
காய்கறிகளின் மருத்துவக் குணங்கள்
நாம்அன்றாடம் (விலையைப் பார்க்காமல்!) காய்கறிக் கடைகளில்
பார்க்கும் வாழைப்பூ, வாழைத்தண்டு, வாழைக்காய்,பாகற்காய், சேப்பங்கிழங்கு,
பீட்ரூட், வெண்டைக்காய், கோவைக்காய், முருங்கைக்காய், சுண்டைக்காய்,
சுரைக்காய், குடைமிளகாய், சௌசௌ, அவரைக்காய், கேரட், கொத்தவரங்காய் மற்றும்
பிஞ்சு கத்தரிக்காய் ஆகியவற்றின் மருத்துவகுணங்களையும் பார்ப்போமா..?
வாழைப்பூ:
வாழைப்பூவின் ஒவ்வொரு இதழிலும் நமக்கு இரும்புச்சத்து, போலிக் அமிலம்,
வைட்டமின் ஏ, பி, சி சத்துக்கள் நிறைந்துள்ளன. இவைநமக்கு ரத்தச் சோகையை
வராமல் தடுத்து, நம் உடலுக்கு தெம்பையும் புத்துணர்வையும் தரவல்லது.
வாழைத்தண்டு:
வாழைத்தண்டில் ஏராளமான கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின்
பி, சி நிறைந்துள்ளது. அவை நம் உடலில் ரத்தத்தை சுத்தப்படுத்துவதுடன்,
ரத்தத்தில் சேர்ந்துள்ள தேவையற்ற அசுத்த நீரையும் பிரித்தெடுக்கும். நம்
சிறுநீரகத்தின்செயல்பாடுகளையும் சீராக்குவதோடு, சிறுநீரக கல் அடைப்பையும்
தடுக்கும்.
வாழைக்காய்:
வாழைக்காயில் இரும்புச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் பி, சி, சத்துக்கள்
அதிகம் நிறைந்துள்ளது. இவை வாயுவை அதிகம் தூண்டும் குணமுள்ளதால், இவற்றை
சமைக்கும்போது அதிகளவில் பூண்டையும் சேர்த்துக் கொள்வது நல்லது. இவை தீராத
மலச்சிக்கலையும் தீர்க்கவல்லது.
பாகற்காய்:
பாகற்காயில் ஏராளமான வைட்டமின் ஏ, பி, சி, பாஸ்பரஸ், இரும்புச்சத்து
மற்றும் கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை நமக்கு நன்குபசியைத்
தூண்டும். மேலும், நம் உடலில் சர்க்கரையின் அளவையும் கட்டுப்படுத்தும்.
சேப்பங்கிழங்கு:
சேப்பக்கிழங்கில் அதிக அளவில் கால்சியம், பாஸ்பரஸ் நிறைந்துள்ளது. இவை நம் எலும்புகளையும் பற்களையும் மேலும் உறுதிப்படுத்துகிறது.
பீட்ரூட்:
பீட்ரூட்எந்தளவுக்கு சிவந்து காணப்படுகிறதோ, அதே அளவு கால்சியம்,
சோடியம் மற்றும் பொட்டாசியம் சத்துக்களும் நிறைந்துள்ளன. இவை மலச்சிக்கலைப்
போக்குவதுடன், ரத்த சோகையையும் சரிப்படுத்துகிறது.
வெண்டைக்காய்:
வெண்டைக்காயில்மிருதுவான தன்மைக்கேற்ப போலிக் அமிலம், கால்சியம் மற்றும்
பாஸ்பரஸ் சத்துகளும் நிறைந்துள்ளன. அவை நம் மூளை வளர்ச்சியைத்
தூண்டுவதோடு. நமக்கு நன்கு பசியையும் உண்டாக்கும். மேலும் நம்மிடம் உள்ள
மலச்சிக்கலையும் போக்கும்.
கோவைக்காய்:
கோவைக்காய்பார்க்க சிறிதாக இருந்தாலும், அவற்றில் வைட்டமின் ஏ,
கால்சியம், போலிக் அமிலம், பாஸ்பரஸ், இரும்புச் சத்துக்கள்நிறைந்துள்ளன.
இவை நம்மிடம் உள்ள வயிற்றுப்புண், வாய்ப்புண் மற்றும் மூலநோயின் தாக்குதல்
போன்றவற்றையும் அறவேநீக்கும்.
முருங்கைக்காய்:
முருங்கைக்காய் எந்தளவுக்கு நீண்டுள்ளதோ, அதே அளவு வைட்டமின் ஏ, பி, சி,
பாஸ்பரஸ் மற்றும் இரும்புச் சத்துகள் நிறைந்துள்ளன. பெண்களுக்கு
மாதவிலக்கின்போது உண்டாகும் அதிகளவு உதிரப்போக்கைத் தடுக்கும். ‘முந்தானை
முடிச்சு’ படத்தில் வருவதுபோல, முருங்கைக்காயில் பல அயிட்டங்கள் செய்து
சாப்பிட்டால், ஆண்களுக்கு விந்து உற்பத்தியையும் பெருக்கும்.
சுண்டைக்காய்:
‘ மூர்த்திசிறிதானாலும் கீர்த்தி பெரிது ‘ என்பதைப் போல, சுண்டைக்காய்
சிறிதானாலும் அதில் உள்ள புரதம், கால்சியம், இரும்புச்சத்து போன்றவற்றால்,
அதன் கீர்த்தி உயரே உள்ளது. நம் உணவில் அடிக்கடி சுண்டைக்காயைச் சேர்த்து
வந்தால், நம்வயிற்றில் உள்ள அனைத்து புழுக்களையும் கொல்லக்கூடிய
சக்திவாய்ந்தது. நம் உடல் வளர்ச்சியையும் அதிகளவில் தூண்டும்.
சுரைக்காய்:
சுரைக்காய்எந்தளவு குண்டாக உள்ளதோ, அந்தளவுக்கு புரதம், கால்சியம்,
இரும்புச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் பி, நிறைந்துள்ளது. இவை நம் உடல்
சோர்வை நீக்குவதுடன், நம் உடலுக்குப் புத்துணர்ச்சியையும் கொடுக்கிறது.
குடைமிளகாய்:கொக்கிபோன்ற கொம்பு உடைய குடைமிளகாயில் வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கணிசமாக உள்ளது. அவை நமக்கு அஜீரணக் கோளாறை நீக்கி, செரிமான சக்தியை அதிகரிக்கத் தூண்டும்.
செளசௌ:
பார்ப்பதற்குமெல்லிய முட்களுடன் சௌசௌ என்றிருந்தாலும், இவற்றில் கால்சியம், வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை நம்பற்களுக்கும் எலும்புகளுக்கும் உறுதியைக் கொடுக்கும்.
No comments:
Post a Comment