Tuesday, August 18, 2009

இறக்குமதிச் செ ய் தி (இம்போர்டட் சரக்கு)



அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் போர் தொடர்ந்து கொண்டே இருந்தது. இதை ஒரு முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று இரு நாடுகளுக்குமே தோன்றியது.


"இருதரப்பிலும் ஆளுக்கொரு நாய் வளர்ப்போம். அந்த இரண்டு நாய்க்கும் சண்டை வைப்போம். எந்த நாட்டு நாய் ஜெயிக்கிறதோ அந்த நாடு ஜெயித்ததாக அர்த்தம்' என முடிவெடுத்தனர்.


அதற்கு ஐந்தாண்டு அவகாசம் வழங்கப்பட்டது.


ரஷ்யர்கள் டாபர் மேன் நாயையும் ஓநாயையும் இணைத்து புதிய வகை நாய் ஒன்றை உருவாக்கினர். அதன் ஒரு ஆண் நாயை மட்டும் விட்டுவிட்டு மற்ற நாய்க் குட்டிகளைக் கொன்றனர். அந்த ஒரு நாய் மட்டும் மொத்த பாலையும் குடித்துவிட்டு பிரம்மாண்டமாக வளர்ந்தது. கனத்த இரும்பு கிராதிகள் போட்ட கூண்டில் அதைக் கொண்டு வந்து நிறுத்தினர்.


அமெரிக்கர்களோ ஒன்பதடி நீளமுள்ள, நீண்ட கழுத்து கொண்ட புதுவகையான டாஷ்வுண்ட் நாயைக் கொண்டு வந்தனர்.


இரண்டும் மோதின. அமெரிக்க நாய் ஒரே நிமிடத்தில் ரஷ்ய நாயை கடித்துக் குதறி சாப்பிட்டுத் தீர்த்தது.


ரஷ்யர்களுக்கு ஆச்சர்யம் தாளவில்லை. "எப்படி?' என்றனர்.


""நாங்கள் எந்த நாயையும் இனப் பெருக்கம் செய்யவில்லை. பிளாஸ்டிக் சர்ஜரி செய்தோம். டாஷ்வுண்ட் போலவே ஒரு முதலையை செய்தோம். ''

Tuesday, August 11, 2009

உங்கள் பக்கம்



"தாமிர நாடு'!

* பூமியின் நிலப்பரப்பு 14,89,50,800 சதுர கிலோ மீட்டர்.
* வங்கதேசத்தின் முதல் பிரதமர் முஜிபுர் ரஹ்மான்.
* தாமிர உலோகம் அதிகம் உள்ளதால் ஆங்கிலத்தில் "கன்ட்ரி ஆஃப் காப்பர்' என்று அழைக்கப்படும் நாடு ஜாம்பியா.
* காபி அதிகளவில் உற்பத்தி செய்யப்படும் நாடு பிரேசில்.
* உலகில் உள்ள மொத்த தேக்கு மரத்தில் மூன்றில் ஒரு பங்கு மியான்மர் நாட்டில் உள்ளது.
* பாகிஸ்தானையும், ஆப்கானிஸ்தானையும் பிரிக்கும் எல்லைக் கோட்டின் பெயர் தூரந்த் கோடு.

- கலை.ராதிகா, உத்திரக்குடி.

கிஸô பிரமிடு!

எகிப்தின் கிஸôவில் உள்ள பிரமிடு பழமையானது. இது 137 மீட்டர் உயரமும், 225 மீட்டர் நீளமும் கொண்ட பிரம்மாண்டமான முக்கோண வடிவில் கட்டப்பட்டு உள்ளது பிரமிடு. இது 23 லட்சம் கற்களால் கட்டப்பட்டது. ஒவ்வொரு கல்லும் இரண்டரை டன் எடை கொண்டவை. மொத்தக் கற்களின் எடை 7 மில்லியன் டன்கள் ஆகும். ஒரு லட்சம் வேலை ஆட்களைக் கொண்டு கட்டப்பட்டது. இதைக் கட்டி முடிக்க 20 வருடங்கள் ஆனது.

- எஸ்.வெங்கடேஷ், திருக்கோயிலூர்.

தேசியப் பழம்!

* வாசனைத் துறைமுகம் என்று அழைக்கப்படுவது ஹாங்காங் துறைமுகம்.
* இலங்கை தேசியக் கொடியில் உள்ள இலைகள் ஆலமர இலைகள்.
* சார்பியல் தத்துவத்தைக் கண்டுபிடித்தவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.
* தமிழ்ப் புதுக் கவிதையின் முன்னோடி ந.பிச்சமூர்த்தி.
* நம் நாட்டின் தேசியப் பழம், மாம்பழம்.
* அமெரிக்காவின் முதல் அதிபர் ஆப்ரகாம் லிங்கன்.

- சி.இராதாகிருஷ்ணன், கலவை.

இந்திய தேசியப் படை!

* 1857-ம் ஆண்டு முதல் இந்திய விடுதலைப் போர் துவங்கியது.
* 1885-ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் துவக்கம்.
* 1920-ம் ஆண்டு ஒத்துழையாமை இயக்கம் துவங்கியது.
* 1930-ம் ஆண்டு உப்பு சத்தியாகிரகப் போர் துவங்கியது.
* 1947-ம் ஆண்டு இந்தியா விடுதலை அடைந்தது.

- த.தமிழ்சூர்யா, கன்னந்தேரி.

ஆஸ்திரேலியாவைக் கண்டுபிடித்தவர்!

* பூமி சூரியனைச் சுற்றி வருகிறது என்ற உண்மையைக் கண்டறிந்த முதல் விஞ்ஞானி ஆர்யபட்டா.
* தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்று விஞ்ஞான உலகிற்கு அறிவித்தவர் ஜகதீஷ் சந்திரபோஸ்.
* மாங்கனீஸ் தாதுப் பொருளை அதிகளவில் உற்பத்தி செய்யும் உலகின் முதல் இரண்டு நாடுகள் சீனா, தென்னாப்ரிக்கா.
* ஈஃபிள் கோபுரத்தைக் கட்டியவர் அலெக்ஸôண்டர் ஈஃபிள்.
* ஆஸ்திரேலியாவைக் கண்டுபிடித்தவர் ஜேம்ஸ் குக்.

- எஸ்.சாய் ஸ்ரீஹரிஷ், சென்னை-39.

சம்பா நடனம்!

* நயாகரா நீர்வீழ்ச்சியைக் கண்டுபிடித்தவர் லூயிஸ் ஹென்பின்.
* கத்தரிக்காயின் தாயகம் இந்தியா.
* இத்தாலி நாட்டின் தேசிய மலர் லில்லி.
* "சார்க்' அமைப்பின் தலைமையகம் நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் அமைந்துள்ளது.
* இங்கிலாந்தில் முதல் முறையாக தொழில் புரட்சி நடைபெற்றது.
* சம்பா நடனத்துக்கு புகழ் பெற்ற நாடு பிரேசில்.

- கே.காயத்ரி, அருப்புக்கோட்டை.

உலகின் மிக அழகான துறைமுகம்!

* உலகில் மிக அழகான துறைமுகம் எனப் பெயர் பெற்றது சிட்னி துறைமுகம்.
* பாராசூட்டில் இருந்து குதித்த முதல் மனிதனின் பெயர் தாமஸ் ஸ்காட் பால்டுவின். இவர் அமெரிக்காவை சேர்ந்தவர்.
* ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள கிரம்ளின் மாளிகையின் கோபுரத்தில் நிறுவப்பட்டுள்ள மணிதான் உலகிலேயே மிகப் பெரிய மணியாகும்.
* கூர்க்கா இன மக்களின் பூர்வீகம் நேபாளம் ஆகும்.
* அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரின் பழைய பெயர் நியூ ஆம்ஸ்டர்டாம் என்பதாகும்.
* பிரிட்டனின் தேசிய மலர் ரோஜாப் பூ.

- ப.சிவகாமி, என்.வளையனேந்தல்.

கருத்துக்கள்

அமெரிக்காவின் முதல் அதிபர் ஆப்ரகாம் லிங்கன். - சி.இராதாகிருஷ்ணன், கலவை. The above statement by Radhakrishnan is wrong. The First President of United States of America was George Washington. Kindly publish the correct facts.

By Prof. Antony Selvaraj
8/11/2009 8:22:00 PM
விடுகதைகள்



1. அனலில் பிறக்கும்; ஆகாயத்தில் பறக்கும். அது என்ன?
2. உமி போலப் பூ; சிமிழ் போல காய். அது என்ன?
3. ஊசி நுழையாத கிண்ணத்தில் ஒரு படி நீர். அது என்ன?
4. ஒரு புட்டிக்குள் இரண்டு தைலம். அது என்ன?
5. வாயிலே தோன்றி வாயாலே மறையும் பூ. அது என்ன?
6. சிவப்பு உறைக்குள் சில்லறை காசுகள். அது என்ன?
7. ஓடையில் ஓடாத நீர் ஒருவரும் அருந்தாத நீர். அது என்ன?
8. திரியில்லாத விளக்கு தினமும் எரியுது. அது என்ன?
9. எழுதி எழுதியே தேய்ஞ்சு போனான். அது என்ன?
10. சூடுபட்டுச் சிவந்தவன் வீடு கட்ட உதவுவான். அது என்ன?
11. ஆற்றையும் கடக்கும், அக்கரைக்கும் போகும்; தண்ணீரையும் கலக்காது, தானும் நனையாது. அது என்ன?
12. வெள்ளை நிலத்தில் கருப்பு விதை போட்டேன். வாயால் எடுக்கலாம், கையால் எடுக்க முடியாது. அது என்ன?
13. ஆட்டத்தில் அசர வைப்பான்; பாம்பை மட்டும் அலற வைப்பான். அவன் யார்?
14. பார்த்தால் பச்சைக்கிளி; கையில் அமர்ந்தால் சிவந்த கிளி. அது என்ன?
15. ஒன்பது பிள்ளைக்கு ஒரே குடுமி. அது என்ன?

விடைகள் :

1.புகை
2.நெல்லிக்காய்
3.தேங்காய்
4.முட்டை
5.சிரிப்பு
6.மிளகாய் வற்றல்
7.கண்ணீர்
8.சூரியன்
9.சாக்பீஸ்
10.செங்கல்
11.குரல்
12.எழுத்து
13.மயில்
14.மருதாணி
15.பூண்டு

கடி



""ஸ்கூல்ல வாத்தியாரா இருந்தவரை மேனேஜர் ஆக்கினது தப்பாப் போச்சு!''
""என்னாச்சு?''
""ஆபீஸ்க்கு லேட்டா வர்றவங்களை எல்லாம் பெஞ்ச் மீது நிற்க வெச்சிடுகிறார்!''

- எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.

************

""நாய் எப்பவும் வாள்வாள்னு தானே கத்தும்? இது ஏன் வீல்வீல்னு கத்துது?''
""சைக்கிள் வீல் ஏறிடுச்சாம்!''

- சி.பி.செந்தில்குமார், சென்னிமலை.

************

""அப்பா... உங்களால இருட்டுல எழுத முடியுமா?''
""முடியுமே!''
""அப்போ லைட் ஆஃப் பண்றேன். பிராக்ரஸ் ரிப்போர்ட்ல கையெழுத்து போடுங்க பார்ப்போம்!''

- டி.பி.சரவணன், 5/1076, பாரதியார் நகர், சந்தைப்பேட்டை, கிருஷ்ணகிரி-635 001.

************

""எந்த சோப்ப நீங்க குளிக்கப் பயன்படுத்துறீங்க?''
""கோபால் சோப் டாக்டர்!''
""அது என்ன புது கம்பெனி சோப்பா?''
""இல்ல டாக்டர். அது என் ரூம்ல தங்கியிருக்கும் கோபாலோட சோப்!''

- த.ஞானசெல்வன், 1, அவுலியன் சாகிப் 6-வது தெரு, ல்லீஸ் சாலை, சென்னை-2.

************
""மேனேஜர் வரும் போது நான் மரம் மாதிரி நின்னுக்கிட்டிருந்தது தப்பாப் போச்சு!''
""ஏன்... என்ன பண்ணாரு?''
""அறுத்து தள்ளிட்டாரு!''

- ஜி.மஞ்சரி, புதுப்பேட்டை.

Friday, August 7, 2009

உங்கள் பக்கம்



சகாரா பாலைவனம்!

* உலகில் மக்கள் தொகையில் இந்தியா இரண்டாவது இடத்தை வகிக்கிறது.
* காந்திஜி உருவம் பொறித்த அஞ்சல் அட்டையை முதன்முதலில் வெளியிட்ட நாடு போலந்து.
* இத்தாலிதான் முதன்முதலில் போருக்கு விமானத்தை பயன்படுத்தியது.
* சகாரா பாலைவனம் 9 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது.
- டி.ஜெய்சிங், கோயமுத்தூர்.

சிலந்தி!

* திராட்சைக் கொடி காய்க்கத் தொடங்கினால் சுமார் இருபது ஆண்டுகளுக்குப் பயன்தரும்.
* பறவைகளிலேயே அதிக நாட்கள் அதாவது, 56 நாட்கள் அடைகாக்கும் பறவை பல்மர்.
* ஆப்ரிக்காவில் உள்ள சிட்டுங்கா என்ற மான் இனங்கள் நீரில் மிதந்து கொண்டே உறங்கும்.
* ஒரு சிலந்தி ஒரு மணி நேரத்திற்குள் சுமார் 250 அடி நீளத்துக்கு வலை பின்னும்.
* காஷ்மீரில் பூக்கும் மலர்களில் 90 சதவீத மலர்களுக்கு மணம் கிடையாது.
- வீதி.கலாநிதி, சீனிவாசபுரம்.

கடுக்காய்!

* மணிமேகலை, குண்டலகேசி, வீரசோழியம் முதலியவை பௌத்த நூல்களாகும்.
* தென்காசி காசிவிஸ்வநாதர் கோயிலை பராக்கிரம பாண்டியன் 15-ம் நூற்றாண்டில் கட்டினார்.
* கடுக்காயில் ஆறு சுவைகளில் ஐந்து சுவைகள் உள்ளன.
* சோமநாதர் கோயில் குஜராத் மாநிலத்தில் உள்ளது.
* கடற்கரைக் கோயில்கள் மகாபலிபுரத்தில் உள்ளன.
* பிரபல பத்மநாபர் கோயில் திருவனந்தபுரத்தில் உள்ளது.
- தமிழ்மதி, தாதம்பட்டி.

பிரபஞ்சம்!

* பூமியை விட சூரியன் 16 மடங்கு பெரியது.
* சூரியனுக்கு வெகு தொலைவில் உள்ள கோள் புளூட்டோ.
* சூரியனின் மையப் பகுதியில் உள்ள அதிகபட்ச வெப்பம் 1,50,00,000 டிகிரி செல்ஷியஸ்.
* சூரிய ஒளியில் இருந்து வைட்டமின்-டி கிடைக்கிறது.
- ஜி.சாயிலட்சுமி, கிருஷ்ணாபுரம்.

நல்ல தண்ணீரில் வாழும் மீன்!

* தென்னாப்ரிக்காவில் ஆரிபிஸ் என்ற ஒருவகை மான் உள்ளது. இதற்குக் குறும்புக்கார மான் என்ற பெயருண்டு.
* எலி இனத்தில் நிலா எலி என்ற இனம் ஒன்று உள்ளது. இதன் உடல் மோசமான துர்நாற்றம் உடையது.
* பைக் என்ற ஒருவகை மீன் நல்ல தண்ணீரில் மட்டுமே வாழும்.
* பழங்களை ஆராய்ச்சி செய்யும் நிறுவனம் உத்தரபிரதேசம் மாநிலம் பஸ்தி என்ற இடத்தில் உள்ளது.
* பிகார் மாநிலம் போகாரோவில் இரும்பு உற்பத்தி ஆலை அமைந்துள்ளது.
- சு.இலக்குமணசுவாமி, திருநகர்.

சண்டிகர் நகரை வடிவமைத்தவர்!

* நண்டுக்கு பற்கள் அதன் வயிற்றில் உள்ளன.
* ஈக்கள் ஒரே தடவையில் 37 லட்சம் பாக்டீரியாக்களைச் சுமந்து செல்கின்றன.
* பத்து நாட்களில் நகம் ஒரு மில்லி மீட்டர் வரை வளருகிறது.
* மனிதனைக் கடிப்பது பெண் கொசு மட்டுமே.
* பெண் நீர் யானைகளை விட ஆண் நீர் யானைகள் அதிக எடை உடையவை.
* சண்டிகர் நகரை வடிவமைத்தவர் கர்பூசியர்.
- செ.கருணாநிதி, வீரவநல்லூர்.

பென்டகன்!

* காற்றில் ஒலியின் வேகம் ஒரு விநாடிக்கு சுமார் 380 மீட்டர்களாகும்.
* வெள்ளை அணுக்கள் 12 மணி நேரம் வரையிலும், சிவப்பு அணுக்கள் 120 நாட்கள் வரையிலும் உயிர் வாழ்கின்றன.
* பறக்கும் திறன் இழந்த பறவைகள் கிரி, ரியா, நெருப்புக்கோழி.
* கம்போடியா நாட்டின் தலைநகர் நாம்பென்.
* திபெத்தில் போடாலா என்ற இடத்தில் தலாய்லாமாவின் அரண்மனை அமைந்துள்ளது.
* அமெரிக்க ராணுவத்தின் தலைமையகம் பென்டகனில் அமைந்துள்ளது.
- இரா.பாலகிருஷ்ணன், வரக்கால்பட்டு.

வால் ஸ்ட்ரீட்!

* இழந்த சொர்க்கம் உள்ளிட்ட புகழ்பெற்ற காவியங்களை படைத்த இலக்கிய மேதை மில்டன் பிறவியிலேயே பார்வையற்றவர்.
* தைரியத்திற்கு பெயர் போன மாவீரன் தைமூருக்கு ஒரு கால் கிடையாது.
* வாட்டர்லூ போரில் நெப்போலியனை எதிர்த்து வென்ற நெல்சனுக்கு ஒரு கண்ணும், ஒரு கையும் கிடையாது.
* அமெரிக்காவில் பங்குசந்தை வால் ஸ்ட்ரீட் என்ற இடத்தில் அமைந்துள்ளது.
- ஜி.சிந்தியா, ராஜபாளையம்.

கடி



*** ""சார்! உங்க உடம்பு குணமாகணும்னா மீன், ஆடு, கோழி சாப்பிடறதை நீங்க உடனடியா நிறுத்தணும்!''
""அது முடியாது. எப்படிங்க அதுங்க சாப்பிடறதை நான் நிறுத்த முடியும்!''
ச.கார்த்திக் ராஜா, த/பெ.ப.சரவணன், 5/1076, பாரதியார் நகர், புதுப்பேட்டை, கிருஷ்ணகிரி-635 001.

*** ""எனக்கு அல்சர். அதனால காரம் சேர்க்கக் கூடாதுன்னு டாக்டர் சொல்லிட்டார்.''
""அதுக்காக நமஸ்"காரம்' கூட சொல்லலைன்னா எப்படி?''
- சி.பி.செந்தில்குமார், சென்னிமலை.

*** ""என்னடா... டாக்டர் "சிம்மம்' ராஜான்னு போர்டு போட்டு இருக்கு!''
""யாரும் ராசியில்லாத டாக்டர்ன்னு சொல்லிடக் கூடாது பாருங்க!''
- பி.பாலாஜிகணேஷ், 240, வேளாளர் தெரு, கோவிலாம்பூண்டி, சிதம்பரம் தாலுகா-608 002.

*** ""இந்த ஊர்ல இருக்குறவங்கள்ல பாதி பேர் வீட்டுல அடுப்பு எரியுதுனா அதுக்கு இவர்தான் காரணம்னு சொல்றியே எப்படி?''
""இவர் இந்த ஊர் சமையல் கேஸ் ஏஜென்ட் ஆச்சே!''
- பரதன், எழில்நகர்.

*** ""என்னது... நீ சின்ன வயசிலே இருந்து மூட்டைத் தூக்கி படிச்சியா?''
""ஆமாங்க. புத்தக மூட்டையைத் தூக்கி படிச்சேன்!''
- மு.பெ.எடிசன், விட்டுக்கட்டி.

*** ""கண்ணன் மீது கார் மோதியது. இது என்ன காலம்?''
""கண்ணனோட போதாத காலம் சார்!''
- பி.கோபிகிருஷ்ணன், புதுப்பேட்டை.

விடுகதைகள்

First Published : 01 Aug 2009 12:00:00 AM IST

Last Updated :



1. சருகுச் சேலைக்காரி சமையலுக்கு உதவுவாள். அவள் யார்?
2. கோடையில் சுற்றி வரும்; வாடையில் முடங்கி விடும். அது என்ன?
3. கொலுவிலும் இருக்கும், குழந்தையிடமும் இருக்கும். அது என்ன?
4. கையை வெட்டுவார்; கழுத்தை வெட்டுவார். ஆனாலும் நல்லவர். யார் அவர்?
5. கூடவே வருவான். ஆனால் பேசமாட்டான். யார் அவன்?
6. கையில்லாமல் நீந்துவான்; கால் இல்லாமல் ஓடுவான். அவன் யார்?
7. குட்டிப் போடும். ஆனால் எட்டிப் பறக்கும். அது என்ன?
8. கிளை இல்லா மரம் வெட்ட வெட்ட வளரும். அது என்ன?
9. கடிபடமாட்டான் பிடிபடமாட்டான். அவன் யார்?
10. ஓட்டுக்குள்ளே வீடு; வீட்டுக்குள்ளே கூடு. அது என்ன?

விடைகள் :

1. வெங்காயம்
2. மின்விசிறி
3. பொம்மை
4. தையல்காரர்
5. நிழல்
6. படகு
7. வெளவால்
8. தலைமுடி
9. தண்ணீர்
10. நத்தை