Friday, December 7, 2012

வரலாற்றில் இன்று, Today in History, 7/12,

வரலாற்றில் இன்று  
Today in History  திசம்பர் 7


    அனைத்துலக விமானப் போக்குவரத்து நாள்.
    1787 - டெலவெயர் 1வது மாநிலமாக ஐக்கிய அமெரிக்காவில் இணைந்தது.
    1900 - மாக்சு பிளாங்கு தனது பேர்லின் இல்லத்தில் வைத்து புகழ்பெற்ற கரும்பொருள் வெளியேற்ற விதியைக் கண்டுபிடித்தார்.
    1910 - யாழ்ப்பாணம், மானிப்பாய் இந்துக் கல்லூரியின் புதிய கட்டடம் திறக்கப்பட்டது.
    1917 - முதலாம் உலகப் போர்: ஆசுதிரியாஅங்கேரி மீது ஐக்கிய அமெரிக்கா போரை அறிவித்தது.
    1917 - தமிழத் தென்றல் திரு வி.க. ஆசிரியராகப் பொறுப்பேற்ற தேசபக்தன் வார இதழ் வெளிவரத் தொடங்கியது.
    1941 - இரண்டாம் உலகப் போர்: சப்பானியர் அவாயின் பேர்ள் துறைமுகத்தைத் தாக்கினர்.
    1949 - சீனக் குடியரசின் அரசு நான்கிங் நகரில் இருந்து தாய்வானுக்கு மாறியது.
    1971 - பாகிசுதானில் நூருல் அமீன் பிரதமராகவும் சுல்பிக்கார் அலி பூட்டோவை உதவிப் பிரதமராகவும் கொண்ட கூட்டணி அரசை அதிபர் யாகியா கான் அறிவித்தார்.
    1972 - அப்போலோ திட்டத்தின் கடைசி விண்கலம் "அப்போலோ 17" சந்திரனை நோக்கி ஏவப்பட்டது.
    1975 - கிழக்குத் தீமோரை இந்தோனீசியா முற்றுகையிட்டது.
    1988 - யாசர் அரபாத் இசுரேலைத் தனிநாடாக அங்கீகரித்தார்.
    1991 - Carl Lewis க்கு திடல்தட வீரர்களுக்கான Jesse Owens விருது வழங்கப்பட்டது
    1995 - கலிலியோ விண்கலம் விண்ணுக்கு ஏவப்பட்டு 6 ஆண்டுகளின் பின்னர் வியாழனை அடைந்தது

No comments:

Post a Comment