Monday, September 16, 2013

காந்திக் கணக்கு என்றால் என்ன?

காந்திக்கணக்கு என்றால், ஏப்பம் விட்டு விட்டான், நாமம் போட்டு விட்டான் என்பன போன்ற மரபுத் தொடர்போல் பணம் தராமல் ஏமாற்றுவதை அல்லது மோசடி  செய்வதை எனச் சரியான பொருளில் தான் கையாளுகிறோம். காங்கிரசுக்காரர்கள் கட்சி   மாநாடு நடக்கும் பொழுது காந்தி விடுதலை வாங்கித்தந்ததும் பணத்தைத் தந்துவிடுகிறோம். அதுவரை காந்திக்கணக்கில் வைத்துக் கொள் எனக் கூறி உணவகங்களில்  பணம் தராமல் உண்பதைக் காந்திக் கணக்கு என்றனர். ஒரு வேளை அதற்கு மூலமாக இச்செய்தியில் குறிப்பிட்ட தகவல் இருக்கலாம்.  புதிய தகவலுக்கு நன்றி.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/



காந்தி க் கணக்கு என்றால் என்ன?

எம். எல். இராசேசு
Comment (3)   ·   print   ·   T+  

காந்தி கணக்கு என்றாலே கிட்டதட்ட 'நாமம்' என்கிற அர்த்தத்தைதான் நாம் உருவாக்கி வைத்திருக்கிறோம். ஆனால், காந்தி கணக்கு என்றால் என்ன என்பதற்கான உண்மையான அர்த்தம் என்னவென்று பலருக்கும் தெரியாது. அதை இப்போது தெரிந்துகொள்வோம்.
மகாத்மா காந்தி உப்பு சத்தியாகிரகம் மேற்கொண்டிருந்தபோது, அவருக்கு வியாபாரிகள் அத்தனை பேரும் தார்மீக ஆதரவு அளித்தார்கள். அவர்கள் காந்தியிடம் “நேரடியாக எங்களால் இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ள முடியாது. ஆனால், எப்படியாவது உங்கள் போராட்டத்திற்கு நாங்கள் ஆதரவு அளிப்போம். இதில் கலந்துகொள்ள வரும் தொண்டர்களை எங்கள் கடைகளில் எது வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ள சொல்லுங்கள். பணம் தர வேண்டாம். அடையாளம் தெரியாமல் பணம் கேட்க நேரும்போது, 'காந்தி கணக்கு' என்று எங்களுக்கு புரியும்படி சொன்னால் போதும். நாங்கள் அவர்களிடம் பணம் கேட்க மாட்டோம்” என்றார்களாம் அந்த வியாபாரிகள்.
அப்படி வந்ததுதான் காந்தி கணக்கு. ஆனால், நாம் இதற்கு அர்த்தம் வைத்திருப்பதோ புரியாத கணக்கு. ஒவ்வொரு சொல்லிலும் அதன் உள் அர்த்தத்தை புரிந்து செயல்பட்டால் அறிவு விசாலமாகும்.

No comments:

Post a Comment