Friday, September 4, 2009

உங்கள் பக்கம்



கிளி செய்திகள்!

* கிளிகளில் 500 வகையான இனங்கள் உண்டு.
* இவை சராசரியாக 30 ஆண்டுகள் வரை உயிர் வாழும்.
* அமெரிக்காவில் உள்ள கிளிகள் மூன்றடி வரை நீளம் இருக்கும்.
* ஆஸ்திரேலியாவில் வெள்ளைக் கிளிகள் உண்டு.
* நீல வண்ணக் கிளியும் அமெரிக்காவில் உள்ளது.
* முட்டைகளை ஆண், பெண் கிளிகள் மாறி மாறி அடைக்காக்கும்.

நெ.இராமன், சென்னை-74.


நாடுகளின் தேசியப் பறவைகள்!

* தென்னாப்பிரிக்கா நாட்டு தேசியப் பறவை நீலக் கொக்கு ஆகும்.
* ஜெர்மனி நாட்டு தேசியப் பறவை வெள்ளை நாரை.
* ஆஸ்திரேலியாவின் தேசியப் பறவை ஈமு.
* பொலிவியா நாட்டின் தேசியப் பறவை ஆன்டியன் கான்டர்.
* ஹங்கேரி நாட்டின் தேசியப் பறவை கிரேட் பஸ்டர்டு. இது விரைவாக பறக்கும் தன்மை கொண்டது.

த.ஜெயபிரகாஷ், கலவை.


வேலூர் கோட்டை!

* இந்தியாவில் அணுசக்தி கமிஷன் 1948 ஆகஸ்ட் 10-ம் தேதி நிறுவப்பட்டது.
* வேலூர் கோட்டை 16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.
* "மில்லினியம் மகாத்மா விருது' கேரளா முன்னாள் முதல்வர் கருணாகரனுக்கு வழங்கப்பட்டது.
* தமிழகத்தில் கரும்பு ஆராய்ச்சி நிலையம் கடலூர் மாவட்டத்தில் உள்ள செம்மண்டலத்தில் உள்ளது.
* இந்திய திரைப்படத் தந்தை என்று போற்றப்படுபவர் தாதா சாகிப் பால்கே. சினிமா துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டுதோறும் இவரது பெயரில் விருது வழங்கப்படுகிறது.

செயின்ட் தாமஸ் மனோகரன், நெல்லித்தோப்பு.


பிரபல தலைவர்களின் சமாதிகள்!

* காந்தியடிகளின் சமாதி ராஜ்காட்டில் உள்ளது.
* நேருவின் சமாதி சாந்திபவனில் உள்ளது.
* இந்திராவின் சமாதி சக்திஸ்தல்லில் உள்ளது.
* ராஜீவ்காந்தியின் சமாதி வீர்பூமியில் உள்ளது.
* லால்பகதூர் சாஸ்திரியின் சமாதி ராஜ்காட்டில் உள்ளது.
* ஜகஜீவன் ராம் சமாதி சமதா ஸ்தல்லில் உள்ளது.
கே.என்.பாலகிருஷ்ணன், மடிப்பாக்கம்.


சீனாவின் தேசிய விளையாட்டு!

* வயிறும், ஜீரண உறுப்பும் இல்லாத உயிரினம் ஈசல்.
* பெரிய பலூன்களில் நிரப்பப்படும் வாயு ஹீலியம்.
* டூத் பிரஷ் 1948-ம் ஆண்டு சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டது.
* நெப்போலியன் தோற்றுப் போன வாட்டர்லூ போர் 1815-ம் ஆண்டு நடைபெற்றது.
* சீனாவின் தேசிய விளையாட்டு பிங் பாங்.

டி.ஜெய்சிங், கோயமுத்தூர்.


கல்லீரலின் எடை!

* ஒரு மணி நேரத்தில் 100 காலன் காற்றை நம் நுரையீரல்கள் சுவாசிக்கின்றன. ஓர் ஆண்டில் 8,67,000 காலன் காற்றை நம் நுரையீரல்கள் சுவாசிக்கின்றன.
* மனித உடலின் எடையில் ஆக்ஸிஜன் 65 சதவீதம் உள்ளது.
* இரைப் பையின் எடை 4 அவுன்ஸ்.
* நமது கல்லீரலின் எடை 50 முதல் 60 அவுன்ஸ் வரை உள்ளது.
* மனித உடம்பின் எலும்புகளில் கால்சியம் பாஸ்பேட்தான் அதிகம் உள்ளது.
* மனித உடலில் நீரைச் சமநிலைப் படுத்தும் உறுப்பு சிறுநீரகங்கள்தான்.

இரா.பாலகிருஷ்ணன், வரக்கால்பட்டு.


தீப்பெட்டி சரித்திரம்!

தீப்பெட்டியை முதன்முதலில் கண்டுபிடித்தவர் ஜான்வாக்கர் என்ற ஆங்கிலேயர். இவர் துப்பாக்கியில் வேகமாக தீப்பற்ற வைக்க பொட்டாஷையும், ஆன்டிமணியையும் ஒரு குச்சியில் வைக்க முயன்றார். அப்படி முயன்றதே தீக்குச்சி கண்டுபிடிக்கக் காரணமாக அமைந்தது. ஆனால், இவர் கண்டுபிடித்த தீக்குச்சி எதில் உரசினாலும் தீப்பிடித்தது. அந்தத் தன்மையை மாற்றி தீப்பெட்டியின் ஓரங்களில் பூசப்பட்டு இருக்கும் பாஸ்பரஸில் உரசினால் மட்டுமே தீப்பிடிக்கும் பாதுகாப்பான முறையைக் கண்டுபிடித்த பெருமை ஸ்வீடனைச் சேர்ந்த ஜான் என்பவரையும், காரல் லன்டஸ்ட்ராம் என்பவரையுமே சாரும். இவர்கள்தான் இன்றைய "சேப்டி மேட்ச்' எனப்படும் தீப்பெட்டியை உருவாக்கியவர்கள். இவர்கள் இதை 1852-ம் ஆண்டு கண்டுபிடித்தனர்.

என்.ஜரினாபானு, திருப்பட்டினம்.


இந்தியாவின் ஸ்காட்லாந்து!

* இந்தியாவில் மொத்தம் 543 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன.
* தாய்லாந்து மொழிக்கு எழுத்துகள் இல்லை.
* ஒரே ஒரு ரயில் நிலையம், ஒரே ஒரு விமான நிலையம் உள்ள இந்திய மாநிலம் நாகாலாந்து.
* ரைட் சகோதரர்களால் கண்டுபிடிக்கப்பட்ட விமானம் முதன்முதலில் 1903 டிசம்பர் 17-ம் தேதி வானில் பறந்தது.
* இந்தியாவின் ஸ்காட்லாந்து என குடகு மலை அழைக்கப்படுகிறது.

இரா.சு.பிரகாசம், சோமரசம்பேட்டை.

விடுகதைகள்



1. பல அடுக்கு மாளிகையில் இனிப்பு விருந்து. அது என்ன?
2. உடல் கொண்டு குத்திடுவான்; உதிரிகளை ஒன்றிணைப்பான். அது என்ன?
3. ஆள் இறங்காத குளத்தில் ஆடி இறங்கி கூத்தாடுது. அது என்ன?
4. பேசுவான் நடக்கமாட்டான்; பாடுவான் ஆடமாட்டான். அவன் யார்?
5. தலை இல்லாதவன் தலையை சுமப்பவன். அவன் யார்?
6. காலடியில் சுருண்டிருப்பாள்; கணீர் என்று குரலிசைப்பாள். அவள் யார்?
7. கூட்டுச் சேர்ந்து கோட்டைக் கட்டும்; மாட்டுவோரை மடக்கித் தாக்கும். அது என்ன?
8. எண்ணெய் வேண்டா விளக்கு; எடுப்பான் கை விளக்கு. அது என்ன?
9. வித்தில்லாமல் விளையும்; வெட்டாமல் சாயும். அது என்ன?
10. அம்மா பின்னிய நூலை அவிழ்த்தால் போச்சு. அது என்ன?
11. தலையை அழுத்தினால் வாயைத் திறக்கும். அது என்ன?
12. கடமை வீரன் காக்கிச் சட்டை அணிய மாட்டான். அவன் யார்?
13. மாண்டவனுக்கு மந்திரம் போட்டால் மீண்டும் உயிர் வரும். அவன் யார்?
14. குட்டை மரத்தில் குண்டன் தொங்குகிறான். அவன் யார்?
15. விரல் உண்டு; நகம் இல்லை. கை உண்டு; தசை இல்லை. அது என்ன?

விடைகள்:

1.தேன்
2.ஊசி
3.மத்து
4.வானொலிப் பெட்டி
5.தலையணை
6.மெட்டி
7.தேனீ
8.மெழுகுவர்த்தி
9.வாழை
10.இடியாப்பம்
11.கிளிப்
12.நாய்
13.அடுப்புக்கரி
14.தக்காளி
15.கையுறை

கடி



""சின்ன வயசுலயே என் பையன் ரொம்ப ரோஷக்காரனா இருக்கான்.''
""எப்படி?''
""மார்க் குறைவா வாங்கியிருந்தான்னு இனிமே என் முகத்துல முழிக்காதேன்னு திட்டினேன். அதுலேர்ந்து காலையில அவனை எழுப்பினா, "நீ தூரமா போ, நான் எழுந்துக்கிறேன்'னு கறாரா சொல்றானே!''


வி.ரேவதி, தஞ்சாவூர்.

-------------------------------------------------------------------

""நீங்க எழுதுற ஜோக் ஒவ்வொண்ணும் சிந்திக்கிற மாதிரி இருக்கும்.''
""எப்படி?''
""இதுக்கு முன்னாடி இந்த ஜோக்கை எங்கேயோ படிச்ச மாதிரி இருக்குன்னு!''

பி.பாலாஜி கணேஷ், 240, வேளாளர் தெரு, கோவிலாம்பூண்டி, சிதம்பரம் தாலூகா-608 002.

-------------------------------------------------------------------

""எதுக்காக உனக்கு இருநூறு ரூபா கொடுத்தாங்க?''
""நான் பாட்டுப் பாடுனதுக்கு.''
""அப்புறம் எதுக்கு இந்த ஐநூறு ரூபா கொடுத்தாங்க?''
""பாட்டை நிறுத்துனதுக்கு.''

அ.பேச்சியப்பன், ராஜபாளையம்.


-------------------------------------------------------------------

""மாத்திரையை எடுத்துக்கிட்டு சுடுகாட்டுப் பக்கம் ஏன்டா போறே?''
""ஆவி பிடிக்கிற மாத்திரைன்னு சொன்னாங்க, அதான்!''

பி.தர்சினி, 76, ஜெ.வி. கீழத் தெரு, குடந்தை-1.

-------------------------------------------------------------------

""தத்ரூபமா படம் வரைஞ்சும் மன்னரு பரிசு தரலையா ஏன்?''
""அதுவா... போர்க் களத்துல இருந்து மன்னர் ஓடற மாதிரியல்ல படம் வரைஞ்சிருந்தேன்.''

ஜி.அப்துல்பாரி, பழனி.

-------------------------------------------------------------------

""டானிக் சாப்பிடும் போது ஏன் ரூம் கதவை சாத்துற?''
""டாக்டர்தான் அரை மூடி டானிக் சாப்பிடச் சொன்னாரு!''

சி.விஜயா, கிருஷ்ணகிரி.