Wednesday, November 30, 2011

இவற்றைப் பார்த்து யாரும் பயப்பட வேண்டா...


நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களை கலைநயத்ததோடு வடிவமைத்து கொடுத்திருக்கிறார் கலைநயமிக்க ஒருவர்.

இவைகளை பார்ப்பதற்கு மிகவும் சுவாரஸ்யமாகவும், அழகாகவும், பயமுறுத்துவது போலவும் இருக்கிறது.



























இந்தப்படங்களை எனக்கு மின்னஞ்சலில்  அனுப்பி உதவிய 
நண்பருக்கு மிக்க நன்றி...

தங்கள் வருகைக்கும் நன்றி.

ஏய்... என்னஇது! தயவுசெய்து வாயை மூடுங்க.


ஏய்... என்னஇது! தயவுசெய்து வாயை மூடுங்க...



“என்கிட்டே வந்துட்டீங்கள்லே... இனி‌மே எதுக்கும் பயப்பட வேண்டாம்... ‌சொல்லுங்க... என்ன பிரச்சனை?”

“எனக்குத் தொடர்ந்து கொட்டாவி வந்துகிட்டே இருக்கு டாக்டர்...!” (ஏன்... மனோ பதிவை படிச்சாரா)

“அப்படியா...? வந்து இப்படி இந்த நாற்காலியிலே சாய்ஞ்சு உக்காருங்க.. பார்க்கலாம்..!”

“ஏன் டாக்டர்... மனிதன் மட்டும்தான் இப்படி கொட்டாவி விடறானா..?”

“அப்படி இல்லே... பறவைகள், மிருகங்கள், மீன்கள் கூட கொட்டாவி விடறதுண்டு..!”

“ஓ... அப்படியா..?”

“ஆனா ஒரு வித்தியாசம்..?”

“என்னது?”

“நாமெல்லாம் கொட்டாலி விட்டா... ஒண்ணு தூக்கம் வருது.... அல்லது விஷயம் ரொம்ப போர் அடிக்குதுன்னு அர்த்தம் பண்ணிக்கலாம். ஆனா மிருகங்கள் விஷயத்துலே அப்படி இல்லே..!”

“வேறே எப்படி?”
 
“‌அதற்கெல்லாம் வேறே வேறே காரணங்கள்... உதாரணத்துக்கு, ஒரு நீர் யானை கொட்டாவி விட்டா அது ஓர் எளிய சண்டைக்குத் தயாராகுது-ன்னு அர்த்தம்.!” (மாப்ள தமிழ்வாசி பிரகாஷ் கொட்டாவி விட்டா அதுக்கு அர்த்தமே வேற.... அட.. ‌நைட் டூயுட்டின்னு அர்த்தங்க...)

“ஆச்சரியமா இருக்கே..!”

“ஆச்சரியப்பட்டு ஏன் இவ்வளவு அகலமா வாயைத்திறக்கறீங்க.. மருந்து விட்டுட்டேன்.. மூடுங்க! ஏன்? மறுபடியும் கொட்டாவி வருதா..?”

“இப்ப நான் வாயைத் திறக்கறது கொட்டாவியினாலே இல்லே டாக்டர்...”

“வேறே எதனாலே?”

“உங்கக் கையிலே இருக்கிற, “பில்”லைப்பார்த்ததுனாலே..!”

கொட்டாவி என்பது தன்னியல்பாக வாயைப் பெரிதாகத் திறந்து மூச்சுக் காற்றை வாய் வழியாகவும் மூக்கு வழியாகவும் உள்ளிழுப்பதும், அதே வேளையில் செவிப்பறை விரிவடைவதும், பின்னர் நுரையீரலில் இருந்து பெருமூச்சாக வாய்வழியே காற்றை வெளிவிடுவிடுவதுமான செயலைக் குறிக்கும். இத்துடன் கைகால்களை நீட்டி மடக்குவதை சோம்பல் முறித்தல் என்பர்.

அலுப்பு , உளைச்சல், மிகுதியான பணிப்பளு, ஆர்வமின்மை, சோம்பல் ஆகியவற்றுடன் கொட்டாவியைத் தொடர்பு படுத்துகின்றனர். இது இடத்திற்கேற்றாற் போல் வெவ்வேறு பொருள் தரக்கூடிய சைகைக் குறிப்பாகவும் உள்ளது. கொட்டாவி ஒரு தொற்று வினையும் கூட. 

பின்வரும் கூற்றுகள் கொட்டாவியின் காரணங்களாகக் கருதப்படுவன. 

  • கொட்டாவியின் போது காற்று ஆழமாக உள்ளிழுக்கப்படுவதால் நுரையீரல் நுண்ணறைகள் சுருங்கி விடாமல் தவிர்க்கப்படுகின்றன.
  • நுரையீரல் நுண்ணறையிலுள்ள வளிக்கலங்கள் (வகை II) விரிவடைவதால் பரப்பியங்கி நீர்மம் ஒன்று வெளிப்படுகிறது.
    மூளை குளிர்வடைகிறது.
  •  நீர்மம் ஒன்று வெளிப்படுகிறது. 
  • மூளை குளிர்வடைகிறது.
    கூடுதல் எச்சரிக்கை உணர்வு நிலையிலிருந்து இயல்பு நிலைக்குத் திரும்புவதைத் தன்னையறியாமல் வெளிக்காட்டுதல்
  • குருதியில் கரிமவாயு-உயிர்வவாயு நிலைப்பாடு மாறுபடுதல்.
  • ஈடுபாடின்மையையைத் தெரிந்தோ தெரியாமலோ வெளிப்படுத்துதல்.
  • அயர்வு
  • அருகிலிருப்பவரது கொட்டாவியால் தமது செவியின் நடுவில் ஏற்படும் அழுத்த மாற்றத்தைச் சரிக்கட்டும் பொருட்டு
  • மூளைக்குப் போதிய அளவு குளுக்கோசு கிடைக்காததால்
கடைசியா ஒரு நகைச்சுவை


"தலைவரே! நீங்க இப்ப சொன்னது
நூத்துக்கு நூறு உண்மை...!''

''சரியான ஜால்ராய்யா நீ!
இப்ப நான் ஒண்ணுமே சொல்லலை...
கொட்டாவி தான் விட்டேன்...!''

வெல்லும் வரை தோல்வி


இப்படியெல்லாம் SMS வந்தா என்ன பண்றது...?


வெல்லும் வரை தோல்வி..!
சிரிக்கும் வரை கண்ணீர்...!
உதிரும் வரை பூக்கள்...!
மறையும் வரை நிலவு...!
மரணம் வரை நம் நட்பு...!

Friday, November 25, 2011

கவுண்டமணிXவிசய்



கவுண்டமணி vs விஐய்

November 3, 2011, 6:24 pm[views: 13177]     

கவுண்டமணி : உன் வேலாயுதம் படத்தோட கதைய சொல்றா....

விஜய் : அண்ணா எனக்கு ஒரு தங்கச்சினா அத சமுக விரோதிகள் கொன்னுடரங்கனா அதுக்காக அவங்களை பழி வாங்கறேன்னா...

கவுண்டமணி : டே தீக்குச்சி தலையா உன் திருப்பாச்சி கதை என்னடா....

விஜய் : அண்ணா அதுலயும் எனக்கு ஒரு தங்கச்சினா அத சமுக விரோதிகள் கொன்னுட கூடாதுன்னு அவங்களை பழி வாங்கறேன்னா...

கவுண்டமணி : இதுல என்னடா வித்தியாசம்....

விஜய் : சட்டை கலரை மாற்றி இருக்கேன்னா...

கவுண்டமணி : தெரியுண்டா உன்ன பத்தி...ஆமா இந்த சுறா படத்தோட கதையை சொல்றா...

விஜய் : மீனவ மக்களுக்காக வில்லனை எதிர்த்து போரடுரன்னா...

கவுண்டமணி : டேய் டாக்கால்டி மண்டையா... உன் குருவி படத்தோட கதை என்னடா....

விஜய் : கடப்பால அடிமையாய் இருக்கிற மக்களுக்காக வில்லனை எதிர்த்து போரடுரன்னா...

கவுண்டமணி : இதுல என்னடா வித்தியாசம்....

விஜய் : ??????

கவுண்டமணி : டே டப்பா தலையா உன் வில்லு படத்தோட கதை என்னடா....

விஜய் : என்னோட அப்பாவ தீவிரவாதிகள் கொன்னுடரங்கனா அதுக்காக அவங்களை பழி வாங்கறேன்னா...

கவுண்டமணி : டே அப்ப ஆதி படத்தோட கதை என்னடா....

விஜய் : என்னோட குடும்பத்தையே சமுக விரோதிகள் கொன்னுடரங்கனா அதுக்காக அவங்களை பழி வாங்கறேன்னா...

கவுண்டமணி : இதுல என்னடா வித்தியாசம்....

விஜய் : ஆதில தலைல வெத்தல எச்சி துப்பி இருப்பானுங்கனா...

கவுண்டமணி : டே அத ஓன் மூஞ்சில துப்பி இருக்கனும் டா....ஆமா நீ எல்லா படத்தலையும் பிச்சகாரனா இருந்துகிட்டு பணக்கார பொண்ண லவ் பண்ற

விஜய் : அண்ணா எந்த படத்தனா சொல்லுரிங்க? சிவகாசியா திருமலையா இல்ல வில்லுவானா?
குறிப்பு : விஐய் ரசிகர்களே!! கோபம் வேண்டாம்! இது சிரிக்க மட்டுமே....

yesterdaty jokes : நேற்றைய சிரிப்புகள்

சீரியல்
November 19, 2011, 1:09 pm[views: 2623]
ஏண்டி குழந்தை அழுதுட்டு இருக்குறதை கூட கண்டுக்காம டிவி சீரியல் பார்த்துட்டு இருக்க... மனைவி: சும்மா இருங்க, குழந்தையும் சீரியல் பார்த்துட்டுதான் அழுதுட்டு இருக்கு..!!!

டிரைவர் குடிகாரனா...?
November 8, 2011, 1:59 pm[views: 6477]
"உங்க டேபிள்ல இருந்த இந்த டானிக் ரொம்ப காரமா இருக்கு டாக்டர்..." "யோவ்... அது நான் சாப்பிடறதுக்காக வச்சிருக்கற ஊறுகாய்..!"

கவுண்டமணி vs விஐய்
November 3, 2011, 6:07 pm[views: 13177]
கவுண்டமணி : உன் வேலாயுதம் படத்தோட கதைய சொல்றா.... விஜய் : அண்ணா எனக்கு ஒரு தங்கச்சினா அத சமுக விரோதிகள் கொன்னுடரங்கனா அதுக்காக அவங்களை பழி வாங்கறேன்னா...

ஓடலாமா?
October 28, 2011, 8:10 pm[views: 9796]
அவன்: வா நானும் நீயும் ஓடிடலாம்.... அவள்: செருப்பு பிஞ்சிடும் அவன்: பரவால்ல.. கையில எடுத்துட்டு ஓடிடலாம்...

வெடி
October 25, 2011, 10:49 am[views: 10387]
”அண்ணே ... திபாவளிக்கு வெடிக்க ஒரு பத்து பதினஞ்சு ருபாய்க்கு எதாவது நல்ல வெடி கிடைக்குமா ?? ” அவர் முறைத்துக்கொண்டே, " பத்து பதினஞ்சு ருபாய்க்கு நல்ல வெடி எல்லாம் கிடைக்தாது ... 'வெடி' பட டி.வி.டி வேனுனா கிடைக்கும் ”

jokes : சிரிக்கக்கூடாதா?


லொள்ளு.....!

November 25, 2011, 5:24 pm[views: 305]     

டாக்டர் : தூக்கத்திலே நடக்கிற வியாதிக்கு மருந்து கொடுத்தேனே... இப்போ எப்படி இருக்கு?

நோயாளி: : பரவால்லே. குணமாயிட்டுது டாக்டர். இப்போ தூக்கத்துல நடக்கிறதில்லே; ஸ்கூட்டரை எடுத்து ஒரு ரவுண்டு போயிட்டு வந்துடறேன்!



நிருபர்: திருமணத்திற்க்கு பிறகு படங்களில் நடிப்பீர்களா?

நடிகை : என்னுடைய கனவர் சம்மதித்தால் நடிப்பேன்.

நிருபர் : சம்மதிக்கலனா?

நடிகை : டைவர்ஸ் பன்னிட்டு நடிப்பேன்

கொலைவெறியுடன் ஒரு பதிவு.


என்ன கொடுமை இது... கொலைவெறியுடன் ஒரு பதிவு...


ரேகை சாஸ்திரி : ரொம்ப படிச்ச, மரியாதையான, அடங்கி நடப்பவளான பெண் தான் உனக்கு மனைவியா வருவா சார்..!

மற்றவர் : ஐயையோ..! அப்படியானால் இப்போதிருக்கிற மனைவிளை என்ன செய்வது..?


பிச்சைக்காரன் 1 : டாக்டர், இனிமேல் என்னை ராத்திரியிலே கண்விழிக்கக் கூடாதுன்னு சொல்லிட்டார்..!

பிச்சைக்காரன் 2 : அதுக்காகவா, கவலைப்படறியா... என்ன...!

பிச்சைக்காரன் 1 : ஆமாம்!. எனக்குச் சாப்பாட்டுக்குப் பிரச்சினையில்லே, ஆனா “ராப்பிச்சை”ன்கிற பட்டம் பறி‌போயிடுமே, அதான் எனக்கு ரொம்ப கவலையாய் இருக்கு...!



நபர் 1 : கிளி ‌ஜோசியம் பார்க்கிற பெண்ணைக் கல்யாணம் பண்ணிக் கொண்டாயே!.. வாழ்க்கை எப்படி இருக்கு..?

நபர் 2 : அதையேன் கேட்கிறே, ‌சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லி என்னை ரொம்பவும் வெறுப்பேத்துகிறாள்..!

நபர் 1 : ???????????!!!!!!!!!!!!



ரமேஷ் : உங்களுக்கு வாங்கின கடனைத் திருப்பிக் கொடுக்கிற பழக்கமே இல்லையாமே...! உண்மையா?

சுரேஷ் : நீங்க மத்தவங்க சொல்றதையெல்லாம் நம்பாதீங்க. நீங்க இப்ப எனக்கு 1000 ரூபாய் கடன் கொடுங்க அப்புறம் பாருங்க, என்னோட நாணயத்தை..!

ரமேஷ் : ...!!!!!!!????????



மனைவி : என்னங்க, நம்ம பையன் புல்லரிக்கிற மாதிரி ஒரு காரியம் பண்ணிட்டு வந்திருக்கான்...!

கணவன் : வெரிகுட்..! என் பையனாச்சே, அப்படி என்ன காரியம் பண்ணியிருக்கான்..?

மனைவி : புல் தரையிலே விழுந்து புரண்டுட்டு வந்திருக்கான், இப்போ அவனோ் உடம்பு முழுக்க அரிக்குதாம்.
 

வந்தவர் : டாக்டர், போன மாதம் நீங்க எனக்கு ஆபரேஷன் செய்ததுக்கப்புறம் என்னோட வாழ்க்கையே மாறிப்பேச்சு தெரியுமா..!

டாக்டர் : வெரிகுட்..! என்னோட திறமை அப்படி..!

வந்தவர் : மண்ணாங்கட்டி, ஆபரேஷன் செய்து என்னை சாடிச்சது ஞாபகம் இல்லியா..? இப்ப நான் ஆவியா வந்திருக்கேன்..!

 
ஒருத்தி : என்னைப் பெண்பார்க்க வந்தவர்களுக்கு நானே அல்வாவும், கேசரியும் செய்து வெச்சது ரொம்பவும், நல்லதாகப் போச்சுடி..!

மற்றவள் : ஏனடி, அப்படிச் சொல்றே..!

ஒருத்தி : கல்யாணத்துக்கப்புறம் நான் சமைக்க முயற்சி பண்ணக் கூடாதுன்னு மாப்பிள்ளை வீட்டுக்காரங்க என்கிட்டே சத்தியம் வாங்கிட்டாங்..!

ஏன் இந்த கொலைவெறி என்று
மனோ கோவப்படுற மாதிரி தெரியுது...
கோவம் வேண்டாம்... கூல்...

Saturday, November 19, 2011

சேதி தெரியுமா?


 சேதி தெரியுமா?


2.    உலகின் மிகப்பெரிய வங்கியின் பெயர் என்ன? எந்த நாட்டில் உள்ளது? இந்தியாவில் அதன் முதல் கிளை எந்த நகரத்தில் தொடங்கப்பட்டுள்ளது?
3.    சாம்பியா நாட்டின் புதிய அதிபர் யார்?
4.    இந்திய ராணுவப் படைப்பிரிவில் முதன்முதலாக ஜவான் பதவி வகிக்கும் பெண்மணியின் பெயர் என்ன?
5.    அண்மையில் சோதனை செய்து பார்க்கப்பட்ட அணு ஆயுதங்களைச் சுமந்து சென்று குறிப்பிட்ட இலக்கைத் தாக்கும் ஏவுகணையின் பெயரையும், 2000 கி. மீட்டர் தூரம் பாய்ந்து சென்று தாக்கும் ஏவுகணையின் பெயரையும் குறிப்பிடுக?
6.    பெண்கள் ஓட்டுப் போட உரிமை அளித்துள்ளதாக அறிவித்த நாடு எது? அந்நாட்டின் மன்னர் பெயர் என்ன?
7. அமெரிக்கக் கடற்படையில் தயாரிக்கப்பட்டு சேர்க்கப்பட்டுள்ள புதிய போர்க்கப்பலின் பெயர் என்ன?
8. இரண்டாவது உலகத் தமிழர்கள் பொருளாதார மாநாடு எங்கு நடைபெற்றது?
9. பிரிட்டனின் லண்டன் ராயல் நீதிமன்ற வளாக உயர் நீதிமன்றத்தில் முதன்முறையாக நீதிபதியாகப் பொறுப்பேற்றுள்ள இந்தியரின் பெயர் என்ன?
10. அண்மையில் சிறீஹரிகோட்டாவில் இருந்து 4 செயற்கைக் கோள்களுடன் விண்ணில் செலுத்தப்பட்ட ராக்கெட்டின் பெயர்?

| Print |  E-mail
1.    ஹெலெ தார்னிங் ஸ்க்மித்
2. இன்டஸ்ட்ரியல் அன்ட் கமர்சியல் பேங்க் ஆஃப் சீனா  (Industrial and Commercial bank of      China),  மும்பை.
3.    மைக்கேல் சடா
4.    சாந்தி டிக்கா
5.    பிருத்வி - 2, அக்னி - 2
6.    சவுதி அரேபியா, அப்துல்லா
7.    யு.எஸ்.எஸ். ஸ்புருன்ஸ்
8.    துபாய்
9.    ரபீந்தர் சிங்
10.    பி.எஸ்.எல்.வி.சி - 18
 

Friday, November 18, 2011

கடி, nov.12,2011


கடி

First Published : 12 Nov 2011 12:27:08 PM IST


அப்பா: ஏண்டா, வெக்கமா இல்லே..? ஹிஸ்டரி பேப்பர்லே சைபர் மார்க் வாங்கிட்டு வந்திருக்கியே?
மகன்: பழசையெல்லாம் மறக்கணும்னு, நீதானே அடிக்கடி சொல்வே..! -எச்.சீதாலட்சுமி, கொல்லம். ஒருவர்: நீதிபதிகள் ஏன் கையில சுத்தி வச்சிருக்காங்க? மற்றவர்: ஆணி அடிச்ச மாதிரி தீர்ப்பு சொல்லத்தான்... -அ.பேச்சியப்பன், ராஜபாளையம். * கண்டக்டர்: தம்பி, டிக்கெட் எடுத்திட்டியா? பையன்: முன்னாடி எடுப்பாங்க, சார்! கண்டக்டர்: முன்னாடி யாரும் எடுக்கலையே? பையன்: அப்ப, பின்னாடி எடுப்பாங்க.... கண்டக்டர்: பின்னாடியும் யாரும் எடுக்கலையேப்பா! பையன்: முன்னாடி உள்ளவங்களும் எடுக்கல, பின்னாடி உள்ளவங்களும் எடுக்கலன்னா, நான் மட்டும் எதுக்கு டிக்கெட் எடுக்கணும்? -லோ.அரவிந்தசேகர், 125, பாரதி நகர், 3-வது தெரு, பெருமாள்புரம், திருநெல்வேலி. * ஒருவர்: நீங்க மணிக்கு எத்தனை கிலோமீட்டர் வேகத்துல கார் ஓட்டுவீங்க? மற்றவர்: யார் அது மணி? அவனுக்கெல்லாம் நான் எதுக்கு கார் ஓட்டணும்? -எச்.பாலசிங் மனுவேல், 19, பெத்தேல்புரம், கிழக்கு தாம்பரம், சென்னை 600 059. ராமு: டேய் சோமு... வரவர எதப் பாத்தாலும் மங்கலாவே தெரியுதுடா... சோமு: அப்படின்னா, டாக்டரைப் பார்க்கவேண்டியதுதான்? ராமு: அவரும் மங்கலாத்தாண்டா தெரியுறார்..! -எடக்காடு சேகர், ஊட்டி 643 005. "நாடாளுமன்றத்தில் நிதிமந்திரி பட்ஜெட்டை எப்படி வாசிப்பார்?' "எப்படி வாசிப்பார், தெரியலையே!' "வரி வரியாத்தான் வாசிப்பார்..!' -கே.எல்.சிதம்பரம், புதுக்கோட்டை. வாரம் 2 டி-சர்ட் பரிசு நட்சத்திரக் குறியிட்ட 2 கடிகளும் பட்டுக்கோட்டை ரூபி ரெடிமேட்ஸ் வழங்கும் தலா ஒரு டி-சர்ட்டைப் பெறுகின்றன. பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்.

பன்னாட்டுப் பொன்மொழிகள்

பன்னாட்டுப் பொன்மொழிகள்

First Published : 19 Nov 2011 12:00:00 AM IST


 1.  பெண் என்பவள் முடிந்தபோது சிரிப்பாள்; ஆனால் நினைத்தபோது அழுவாள்!  -பிரான்ஸ்  2.  ஒரு கணத்தில் இழந்த மானத்தை ஓராயிரம் ஆண்டுகளானாலும் பெற்றுவிட முடியாது!  -இத்தாலி  3.  குழந்தையைத் தூக்கி வைத்துக் கொள்ள கை நோகிறது; அதைக் கீழே இறக்கினால் மனம் நோகிறது!  -பொலிவியா  4.  விரும்புவதைப் பெற முடியவில்லை என்றால் பெற முடிந்ததை விரும்ப வேண்டும்!  -ஸ்பெயின்  5.  கேள்வி கேட்கத் தெரிந்தாலே. பாதி தெரிந்து கொண்டதாக அர்த்தம்!  -இத்தாலி  6.  அறிவு உள்ளவர்கள் அதிகம் பேசுவதில்லை; அதிகம் பேசுபவர்களுக்கு அறிவு இருப்பதில்லை!  -சீனா  7.  பணமும் மகிழ்ச்சியும் பரம விரோதிகள்; ஒன்று தங்குமிடத்தில் மற்றொன்று தங்காது!  -பிலிப்பைன்ஸ்  8.  பணத்தில் நம்பிக்கை வைக்காதே; நம்பிக்கையான இடத்தில் பணத்தைப் போட்டு வை!  -பலூசிஸ்தான்  9.  விவசாயிகள் சேற்றில் கை வைப்பதால்தான் நாம் சோற்றில் கை வைக்க முடிகிறது!  -இந்தியா  10.  உழைப்பிற்கு ஓர் உதாரணம் எறும்பு; மற்றொன்று இதயம்!  -அமெரிக்கா

கடி , nov 19,2011


கடி

First Published : 19 Nov 2011 12:00:00 AM IST


* ஒருவர்: கடல்ல மூழ்கினவரைக் காப்பாத்துனது தப்பாப் போச்சு... மற்றவர்: ஏன்? ஒருவர்: இப்ப கடன்ல மூழ்கியிருக்கேன், காப்பாத்துங்கன்னு சொல்றாரு,,, -மு.முத்து பிரபாகரன், த/பெ. முருகன், வங்கிநாராயணபுரம், எழுமலை அஞ்சல், பெறையூர் தாலூகா, மதுரை மாவட்டம் 625 535. கண்டக்டர்: யோவ், டிரைவர், நான் மூணுமுறை விசிலடிச்சும் வண்டி நிக்கலையே ஏன்? டிரைவர்: அட போய்யா, நான் ஆறுமுறை பிரேக் அடிச்சே வண்டி நிக்கலை, நீ வேற..! -ச.விக்னேஷ், வாலாஜாபேட்டை. *  ஆசிரியர்: டேய்! சுந்தர், ஏண்டா பரீட்சை ஹால்ல தூங்குற? சுந்தர்: நீங்கதானே சார், ஏதாவது கேள்விக்குப் பதில் தெரியலைன்னா சும்மா முழிச்சுக்கிட்டு இருக்காதேன்னு சொன்னீங்க... -சு.சூர்யா, 656/3, எம்.எம்.ஆர்.காம்ப்ளெக்ஸ், பெருந்துறை,  ஈரோடு மாவட்டம் 638 052. இவர்: என்னுடைய பையனுக்கு வயசு 15 ஆவுது... இன்னமும் கதை சொன்னாத்தான் தூங்கறான்... அவர்: எனக்கு அந்தப் பிரச்னையே இல்லை... படின்னு சொன்னாப் போதும்... உடனே தூங்கிடுவான்.. -எஸ்.பொருநை பாலு, திருநெல்வேலி. "ஏண்டா... ராமு! படம் பார்க்கும்போது அடிக்கடி தும்மறே..?' "இது மசாலாப் படமாச்சே அதான்..!' -ந.தாஜ்நிஷா, காயல்பட்டினம். அப்பா: ஏண்டா, டிரம்ம உருட்டுற?
மகன்: தம்பிக்கு விளையாட்டு காட்டுறேம்பா! அப்பா: தம்பி எங்கடா..? மகன்: டிரம்முக்கள்ள இருக்கான்பா..! -செல்.பச்சமுத்து, மேட்டுச்சேரி. வாரம் 2 டி-சர்ட் பரிசு நட்சத்திரக் குறியிட்ட 2 கடிகளும் பட்டுக்கோட்டை ரூபி ரெடிமேட்ஸ் வழங்கும் தலா ஒரு டி-சர்ட்டைப் பெறுகின்றன. பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்.

Saturday, November 5, 2011

புதிய விடுகதைகள்

Blog post image #1
கல்வி, விளையாட்டுக்குப் பிறகு கதை சொல்வது. கேட்பது என்பது பழங்காலப் பழக்கம். இப்படி வயதானவர்கள் இளம் பிள்ளைகளுக்குத் தங்கள் அனுபவத்தில் கற்ற பழங்கதைகள், பழமொழிகள், புதிர் விளையாட்டுகள், விடுகதைகள் எனச் சொல்லி வளர்ப்பது பிள்ளைகளிடத்திலே பண்பாட்டையும் ஒழுக்கத்தையும், பெரியவர்களை மதிக்கும் பண்புகளையும் உருவாக உதவும்.
ஆனால் தற்போதைய சூழ்நிலையில் பிள்ளைகள் காலையில் ஏழு மணிக்குப் பள்ளிக்குச் சென்றால் மாலை ஐந்து மணிக்குத்தான் வருகிறார்கள். வந்தவுடனே சாப்பிடுகிறார்களோ இல்லையோ அடுத்த பள்ளியான டியூசன் சென்டருக்குப் படையெடுக்கிறார்கள். அதனால் இவர்களுக்கு விளையாட நேரம் இருப்பதில்லை. பாரதி பாடினானே ‘மாலை முழும் விளையாட்டு என்று வழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா’ என்று. அதில் மாலையே இவர்களுக்கு இல்லாமல் போனபோது விளையாட்டுக்கு எங்கே நேரம்?
விழுந்து விழுந்து படிக்கிறார்கள். எதற்காக? வாழ்க்கை நடத்துவதற்குத் தேவையான பணம் சம்பாதிக்க. ஒரு நல்ல கிளார்க் ஆக உருவாக்க பெற்றோர்கள் எதையும் செய்யத் தயாராக இருக்கிறார்கள்.
இதற்குக் காரணம் என்ன?
நாட்டில் ஒரு அளவான சம்பள நிர்ணயம் இல்லை என்பதே இதற்குக் காரணம். வெளிநாட்டிலிருந்து கார்ப்பரேட் கம்பெனிகள் இங்கு வந்ததற்குப் பிறகுதான் நாட்டில் இப்படி ஒரு அவலநிலை உருவாகியிருக்கிறது. காரணம். ரூ. பத்தாயிரத்தையே பெரிய சம்பளமாக நினைத்து ஏப்பம் விட்டுக்கொண்டிருந்தவர்களிடம் ஐ.டி. நிறுவனங்களில் ரூ. 40 ஆயிரம் 50 ஆயிரம் என கொடுத்ததும் நாட்டின் உயிர்நாடியான விவசாயப் பெருங்குடி மக்களும் தங்கள் பிள்ளையும் நன்கு படித்து இதுமாதிரி நிறுவனங்களில் வேலை செய்து கைநியை சம்பாதிக்க வேண்டும் என நினைக்க வைத்துவிட்டது என்றால் மற்ற தொழில் புரிபவர்களைப் பற்றிச் சொல்ல வேண்டாம். இதில் தவறில்லை. ஆனால் அங்கு வேலை செய்யும் ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு இருக்கிறதா? அதனால் வாழ்க்கை முறை சரியாக இருக்கிறதா என்றால் நிச்சயமாக இல்லை என்றே சொல்லலாம். நம் கலாச்சாரம்தான் மாறிக்கொண்டிருக்கிறது.
ஐ.டி.நிறுவன ஊழியர்களுக்குச் சம்பளத்தைத் தவிர வேறு எந்தச் சலுகையும் கிடையாது. எவ்வளவு நாள் வேலை செய்திருந்தாலும் தற்காலிகப் பணியாளர்களாகத்தான் ஒப்பந்தம் செய்யப்படுகிறார்கள். அமெரிக்காவில் ஏற்பட்டதைப்போல பொருளாதார ஏற்றத்தாழ்வு ஏற்படும்போது கம்பெனியை இழுத்து மூடிவிடுவார்கள். பணியாளர்களின் நிலை அதோகதிதான்.
எல்லாரும் ஒரே துறை, ஒரே சம்பளத்தைக் குறிவைத்தே படிக்க வைக்கிறார்கள். பிள்ளைகளும் பெற்றோர்களின் அழுத்தத்தின் காரணமாகத் தொடர்ந்து படித்துக்கொண்டே இருக்கிறார்கள். (மூளையில் அவ்வளவும் பதிவாகாது.) அதிலும் பல கான்வென்ட்களில் பெற்றோர்கள் பிள்ளைகள் படிக்கவில்லை என்று அவர்களைக் கேட்டுவிடக் கூடாது என்பதற்காக அதிகமான பாடங்களைக் கொடுத்து அதைச் சொல்லிக் கொடுங்கள், இதைச் சொல்லிக்கொடுங்கள் என்று அழுத்தத்தைப் பெற்றோர்களின் மேல் போட்டுவிடுகிறார்கள். அதனால்தான் பிள்ளைகளைக் கல்வி ரேஸில் ஓடவிடுகிறார்கள் பெற்றோர்கள்.
இதனால் குடும்ப உறவினர்களுடன் அமர்ந்து பேசவோ, உன்னத உறவான பாட்டன், பாட்டிகளிடம் பழங்கதைகளைக் கேட்கவோ, மனம்விட்டு பேசவோ, கற்பனைகளை (கிரியேசன்) வளர்த்துக்கொள்ளவோ அவர்களுக்கு நேரமும் வாய்ப்பும் கிடைப்பதில்லை. இப்படியே போனால் வருங்காலத்தில் மனித உறவுகள் என்பது இயந்திரத்தனமாக மாறிவிடும். நம் தாய், தந்தை, அண்ணன், அக்கா, மாமா, மாமி, தாத்தா, பாட்டி என்ற உன்னதமான உறவுகள் போய் எல்லாரும் ஒரு உருப்படிகளாகப் போய்விடக்கூடும் என்ற அச்ச உணர்வு பல பேர்களிடம் காணப்படுவது நிஜம்.
ஆயிரம்தான் ஏட்டிலே படித்தாலும் நம் குடும்ப உறவினர்களின் மூலம் சொல்லப்படுகிற, கேட்கப்படுகிற சரித்திரம், பூகோளம், உண்மைச் சம்பவங்கள் போல் பிள்ளைகள் மனதில் ஆழப்பதிவதில்லை. ஆன்மிக யோகி விவேகானந்தர் கூட தன் தாயிடம் பக்திக் கதைகளைக் கேட்டுக் கேட்டுத்தான் பின் பெரிய விவேகி ஆனார். அதேபோல் இன்று தமிழகத்தைச் சேர்ந்த தலைசிறந்த செஸ் ஆட்ட வீரர் விஸ்வநாதன் ஆனந்த் கூட அவர் தாயிடம் செஸ் விளையாட்டு விளையாடி விளையாடித்தான் உலகப் புகழ்பெற்ற செஸ் சேம்பினாக மிளிர்கிறார்.
தொண்டுள்ளம், மனிதநேயம், நம் முன்னோர் பெருமை, இனஉணர்வு, ஒழுக்கம், பற்று, பாசம் உருவாகப் பிள்ளைகளிடம் படிக்கும் காலத்திலேயே கதைகள், நாட்டுப் பாடல்கள், புதிர் விளையாட்டுகள், பழங்கதைகள், விடுகதைகள் சொல்லி வளர்ப்பது எதிர்காலத்தில் வளமான, வலிமையான, உணர்வான இளைய சமுதாயம் உருவாகும் என்பதில் ஐயமில்லை.
பழமொழிகள் ஒரு காலத்தோடு நின்று விட்டன. இது படிக்காதவர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களிலிருந்து கிடைத்த சாரத்தைப் பழமொழிகளாகக் கூறிக் கூறி அதைப் பின்வந்த சந்ததிகள் சொல்லிச் சொல்லி நம் பண்பாட்டைப் பறைசாற்றுகின்றன. அதன்பிறகு படித்தவர்கள், அறிஞர்கள் சொல்லி வைத்ததுதான் பொன்மொழிகள். அதுவும் ஒரு கட்டத்திற்குமேல் நின்றுவிட்டன. அதேபோல் விடுகதை என்பது சிந்தனை ஆற்றலைத் தூண்டி அறிவியல் அறிவை வளக்கும். இது அடியோடு மக்கள் புழக்கத்திலிருந்தே போய்விட்டது. முன்பெல்லாம் (சுமார் 25 ஆண்டுகளுக்குமுன்) சாதாரணமாகப் பேசும்போதே பழமொழி முத்துக்கள் உதிரும்.
தற்போது அந்தக் குறையைக் களைய கவினில் புதிய விடுகதைகள் பகுதி தொடங்கப்பட்டுள்ளது. இதில் சிறியவர்கள், பெரியவர்கள் என அனைவரும் புதிய விடுகதைகளைப் பதிவு செய்யுங்கள். வெளியிடலாம். முதல் கட்டமாகப் பத்து புதிய விடுகதைகள்.
1. ஒட்டிப்பிறந்த இரட்டைப் பிறவிகள் வெட்டிப்போடுவதில் கெட்டிக்காரர்கள்.
அது என்ன?
2. இறக்கை இருக்கும் பறவையல்ல, வால் இருக்கும் விலங்கு அல்ல, சக்கரம் இருக்கும் வாகனமல்ல, மிதக்கும் ஓடமல்ல.
அது என்ன?
3. கையடக்கப்பிள்ளை பாடும், பேசும், அளவளாவும்.
அது என்ன?
4. பளபளப்பான். ஆனால் மணம் இல்லான். மாற்றுரு படைப்பான் , வலதை இடதாக்குவான்.
அது என்ன?
5. ரத்தம் குடிக்கும் பாடும் பறவை.
அது என்ன?
6. கடிப்பான், சுமப்பான், பாதுகாப்பான், காத்திருப்பான்.
அது என்ன? 7. இறக்கை உண்டு, பறக்கம் மாட்டான். துயில் எழும்பப்பாடுவான்.
அது என்ன?
8. ஒட்டிப் பிறந்த இரட்டைப்பிறவிகள் இறுக்கிப் பிடிப்பதில் கெட்டிக்காரர்கள்.
அது என்ன?
9. மூன்று கால் நண்பன் இடக்கையை அடித்தால் ஓட்டம்பிடிப்பான்.
அது என்ன?
10. ஒட்டிப்பிறந்த இரட்டைப் பிறவிகள் தெளிவாய் காட்டுவதில் கெட்டிக்காரர்கள்.
அது என்ன?
1. கத்திரிக்கோல்
2. விமானம்
3. செல்போன்
4. கண்ணாடி
5. கொசு
6. செருப்பு
7. கோழி
8. க்ளிஃப்
9. ஆட்டோ
10. மூக்குக் கண்ணாடி