Tuesday, September 17, 2013

இதய நோயாளிகளுக்கு உடற்பயிற்சியும், மனப் பயிற்சியும்

இதய நோயாளிகளுக்கு உதவும் உடற்பயிற்சியும், மனப் பயிற்சியும்

இதய நோயாளிகள் சீரான உடற்பயிற்சியோடு எதையும் நேர்மறையாக எடுத்துக் கொள்ளும் மனப் பயிற்சியையும் மேற்கொண்டால் நீண்ட ஆயுளோடு வாழலாம்.
எதற்கெடுத்தாலும் பயந்து, இதய நோய் வந்து விட்டதே என்று நினைத்து வருந்தி எப்போதும் முடங்கிப் போயிருப்பவர்களை விட, எதையும் சாதிக்க முடியும், எது நடந்தாலும் அதில் நன்மையே இருக்கும் என்று நேர்மறையான சிந்தனையுடன் வாழ்பவர்கள், பயப்படுபவர்களை விட அதிக ஆண்டுகள் வாழ்வதாக ஆய்வுகள் கூறுகின்றன.
பயம் கொள்ளும் போது, இதயத்தின் வேகம் அதிகமாகி அதனால் உடலுக்கு அதிகமான ரத்த ஓட்டம் பாய்கிறது. அதே சமயம், எதையும் தைரியமாக எதிர்கொண்டு, நம்மால் முடியும் என்ற மனப்பான்மையோடு வாழும் போது, இதயத்துக்கு அதிக பாதிப்புகள் ஏற்படுவதில்லை.
இந்த மனப்பயிற்சியோடு, இதய நோயாளிகள் அவர்களுக்கு என்று உள்ள ஒரு சில உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்து வந்தால் நல்ல ஆரோக்கியத்தோடு நீண்ட நாட்களுக்கு உயிர் வாழலாம் என்கிறது மருத்துவம்.
மேலும், நேர்மறை எண்ணங்களால், இதய நோயாளிகளும், நம்மால் உடற்பயிற்சி செய்ய முடியும் என்ற நம்பிக்கை வந்து, உடற்பயிற்சி செய்வதாகவும், ஒரு சிலர், மருத்துவர்களின் ஆலோசனைப்படி உடற்பயிற்சி செய்து, அதனால் உடல் ஆரோக்கியத்தைப் பெற்று நேர்மறையான எண்ணத்தைப் பெறுவதாகவும் கூறப்படுகிறது.
எது எப்படியோ, ஒன்றை முயற்சி செய்து துவக்கிவிட்டால் மற்றொன்று தானாகவே வந்து வருகிறது.
எனவே மனப்பயிற்சியும், உடற்பயிற்சியும் எப்போதும் கைகொடுக்கும் என்பதை மறவாதீர்.

No comments:

Post a Comment