Wednesday, January 18, 2012

Kadi : கடி தத்துவங்கள்..

                                 கடி தத்துவங்கள்..

January 3, 2012, 5:15 pm[views: 1568]     

1. நீ எவ்ளோ பெரிய படிப்பாளியா இருந்தாலும் எக்ஸாம் ஹால்ல போய் படிக்க முடியாது.

2. ஸ்கூல் டெஸ்ட்லே பிட் அடிக்கலாம்... காலேஜ் டெஸ்ட்லே பிட் அடிக்கலாம்... ஆனால் ப்ளட் டெஸ்ட்லே பிட் அடிக்க முடியாது.

3. ஆயிரம் தான் இருந்தாலும் ஆயிரத்து ஒண்ணுதான் பெருசு

4. என்னதான் அகிம்சாவாதியா இருந்தாலும் சப்பாத்தியை சுட்டுத்தான் சாப்பிட முடியும்.

5. காசு இருந்தா கால் டாக்சி!! காசு இல்லைன்னா கால் தான் டாக்சி!!!

6. பல்லு வலின்னா பல்லைப் புடுங்கலாம். ஆனா கண்ணு வலின்னா கண்ணைப் புடுங்க முடியுமா?

7. இட்லி பொடியைத் தொட்டு இட்லி சாப்பிடலாம். ஆனா மூக்குப் பொடியைத் தொட்டு மூக்கை சாப்பிட முடியாது.

8. பாண்ட் போட்டு முட்டிப்போட முடியும். ஆனா முட்டிப் போட்டு பாண்ட் போட முடியுமா?

9. இன்னைக்குத் தூங்கினா நாளைக்கு எந்திரிக்கலாம். ஆனால் நாளைக்குத் தூங்கினா இன்னைக்கு எந்திரிக்க முடியுமா?

10. பஸ்சுல கலெக்டரே ஏறினாலும், முதல் சீட்டு டிரைவருக்குத் தான்.

11. சைக்கிள் கேரியர்ல டிபன் கேரியரை வெச்சி எடுத்துட்டுப் போகலாம். ஆனால் டிபன் கேரியர்லே சைக்கிளை வெச்சு எடுத்துட்டுப் போக முடியாது

12. டிக்கெட் வாங்கிட்டு உள்ளே போனா அது சினிமா தியேட்டர். ஆனால் உள்ளே போய்ட்டு டிக்கெட் வாங்கினா அது ஆபரேஷன் தியேட்டர்.

13. என்னதான் மீனுக்கு நீந்தத் தெரிஞ்சாலும், அதால மீன் குழம்புலே நீந்த முடியாது.

14. நீ என்ன தான் காஸ்ட்லி மொபைல் வச்சிருந்தாலும், அதுல எவ்வளவு தான் ரீசார்ஜ் பண்ணாலும், உன்னால உனக்கு கால் பண்ண முடியாது.

15. க்ரீம் பிஸ்கட்லே க்ரீம் இருக்கும், ஆனா நாய் பிஸ்கட்லே நாய் இருக்குமா?

16. ஒரு எறும்பு நினைச்சா 1000 யானைகளைக் கடிக்கும். ஆனால் 1000 யானைகள் நினைச்சாலும் ஒரு எறும்பைக் கூட கடிக்க முடியாது.

17. குவார்ட்டர் அடிச்சிட்டு குப்புற படுக்கலாம். ஆனால் குப்புற படுத்துக்கிட்டு குவார்ட்டர் அடிக்க முடியாது.

18. செல்போனுலே பாலன்ஸ் இல்லைன்னா கால் பண்ண முடியாது. ஆனால் மனுசனுக்கு கால் இல்லைன்னா பாலன்ஸ் பண்ண முடியாது.

19. ரயில்வே ஸ்டேஷன்லே போலீஸ் ஸ்டேஷன் இருக்கலாம். ஆனால் போலீஸ் ஸ்டேஷன்லே ரயில்வே ஸ்டேஷன் இருக்க முடியாது.

20. என்னதான் உயர பறந்தாலும் கொசுவை பறவை லிஸ்டில் சேர்க்கமுடியாது.

Is the brain of a male is better than the brain of a female?

1 post by 1 author in Cyber Tamil Sangam
Cyber Tamil Sangam
Join group to reply
Jan 8 (10 days ago)
பதில் : நிச்சயமாக இல்லை.மூளையினை பற்றியும் அறிவு ஆற்றலினை பற்றியும் இரு பாலருக்கும் இடையே உள்ள
வேறுபாடுகள் பற்றியும் தவறான செய்திகளை செயற்கையாக இயற்கையின் மீது
சுமத்தி பெண்களை
மட்டம் தட்ட பல முயற்சிகள் கடந்த காலங்களில் நடைபெற்றுள்ளன.
ஆண்களும் பெண்களும் மனித இனத்தின் இரண்டு இன்றியமையாத பகுதிகள்.
அடிப்படையான இரண்டு பகுதிகளுள் ஒன்றினை தாழ்த்தி ஒன்றினை சிறப்பாக்கி
அமைக்க இயற்கை விழையாது, இருப்பினும் மனித இனம் தனது விருப்பங்களை
இயற்கையின் உண்மைகள் என்று பறைசாற்ற என்றுமே தயங்கியதேயில்லை.
இவ்வகையான தவறான முயற்சிகள் நூற்றாண்டுகளை தாண்டி செழித்து வாழ்வதற்கு
முக்கிய காரணம் அவற்றினை ஏற்க மக்கள் தயங்காததே, இனி வரும் காலங்களில்
செயற்கையாக இயற்கையை பழிக்க நாம் அனுமதிக்க கூடாது.
குற்றங்களின் மீது குற்றம் சுமத்துவதை விட அறிவியலின் ஒளி கொண்டு பெண்கள்
தங்களை சூழ்ந்து உள்ள இருளினை தாங்களே அழிக்க முன்வர வேண்டும். ஒளி
பிரகாசமாக இருக்கும் நிலையினில் இருள் தானாகவே அகலும் மற்றும் அழியும்.
வரும் காலங்களில் தவறான செய்திகளை மனித இனம் களைய வேண்டும், ஏனெனில்
இவ்வாறான செய்திகளை ஏற்பது இயற்கைக்கு எதிரான செயலாகும்.
உணர்வை மையப்படுத்தி இந்த செய்தியினை காணுவதை விட , அறிவை மையப்படுத்தி
நாம் இனி காணுவோம். சைபர் தமிழ் சங்கம் தனது முயற்சியினை நிச்சயம்
செய்யும்.

Weight of the human brain: மனித மூளையின் உடல் எடை

1 post by 1 author in Cyber Tamil Sangam
Cyber Tamil Sangam
Join group to reply
Jan 8 (10 days ago)
பதில்: அறிவின் இருப்பிடம் மூளை. இது மைய நரம்பு மண்டலத்தின் மிகப்பெரிய
பகுதி, இது மண்டையோட்டின் உட்குழியினுள் அமைந்துள்ளது. இதனை மூளை
வெளியுறை எனப்படும் மூன்று சவ்வுப்படலங்கள் சூழ்ந்திருக்கின்றன.மூளையினுள் இருக்கும் திரவம் நுட்பமான நரம்புத் திசுக்கள் அதிர்ச்சியினை
தாங்குவதற்கு உதவுகின்றன. மனிதனின் மூளை மற்ற பாலூட்டிகளின் மூளையின்
பொது வடிவத்தினை பலநிலைகளில் ஒத்திருப்பினும், மற்ற உயிரினங்களுடன்
ஒப்பிடும் பொழுது மனிதனின் மூளையின் உடல் எடை- மூளை அளவு விகிதம்
குறைந்தது ஐந்து விழுக்காடுகள் பெரியது.

Let us know these facts: தெரிந்து கொள்வோம்தெரிந்து கொள்வோம்


*மெக்டொனால்ட் நிறுவனம், மாதத்திற்கு சராசரியாக 110,000 ஐஸ்கிரீம் கோன்களை விற்பனை செய்கிறது.

*திருப்பதி தேவஸ்தானத்தின் ஆண்டு வருமானம் 530 கோடி ரூபாய்கள். இதுவே இந்தியாவில் அதிக வருமானம் கொண்ட டிரஸ்ட் ஆகும்.

*இரண்டு நாளைக்கு ஒருமுறை மீன் இறைச்சியை சாப்பிட்டால் மாரடைப்பு வருவது 30சதவீதம் குறையும் என ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.


*காற்று வீசும் திசைக்கு எதிராகத் தனது மூக்கு இருக்கும்படியாகவே நாய் எப்போதும் படுக்கும். எதிரி வருவதை மோப்பத்தால் சுலபமாக உணரவே இவ்வாறு செய்கிறது.

*ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு வகை சிலந்திகள், மீன் பிடித்து உண்ணுகின்றன. நீர் நிலைகளின் அருகே இரண்டு கால்களில் நின்றபடி மற்ற ஆறு கால்களையும் மீனைப் பிடிக்கத் தயாராக வைத்திருக்கும். சிறு மீன்கள் கரை ஓரமாக வரும் போது பாய்ந்து பிடித்துக் கொள்ளும்.

*விமானத்தில் பயணம் செய்யும் போது, சாக்லேட் கொடுக்கின்றனர். ஏன் தெரியுமா? சில பயணிகளுக்குத் தலைச் சுற்றல், மயக்கம் போன்றவை விமானப் பயணத்தின் போது ஏற்படும். சாக்லேட்டில் உள்ள குளுகோஸ் இவை வராமல் தடுக்கிறது. அது மட்டுமல்ல... சாக்லேட்டின் வாசனையும், சுவையும் பயணிகளுக்கு வாந்தி வராமல் தடுக்கும். மஞ்சள் காமாலை வந்தவர்கள் உணவு விஷயத்தில் ஆர்வமின்றி இருப்பர். இவர்களின் சுவையையும், சக்தியையும் அதிகரிக்க இவர்கள் சாக்லேட் அல்லது புளித்த சுவை கொண்ட மிட்டாய் போன்றவற்றை சாப்பிடலாம். தேர்வு எழுதிக் கொண்டிருக்கும் போது ஒரு சாக்லேட்டைமென்றால், சோர்வு குறைந்து சுறுசுறுப்பாக எழுத முடியும்.

*மனிதனது மூளையில் ஏராளமான நுண்மடிப்புகள் உள்ளன. கட்டளை அல்லது செய்திகளைக் கிரகிக்கும் பகுதி மனிதனுக்கு மனிதன் மாறுபடுகிறது. சிலரது மூளை மடிப்புகள் மிகவும் அபாரமானவை. இவை கம்ப்யூட்டர்களைப் போல பணிபுரிவதுடன் அதி அற்புதமான கிரகிக்கும் ஆற்றலையும், நினைவாற்றலையும் கொண்டது. சிலர் இளமையிலேயே அதிபுத்திசாலிகளாக விளங்குவது இதனால்தான். சீரான ஒரு மூளையில் பல ஆயிரம் நுண்மடிப்புகள் உள்ளன என்கின்றனர் நரம்பியல் அறிஞர்கள்.

*நமது நாட்டில் 5 வயது சிறுவனாக இருந்தபோதே "ரவிகிரண்' என்பவன் 60க்கும் மேற்பட்ட ராகங்களைப் பிரித்து அறியவும், பின்னர் பாட்டு இசைக்கவும் அறிந்திருந்தான். அதிகமாகப் பாடங்களை கிரகித்து அறிந்து, பின் தேர்வில் மிகச் சிறப்பாக எழுதிவிடும் அற்புத மூளை படைத்த சிறுவர்களும் இருக்கின்றனர். இவர்களது மேதா விலாசத்தைக் கட்டிப்போட முடியாது.

இந்நிலையில்தான் பிரிட்டனில் உள்ள "கிளாஸ்கோ' பல்கலைக் கழகத்தில் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த "வில்லியம் தாம்ஸன்' என்ற சிறுவன் பேராச்சரியப் படத்தக்க அறிவாற்றலுடன் விளங்கி, தேர்வுகளில் முதல் தர மதிப் பெண்களைப் பெற்றமையால் அவனுக்கு 10 வயதிலேயே பல்கலைக் கழக பட்டம் வழங்கப்பட்டது. இச்சிறப்பினை வேறு எவரும் பெற்றதே இல்லை. இவனே பிற்காலத்தில் "லார்ட் கெல்வின்' என்று அழைக்கப்பட்டு பிரிட்டனின் சிறந்த பேரறிஞனாக விளங்கி வந்தான். விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பது எத்தனை உண்மை பாருங்கள்!

*தேள் முட்டையிடுவதில்லை. குஞ்சு பொரிக்கிறது. குஞ்சுகள் தாங்களாகவே நடமாடும் பருவமடையும் வரை, தாய்த்தேள் தன் மார்பிலேயே அவைகளை வைத்துக் கொண்டிருக்கும்.

*சிங்கத்தின் வாலிலே இருக்கும் மயிர்க் கற்றையை விலக்கிப் பார்த்தால், முனையில் ஆணி போல் கடினமான ஒரு நகம் இருக்கும்.

*சுண்டெலிகள் பாடுகின்றன! மிகவும் உச்சஸ்தாயியில் பாடுவதாலேயே நாம் அதைக் கேட்க முடிவதில்லை. சில சமயங்களில் பாட்டின் ஒரு பகுதி கீழ்ஸ்தாயிக்கு இறங்கும் போது கேட்க முடிகிறது. ஆராய்ச்சியில் கண்ட உண்மை இது.

*ஆமைக்கு பல் கிடையாது. கனத்த ஈறு போன்ற அமைப்பாலேயே அது உணவுகளைச் சுவைத்து விழுங்குகிறது.

*முதலைக்கு மூக்கிலும் பல் உண்டு. முட்டைக்குள் உள்ள முதலைக்குட்டி மூக்கில் உள்ள பல்லால் உடைத்துக் கொண்டுதான் வெளியே வரும்.

*பிறக்கும்போது 1 பவுண்டு எடையுள்ள கரடிக்குட்டி ஒரு வயதை அடையும் போது அதன் எடை 100 பவுண்டாகி விடுகிறது.

*உணவு, நீர் எதுவும் இன்றி 15 நாட்கள் தாக்குப்பிடிக்கும் சக்தி குதிரைக்கு உண்டு.ஒரு வருடத்தில் தன் எடையைப் போல் பத்து மடங்கு உணவை குதிரை உட்கொள்கிறது.

*பெருங்குடல் புற்றுநோய் காரணமாக அமெரிக்காவில் 2003ல் 57,000பேர் இறந்தனர். இதே காலத்தில் இந்த நோயினால் 150,000 மக்கள் பாதிக்கப்பட்டனர். நுரையீரல் புற்றுநோய்க்கு அடுத்த இடத்தை இந்த நோய் பெறுகிறது.

*முன்னைய பிரிட்டீஷ் பிரதமர் சர்ச்சில் வளர்த்த கிளி ஒன்று இன்றும் உயிரோடு உள்ளது. சார்லி என்ற பெயருடைய அதற்கு 104 வயதாகிறது.

*பிரிட்டனைச் சேர்ந்த சோதனைச்சாலை தொழில்நுட்ப நிபுணரான ஜூலிவார்ட் என்ற 40வயது பெண்மணிக்கு முதல் பிரசவத்தில் ஒரு குழந்தையும் இரண்டாவது பிரசவத்தில் இரண்டு குழந்தைகளும் மூன்றாவது பிரசவத்தில் மூன்று குழந்தைகளும் பிறந்தன.

*மனோரஞ்சிதப் பூவுக்கு பிலிப்பைன்ஸ் நாட்டில் வழங்கப்படும் பெயர் "யாங்- யாலாங்". அதாவது 'பூக்களில் இதுவே பூ' என்று பெயர்.

*குவைத் என்றால் அரபி மொழியில் "சின்னக் கோட்டை".

*நமது நகம் சராசரியாக நாளொன்றுக்கு 1/250அங்குலம் வளர்கிறது.

*பிரான்ஸ் நாட்டில் பெண்களுக்கான அழகு நிலையம் ஒன்றில் எடை பார்க்கும் எந்திரம் ஒன்று இருக்கிறது. ரொம்பவும் குண்டான பெண்கள் ஏறி நின்றால், "மன்னிக்கவும், தங்கள் எடை......" என்ற சீட்டு வருகிறது.

*அமெரிக்காவில் வெஸ்ட் ரஞ்சு நகரில் தாமஸ் ஆல்வா எடிசனுக்கு நினைவுக்கூடம் ஒன்று இருக்கிறது. அங்கே அவர் விஞ்ஞானக் குறிப்புகள் எழுதிய நோட்டுப் புத்தகங்களை வைத்திருக்கிறார்கள். மொத்தம் 25,000 நோட்டுப் புத்தகங்கள்.

*மேற்கிந்தியத் தீவுகளில் முன்பெல்லாம் கீரிப்பிள்ளை கிடையாது. இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்து வளர்த்தார்கள். எதற்குத் தெரியுமா? பாம்புகளின் எண்ணிக்கை பெருகிவிட்டதால் அவற்றை ஒழிப்பதற்காக!

Wednesday, January 11, 2012

தெரிந்து கொள்வோம்


 

தெரிந்து கொள்வோம்இடிதாங்கி எவ்விதத்தில் வேலை செய்கிறது?
ஆகாயத்தில் உள்ள மேகங்களின் அடிப்பரப்பில் நேர்மின் (+) தோன்றுவதாக உதாரணத்துக்கு வைத்துக் கொள்வோம். அப்போது தரையில் எதர்மின் (-) தோன்றும். இந்த மின்னானது கூர்மையாக உள்ள பகுதிகளில் திரண்டு நிற்கும் தன்மையுடையது. கூர்மையான பகுதிகளில் காற்று துகள்கள் படும்போது அவற்றிலிருக்கிற மின்கள் கூர் முனை விளைவு என்ற முறையில் அடித்து செல்லப்பட்டு விடும். இதனால் தரையிலுள்ள மின்னின் வீரியம் குறைந்து விடும். அப்படி மேலே போகிற மின், மேகத்திலுள்ள நேர்மின்னின் வீரியத்தையும் குறைத்துவிடும். இதனால் தான் இடிதாங்கிகளின் மேல்முனைகள் கூர்மையாக அமைக்கப்படுகின்றன. அதையும் மீறிய அளவில் மின்கள் தோன்றி இடி விழுகிற நிலை ஏற்பட்டால், இடியிலுள்ள மின்சாரம் சுலபமாகக் கடந்து செல்லக் கூடிய உலோகப் பொருள்களைத் தேடிப்பிடித்து இறங்கும். அதற்காக இடிதாங்கியில் ஒரு செப்புக் கம்பியை இணைத்துத் தரையில் புதைத்து விட்டால் இடி மின்சாரம் கட்டடத்துக்கு வெளிப்புறமாக உள்ள அந்தக் கம்பியின் வழியாகப் பாய்ந்து தரையிலிறங்கிவிடும். கட்டடத்துக்குச் சேதம் ஏற்படாது.


Join Only-for-tamilமின்சாரக் கசிவு எதன் காரணமாக ஏற்படுகிறது? இதைத் தடுத்து விபத்திலிருந்து மீளுவது எப்படி?

மின் கம்பிகளின் மேலுள்ள் இன்சுலேட்டர் சேதமடைந்து கம்பி ஏதாவது மின் கடத்துகிற பொருளின் மேல் படுவதால் மின் கசிவு ஏற்படும். இதைத் தடுக்க வேண்டுமானால் கையில் ஒரு டெஸ்டரை வைத்துக் கொண்டு சந்தேகப்படும் இடத்தையெல்லாம் தொட்டுப் பார்த்து அங்கங்கே இன்சுலேஷன் சரியாக உள்ளதா என்று சோதித்து விட வேண்டும்.

Join Only-for-tamil


குடிநீரை ஒரு சி்ரிஞ்சின் மூலம் உடலில் ஏற்றினால் என்ன நிகழும்?
குடிநீரை ஒரு சிரிஞ்சின் மூலம் உடலில் ஏற்றினால் நிகழ்வது நீரின் தன்மையைப் பொருத்து உள்ளது. கொதிக்க வைக்கப்பட்ட, வடிகட்டப்பட்ட, சுத்தமான நீராக இருந்தால், இரத்தத்தில் கிரகிக்கப்பட்டு சிறு நீரால் வெளியேறி விடுகிறது. அசுத்தமான நீர் உட்செலுத்தப்பட்டால் சீழ்கட்டி உண்டாகும். பெரும்பாலான ஊசி மருந்துகள் நீரில் கலக்கப்படடே கொடுக்கப்படுகின்றன.

Join Only-for-tamil


ஹெலிகாப்டர் அந்தரத்தில் ஒரே இடத்தில் குறிப்பிட்ட நேரம் நிலையபக நிற்கிறது இது எப்படி? அவ்வாறு நிற்பதற்கு ஹெலிகாப்டர் பெற்றுள்ள் தகவமைப்புகள் என்ன? ஹெலிகாப்டா¢ன் மேலே உள்ள விசிறி காற்கைக் குடையும் போது மேலே இழுக்கப்படுகிறது. திருகாணியைச் சுழற்றினால் அது மரத்துக்குள் போகிறதல்லவா? அதேபோல திருகு வடிவத்தில் காற்றைக் குடையும்படி அந்த விசிறிகள் அமைந்திருக்கும். விசிறிகள் மேலே தூக்கப்படும்போது ஹெலிகாப்டரும் மேலே உயர்த்தப்படும். ஆனால் இவ்வாறு மேலே உயர்த்துக்கிற விசை ஹெலிகாப்டாரின் எடைக்குச் சமமாக இருக்கும்போது ஹெலிகாப்டர் அந்தரத்தில் அசையாமல் நிற்கும். விசிறியோடு சேர்ந்து ஹெலிகாப்டரும் சுழலாமலிக்க அதன் வால்பகுதியில் ஒரு விசிறி எதிர்த்திசையில் சுழன்று கொண்டிருக்கும்.


Join Only-for-tamil


தாமரை இலையில் தண்ணீரை விட்டுப் பார்த்திருக்கிறீர்களா?
அது ஒட்டவே ஒட்டாது. முத்து முத்தாகத் தண்ணீர் உருண்டு ஒடும். அது போலவே வாத்தின் முதுகிலும் நீர் ஒட்டாது.
ஒட்டகம் போல் தண்ணீர் உணவு ஏதுமின்றி நீண்ட நாட்கள் வாழக் கூடிய இன்னொரு பிராணி எது தெரியுமா?
 காட்டு ஆடு.
பறவைகளுக்கு வியர்வை சுரப்பிகளே கிடையாது.
யானையின் துதிக்கையிலே 40000 தசைகள் உண்டு. ஆனால் ஒர் எலும்புக் கூட கிடையாது.
இரண்டு மனிதர்களை சுமந்து கொண்டு குதிரையைப் போல வேகமாக ஒடவல்ல சக்தி வாய்ந்தது, தீக்கோழி.Join Only-for-tamil


உடம்பில் சிலருக்குத் திட்டுத் திட்டாக தேமல் முகம், உடம்பில் படரும். இதை நீக்க ஒரு புதிய மருந்து: ஹைபோ உப்பைச் சுடுநீரில் கரைத்து ஒரு பஞ்சினால் தடவி வந்தால் தேமல் மறைந்து விடும். ஹைபோ உப்பு என்பது பிலிம் நெகடிவ்களைக் கழுவ உதவும் ஒர் இரசாயனப் பொருள்.
அதிக அளவில் ரப்பரை உற்பத்தி செய்து வரும் நாடு மலேசியா.
நீரிலும் விண்ணிலும் நன்கு செயல்படக் கூடிய திறனுடைய விமானப்படகு இப்போது இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. யுத்த நேரங்களில் இது பெரிதும் உதவும் என்பதால் இங்கிலாந்திடம் ஒரு மில்லியன் டாலர் விலை கொடுத்து வாங்க பல நாடுகளும் வரிசையில் நிற்கின்றனவாம். உலகில் இத்தகைய ரகப்படகு இது ஒன்றுதான். இந்த படகின் பெயர் என்ன தெரியுமா? சுந்தர் லேண்ட்


Join Only-for-tamil


பூமியிலிருந்து பார்க்கும் பொழுது வாகனம் நீல நிறமாகத் தோன்றுகிறது. ஆனால் விண்வெளியில் வானம் கறுப்பாகத் தோன்ற காரணம் என்ன? பூமியின் மேல் உள்ள காற்றுமண்டல அடுக்குகளில் ஏற்படும் ஒளிச் சிதறலால் நீல நிறம் தெரிகிறது. விண்வெளியில் இவ்விளைவுகள் ஏற்பட வாய்ப்பில்லை.

நம் உடம்புக்கு சிறிதளவு அயோடின் என்ற இராசாயனப் பொருள் தேவைப்படுகிறது. இது உணவின் மூலம் கிடைக்காவிட்டால் காய்டர் கட்டிகள் உண்டாகின்றன. அயோடின் கடல்மீன், கடல் பாசிகளில் அதிகம் இருக்கிறது. மீன் மற்றும் கடல் உணவுகளில் அயோடின் இருப்பதால் இவற்றைச் சாப்பிடுகிறவர்களுக்கு காய்டர் கட்டிகள் உண்டாவதில்லை. கடற்கரைக் காற்றில் அயோடின் கலந்து வருவதால் காற்று வாங்கக் கடற்கரைக்குப் போகலாம்.


Join Only-for-tamilஉலகிலேயே பாராசூட் விளையாட்டுப் போட்டிகளில் அதிகம் ஈடுபடும் வீரர்கள் ரஷ்யாவில் தான் இருக்கிறார்கள். இந்த விளையாட்டில் செய்யப்பட்ட 63 உலக சாதனைகளுள் 50 சாதனைகளை ரஷ்ய வீரர்கள் தாம் செய்துள்ளனர். எவ்வளவு ஆர்வத்துடன் ஈடுபடுகிறார்கள் என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம். 15 வயதிற்கு மேற்பட்ட ஆண்களும், பெண்களும் நகரங்களிலும் கிராமங்களிலும் உள்ள இது சம்பந்தமான பயிற்சியில் பங்கு கொள்கின்றனர்.

உலகிலேயே கென்யா நாட்டில் தான்அதிக அளவில் பிறப்பு விகிதம் அதிகமாகிறது. 1000 பேர்களுக்கு 55 குழந்தைகள் என்ற கணக்கில் குழந்தைகள் பிறப்பு விகிதம் உள்ளது. மிகப் பொ¢ய அளவில் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள நாடு இது. பால் பண்ணைத் தொழிலில் ஈடுபட்டுள்ள ஆப்பி¡¢க்க நாடுகளில் இதுவும் ஒன்று. பெரும்பாலும் எல்லோரும் விவசாயிகள். நன்கு உழைக்கக் கூடியவர்கள். அதனால் குழந்தைகளும் ஆரோக்கியமாகவே பிறக்கின்றன.


Join Only-for-tamilஆசியாவிலேயே மிகப் பெரிய காற்றாலை மின்சார நிலையம் இந்தியாவில் தான் உள்ளது. 10 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திறனுடைய இந்த மின்சார நிலையம் குஜரத் மாநிலத்தில் ஜாம்நகர் மாவட்டத்திலுள்ள லம்பா என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

டெலஸ்கோப் எவ்விதம் செயல்படுகிறது?
டெலஸ்கோப்பில் இரண்டு சமதள கண்ணாடிகள் ஒன்றுக்கொன்று இணையாக 4 சாய்வில் பொருத்தப்பட்டிருக்கும். மேலேயுள்ள பொருளிலிருந்து ஒளிக்கதிர்கள் முதல் ஆடியில் பட்டு ஆடி 45 சாய்வில் உள்ளது. 90 யில் பிரதிபலித்து கீழே உள்ள அடியில் படும் அந்த அடி 45 சாய்வில் உள்ளதால் 90 யில் பிரதிபலித்து ஒளிக்கதிர் பார்ப்பவருடைய கண்ணை வந்தடையும். இந்த டெலஸ்கோப்பைப் பயன்படுத்தி கடலுக்கடியில் மூழ்கியிருந்தபடியே கடலின் மேலே கப்பல் வருவதையும், குகைகளில் பதுங்கிக் கொண்டே வெளியில் வருகின்ற அபாயக்களையும் அறிந்து கொள்ள முடியும்.


Join Only-for-tamilபாம்பு எவ்விதம் ஒடுகிறது? அதற்குக் கால் உண்டா?
பாம்புக்குக் கால்கள் கிடையாது. அடிப்புறச் செதில்களாலேயே பாம்பு தரையைப் பற்றி ஒடுகிறது. செதில்கள் பின்புறமாகத் தரையில் பிடிக்கும் வண்ணம் அமைந்துள்ளது. எனவே பாம்பு முன்னோக்கி நகர்ந்து பின்னர் பின்னோக்கி நகரும் போது செதில்கள் தரையில் மோதிக் கொள்வதால் உந்திக் கொண்டு மறுபடியும் முன்னோக்கி நகர்ந்து, இப்படித்தொடர்ந்து செல்கிறது.


பல்லி தலை கீழாகக் கூட எப்படி நடக்க முடிகிறது?
பல்லியின் கால் பாதங்களில் உட்குழவு இருக்கும். தன் பாதங்களினால் முதலில் சுவர் அல்லது தரையில் பதிய வைக்கும். பிறகு பாதத்தைச் சுருக்கும்போது உட்குழிவுகளில் வெற்றிடம் உண்டாகிறது. வெற்றிடம் உண்டாவதால் அதனை நிரப்ப வெளிக்காற்று அங்கு வரும். அதனால் பாதம் பிடிப்பை விடாது. இவ்விதம் பல்லி தலை கீழாக நடக்க முடிகிறது.
இரத்தம் உறைதல் என்றால் என்ன?
உடலில் ஏதேனும் வெட்டுக்காயம் ஏற்பட்டால் அப்போது இரத்த நாளங்கள் வெட்டுபடும் போது அதனின்று இரத்தம் பீறிக் கொண்டு வெளியேறும். ஆனால் சிறிது நேரத்தில் அது தானாகவே நின்று விடும். ஏனென்றால் இரத்தத்திலுள்ள் ·பைப்ரினோஜன்' எனப்படும் நார்புரதம் வெளிக்காற்றில் பட்டவுடன் ஒர் வலை போலப் பின்னிக் கொண்டு மேற் கொண்டு இரத்தம் வெளியேறாமல் காக்கும். இதற்கு இரத்தம் உறைதல் என்று பெயர்.


Join Only-for-tamil


பயத்தினால் சிலருக்கு வாயிலும் மூக்கிலும் இரத்தம் வடிந்து இறந்து விட நேரிடுவது எதனால்?
பயத்தின் போது இதயம் மிக வேகமாகச் சுருங்கி விரிகிறது. அப்போது திடீரென இரத்தம் அதிக அழுத்தத்தில் இரத்தக் குழாய்களின் மூலம் செலுத்தப்படுகிறது. அதிக அழுத்தத்துடன் இரத்தம் இவ்வாறு இரத்தக் குழாய்களின் வழியே செல்லும்போது திடீரென சில வேளைகளில் இரத்தக் குழாய் வெடித்து விடும். அதனால் இரத்தம் வெளியேறி வாய், மூக்கு வழியாக வடியும், அதனால் மனிதன் இறந்து விடக்கூடும்.

வெற்றிலை போடும் பழக்கம் நல்லதா கெட்டதா?
வெற்றிலை போடும் பழக்கம் ஒரு வகையில் நல்லதே. ஆனால் அதிகமாகப் போடக் கூடாது, கட்டாயமாகப் புகையிலை சேர்கக்க் கூடாது. வெற்றிலை ஜீரணத்திற்கு தேவையான பொருள்கள் அடங்கியுள்ளன. அத்துடன் சேர்த்து நாம் உட்கொள்கிற சுண்ணாம்பில் கால்ஷியம் இருப்பதால்நம் உடலுக்குக் கால்ஷியம் சத்து கிடைக்கிறது.

இறைக்க இறைக்கக் கிணற்றில் அதிகம் நீர் ஊறுவதேன்?
கிணற்று நீரை இறைக்காமல் இருக்கும்போது அதிலுள்ள் நீரின் அழுத்தம் மாறாமல் நிலையாக இருக்கிறது. ஆனால் நீரைவெளியேற்றும்போது அங்குள்ள  நீரின் அழுத்தம் குறைகிறது. அப்போது கிணற்றின் சுற்றுப்புறத்தில் அதிக அழுத்தத்தில் உள்ள நீர் நுண் துளைகளின் வழியாக கிணற்றை வந்தடைந்து அழுத்தத்தை ஈடு செய்கிறது.

Join Only-for-tamilமண் பானையில் வைக்கப்படும் நீர் குளிர்ச்சியாக இருப்பதேன்?
மண்பானையில் நுண் துவாரங்கள் உள்ளன. இதன் வழியாக நீர் கசியும். கசிந்த நீர் வெளிக்காற்றின் உஷ்ணத்தால் ஆவியாகும். ஆவியாவதற்குத் தேவையான அதிகப்படி உஷ்ணத்தைப் பானையில் உள்ள நீரிலிருந்தே எடுத்துக் கொள்ளும். அப்பொழுது நீரின் வெப்ப நிலை வெளிக் காற்றின் வெப்பத்தை விடக் குறைந்து காணப்படும். அதனால் பானைத் தண்ணீர் குளிர்ச்சியாக இருக்கிறது.

ஓர் இரும்புக் குண்டை கடலில் போட்டால் மூழ்கிவிடும். அதே இரும்பு தட்டையாக, தகடாக கடலில் போடப்பட்டால் மூழ்குவதில்லை. காரணம் என்ன தெரியுமா? தண்ணீரில் போடப்படும் பொருளின் எடையை விட அது வெளியேற்றும் நீரின் எடை அதிகமாக இருந்தால் அது மிதக்கிறது. எனவே தட்டையான இரும்பு மிதக்கிறது.
தமிழ் தாயகத்திற்காக
Engr. சுல்தான்

Sunday, January 8, 2012

படித்ததில் பிடித்தது - 2

வெறுப்பும், துவேஷமும் மனிதனை, மனிதனிடமிருந்து பிரிக்கின்றன; அவை தவறானவை, பொய்யானவை. மனிதன், நல்லவனாக வாழவே பிறந்தவன்; உண்மையாக நடக்கவே வளர்க்கப்பட்டவன். உலகத்தின் இன்பங்களை மிக, மிக நாணயமான வழிகளில் தேட கடமைப்பட்டவன்.

 

 

படித்ததில் பிடித்தது - 2வாழ்க்கையில் இரண்டு குறிக்கோள்கள் இருக்கவேண்டும். விரும்பியதை அடைவது; அடைந்ததை அனுபவிப்பது. பெரும் புத்திசாலிகளால் மட்டுமே இரண்டாவது குறிக்கோளை அடையமுடியும்.
--லோகம் பி. ஸ்மித்

ஜெயிக்கறதுக்குப் பேர் காதல் இல்லை. மதிக்கறதுக்குப் பேர் தான் காதல்.
--பாலகுமாரன்

நமக்கு நன்றாகத் தெரிந்த விஷயங்களில் தான் அதிகமாகக் கவனம் செலுத்த வேண்டும்
--ஆர்தர் ஸ்பியர்


ஒன்றைச் செய்ய விரும்பினால் வழியைக் கண்டறிகிறாய். செய்யாமல் இருக்க விரும்பினால் காரணங்களைக் கண்டுபிடிக்கிறாய்.தோற்றுவிடுவேனோ என்று ஒருவன் தயங்கிக் கொண்டிருக்கும் போதே, நிறைய தோல்விகள் கண்ட ஒருவன் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறான்.
--ஹென்றி. சி. லிங்க்.

முயற்சி செய்யும் வரை உங்களால் என்ன முடியும் என்பது உங்களுக்குத் தெரியாது.
--ஹென்றி ஜேம்ஸ்
தோல்வி என்பது மேலும் புத்திசாலித்தனமாக நம் வேலையைத் துவங்குவதற்கான மற்றொரு வாய்ப்பு.
--ஹென்றி ஃபோர்டு

தப்பு செய்யாதவர்கள் என்பவர்கள்
எதையுமே புதிதாக செய்ய முயற்சிக்காதவர்கள்.


முதலில் கீழ்படியக் கற்றுக்கொள்.
கட்டளையிடும் பதவி தானே வரும்!
முதலில் வேலைக்காரனாயிருந்து பழகு.
எஜமானனாக நீ தகுதி பெறுவாய்!
--சுவாமி விவேகானந்தர்

நடக்குமோ நடக்காதோ
நோக்கம் உயர்வானதாய் இருக்கவேண்டும்பொறுமையாக இருந்தால்
தண்ணீரைக் கூட
சல்லடையில் அள்ளலாம்.
ஆனால் அது உறையும் வரை
காத்திருக்க வேண்டும்!

எவரைப்போல இருக்கவும் முயலாதே..
எவரையும் பின்பற்றாதே..
அப்படிச் செய்தால் உன் இருப்பு போலியாகும்.
அது தற்கொலையை விட மோசமானது.
நீ நீயாக இரு!
அப்போதுதான் நீ ஆதாரப் பூர்வமானவராக பொறுப்புள்ளவராக
உண்மையாக இருக்க முடியும்!
--ஓஷோ


அமைதி இல்லாதவனுக்கு இன்பம் இல்லை.
--கீதை

முழுக்க முழுக்க சர்க்கதையாக
இருந்து விடாதே.
உலகம் உன்னை விழுங்கிவிடும்!
முழுக்க முழுக்க எட்டிக்காயாக
இருந்து விடாதே.
உலகம் உன்னை உமிழ்ந்துவிடும்!
--பாரசீகப் பழமொழிவெற்றி என்பது முடிவல்ல.
அது ஒரு தொடர் பயணம்!


Wednesday, January 4, 2012

Let us know : தெரிந்து கொள்வோம்இரு கண்களுக்கு நடுவில் நெற்றிப் பொட்டில் அவ்வப்போது விரல்களால் அழுத்துவதால் நமக்கு நினைவாற்றல் அதிகரிக்கும். மறந்து போன விஷயங்களை ஞாபகத்துக்கு கொண்டுவர இது உதவும். இந்த இடத்தில்தான் நினைவாற்றலுக்கான அக்குப் புள்ளிகள் உள்ளன. இதனால்தான் மறந்துபோன விஷயங்களை நினைவுக்குக் கொண்டுவர நெற்றியில் விரல் வைத்து தட்டுகிறார்கள். இது முன்னோர்கள் வழியாக நமக்கும் வந்தது.

வலது கைப்பழக்கம் உள்ளவர் என்றால் சாப்பிடும்போது வாயின் வலது புறத்தில்தான் உணவை மென்று சுவைத்துச் சாப்பிடுவார்கள். அதே சமயம் இடதுகைப் பழக்கம் உள்ளவர்கள் சாப்பிடும்போது வாயின் இடது புறத்தை உபயோகித்து உணவை ருசிப்பது வழக்கம்.

வெங்காயம் உரிக்கும்போது நமக்கு கண்ணீர் வரும். காரணம் அதில் உள்ள அமிலத்தன்மை. வெங்காயத்தினை உரிக்கும்போது அதில் உள்ள அமிலம் வெளிப்பட்டு காற்றில் கரைந்து உரிப்பவர் மற்றும் அருகில் இருப்பவர் கண்களில் இருந்து கண்ணீரை வரவழைத்து விடுகிறது. வெங்காயம் உரிக்கும்போது சூயிங்கம் மென்றால் கண்களில் இருந்து கண்ணீர் வெளிவராது.

உங்கள் நாக்கு இளம் சிவப்பு நிறத்தில் இருந்தால் உங்கள் நாக்கு பாக்டீரியா தொல்லையில்லாமல் சுத்தமாக இருக்கிறது என்று அர்த்தம். வெண்மை நிறத்தில் இருந்தால் பாக்டீரியா பாதிப்பு உள்ளது என்று பொருள்.

வியப்பால் அவள் விழி விரிந்தது என்று கவிஞர்கள் கவிதை புனைவார்கள். விஞ்ஞான ரீதியில் இது உண்மை. அதாவது ஒரு மனிதன் மகிழ்ச்சியான ஒன்றை அல்லது ஆச்சர்யம் தரும் ஒன்றைப் பார்க்கும்போது அவனது கருவிழி 45 விழுக்காடு விரிவடைகிறது என்கின்றனர் விஞ்ஞானிகள்.

கடலில் கிடைக்கும் சங்கை எடுத்து காதில் வைத்துக் கேட்டால் அதில் இருந்து அலை ஓசை சத்தம் வருவதுபோல கேட்கும். அதனை சிலர் கடல் அலையின் ஓசை என்று நினைப்பார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. காதுகளில் உள்ள ரத்தக் குழாயில் ரத்தம் பாய்ந்து செல்லும் சத்தம்தான் சங்கில் எதிரொலித்து நமக்கு கடலலை ஓசையாகக் கேட்கிறது.

கேரள மாநிலம் நீலாம்பூர் என்னும் காடுகளில் ஆதிவாசி மக்களின் சில பிரிவினரில் வினோதமான பழக்கம் நிலவுகிறது. இவர்கள் பிறக்கும் குழந்தை களுக்கு உடனடியாக பெயர் வைத்துவிடுவதில்லை. 15 வருடங்கள் ஆன பிறகே பெயர் சூட்டுகிறார்கள். அதுவரை தங்களது குழந்தைகளை மோளே (மகள்), மோனே (மகன்) என்று மலையாளத்தில் அழைக்கி றார்கள். 15 வயதாகும்போது அந்தக் குழந்தையின் தந்தையின் கனவில் கடவுள் தோன்றி `இந்தப் பெயரை உன் குழந்தைக்கு வை' என்று சொல்வாராம். அதன் பிறகே பெயர் சூட்டும் படலம் நடக்கும்.

ஆயிரக்கணக்கான சிட்டுக்குருவிகளை அறிவியல் ரீதியில் ஆராய்ச்சி செய்ததில் அவைகள் அனைத்தும் கசக்கும் சுபாவமுடைய வேப்பமரத்து இலை-குச்சிகளால் நேர்த்தியாக கட்டியிருப்பது கண்டறியப்பட்டது. மகத்தான மருத்துவ குணம் கொண்ட வேப்பிலையின் கசப்பான நெடிக்கு முட்டைகளையோ, குஞ்சுகளையோ வைரஸ் கிருமிகள் நெருங்குவது கிடையாது. ஆகவேதான் சிட்டுக்குருவிகள் வேப்பிலையால் கூடுகளை கட்டுகின்றன.

நீரிலும் நிலத்திலும் வாழும் இயல்புடைய தவளைகள் தமது கண்களால் கேட்கவும் செய்கின்றன. தவளைகளின் கண்களே காதுகளாகவும் இயங்குகிறது. தவளைகளுக்கு அதனுடைய கண்களுக்குப் பின்புறம் மூளையிலிருந்து வரும் நுண்ணிய நரம்பு அமைந்துள்ளது. அதன் காதுகளின் பணியிணைச்செய்கிறது.

கொடிய விஷத்தைக் கொண்ட தேள்கள் சேர்ந்தாற்போல் ஆறு மாதம் கூட உணவு உண்ணாமலே வாழக் கூடிய வல்லமை பெற்றது. விலங்கியல் ஆராய்ச்சியின் போது ஒரு தேள் 420 நாட்கள் எந்த வித ஆகாரமும் இல்லாமல் வாழ்ந்து சாதனை புரிந்தது.

கண்கவர் நீலகிரி மலைக் காடுகளில் ஒரு வகை பச்சோந்தி வாழ்கிறது. இதனுடைய உடல் நீளம் 5 செ.மீட்டர் தான். இதில் ஒரு வியப்பான செய்தி என்னவென்றால், இதன் நாக்கின் நீளம் 1.25 மீட்டர். இதன் நாக்கு எப்போதும் சுருட்டிய நிலையிலேயே இருக்கும். இது ஒரு மரக்கிளையில் ஒய்யாரமாக உட்கார்ந்தபடியே தனது நீண்ட நாக்கினை நீட்டி மற்ற கிளைகளில் உள்ள புழு, பூச்சிகளை அதில் ஒட்ட வைத்து தின்றுவிடும்.

முதன் முதலில் நீர்மூழ்கி கப்பலுக்கான வரைபடத்தை உருவாக்கியவர் வில்லியம் போர்னே என்னும் இங்கிலாந்துக்காரர். இவர், 1578-ம் ஆண்டு நீர்மூழ்கி கப்பலுக்கான வரைபடத்தை வரைந்தார். எனினும் கார்னிலியூஸ் வான் டிரெப்பல் என்னும் நெதர்லாந்து நாட்டுக் காரர் 1620-ம் ஆண்டு முறையான நீர்மூழ்கிக் கப்பலை வடிவமைத்தவர். நீரில் மூழ்கக் கூடிய ஒரு படகைத் தயாரித்த அவர் அதில் பிராண வாயு கிடைப்பதற்காக நீண்ட குழாயை இணைத்திருந்தார். நீருக்குள் மூழ்கியிருப்பவர் துடுப்பு மூலம் படகை இயக்கவேண்டும். 12 படகோட்டிகளுடன் தான் வடிவமைத்த நீர்மூழ்கிக் கப்பலை அவர் லண்டன் தேம்ஸ் நதியில் இயக்கிக் காட்டினார். 3 மணி நேரம் இந்தக் கப்பல் நீருக்கடியில் இருந்தது.

ராணுவத்திற்கான நீர்மூழ்கிக் கப்பலை 1776-ம் ஆண்டு டேவிட் புஷ்னல் என்னும் அமெரிக்கர் வடிவமைத்தார். எனினும் சகல வசதிகளுடனும் கூடிய முதல் நீர்மூழ்கிக் கப்பல் ஜான் பி.ஹாலண்ட் மற்றும் சைமன் லேக் என்னும் இருவர் 1890-ம் ஆண்டு ஒரே நேரத்தில் தயாரித்தனர். ஜானின் நீர்மூழ்கிக் கப்பலின் டிசைனை அமெரிக்காவும் சைமன் லேக்கின் வடிவமைத்ததை ரஷியா-ஜப்பான் நாடுகளும் ஏற்றுக்கொண்டு தயாரிக்க ஆரம்பித்தன.

ஒரு மனிதன் தினமும் சராசரியாக ஒரு மணி நேரம் 6 நிமிடங்களை பயணத்தில் கழிக்கிறான். வருடத்திற்கு ஒவ்வொருவரும் சராசரியாக 12 ஆயிரம் கிலோ மீட்டர்கள் பயணம் செய்கிறார்கள்.உலக அளவில் 53 சதவீதம் பேர் கார்களிலும், 26 சதவீதம் பேர் பஸ்சிலும், 9 சதவீதம் பேர் ரெயிலிலும் இன்னொரு 9 சதவீதம் பேர் விமானங்களிலும் பயணிக்கிறார்கள். சைக்கிள் பயணம் வெறும் 3 சதவீதம்தான். 2050-ம் ஆண்டு அதிகவேக வாகனங்களின் எண்ணிக்கை பல்கிப் பெருகி விடும் என்பதால், அப்போது ஒரு நாளில் ஒருவர் பயணம் செய்யும் நேரம் 12 நிமிடங்களாகக் குறைந்து விடுமாம். அப்போது கார்களில் பயணம் செய்வோர் 35 சதவீதம் பேரும், பஸ்சில் 20 சதவீதம் பேரும் அதிகவேக வாகனங்களில் 41 சதவீதம் பேரும் ரெயிலில் 4 சதவீதம் பேரும் பயணம் செய்வார்கள் என்று மதிப்பிட்டிருக்கிறார்கள்.

உலகின் முதல் போக்குவரத்து சிக்னல் 1890-ம் ஆண்டு லண்டன் நகரில் பயன் படுத்தப் பட்டது. இதில் ஒரு ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் அப்போது பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருளில் இயங்கும் வாகனங்கள் லண்டனில் எதுவும் கிடையாது. குதிரைகள் இழுத்துச் செல்லும் பஸ்கள் மட்டுமே இயங்கின. அமெரிக்காவில் 1890ம் ஆண்டு இறுதி வாக்கில் தான் கார்கள் அறிமுகமாயின. முதல் தானியங்கி போக்குவரத்து சிக்னல் ஓகியோ மாகாணத்தில் உள்ள கிளீவ்லாண்ட் நகரில் 1920-ம் ஆண்டு பொருத்தப்பட்டது.

வங்கி முறையிலான கடன் கொடுக்கும் பழக்கம் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஏற்பட்டு விட்டது. பணக் கடன் வழங்கியது, கடனை அடைத்தது போன்றதற்கான ஆதார ரசீதுகள் 14-ம் நூற்றாண்டில் ஏற்பட்டதாகும். காகிதப் பணம் கடன் தருவது 17-ம் நூற்றாண்டில் வேகமாக பரவியது. தானியங்கி பணம் பட்டுவாடா செய்யும் எந்திரங்களில் பணம் எடுப்பதற்கு அட்டை வழங்குவது நமது நாட்டில் 2000-ம் ஆண்டுக்குப் பின்னர்தான் வேகமாக வளர்ச்சி கண்டது. எனினும் அமெரிக்காவில் 1951-ம் ஆண்டிலேயே பணம் எடுக்கும் அட்டைகள் புழக்கத்திற்கு வந்து விட்டன. டைனர்ஸ் கிளப் தனது உணவக வாடிக்கையாளர்கள் 200 பேருக்கு நிïயார்க் நகரில் உள்ள தங்களின் 27 உணவகங்களில் எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளும் கிரடிட் கார்டுகளை வழங்கியது. காந்த பட்டைகளுடன் கூடிய கிரடிட் கார்டு 1970-ம் ஆண்டு புழக்கத்திற்கு வந்தது.

வாலாட்டிக் குருவி எப்போதும் ஏன் வாலை ஆட்டிக் கொண்டே இருக்கிறது தெரியுமா?...
அது சுவாச உறுப்பாக பெற்றிருப்பது வாலைத்தான். எனவேதான் சுவாசிப்பதற்காக தனது வாலை இடைவிடாது ஆட்டிக் கொண்டே இருக்கிறது.
தமிழ் தாயகத்திற்காக
Engr. சுல்தான்