரிய விசில் போல்
இருக்கும்(கிட்ட தட்ட நம்மஊர் கூர்க்கா ஊதுவது மாதிரி ). அனால் பெரிய வால்
பூடோ என்கிற வகை எழுப்பும் ஒலி மயிர் கூச்செறியும் அளவுக்கு பயத்தை
ஏற்படுத்தும். இவற்றின் உடல் மரப் பட்டையைப் போல்இருப்பதால் இவற்றை எளிதாக
அடையாளம் காணமுடியாது. உடைந்து தொங்கும் ஒரு மரக்கட்டை போல தான் இவை
இருக்கும். இவற்றின் அலகு சிறியது என்றாலும் இவற்றின் வாய் அதாவது அலகை
விரிக்கும் அளவு அதிகம் அதனால் இது எளிதாக பூச்சிகளைப் பிடித்து உண்டு
விடும், எல்லா இரவுப் பூச்சிகளையும் இது உண்ணும் என்றாலும் இவற்றின்
விருப்ப உணவு அந்துப் பூச்சி, விட்டில்ஆகியவை.
முழு நிலவு வரும் நாளில் குஷியினால் இவற்றின் ஒலிஅதிகமாகவும்
நீண்டதாகவும் இருக்கும். இதற்கு ஒருசுவாரஸ்யமான தேவதைக் கதை கூட
சொல்லப்படுகிறது. ஒருகாலத்தில் நிலவில் வசித்த தேவதை ஒன்றுதான் சாபத்தால்
பூடோவாகி பூமியில் இருக்கிறது. மீண்டும் தனது பழைய வீடான நிலவைப்
பார்த்ததும் அழுது ஒலி எழுப்புகிறது என்று போகிறதுஅந்த கதை.இருபத்தி
ஒன்றில் இருந்து ஐம்பத்தி எட்டு சென்டிமீட்டர் வரை நீளம் உடைய பூடோவை
மனிதர்களால் அவ்வளவு சுலபமாக பார்த்துவிட முடியாது. அதனால் தான் இன்னும்
அழிவுப் பாதைக்குப் போகாமல் இருக்கிறதோ என்னவோ…
No comments:
Post a Comment