Monday, December 17, 2012

வரலாற்றில் இன்று Today in History 17/12

வரலாற்றில் இன்று   
Today in History  திசம்பர் 17
  1.     பாலியல் பெண் தொழிலாளர்களுக்கெதிரான வன்முறையை நிறுத்தும் அனைத்துலக நாள்
  2.     1398 - சுல்தான் மெகமூதின் படைகளைத் தில்லியில் வைத்து  தைமூர் படைகள் தோற்கடித்தன.
  3.     1577 - பிரித்தானிய அரசி முதலாம் எலிசபெத்துக்காக அமெரிக்காக்களின் பசிபிக் பெருங்கடல் பகுதியை ஆராய்வதற்காக பிரான்சிசு டிரேக் இங்கிலாந்து, பிளைமவுத் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டான்.
  4.     1718 - பெரிய பிரித்தானியா இசுபெயினுடன் போரை அறிவித்தது.
  5.     1819 - சிமோன் பொலிவார் பெரிய கொலம்பியாவின் விடுதலையை அறிவித்தான்.
  6.     1834 - அயர்லாந்தின் முதலாவது தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டது.
  7.     1862 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஐக்கிய அமெரிக்காவின் டென்னசி, மிசிசிப்பி, கென்டக்கி ஆகிய மாநிலங்களில் இருந்து யூதர்கள் வெளியேற்றப்பட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
  8.     1903 - ரைட் சகோதரர்கள் வடக்கு கரொலைனாவில் முதன்முதலில் பன்னிரெண்டு வினாடிகள் எஞ்சின் உந்தும் ஊர்தியில் பறந்தனர்.
  9.     1926 - லித்துவேனியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து மக்களாட்சி அரசு கலைக்கப்பட்டு அண்டானசு சிமெத்தோனா ஆட்சியைப் பிடித்தார்.
  10.     1941 - இரண்டாம் உலகப் போர்: சப்பானியப் படைகள் வடக்கு போர்ணியோவில் இறங்கினர்.
  11.     1946 - தமிழ் நாட்டில் அவிநாசிலிங்கம் செட்டியார் கல்வியமைச்சராக இருந்த போது அவரது பெரும் முயற்சியால் தமிழ் வளர்ச்சிக் கழகம் தொடங்கப்பட்டது
  12.     1947 - இலங்கைத் தமிழரசுக் கட்சி அமைக்கப்பட்டது.
  13.     1957 - அமெரிக்கா முதல் முறையாகக் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வெற்றிகரமாகச் பரிசோதித்துப் பார்த்தது.
  14.     1961 - கோவாவை இந்தியா, போர்த்துக்கலிடம் இருந்து கைப்பற்றியது.
  15.     1989 - 25 ஆண்டுகளின் பின்னர் பிரேசிலில் முதலாவது பொதுத்தேர்தல் இடம்பெற்றது.

No comments:

Post a Comment