Showing posts with label வெள்ளரி. Show all posts
Showing posts with label வெள்ளரி. Show all posts

Friday, January 18, 2013

வெள்ளரியின் மகிமை

வெள்ளரியின் மகிமை



நம்மில் பலருக்கும் வெள்ளரி சாப்பிடப் பிடிக்கும். வெள்ளரியில் காய், பிஞ்சு என்று இரு வகையுண்டு. மருத்துவக் குணங்கள் நிறைந்தது வெள்ளரி. இது ஒரு நல்ல நீரிளக்கி, செரிமானத்துக்கு உதவுவது. வெள்ளரிப்பிஞ்சு பித்தத்தைத் தணித்து குடலுக்கு குளிர்ச்சியூட்டுகிறது. சிறுசீரகக் கோளாறைச் சரிசெய்கிறது. தலை சுற்றலைத் தடுக்கிறது.
சமீபத்திய ஓர் ஆய்வின்படி மூட்டு வீக்க நோய்களை வெள்ளரி குணமாக்குகிறது என்று கண்டறிந்துள்ளனர். எனவே வெள்ளரி ஒரு முக்கிய காய்கறி வகை என்று கூறலாம். வெள்ளரியில் கலோரிகள் குறைவாக உள்ளதால், உடல் பருமனைக் குறைக்க விரும்புவோருக்கு நல்லது. வெள்ளரிச் சாறுடன் விதைகளையும் சேர்த்துச் சாப்பிட்டால் நல்ல பலன்கள் ஏற்படும். வாதத்தைப் போக்கவும் இது உதவுகிறது. சிறுநீரகத்துக்கும் நன்மை புரிகிறது. நீரிழிவு நோயாளிகளும், உடல் பருமனைக் குறைக்க விரும்புபவர்களும் வெள்ளரிப் பிஞ்சுகளை அதிகமாகச் சாப்பிடுவது நன்மை பயக்கும்.