Friday, January 11, 2013

பறவையைத் தொடர்வோம்

பறவையைத் தொடர்வோம்...

 
 
காட்டுக் கோழி
 காட்டுக் கோழி, இந்தியக் கோழி இனத்தைச் சேர்ந்த பறவை. ஆனால் வீடுகளில் இதை வளர்க்க முடியாது.
 இந்திய தீபகற்பத்தில் அதிகமாகக் காணப்படும் பறவை. பெரும்பாலும் மாமிசத்துக்காகவும் கழுத்துச் சிறகுகள் மீன் பிடி தூண்டிலில் மீனைக் கவர்வதற்காக பொறியாகவும் பயன்படுகின்ற பறவை.
 சிவந்த கொண்டையைக் கொண்டிருக்கும். கால்களும் செந்நிறத்தில் இருக்கும். கழுத்தில் மஞ்சள், வெள்ளை, கருப்பு நிறப் புள்ளிகளைக் கொண்டிருக்கும். கருநீல வால் பகுதியில் சில சிறகுகள் மட்டும் நீண்டு வளைந்து பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும்.
 தானியங்களையும் மூங்கில் விதைகளையும் சிறிய பழங்களையும் பூச்சிகளையும் விரும்பிச் சாப்பிடும்.
 பெரும்பாலும் காடுகளில் வசிக்கும். சிறிய குழுக்களாக வாழும்.
 மஞ்சள் நிற முட்டைகளை இடும். ஒரு சமயத்தில் 4 முதல் 7 முட்டைகள் வரை போடும். முட்டையிலிருந்து குஞ்சுகள் வெளிவருவதற்கு 21 நாட்கள் ஆகும்.

 நீலமயில்
 நீலமயில் தெற்கு ஆசியப் பறவை. இங்கிருந்துதான் மற்ற நாடுகளுக்கு இந்தப் பறவை சென்றது. மாவீரன் அலெக்ஸôண்டர்தான் இந்தப் பறவையை ஐரோப்பாவுக்கு அறிமுகம் செய்து வைத்தான் என்று ஒரு கதை இருக்கிறது. இப்போது பரவலாக உலகெங்கும் காணப்படுகின்றது.
 இதைப் பற்றி வர்ணிக்கவே தேவையில்லை. இதன் அழகு உங்களுக்கெல்லாம் நன்றாகத் தெரியும். ஆனால் ஆண் மயில்கள்தான் தோகையுடன் அழகாக இருக்கும். பெண் மயில்கள் பார்ப்பதற்கு சாதாரணமாக, பெரிய கோழியைப் போல இருக்கும்.
 திறந்த வெளிக் காடுகளிலும் வயல்வெளிகளிலும் அதிகம் காணப்படும்.
 தானியங்களையும் சிறிய பழங்களையும் குட்டிப் பாம்புகள், பல்லிகள் ஆகியவற்றையும் விரும்பிச் சாப்பிடும்.
 ஆண் பறவை அளவில் மிகப் பெரிதாக இருக்கும். 100 முதல் 225 செ.மீ. நீளம் இருக்கும். எடை 6 கிலோ வரை இருக்கும்.
 சிறிய குழுக்களாகவும் குடும்பமாகவும் வாழும் பறவை. வெள்ளை நிற முட்டைகளாக ஒரு சமயத்தில் 4 முதல் 8 முட்டைகள் வரை இடும். 28 நாட்களில் குஞ்சுகள் முட்டைகளிலிருந்து வெளிவரும். குஞ்சுகள் சிறிது காலம் வரை தாயின் முதுகில் ஏறிப் பயணம் செய்யும்.

 வர்ணக் கெளதாரி
 வர்ணக் கெüதாரி தென் இந்தியாவிலும் இலங்கையிலும் அதிகம் காணப்படும். இதன் குரலே இது இருக்குமிடத்தைக் காட்டிக் கொடுத்துவிடும்.
 சற்றே உயரமான பறவை. தலையில் முகம் மட்டும் ஆரஞ்சு வண்ணம் மிகுந்து காணப்படும். சிறிய கருப்பு நிற அலகைக் கொண்டிருக்கும். உடல் முழுவதும் வெள்ளையும் கருப்பும் கலந்து புள்ளிகளாகக் காணப்படும். சிறகுகளில் மட்டும் வெளிர் ஆரஞ்சு நிறம் வண்ணம் பூசியது போல இருக்கும். நீண்ட உறுதியான ஆரஞ்சு வண்ணக் கால்களைக் கொண்டிருக்கும். நன்றாகப் பறக்கும்.
 புல்வெளிகளில் வசிக்கும். ஒரு சமயத்தில் 6 முதல் 7 முட்டைகள் வரை இடும்.
 புல்லின் விதைகளையும் அரிசியையும் விரும்பிச் சாப்பிடும்.
 இலங்கை அரசு இந்தப் பறவையின் படத்தைப் போட்டுத் தபால் தலை வெளியிட்டிருக்கிறது.

 கெளதாரி
 வர்ணக் கெüதாரி போலவே கெüதாரியும் இருக்கும். ஆனால் உடல் முழுவதும் வெளிர் ஆரஞ்சு நிறம் நிறைந்து காணப்படும். ஐரோப்பாவிலும் தெற்கு ஆசியாவிலும் இலங்கையிலும் அதிகம் காணப்படும் பறவை.
 இதுவும் புல்வெளிகளில் வசிக்கும் பறவைதான். சிறிய குழுக்களாக வசிக்கும்.
 பெரும்பாலும் புதர்களில் கூடு கட்டி வசிக்கும்.
 ஒரு சமயத்தில் 6 முதல் 8 முட்டைகள் வரை இடும்.
 தானியங்களையும் புழு பூச்சிகளையும் விரும்பிச் சாப்பிடும்.
 வீடுகளில் இதை வளர்க்கலாம். ஏறக்குறைய ஒரு கிலோ வரை எடை இருக்கும்.
 மிக வேகமாக நடக்கும் பறவை. ஆனால் நின்று, நின்று நடக்கும்

No comments:

Post a Comment