Sunday, December 9, 2012

வரலாற்றில் இன்று Today in History 9/12

வரலாற்றில் இன்று   
Today in History  திசம்பர் 9
  1.     ஐ.நா.சபை - அனைத்துலக ஊழல் எதிர்ப்பு நாள்
  2.     1582 (சூலியன், ஞாயிற்றுக்கிழமை) - பிரான்சு அடுத்த நாளை திங்கட்கிழமை,திசம்பர் 20 (கிரெகோரியன்) ஆக்கியது.
  3.     1793 - நியூயோர்க் நகரின் முதலாவது நாளிதழ் "தி அமெரிக்கன் மினேர்வா" வெளியிடப்பட்டது.
  4.     1856 - ஈரானிய நகரம் புசேகர் பிரித்தானிய ஆக்கிரமிப்புப் படைகளிடம் வீழ்ந்தது.
  5.     1868 - வில்லியம் கிளாட்சுடோன் (William Gladstone) பிரிட்டனின் பிரதமராக முதன் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் நான்கு முறை பிரிட்டிசு பிரதமராக இருந்தார்.
  6.     1905 - பிரான்சில் அரசையும் கிறித்தவ தேவாலயங்களையும் பிரிக்கும் சட்டமூலம் கொண்டுவரப்பட்டது.
  7.     1917 - பிரித்தானியர் பாலஸ்தீனத்தின்  செருசலேம் நகரைக் கைப்பற்றினர்.
  8.     1922 - போலந்தின் முதலாவது அதிபராக "கப்ரியேல் நருட்டோவிச்" தெரிவு செய்யப்பட்டார்.
  9.     1937 - சப்பானியப் படைகள் சீன நகரான நான்சிங்கைத் தாக்கின.
  10.     1940 - இரண்டாம் உலகப் போர்: பிரித்தானிய,  இந்தியப் படைகள் இத்தாலியப் படையினரை எகிப்தில் தாக்கினர்.
  11.     1946 - இந்தியச் சட்டசபை  இராசேந்திர பிரசாத் தலைமையில் அமைக்கப்பட்டது.
  12.     1953 -  செனரல் எலெக்ட்றிக் நிறுவனம் தனது நிறுவனத்தில் பணியாற்றிய கம்யூனிசுட்கள் அனைவரையும் பணிநீக்கம் செய்தது.
  13.     1961 - பிரித்தானியாவிடம் இருந்து தங்கனீக்கா விடுதலை பெற்றது.
  14.     1963 -  சிசிசி/CCC எனப்படும் குடிமக்கள் ஆலோசனைக் குழுக்கள் முதன் முதலில் சிங்கப்பூரில் அறிமுகம் கண்டன
  15.     1979 - பெரியம்மை நோய் முற்றாக அழிக்கப்பட்டு விட்டதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. மனித உயிர் கொல்லி நோயொன்று முற்றாக அழிக்கப்பட்டது இதுவே முதலாவதாகும்.
  16.     1984 - தமிழக மக்கள் விடுதலை இயக்கம் துவக்கம்
  17.     1986 - இந்தியைத் திணிக்கும் அரசியல் சட்ட நகலை எரித்ததற்காகத் தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி உள்ளிட்ட 10 தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.
  18.     1990 - லெக் வலேசா போலந்தின் முதலாவது மக்களால் தெரிவு செய்யப்பட்ட அதிபரானார்.
  19.     1992 - வேல்சு இளவரசர் சார்ள்சு, இளவரசி டயானா இருவரினதும் பிரிவினை அறிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment