Thursday, July 16, 2009

விடுகதைகள்1. கண்டம் விட்டு கண்டம் பாய்வான்; நெருப்பைக் கக்கியபடி பாய்ந்து செல்வான். அவன் யார்?
2. ஓட்டையில்லாத கட்டில்; எந்தப் பக்கமும் நகர்த்த முடியாது. அது என்ன?
3. எழுதி எழுதியே தேய்ஞ்சு போனான். அவன் யார்?
4. வட்டமாக இருப்பான்; தீ எரிய உதவுவான். அவன் யார்?
5. பால்காம்பில் ஒன்றைக் கண்ணுக்குட்டிக்கு விட்டிருக்கு. அது என்ன?
6. கறிக்கு உதவாத கறி. அது என்ன?
7. அவசரத்துக்கு உதவுவான்; அதிவேகமாகவே செல்வான். அவன் யார்?
8. அரிவாளால் வெட்டி வெட்டி அடுப்பிலே வெச்சாலும் மூச்சே விட மாட்டான். அவன் யார்?
9. கொப்பரையில் பூங்கொத்து. அது என்ன?
10. தண்ணியில்லாத காட்டிலே அலைந்து தவிக்கும் அழகி. அவள் யார்?
11. வட்ட வட்ட நிலவில் வரைஞ்சிருக்கு; எழுதியிருக்கு. அது என்ன?
12. சொன்ன நேரத்துக்கு தொண்டை கிழிய கத்துவான். அவன் யார்?
13. பாலிலே புழு நெளியுது. அது என்ன?

விடைகள்:

1.ராக்கெட்
2.திண்ணை
3.சாக்பீஸ்
4.வரட்டி
5.மோதிர விரல்
6.அடுப்புக்கரி
7.ஆம்புலன்ஸ் வண்டி
8.விறகு
9.கோன் ஐஸ்
10.நெருப்புக் கோழி
11.நாணயம்
12.அலாரம்
13.சேமியா பாயசம்

கடி* ""டாக்டர்! காதுல டிரெயின் ஓடுற மாதிரி சத்தம் கேட்குது டாக்டர்!''
""செக் பண்ணினேன் ஒண்ணும் கேட்கலையே.''
""அப்படின்னா ஏதாவது ஸ்டேஷன் வந்திருக்குமா டாக்டர்?!''
- எஸ்.பொருநை பாலு, திருநெல்வேலி.

* ""வாய்மை என்றால் என்ன?''
""வாய்மை என்றால் "லிப்ஸ்டிக்' சார்!''
- கே.நேசினி, பொள்ளாச்சி.

* ""ஏன்டா... உனக்கு அல்சராமே?''
""ஏன்டா அந்த வயிற்றெரிச்சலை கேட்கிற..!''
- பி.பாலாஜிகணேஷ், கோவிலாம்பூண்டி.

* ""டாக்டர்! நான் எதைப் பார்த்தாலும் இரண்டு இரண்டாக தெரியுது.''
""சரி, அந்த நாற்காலியில் போய் உட்காருங்க.''
""இரண்டு நாற்காலி இருக்கே டாக்டர் எதுல உட்காரணும்?!''
- எம்.பழனிச்சாமி, கள்ளிப்பாளையம்.

* ""அவர் போலி டாக்டர்னு எப்படிச் சொல்றே?''
""நீங்க கொடுத்த "டியூப்' மாத்திரை பெருசா இருக்கு. முழுங்க பயமா இருக்கேன்னு சொன்னால், "காத்த' இறக்கிவிட்டு முழுங்குன்னு சொல்றாரு!''
- எம்.எஸ்.கே.அருள், 3/720, முனியங்குறிச்சி, பெரிய திருக்கோணம் (தபால்), அம்பாபூர் (வழி), அரியலூர் தாலுகா-621 701.

* ""டேய்... ரவி, ஏன்டா ரவி நேத்து சீக்கிரமா வீட்டுக்குப் போயிட்டே..?''
""நீங்கதானே சார் மணி அடிச்சவுடனே வீட்டுக்குப் போகலாம்னு சொன்னீங்க..!''
""ஆமாம்! அதுக்கு என்ன?''
""என் பக்கத்தில் இருந்த மணி என்னை அடிச்சவுடனே நான் வீட்டுக்குப் போயிட்டேன்!''
- ஒய்.ரவிராகு, ஒளவையார்பாளையம், கலிங்கியம் (தபால்), கோபி (தாலுகா), ஈரோடு மாவட்டம்-638 453.

உங்கள் பக்கம்மத்தியதரைக் கடலின் திறவுகோல்!

* உலகில் அகதிகள் அதிகம் வசிக்கும் நாடு ஆப்கனிஸ்தான்.
* மத்தியதரைக் கடலின் திறவுகோல் என ஜிப்ரால்டர் நதி அழைக்கப்படுகிறது.
* இந்தியா, பாகிஸ்தான் இடையேயான காலநேர வித்தியாசம் அரைமணி ஆகும்.
* மாவீரன் அலெக்ஸôன்டரின் காலம் கி.மு.நான்காம் நூற்றாண்டு.
* அதிகளவில் காபி விளையும் நாடு பிரேசில்.
- ஆர்.ஜி.காயத்ரி, திசையன்விளை.

கருங்கடல்!

* காஸ்பியன் கடல் என்பது பெரிய ஏரி. இந்த நீர் உப்புத் தன்மை உடையது.
* உலகின் மிகப் பெரிய கடலான பசிபிக் பெருங்கடலின் அடியில் மிகப் பெரிய மலைகள் உள்ளன.
* கருங்கடல் தென்கிழக்கு ஐரோப்பாவை சுற்றி வலம் வரும் மிகப் பெரிய கடல். குளிர்காலத்தில் மூடுபனியால் இக்கடல் தண்ணீர் கருப்பாக தெரிவதால் இப்பெயர் வந்தது.
* 54 சிறிய தீவுகளை உள்ளடக்கிய ஒரு தீவாக சிங்கப்பூர் உள்ளது.
- டி.வி.கிருஷ்ணமூர்த்தி, நங்கநல்லூர்.

7 பற்றி ஏழு செய்திகள்!

* முள்ளம் பன்றி ஒரே சமயத்தில் 7 குட்டிகளை ஈனும்.
* ரோம் நகரம் ஏழு மலைகளின் மேல் அமைந்துள்ளது.
* உலகில் ஏழு கோடி குதிரைகள் உள்ளன.
* ஜெல்லி மீன் ஏழு மாதங்கள் வரை உயிர் வாழும்.
* பாப்ளர் என்ற பறவை ஏழு ஏழாக பறக்கும்.
* ஏழு சகோதரிகள் என அழைக்கப்படுபவை அருணாசலப் பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, மிúஸôராம், நாகாலாந்து, திரிபுரா. இவை இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் ஆகும்.
- நெ.இராமன், சென்னை-74.

சார்லி சாப்ளின்!

* கோல்கத்தாவில் சார்லி சாப்ளினுக்கு சிலை உள்ளது.
* மனித உடலில் 457 தசைகள் உள்ளன.
* நண்டு பக்கவாட்டில் நடக்கும் திறன் கொண்டது.
* கடல் நீரில் சராசரியாக 35 சதவீதம் உப்பு உள்ளது.
* நமது நாட்டில் முதன்முதலில் உருவாக்கப்பட்ட மாநிலம் உத்தரப்பிரதேசம்.
* உலகின் மிகப் பழமையான நகரம் டமாஸ்கஸ்.
- முருகேசன், தேனி.

தொழில்புரட்சி நடைபெற்ற முதல் நாடு!

* இந்தியாவில் ஆங்கிலத்தை ஆட்சி மொழியாகக் கொண்ட மாநிலம்
நாகாலாந்து.
* மாணவர்களுக்கு இரண்டு கைகளாலும் எழுதப் பயிற்சி அளிக்கிறது ஜப்பான்.
* முதன்முதலில் தொழில்புரட்சி நடைபெற்ற நாடு
இங்கிலாந்து.
* உலக சுற்றுச்சூழல் தினம் ஆண்டுதோறும் ஜூன் 5-ம் தேதி கொண்டாடப்படுகிறது.
- எம்.சாரு, சென்னை-71.

வங்கதேசத்தின் முதல் பிரதமர்!

* புறாக்கள் இரண்டு முட்டைகளே இடும். பெரும்பாலும் சுத்தமான நீரையே குடிக்கும்.
* லயன், ஓமர் என்ற இனப் புறாக்களே பந்தயப் பிரியர்களால் வளர்க்கப்படுகிறது.
* சமாதானத்தின் சின்னமாக புறாவையே உலகம் ஏற்றுக் கொண்டிருக்கிறது.
* அமெரிக்காவின் முதல் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன்.
* ஐ.நா.சபையின் முதல் பொதுச் செயலாளர் டிரிக்வி லீ.
* வங்கதேசத்தின் முதல் பிரதமர் முஜிபுர் ரஹ்மான்.
மு.தமிழ்ப்பாண்டியன்,
வில்லிவாக்கம்.

லிட்டில் பாய்!

* உலகில் 757 மிருகக்காட்சி சாலைகள் உள்ளன.
* தாமரை மலரில் வெண்தாமரை, செந்தாமரை ஆகியன இரு முக்கிய வகைகள்.
* நாகாலாந்து மாநிலத்தின் தலைநகர் கோஹிமா.
* ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா நகரத்தின் மீது வீசப்பட்ட அணுகுண்டின் பெயர் லிட்டில் பாய்.
* நவீன இத்தாலியின் தந்தை என அழைக்கப்படுபவர் கரிபால்டி.
* பிரிட்டனின் முதல் பெண் பிரதமர் மார்க்ரெட் தாட்சர்.
* இத்தாலி நாட்டின் தேசிய மலர் லில்லி.
- வெ.இராஜாராம், சங்கரன்கோவில்

மிகப் பெரிய மரம்!

* உலகிலேயே மிகப் பெரிய அரண்மனை வாட்டிகன் அரண்மனை.
* உலகிலேயே மிகப் பெரிய மரம் கலிபோர்னியாவில் உள்ள ரெட்வுட் மரம்.
* மிகப் பெரிய வைரச் சுரங்கம் கிம்பர்லி சுரங்கம்.
* உலகில் மிக உயரத்தில் உள்ள ஏரி நியூயார்க்கில் உள்ள கிரான்ட் சென்ட்ரல் ஏரியாகும்.
* இந்தியாவின் மிக நீளமான அணை ஹீராகுட் அணை.
* ரோமானிய பேரரசர் ஜூலியஸ் சீசர்தான் பொது மக்களுக்காக முதன்முதலாக பொது நூலகங்களைக் கட்டியவர்.

- இரா.பாலகிருஷ்ணன், வரக்கால்பட்டு.