Saturday, January 5, 2013

தெரிந்து கொள்ளுங்கள்

வெள்ளி பைபிள்!
சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் உள்ள உப்சலா பல்கலைக்கழகத்தில் ஆறாம் நூற்றாண்டில் இருந்த வெள்ளி பைபிள் ஒன்று உள்ளது. இந்த பைபிள் முழுவதும் கையினால் எழுதப்பட்டதாகும்.
தங்கம் மற்றும் வெள்ளியை உருக்கி அதனால் தயாரிக்கப்பட்ட மையினால் எழுதப்பட்டுள்ளது. பைபிளின் அட்டைப் பகுதி தங்க முலாம் பூசப்பட்டுள்ளது. கி.பி. 1648-ஆம் ஆண்டு இந்த பைபிள் "பிராக்' என்ற நகரில் இருந்து சுவீடனுக்கு எடுத்து வரப்பட்டது.
இந்த பைபிளின் சில பக்கங்கள் 6-5-1995 அன்று திருடு போயின. ஆனால் அவை 7-5-1995 அன்றே கண்டுபிடிக்கப்பட்டன. தற்பொழுது பைபிளின் மற்ற பகுதிகள் பல்கலைக்கழகத்தின் நூலகத்தில் வெவ்வேறு இடங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.

• வீரமா முனிவர் - சுப்பிரதீபக் கவிராயர்.

• ஜி.யு.போப் - மகாவித்துவான்
இராமானுஜ கவிராயர்.

• சீகன் பால்கு ஐயர் - தரங்கம்பாடி எல்லப்பா.

• எல்லீஸ் துரை - இராமச்சந்திரக் கவிராயர்.

• ஹெச்.எ. கிருஷ்ணபிள்ளை - மகாவித்துவான் திருப்பாற்கடல் நாத கவிராயர்.

• உமறுப் புலவர் - கடிகைமுத்துப் புலவர்.

• செய்கு தம்பிப் பாவலர் - சங்கரன் நாராயணன், அண்ணாவி.

• காசிம் புலவர் - மதுரை தமிழாசிரியர்
மாக்காயனார்.

• கணிமேதாவியார் - மதுரை தமிழாசிரியர்
மாக்காயனார்.

ஐந்தின் ரகசியங்கள்!
• பஞ்சலோகம் - இரும்பு, பொன், வெள்ளி, செம்பு, ஈயம்.
• பஞ்சவர்ணம் - கருப்பு, சிவப்பு, பச்சை, மஞ்சள், வெள்ளை.
• பஞ்சவாசம் - ஏலம், இலவங்கம், கற்பூரம், திப்பிலி, ஜாதிக்காய்.
• பஞ்சரத்தினம் - பொன், சுகந்தி, மரகதம்,
• மாணிக்கம், முத்து.
• பஞ்சபூதம் - ஆகாயம், காற்று, நிலம், நீர், நெருப்பு.
• பஞ்சபாண்டவர் - தர்மர், பீமன், அர்ஜுனன்,
நகுலன், சகாதேவன்.
• ஐவகை நிலங்கள் - குறிஞ்சி, முல்லை, மருதம்,
நெய்தல், பாலை.
• ஐம்பெருங் குழு - மந்திரியர், புரோகிதர்,
சேனாதிபதியர், தூதர், சாரணர்.
• ஐம்பெருங்காப்பியம் - சிலப்பதிகாரம்,
மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி.
• ஐஞ்சிறு காப்பியங்கள் - நாக குமார காவியம், யசோதர காவியம், உதயன குமார காவியம்,
நீலகேசி, சூளாமணி.

சிலை வடித்தவர்கள்
• கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை - கணபதி ஸ்தபதி.
• சென்னையில் உள்ள உழைப்பாளர் சிலை -
ராய் செளத்ரி.
• சுதந்திர தேவி சிலை (நியூயார்க்) - பர்த் தோல்டி.
• ஈபிள் கோபுரம் (பாரிஸ்) -
அலெக்ஸôண்டர் ஈஃபிள்.
• திருவண்ணாமலை கோபுரங்கள் -
அச்சுதப்பா நாயக்கர்.
 • திருச்சி மலைக்கோட்டையை வடிவமைத்தவர் - மகேந்திர பல்லவன்.
தொகுப்பு : ஆர். மகாராஜன், பெரியமுத்தூர்.

வெந்நீர் மீன்
நியூசிலாந்தில் வாழும் கோவாரா என்ற மீன், தான் வாழும் தட்பவெப்ப நிலைக்குத் தக்கவாறு வாழும் இருப்பிடத்தை மாற்றிக் கொள்கிறது. கோடைக் காலங்களில் வெந்நீர் ஊற்றுகளில் வாழ்கிறது. குளிர்காலம் வந்துவிட்டாலோ, வெந்நீர் ஊற்றுக்களை விட்டு வெளியேறுகிறது. பூமிக்கடியில் உள்ள குகைகளுக்குத் தனது இருப்பிடத்தை மாற்றிக் கொண்டு சுகமாகக் குளிர்காலம் முடிந்து கோடைக்காலம் வந்துவிட்டாலோ திரும்பவும் வெந்நீர் ஊற்றுகளுக்கே வந்துவிடுகிறது.

• மீன்களில் நீளமான மீன் லுர் பிஷ். விலாங்கு மீன் போன்ற தோற்றத்தில் இருக்கும் இந்த மீன் அதிகபட்சம் 46 அடி நீளம் வளரும்.

• மிக உயரமானது சூரிய மீன். இதன் உயரம் 14 அடிகள். அந்த மீன் 2 டன் எடைக்கும் அதிகமாக இருக்கும்.

• "டுவார்ப் கூபி' என்னும் மீன்தான் மீன் இனத்திலேயே மிகச் சிறியது. நன்கு வளர்ச்சி அடைந்த டுவார்ப் கூபி மீனின் நீளம் 1 சென்டிமீட்டர்தான் இருக்கும். இந்த வகை மீன்கள் இந்திய பெருங்கடல் பகுதியில் அதிகம் காணப்படுகின்றன.

• உலகிலேயே மிகப் பெரிய நண்டு எது தெரியுமா? ஜப்பானிஷ் ஸ்பைடர் என்னும் சிலந்தி நண்டுதான். இதன் உடல் பகுதி நீளம் மட்டும் ஓர் அடி. கால்களின் நீளம் 11 அடி ஆகும்.

• குட்டியான நண்டின் நீளம் எவ்வளவு தெரியுமா? துல்லியமாக அளவு சொல்ல முடியாது. ஒரு பட்டாணியை விட கொஞ்சம் பெரிதாக இருக்கும்.
- கா. முருகேஸ்வரி, கோவை.

விந்தை உயிரினங்கள்
• மண்புழு தோல் மூலமாக சுவாசிக்கிறது.
• மூக்கில் பல் உள்ள உயிரினம் முதலை.
• வயிற்றில் பல் கொண்ட பறவை கிவி.
• காலில் காதுள்ள உயிரினம் வெட்டுக்கிளி.
• நத்தை, அரம் போன்ற நாக்கினால்
இரை உண்கிறது.
• சிலந்தி எதையும் சாப்பிடாமல் 10 வருடங்கள் வரை உயிர் வாழும்.
• நீர் குடிக்கத் தெரியாத விலங்கு ஓணான்.
• பின்னோக்கிப் பறக்கும் பறவை கிங்கப்.
• குக்குஜோ என்னும் வண்டினம் ஒளிரும்
தன்மையுடையது.
• இமையுள்ள பறவை நெருப்புக் கோழி.
("அறிவியல் அறிவோம்' நூலிலிருந்து...)
தொகுப்பு: என். கணேசன், வேலூர்.

1 comment: