Saturday, December 22, 2012

சிரி...சிரி...

சிரி...சிரி...

""கமலாவை நான் காதலிக்கிற விஷயத்தை, ஊர்ல இருக்கிற எல்லார்கிட்டேயும் சொல்லிட்டேன்''
 ""கமலாகிட்ட சொன்னியா?''

 ""நன்றி உள்ள பிராணி நாய்தான்ங்கிறதை இன்னிக்குத்தான் தெரிஞ்சுகிட்டேன்''
 ""எப்படி?''
 ""நேத்துதான் பக்கத்து வீட்டு நாய்க்கு சோறு வச்சேன். இன்னிக்கு என்னோட மாமியார கடிச்சிடுச்சு''
 அ.அழகப்பன், காளையார்கோவில்

 ""ஐந்தாறு வருஷங்களுக்கு முன் என்ன நீங்க பாக்கலியே! அப்ப ஸ்லிம்மா "ஃபேன்டா' பாட்டில் மாதிரி இருப்பேன்''
 ""இப்பவும் நீ ஃபேன்டா பாட்டில்தான் டியர். என்ன அப்ப ஐநூறு மில்லி ஃபேன்டா பாட்டில், இப்போ இரண்டுலிட்டர் ஃபேன்டா பாட்டில், அதுதான் வித்தியாசம்''
 கி.ராணிஜோதி, சென்னை

 ""நெஞ்சில பண்ண வேண்டிய ஆபரேஷனை வயித்துல பண்ணீட்டிங்களே டாக்டர்''
 ""உங்கள யார் ஓரடி மேலே தள்ளிப் படுக்கச் சொன்னது?''
 ஜோ.ஜெயக்குமார், நாட்டரசன்கோட்டை

 ""ஆசையே துன்பத்துக்குக் காரணம்னு இப்பத்தான் தெரிஞ்சுக்கிட்டேன்''
 ""எப்படி?''
 ""என் மனைவியை நான் ஆசைப்பட்டுத்தானே கல்யாணம் பண்ணிகிட்டேன்''

 ""அம்மா பேப்பர்ல மழை பெய்யும்னு போட்டிருக்கு''
 ""அப்படியா! பேப்பரை எடுத்து உள்ளே வைடா!''

 ஆசிரியர்: பாக்டீரியா படம் வரையச் சொன்னேனே, எங்கடா காணோம்?
 மாணவன்: பாக்டீரியா நுண்ணுயிரி. அது எப்படி சார் கண்ணுக்குத் தெரியும்.
 எஸ்.மலையாண்டி, பத்தமடை

 ""ஒரு மாசத்துல டான்ஸ் கத்துக்கிட்டேன்''
 ""எந்த மாசம்?''
 ""ஆடி மாசம்''

 பெண்: முடியாமல் இருப்பவங்களுக்கு என்ன உதவி செய்வாய்?
 தோழி: ரப்பர் பேண்டு அல்லது ரிப்பன் கொடுப்பேன்
 எஸ்.மோகன், கோவில்பட்டி

 ""மிஸ்டர் கபாலி, இது கோர்ட் இங்க "கண்டதை' எல்லாம் பேசக்கூடாது''
 ""அப்ப பொய் சொல்லச் சொல்றீங்களா எசமான்?''
 எஸ்.கார்த்திக் ஆனந்த், தாராபுரம்

 ""நம்ம ஹீரோ...அத்தை மேல ரொம்ப பாசமா இருக்கார்...அத்தை வீட்டிலேயே தங்கியிருக்கார்...அத்தையை கொன்னவங்களைப் பழிவாங்குகிறார்...''
 ""அடப்பாவி! ஆண்டி ஹீரோ சப்ஜெக்ட்னு சொன்னீயே அது இதுதானா?''
 ஏ.விக்டர் ஜான், சென்னை

 ஒருவர்: புல்லாங்குழல் வித்வான் என்ன கேட்கிறார்?
 மற்றவர்: "ஊதிய' உயர்வு வேண்டுமாம்.
 நெ.இராமன், சென்னை

 ""உங்க மகனுக்குப் பெண் பார்க்க திருப்பதிக்கு போனீங்களே பெண் எப்படி?''
 ""அதைச் சொல்லவா வேணும் லட்டுன்னா லட்டுதாங்க''
 தேனி முருகேசன்

 கூகுள்: என்கிட்ட எல்லாமே இருக்கு
 விகிபிடியா: எனக்கு எல்லாம் தெரியும்
 இன்டர்நெட்: நான் இல்லாம நீங்க எல்லாம் ஒண்ணும் கிடையாது
 மின்சாரம்: அங்க என்ன ஒரே சத்தமா இருக்கு?
 எல்லோரும் கோரஸôக: சும்மா பேசிட்டிருந்தோம் மாமா. அதான் வேறொண்ணுமில்ல...
 பெனிட்டா, பொன்னியம்மன்மேடு

 (தந்தையும் மகனும்)
 ""ஏன்டா தோட்டத்துச் செடிகளுக்கு தண்ணி ஊத்தச் சொன்னேனே?''
 ""மழை பெய்யுதேப்பா''
 ""பரவாயில்லை. குடை எடுத்துட்டுப் போய் தண்ணி ஊத்து''

 ஆசிரியர்: ஏன்டா, பாடப்புத்தகத்தை இவ்வளவு தூரத்துல வெச்சுட்டு, நீ இங்கே வந்து உட்கார்ந்திருக்க?
 மாணவன்: பிரச்னைகளை தள்ளி வைக்கணும்னு நீங்கதானே சார் சொன்னீங்க!
 ஜி.எஸ்.கார்த்திக், கோபிசெட்டிப்பாளையம்

 ""புதுசா பூட்டு சாவி பிசினஸ் ஆரம்பிக்கப் போறேன், என்னை ஆசிர்வாதம் பண்ணுங்கப்பா
 ""பெஸ்ட் ஆஃப் லாக்!''
 ஜி.மஞ்சரி, கிருஷ்ணகிரி

 ஒருவர்: இப்ப வந்த படங்கள்ல உங்க படம்தான் பாக்கற மாதிரி இருக்கு
 இயக்குநர்: அப்படியா?
 ஒருவர்: மத்த படங்களுக்கெல்லாம் கூட்டம் ரொம்ப அதிகம். பார்க்க முடியலை.
 ஜான் கிறிஸ்டோபர், கும்பகோணம்

 ஒருவர்: ஏம்பா நம்ம தலைவர் இனி சட்டை போடமாட்டாராமே?
 மற்றவர்: அதுவா அவரை யாரும் சட்டை செய்வதில்லையாம்!
 ஜி.தண்டபாணி, சென்னை

 ""நகை வாங்கப் போன கடையில பெண்ணை உரசிட்டு நின்னு தர்ம அடி வாங்குனீங்களாமே உண்மையா?''
 ""நகை வாங்கறப்ப உரசிப் பார்த்து வாங்கணும்னு நீங்கதானே சொன்னீங்க''
 கே.நேசினி, ஜமீன் ஊத்துக்குளி

No comments:

Post a Comment