Friday, June 26, 2009

உங்கள் பக்கம் - சுரப்பிகள்!
சிறுவர் மணி


சுரப்பிகள்!* பிட்யூட்ரி சுரப்பி மூளையின் அடிப்பகுதியில் அமைந்துள்ளது.* பினியல் சுரப்பிகள் மூளைப் பகுதியில் அமைந்துள்ளது.* தைராய்டு சுரப்பி கழுத்தில் காணப்படும்.* கழுத்தின் கீழ்ப்பகுதியில் இருக்கும் சுரப்பி தைமஸ்.* கணையச் சுரப்பி வயிற்றின் அருகில் அமைந்துள்ளது.* அட்ரினல் சிறுநீரக உச்சியில் அமைந்துள்ளன.நெ.இராமன், சென்னை-74.உலகின் முதல் குடியரசு நாடு!* வாசனையால் தன் உணவை கண்டறியும் பறவை கிவி.* எம்பரர் பென்குயின் என்ற பறவை தன் முட்டைகளை பாதத்திற்கடியில் வைத்து அடைகாக்கும்.* உலகின் முதல் குடியரசு நாடு ஆஸ்திரியா.* முதலில் உலக வரை படத்தை வரைந்தவர் இராடோஸ்தானிஸ்.* திரையரங்குகளே இல்லாத நாடு பூட்டான்.* நமது பற்கள் முழுக்க முழுக்க கால்சியத்தாலும், பாஸ்பரஸ் உப்பினாலும் உருவானவை.ஜோ.ரஞ்சித், பேரையூர்.பூமியை விட 17 மடங்கு எடையுள்ள கோள்!* ஜப்பான் மொழியிலும், அதன் அகராதியிலும் ஓய்வு என்ற வார்த்தையே கிடையாது.* அசாம் மாநிலத்தின் பழைய பெயர் காமரூப்.* இந்திய நாடாளுமன்ற கட்டடத்தின் திறப்பு விழா 1927-ம் ஆண்டு நடந்தது.* பூமியை விட 17 மடங்கு எடை கூடுதலான கோள் நெப்டியூன்.* இராமாயணத்தில் மொத்தம் 48,000 வரிகள் உள்ளன.* மகாபாரதத்தில் மொத்தம் 2,20,000 வரிகள் உள்ளன.ஆர்.ஜி.அம்பிகை ராமன், திசையன்விளை.யூகலிப்டஸ் மரத்தின் தாயகம்!* இந்தியாவில் பறவைகளுக்காகத் துவங்கப்பட்ட முதல் மருத்துவமனை புதுதில்லியில் உள்ள தி சாரிட்டி பேர்ட்ஸ் மருத்துவமனை.* மிக நீண்ட கடற்கரை கொண்ட இந்திய மாநிலம் குஜராத்.* மனிதனால் உருவாக்கப்பட்ட இந்தியாவின் மிகப் பெரிய ஏரி நாகார்ஜுன சாகர். இது ஆந்திரத்தில் உள்ளது.* யூகலிப்டஸ் மரத்தின் தாயகம் ஆஸ்திரேலியா.* அணுசக்தியால் இயங்கிய முதல் நீர்மூழ்கிக் கப்பலின் பெயர் நோட்டிலஸ்.* 22 காரட் தங்கத்தில் 91.6 சதவிகிதம் தங்கம் உள்ளது.எஸ்.சபரிஷ் சௌந்தர், பழைய பேராவூரணி.கடல் கரையான்கள்!* கெரடோ என்பது கடலில் காணப்படும் நான்கு அங்குலம் கொண்ட ஒரு புழுவின் பெயர். இதைக் கடல் கரையான்கள் என்று அழைக்கப்படுகிறது. இந்தப் புழுக்கள் கூட்டம் கூட்டமாகச் சென்று தாக்கினால் கப்பலே கூட கவிழ்ந்து விடுமாம். இந்தப் புழுக்களில் பல்வேறு இனங்கள் உண்டு. ஒரு புழு தன் இனத்தைச் சார்ந்த வேறு எந்தப் புழுவாவது தன் பாதையில் வருவது தெரிந்தால் வேறு பக்கமாக சென்று விடும்.செ.கருணாநிதி, வீரவநல்லூர்.உலகின் மிகப் பெரிய தீவுக்கூட்டம்!* உலகின் மிகப் பெரிய தீவுக் கூட்டம் இந்தோனேஷியாவில் உள்ளது.* உலகின் மிகப் பெரிய தீவு கிரீன்லாந்து.* உலகின் மிகப் பெரிய பாலைவனம் சகாரா பாலைவனம்.* உலகின் மிகப் பெரிய கண்டம் ஆசியா கண்டமாகும்.* உலகின் மிகப் பெரிய சமுத்திரம் பசிபிக் மகா சமுத்திரம்.அர.கோ.குப்புசாமி, சேலம்.கல்லீரலின் எடை!* ஒரு மணி நேரத்தில் சராசரியாக 100 காலன் காற்றை நம் நுரையீரல்கள் சுவாசிக்கின்றன. ஓர் ஆண்டில் 8,67,000 காலன் காற்றை நம் நுரையீரல்கள் சுவாசிக்கின்றன.* மனித உடலின் எடையில் ஆக்ஸிஜன் 65 சதவீதம் உள்ளது.* நமது சிறுநீரகத்தில் லட்சக்கணக்கான வடிகட்டிகள் உள்ளன. இவை தினமும் 190 லிட்டர் ரத்தத்தை வடிகட்டுகின்றன.* இரைப்பையின் எடை 4 அவுன்ஸ்.* கல்லீரலின் எடை 50 முதல் 60 அவுன்ஸ் வரை உள்ளது.இரா.பாலகிருஷ்ணன், வரக்கால்பட்டு.மிகப் பெரிய மாவட்டம்!* இந்தியாவில் உள்ள மிகப் பெரிய மாவட்டம் மத்தியப் பிரதேசத்தில் உள்ள பஸ்தார்.* முயல்கள் குட்டிகளை ஈனும் போது 24-லிருந்து 36 குட்டிகள் வரை போடும்.* ஜப்பான் தலைநகர் டோக்கியோ ஹொன்ஷு என்ற தீவில் அமைந்துள்ளது.* ரத்தத்தில் உள்ள கொழுப்பை லெசித்தின் எனும் அமிலம்தான் கரைக்கிறது.* மனித உடம்பின் எலும்புகளில் கால்சியம் பாஸ்பேட்தான் அதிகம் இருக்கிறது.* ஐந்து வயதுக் குழந்தைக்கு மொத்தம் 20 பற்களே இருக்கும்.ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.

உங்கள் பக்கம் :சிறுவர் மணி

உங்கள் பக்கம்
சிறுவர் மணி

தியாகிகளின் இளவரசர்!

* ஜான் ரங்கின் எழுதிய "அன்டு திஸ் லாஸ்ட்' என்ற ஆங்கில நாவல் குஜராத்தி மொழியில் மொழி பெயர்க்கப்பட்டது. இந்நாவலுக்கு காந்திஜி சூட்டிய பெயர் "சர்வோதயா' என்பதாகும்.
* "தியாகிகளின் இளவரசர்' என காந்திஜியால் வர்ணிக்கப்பட்டவர் சுபாஷ் சந்திர போஸ்.
* காந்திஜி சுடப்பட்டு இறந்த போது அணிந்திருந்த ரத்தக்கறை படிந்த வேட்டி, மதுரை அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
* காந்திஜியின் சுயசரிதையை குஜராத்தி மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் மகாதேவ் தேசாய்.
* காந்திஜி 2,089 நாட்கள் இந்திய சிறைகளில் இருந்துள்ளார்.
அ.அப்துல்காதர்,
மேற்குத் தாம்பரம்.

நத்தைகள் இடும் முட்டை! * மனித உடலில் நீரை சமநிலைப் படுத்தும் உறுப்பு சிறுநீரகங்கள்தான்.
* மனித ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவில் 90 சதவீதம் தண்ணீர்தான். மீதி 10 சதவீதம் திடப் பொருள்.
* ராணித் தேனீக்கள் ஒவ்வொரு நாளும் மூவாயிரம் முட்டைகள் இடுகின்றன.
* நத்தைகள் ஒரே சமயத்தில் 150 முதல் 300 முட்டைகள் இடும்.
* உயிரினங்களில் சிரிக்கத் தெரிந்த ஒரே இனம் மனித இனம் மட்டுமே. இரா.பாலகிருஷ்ணன், வரக்கால்பட்டு.

புன்னகை நாடு!

* கயிறு இழுக்கும் போட்டி முதன் முதலில் தோன்றிய நாடு சீனா.
* புன்னகை நாடு என்றழைக்கப்படும் நாடு தாய்லாந்து.
* உலகின் மிகப் பெரிய மிருகக்காட்சி சாலை அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் உள்ளது.
* ஜப்பான் மொழி தட்டெழுத்து இயந்திரத்தில் மொத்தம் 2,863 எழுத்துகள் உள்ளன. * சீனாவில் கம்யூனிஸ ஆட்சியை உருவாக்கியவர் மாசேதுங். ஆர்.ஜி.அம்பிகை ராமன், திசையன்விளை.

மயில் செய்திகள்!

* காங்கோ மயில் ஆப்ரிக்காவில் காணப்படுகிறது.
* மயிலின் தோகையின் நீளம் சுமார் 160 செ.மீ.
* ஆண் மயிலின் தோகை 6 ஆண்டுகளில் முழு வளர்ச்சியடைகிறது.
* ஒரு தடவையில் மயில் 3 முதல் 6 முட்டைகள் வரை இடும்.
* இந்தியாவின் தேசியப் பறவை மயில். நெ.இராமன், சென்னை-74. ஐ.நா.சபைக்கு பெயர் சூட்டியவர்!
* எரிமலையிலிருந்து வெளிவரும் உருகிய பாறைக் குழம்பு லாவா எனப்படுகிறது.
* சீன நாட்டு மருத்துவத்தில் தேரையை பயன்படுத்துகின்றனர்.
* ஐக்கிய நாடுகள் சபை என்று பெயர் சூட்டியவர் அமெரிக்க முன்னாள் அதிபர் ரூஸ்வெல்ட்.
* பதினேழாம் நூற்றாண்டில் ஆரம்பிக்கப்பட்ட பத்திரிகைகளில் இன்றும் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருப்பது "லண்டன் கெசட்'.
தாமஸ் மனோகரன், முதலியார்பேட்டை.

பாரத ரத்னா விருது பெற்ற முதல் தமிழர்!

* ஞானபீட விருதைப் பெற்ற முதல் இந்தியர் சங்கர குரூப். இவர் "ஓடக்குழல்' என்ற மலையாளக் கவிதை படைப்பிற்காக 1965-ம் ஆண்டு இவ்விருதினைப் பெற்றார்.
* பாரத ரத்னா விருதை தமிழகத்தில் முதன்முதலில் பெற்றவர் ராஜாஜி.
* முதன்முதலில் பாரத ரத்னா விருது பெற்ற வெளிநாட்டைச் சேர்ந்தவர் நெல்சன் மண்டேலா. இவர் 1990-ல் இவ்விருதைப் பெற்றார்.
ஆர்.பிருந்தா, மதுரை.

பெண் நீதிபதிகள் அதிகம் உள்ள நாடு ரஷ்யா!

* தமிழில் முதன்முதலாக பொங்கல் வாழ்த்து அனுப்பும் வழக்கம் 1928-ல் ஆரம்பிக்கப்பட்டது.

* பொங்கல் திருநாளை பஞ்சாபிலும், ஹரியானாவிலும் லோகிரி என்று அழைக்கின்றனர்.
* சபர்மதி ஆசிரமத்திலிருந்து தண்டி யாத்திரை புறப்பட்ட மகாத்மா காந்தி கடந்த தூரம் 388 கி.மீ.
* உலகிலேயே பெண் நீதிபதிகள் அதிகம் உள்ள நாடு ரஷ்யா.
முருகேசன், தேனி.

உங்கள் பக்கம்:
தமிழ்நாடு என பெயர் சூட்டியவர்
சிறுவர் மணி


* தமிழ்நாடு என்று பெயர் சூட்டியவர் அறிஞர் அண்ணா.
* தமிழகத்தில் உள்ள மிகப் பெரிய அணைக்கட்டு மேட்டூர் அணைக்கட்டு.
* தமிழகத்தில் உள்ள மிக உயர்ந்த சிகரம் தொட்டபெட்டா.
* தமிழகத்தில் 1526-ம் ஆண்டு நாயக்கர் ஆட்சி உதயமானது.
தி.தமிழரசன், கலவை.
பால் மனிதர்!

* சியாச்சின் மலையில் உள்ள போர் தளத்திற்குச் சென்ற முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம்.
* இந்தியாவின் பால் மனிதர் என்று அழைக்கப்படுபவர் அமுல் நிறுவனத் தலைவர் குரியன். நாட்டில் பால் உற்பத்தியைப் பெருக்க இவர் நடவடிக்கை எடுத்தார்.
* குடியரசு தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்ட முதல் பெண்மணி லட்சுமி ஷைகல்.
* பனிச் சிறுத்தைகள் இமயமலை பிரதேசத்தில் வசிக்கின்றது.
* கங்காரு ஒரே தாவலில் 30 அடிகள் தூரம் வரை தாண்டும்.
வி.ஆனந்த கிருஷ்ணன், சென்னை-101.
எலும்புக் கூடில்லா விலங்கு!

* மிக விரைவாக குட்டிகளை ஈனும் பாலூட்டி சுண்டெலி.
* போலார் கரடி ஆர்க்டிக் பிரதேசத்தில் வசிக்கின்றது.
* யாக் என்ற வகை எருது காணப்படும் நாடு திபெத்.
* எலும்புக் கூடில்லா விலங்கு ஜெல்லி மீன்கள்.
* கடல் சிங்கங்கள் அண்டார்டிகா கடல் பிரதேசத்தில் அதிகளவில் கானப்படுகின்றன.
எஸ்.விஜயலஷ்மி, ஆதம்பாக்கம்.
உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை!

* இமயத்தின் ஒரு சிகரம் நங்க பர்வதம். இதன் உயரம் 8,126 மீட்டர் .
* உலகிலேயே மிக நீளமான நெடுஞ்சாலை பான்-அமெரிக்கன் நெடுஞ்சாலை. இதன் நீளம் 24,140 கி.மீட்டர்.
* இந்தியாவில் மிகவும் நீளமான சாலை கிரான்ட் டிரங்க் ரோடு.
* இந்தியாவில் உள்ள மிகவும் உயரமான அணைக்கட்டு பக்ராநங்கல். உயரம் 226 மீட்டர்.
* எல்லோரா குகைக் கோயில் ஒளரங்காபாத் அருகே அமைந்துள்ளது.
* உலகின் மிகப் பெரிய தேவாலயம் ஆப்பிரிக்காவில் உள்ள ஐவரி கோஸ்ட்டில் உள்ளது.
இரா.அனு, பொழிச்சலூர்.

பொதுக் குறிப்புகள்

உங்கள் பக்கம்: ஒன்பது... ஒன்பது... ஒன்பது..!
சிறுவர்மணி


* புல்லாங்குழலில் 9 துவாரங்கள் இருக்கும்.
* பிறை நிலவை விட முழு நிலா 9 மடங்கு பிரகாசமாயிருக்கும்.
* எவரெஸ்ட் சிகரத்தை அடைய 9 வழிகளுண்டு.*
புலிக் குட்டிகள் 9 நாட்களுக்குப் பின் கண்களைத் திறக்கின்றன.
* கடலின் அதிகபட்ச சராசரி ஆழம் 9 கிலோ மீட்டர்.நெ.இராமன், சென்னை-74.தமிழ்த்தாய் கோவில்!
ஐந்து கோடிக்கும் அதிகமானவர்களால் பேசப்படும் மொழிகள் உலகில் 13 மட்டுமே. இவற்றுள் தமிழ் மொழியும் ஒன்று.
* உலகிலேயே மொழிக்காக ஒரே ஒரு இடத்தில்தான் கோவில் கட்டப்பட்டுள்ளது. அது தமிழ் மொழிக்காக கட்டப்பட்டுள்ள தமிழ்த்தாய் கோவில்தான். இது கட்டப்பட்டுள்ள இடம் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில்.
* இந்தியாவிலேயே தமிழ் மொழியில்தான் முதன்முதலில் 1948-ம் ஆண்டு கலைக்களஞ்சியம் வெளியிடப்பட்டது.
* இந்திய மொழிகளிலேயே தமிழில்தான் முதன்முதலில் பைபிள் மொழி பெயர்க்கப்பட்டது.ஜி.லலித், இராஜபாளையம்.
கரையும் பொருட்கள்!

* பெட்ரோல் காற்றில் கரையும்.
* ரப்பர் பெட்ரோலில் கரையும்.
* கற்பூரம் காற்றில் கரையும்.
* சோழி எலுமிச்சைச் சாற்றில் கரையும்.
* நீரில் உப்பு கரையும்.* மண்ணெண்ணெயில் தார் கரையும்.வெ.இராஜாராம், சங்கரன்கோவில்.
அதிக சத்தம் எழுப்பும் பூச்சி!
* அதிக சத்தம் எழுப்பும் பூச்சியினம் சிகாடா.
* புணேயில் உள்ள ராஜா கெல்கா என்ற அருங்காட்சியகத்தில்தான் இந்தியாவிலேயே அதிகளவு பழமை வாய்ந்த விளக்குகள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன.
* வட பசிபிக் கடல் பகுதியில் சாலஞ்சர் டீப் என்ற 10,912 மீட்டர் ஆழமுள்ள இடம்தான் உலகின் ஆழமான இடமாகும்.
* இந்திய சர்வதேச திரைப்பட விழாவிற்கு ஒவ்வொரு ஆண்டும் 21 படங்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.
* "கணவாய்' மீனின் ரத்தம் நீல வண்ணத்தில் இருக்கும்.
இரா.பாலகிருஷ்ணன், வரக்கால்பட்டு
.
மயில்!
இந்திய தேசியப் பறவையான மயிலின் பூர்வீகம் இந்தியாதான். அந்தக் காலத்தில் பரிசுப் பொருளாக மயிலைக் கொடுத்ததால் அது உலக நாடுகளுக்கு எளிதாகப் பரவியது. இந்திய மன்னர் ஒருவர் அளித்த மயில்களை சாலமன் என்ற மன்னர் பாலஸ்தீனத்திற்கு எடுத்துச் சென்றார். இந்தியா மீது படையெடுத்த கிரேக்க மன்னர் அலெக்ஸôன்டர் மூலமாக மயில் இனம் வெளிநாட்டிற்கு பரவியது. தற்போது, ஆப்ரிக்கா, பெல்ஜியம், நேபாளம், மியான்மர், வடகொரியா போன்ற நாடுகளில் மயில் தேசிய சின்னமாகவும், ராணுவ முத்திரையாகவும் பாவிக்கின்றனர்.
என்.ஜரினா பானு, திருப்பட்டினம்.

புத்திசாலி பறவை!

* கடல்வாழ் உயிரினங்களில் புத்திசாலி டால்பின்.
* பறவைகளில் புத்திசாலி ஆந்தை.
* விலங்குகளில் புத்திசாலி மனிதக் குரங்கு.
* ஆப்ரிக்காவில் ஆண் யானை, பெண் யானை இரண்டிற்கும் தந்தம் உண்டு.
* ஆமைகளுக்கு பற்கள் கிடையாது.
* இறக்கையை அசைக்காமல் வானில் வெகுதூரம் பறந்து செல்லும் பறவையின் பெயர் ஆன்டியன் கான்ட்டர் என்பதாகும்.
த.ஜெயபிரகாஷ், கலவை.
தேனீ செய்திகள்!
* தேனீக்கு ஐந்து கண்கள் உண்டு.
* தேனீ மணிக்கு ஏழு மைல் வேகத்தில் பறக்கும்.
* தேனீயின் வயிற்றில் இரண்டு இரைப்பைகள் உண்டு.
* தேனீயின் உடலில் 12 வளையங்கள் உள்ளன.
* ஒரு தேன் கூட்டில் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை தேனீக்கள் இருக்கும்.
* தேனீக்கு நான்கு சிறகுகள் உண்டு.
* தேனீ நிமிடத்திற்கு சராசரியாக 400 முறை இறக்கையை அசைக்கும்.
எஸ்.நேசமணிகண்டன், மடிப்பாக்கம்.
விடுகதைகள்: அடி மலர்ந்து நுனி மலராத பூ
சிறுவர் மணி


1. மண்டையில் போட்டால் மகிழ்ந்து சிரிப்பான். அவன் யார்?
2. நிலத்தில் முளைக்காத செடி; நிமிர்ந்து நிற்காத செடி. அது என்ன?
3. கணுக்கால் நீரில் கரடி நீச்சல் போடுது. அது எது?
4. மரம் வாழ்பவனுக்கு முதுகிலே மூன்று சூடு. அது என்ன?
5. ஒற்றைக்கால் கோழிக்கு வயிறு நிறைய முட்டை. அது என்ன?
6 நடக்கத் தெரியாதவனுக்கு வழிகாட்டுபவன். அவன் யார்?
7. நீரிலே உயிர் பெற்று நிலத்திலே நீர் இறைப்பான். அவன் யார்?
8. அறைகள் அறுநூறு; அத்தனையும் ஓரளவு. அது என்ன?
9. கோணல் இருந்தாலும் குணம் மாறாது. அது என்ன?
10. கண்டு காய் காய்க்கும்; காணாமல் பூ பூக்கும். அது என்ன?
11. பந்திக்கு வரும் முந்தி; வெளியே வரும் பிந்தி. அது என்ன?
12. அடி மலர்ந்து நுனி மலராத பூ. அது என்ன?
விடைகள்:1.தேங்காய்2.தலைமுடி3.தவளை4.அணில் 5.மிளகாய்6.கைத்தடி7.மின்சாரம்8.தேன்கூடு9.கரும்பு10.அத்திமரம்11.இலை12.வாழைப்பூ
கடி
தினமணி சிறுவர் மணி


* ""இந்த ஊர்ல பலாப்பழம் சீப்பா கிடைக்கும்.''""ஆச்சர்யமா இருக்கே. எங்க ஊர்ல வாழைப்பழம் தான் சீப்பா கிடைக்கும்!''டி.பச்சமுத்து, 5/1078, "இலட்சுமி இல்லம்', பாரதியார் நகர், கிருஷ்ணகிரி-1.*""என் வாழ்க்கை இனிமேல் பிரகாசம் தான்!''""எப்படிச் சொல்றே..?''""பல்பு கம்பெனியில் வேலை கிடைச்சுருக்கே..!''எஸ்.பொருநை பாலு, 88ஏ, சுந்தரர் தெரு திருநெல்வேலி } 627 006.""நான் கிளாஸ் எடுத்துட்டிருக்கும் போது தூங்கறியே... அப்புறம் எப்படி உன் ஞாபகசக்தி கூடும்?''""தினசரி பகல்ல ஒரு மணி நேரம் தூங்கினால் நினைவாற்றல் கூடும்னு விஞ்ஞானிகள் சொல்லியிருக்காங்க சார்!''ஜி.வினோத், கிருஷ்ணகிரி.""அவரை ஏன் போலி டாக்டர்ன்னு சொல்றே?''""பின்னே... மனசு உடைஞ்சுப் போச்சு டாக்டர்ன்னு சொன்னேன். மாவு கட்டுப் போட்டு குணப்படுத்தலாம்ங்கறாரே..!''ஆர்.ஜி.காயத்ரி, திசையன்விளை. ""அந்த இரும்புக்கடையில என்னை வேலைக்கு சேர்க்கமாட்டேன்னு சொல்லிட்டாங்கப்பா..!''""ஏன்?''""இரும்பையும் துரும்பாக்கிடுவேன்னு சொன்னேன், அதான்!''நதீன், காயல்பட்டினம்.""எதுக்குடா உங்க அப்பா பெயரை எழுதி ஃப்ரிட்ஜ்க்குள்ள வைக்கறே?''""அவர் பெயர் கெட்டுடக் கூடாதுன்னு தான்!''