Monday, July 1, 2013

மழைக்காலத்தில் தலை முடியைப் பேணும் வழிகள்

மழைக்காலத்தில் தலை முடியைப் பேணும் வழிகள்










பொதுவாக மழைக்காலத்தில் தலை முடிக்கு அதிக பராமரிப்பு அவசியமாகிறது.
ஏன் எனில் மழை காரணமாக தலை முடி ஈரமாகவும், அடிக்கடி அழுக்காகவும் ஆகலாம். எனவே, மழைக்காலத்தில் தலை முடிக்கு சில சிறப்பு கவனங்களை செய்ய வேண்டும்.
மழைக் காலங்களுக்கு என இருக்கும் சில சிறப்பு பேஸ்டுகளை வாங்கி தலைக்கு போடலாம்.
இது ஒத்துக் கொள்ளாது என்று நினைப்பவர்களுக்கு சில இயற்கை முறைகள் கொடுக்கப்பட்டுள்ன.
உலர்ந்த தலை முடி இருப்பவர்கள் வாரத்தில் ஒரு நாள் தலைக்குக் குளித்த பிறகு தயிரை தேய்த்துக் முடியைக் கழுவி விடலாம்.
பழுத்த வாழைப் பழத்தை நன்கு அரைத்து, அதனை தலையில் தடவினால், மழைக் காரணமாக முடி உலர்ந்து கொட்டுவது குறையும்.
எண்ணெய் பசை உள்ள தலைமுடிக்கு, எலுமிச்சை நல்லது. தலைக்கு குளித்த பிறகு, ஒரு பெரிய ஜக்கில் தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் எலுமிச்சை சாறு சேர்த்து, அதில் தலை முடியை ஊற விட்டு அலசவும்.
முட்டையின் வெள்ளைக் கரு எண்ணெய் பசை உள்ள தலை முடிக்கு ஏற்றது. தலைக்கு குளித்த பிறகு வெள்ளைக் கருவை தலை முதல் முடியின் நுனி வரை தடவி சில நிமிடங்கள் ஊறுவிட்டு அலசினால் நன்றாக இருக்கும்.
சாதாரண தலை முடிக்கு, எலுமிச்சை சாறு மற்றும் தயிர் கலந்த தண்ணீரில் தலை முடியை ஊறவிட்டு அலசலாம்.

இதய நோய்: வருமுன் காப்போம்

இதய நோய்: வருமுன் காப்போம்

உடல் நலத்தையும் மன நலத்தையும் காத்தால்தான் மகிழ்ச்சியான, ஆரோக்கியமான வாழ்க்கை வாழ முடியும். உடல் நலம் காக்க மருத்துவப் பரிசோதனை அவசியம்.
பொக்கிஷமான நம் உடல் ஆரோக்கியத்தை அடிக்கடி பரிசோதனை செய்து பார்த்துக் கொள்கிறோம். பல எளிய பரிசோதனைகள் மூலம் நம் தினசரி வாழ்க்கை பாதிக்கப்படாமல் பல மருத்துவ ரீதியான ஆய்வு முடிவுகளைத் தெரிந்து கொள்கிறோம்.
சில நுணுக்கமான முக்கியமான இதயம் போன்ற உறுப்புகளுக்கான பரிசோதனைகளை செய்யச் சொல்லி மருத்துவர் கூறினாலும், மருத்துவமனையில் தங்க வேண்டியிருக்குமோ, அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டி வருமோ என்ற பயத்தில் ஆஞ்சியோகிராம் போன்ற பரிசோதனைகளைச் செய்யாமல் தவிர்த்து விடுகிறோம்.
மருத்துவரிடமும் தாற்காலிக மருத்துவப் பரிந்துரை வாங்கிக் கொண்டு நலம் அடைந்து விட்டாலே திருப்தியடைகிறோம். உண்மை நிலை தெரியாமலே நாமே நம் ஆரோக்கியத்தை மேலும் கெடுத்துக் கொள்கிறோம். மருத்துவர் முதலில் கூறியபடி உடனே பரிசோதித்திருந்தால் பிரச்னையை ஆரம்பத்திலேயே தவிர்க்கலாம். உதாரணமாக இதயத்தின் ரத்தக் குழாய்களில் படிந்திருக்கும் கொழுப்பினை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
1. ஊஹற்ற்ஹ் நர்ச்ற் ஊப்ஹந்ங்ள்--இதை ஆரம்ப காலத்தில் கண்டறிந்துவிட்டால் உணவுக் கட்டுப்பாடு மற்றும் வாழ்க்கை முறை மாற்றம் மூலம் சரி செய்து விடலாம். தொடர் மருத்துவ உதவிகூட தேவை இருக்காது.
2. ஙண்ஷ்ங்க் ஊப்ஹந்ங்ள் மற்றும் 3. இஹப்ஸ்ரீண்ச்ண்ங்க் நற்ங்ய்ர்ஸ்ரீண்ள்ற் அழ்ற்ங்ழ்ண்ங்ள் போன்ற பாதிப்புகளையும் ஆரம்ப நிலையில் அறுவைச் சிகிச்சை இல்லாமல் எளிதில் குணப்படுத்திவிடலாம். ஆனால் நாம் செய்வதில்லை.
இது போன்ற அறியாமையை நீக்கி நோயிலிருந்து உங்களை காக்க ஆக்ஸிமெட் மருத்துவமனை, "மூன்' தொலைக்காட்சியுடன் இணைந்து கேள்வி-பதில் நிகழ்ச்சியை நடத்துகிறது.
"மூன்' டிவியில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை காலை 11.00 - 12.00 மணி வரை ஆக்ஸிமெட் தலைமை மருத்துவர் டாக்டர் அயாஸ் அக்பர் இதயம் தொடர்பான உங்கள் சந்தேகங்களுக்கு வாரந்தோறும் பதிலளிக்கிறார். பார்த்துக் கேட்டு அனைவரும் பயனடையலாம்; இதய நலம் காக்கலாம்.