Sunday, December 16, 2012

வரலாற்றில் இன்று Today in History 16 / 12

 வரலாற்றில் இன்று   
Today in History  திசம்பர் 16

  1.     பெருமணல் கார்னெட் எதிர்ப்பு
  2.     1431 - இங்கிலாந்தின் ஆறாம்  என்றி பிரான்சு மன்னனாகப் பாரிசில் முடிசூடினான்.
  3.     1497 - வாசுகொடகாமா முன்னர் பர்தலோமியூ டயசு சென்றடைய முடியாத தென்னாபிரிக்காவின் அட்லாண்டிக் கரையோரத்தில் உள்ள நன்னம்பிக்கை முனையைச் சுற்றி வந்தார்.
  4.     1598 - கொரிய, சப்பானியக் கடற்படைகளுக்கிடையே இடம்பெற்ற சமரில் கொரியா வெற்றி பெற்றது.
  5.     1653 - சேர் ஒலிவர் குரொம்வெல் இங்கிலாந்து, இசுகொட்லாந்து, அயர்லாந்து நாடுகள் அடங்கிய பொதுநலவாயத்தின் தலைவரானார்.
  6.     1707 - சப்பானின் ஃபூசி மலை கடைசித் தடவையாக வெடித்தது.
  7.     1773 - அமெரிக்கப் புரட்சி: பாசுடன் தேநீர் கொண்டாட்டம் - அமெரிக்கர்கள் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனியின் கப்பல்களில் ஏறித் தேநீர்ப் பெட்டிகளை பாசுடன் துறைமுகத்தில் எறிந்தனர்.
  8.     1920 - மிக மோசமான நில நடுக்கங்களுள் ஒன்று சீனாவின் கான்சீ மாநிலத்தைத் தாக்கியது, ரிக்டர் அளவுகோளில் எட்டாக பதிவான இயற்கைப் பேரிடரில் சுமார் 200 ஆயிரம் பேர் மடிந்தனர்.
  9.     1925 - இலங்கை வானொலியின் வானொலி சேவை கொழும்பில் ஆரம்பம்.
  10.     1941 - இரண்டாம் உலகப் போர்: சப்பானியர்கள் சரவாக்கீன் மிரி நகரைக் கைப்பற்றினர்.
  11.     1971 - வங்காள த் தேச விடுதலைப் போரில் பாகிசுதான் இராணுவம் சரணடைந்து போர் முடிவுக்கு வந்தது.
  12.     1971 - பாகுரேன் பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்றது.
  13.     1991 - கசக்ஸ்தான் சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலை பெற்றது
  14.     2000 - சூபிடர் கோளைச் சுற்றும் Ganymede என்ற நிலாவில் பனிக்கட்டி மேற்பரப்பின் கீழ்த் திரவ உப்புநீர்க்கடல் இருப்பதற்கான தடயங்கள் கிடைத்திருப்பதாக விஞ்ஞானிகள் அறிவித்தனர்.

No comments:

Post a Comment