Saturday, December 8, 2012

தெரிந்து கொள்ளுங்கள்

தெரிந்து கொள்ளுங்கள்

அட, அப்படியா?
•உலகின் மிகப் பெரிய கோயில் கம்போடியா நாட்டிலுள்ள அங்கோர்வாட் கோயில் ஆகும். இதன் பரப்பளவு சுமார் 402 ஏக்கர்.

•பிலிப்பைன்ஸ் நாட்டில் 7000 தீவுகள் உள்ளன.

•இரண்டு முறை நோபல் பரிசு பெற்ற ஒரே பெண்மணி மேரி கியூரி.

•முதுகெலும்பு கொண்ட உயிரினங்களில் முதுகெலும்பு தரையில் படுமாறு உறங்குபவன் மனிதன் மட்டும்தான்!

•பெங்குவின் பறவை தனது வாழ்நாளில் ஒரே ஒரு முட்டைதான் இடும்.

•நட்சத்திர மீனின் உடலில் மூளை என்ற உறுப்பே இல்லை.
-தொகுப்பு: வளவ.துரையன், கடலூர்.

நன்றியுள்ள நாய்...
•டோக்கியோவில் நாய்களுக்கென்றே தனி ஹோட்டல் உள்ளது.

•விலங்குகளில் அதிக பற்களைக் கொண்டது நாய் (48 பற்கள்).

•நாய் 12 ஆண்டுகளில் முதுமை அடைந்து விடும்.

•ஆஸ்திரேலியாவில் காணப்படும் "டிங்கோஸ்' என்ற வகை நாய் குரைப்பதே இல்லை.

•நாய்க்கடி மருந்து ஆராய்ச்சி நிலையம் குன்னூரில் உள்ளது.

•வாசனையைக் கண்டறிவதற்காக ஒவ்வொரு உயிரினங்களுக்கும் உணர்வு செல்கள் உள்ளன. மனிதனுக்கு சுமார் 60 மில்லியன் செல்கள் உள்ளன. நாய்களுக்கோ சுமார் 250 மில்லியன் செல்கள் உள்ளன. அதனால்தான் நாய்களுக்கு மோப்ப சக்தி அதிகமாக இருக்கிறது.
-தொகுப்பு: மு.இளங்கோவன்,
மன்னார்குடி.

தட்டான்கள் (தும்பி)
•ஒளி ஊடுருவக்கூடிய இறக்கைகளைக் கொண்ட தட்டான் பூச்சிகள் ஈ இனத்தைச் சேர்ந்தவை.

•இவற்றின் தலையில் மிகப் பெரிய கூட்டுக் கண்கள் உண்டு. ஒவ்வொரு கூட்டுக் கண்ணும் 20 ஆயிரம் விழி லென்சுகளைக் கொண்டவை. தலையைத் திருப்பாமலேயே அனைத்துத் திசைகளிலும் பார்க்கும். 180 டிகிரி வரை திரும்பும்.

•தட்டான்களுக்குக் கால்கள் உள்ளன. ஆனாலும் அவை நடப்பதில்லை. ஓரிடத்தையோ, பொருளையோ பற்றிக் கொள்ளவே கால்களைப் பயன்படுத்துகின்றன.

•பூச்சி இனங்களில் மிகவும் சுறுசுறுப்பாகப் பறக்கக் கூடியது தட்டான்கள். நிமிடத்துக்கு 1000 முறை சிறகுகளை அசைக்கும்.

•இவை முன்னாலும் பறக்கும். தலைகீழாய்ப் புரண்டும் பறக்கும். ஆகாயத்தில் இறக்கைகளை விரித்து அசைவற்று அப்படியே நிற்கும். இதன் பறக்கும் வேகம் மணிக்கு 100 கி.மீ.
-தொகுப்பு: ஆ.திலீபன், திருநெல்வேலி.

திருக்குறள் தகவல்கள்...

•ஒரே ஒரு குறளில் மட்டும் நெருஞ்சிப் பழத்தைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

•குறளில் இடம்பெற்றுள்ள மலர்கள் இரண்டே இரண்டு. அவை, அனிச்ச மலர், குவளை மலர்.

•திருக்குறளை முதன்முதலில் மொழிபெயர்த்தவர் வீரமாமுனிவர். 1730-ஆம் ஆண்டு லத்தீன் மொழியில் மொழிபெயர்த்தார்.

•திருக்குறளில் "கடவுள்', "தமிழ்' என்ற சொற்கள் ஒரு இடத்தில்கூட இடம்பெறவில்லை.

•1330 குறள்களில் மொத்தம் 42 ஆயிரத்து 194 எழுத்துகள் உள்ளன.

•திருக்குறளை முதன்முதலில் ஓலைச் சுவடியிலிருந்து நூல் வடிவில் வெளியிட்டவர் எல்லிஸ் துரை.

•திருக்குறளில் ஒரே அதிகாரம் இரண்டு முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. அது "குறிப்பறிதல்' என்னும் அதிகாரமாகும்.

•திருக்குறளில் "ஒü' என்னும் உயிரெழுத்தில் தொடங்கும் குறட்பா எதுவும் இல்லை.
-தொகுப்பு: த.ஜெகன், சரலூர்.

ஜீன்ஸ் கதையைக் கேளுங்க...
பதினெட்டாம் நூற்றாண்டில் தோன்றினாலும் இன்றைய நவநாகரீக உலகிலும் தனது தனித்தன்மையைக் கொண்டிருக்கும் ஒரே ஆடை - ஜீன்ஸ்!
இத்தாலி நாட்டின் ஜெனோவா நகரத்தில் கார்டுராய் எனப்படும் தடித்த, சொரசொரப்பான பருத்தி இழைகளைத் தயாரித்த தொழிற்சாலையில் ஜீன்ஸ் தோன்றியது. ஜீன் அல்லது ஜீயன் என்றுதான் ஆரம்பத்தில் அழைக்கப்பட்டது. இதனை இத்தாலிய முதலாளிகள் ஐரோப்பா முழுவதும் ஏற்றுமதி செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, பிரான்ஸிலுள்ள நிமே நகர் நெசவாளிகள் ஜீன்ஸ் போன்ற ஒருவகை இழையை உருவாக்கிப் பார்த்துத் தோற்றுப் போயினர். அந்த முயற்சியும் தோல்வியும் ஒரு புதுவிதமான ஜீன்ஸ் துணி - டெனிம் - உருவாகக் காரணமாக அமைந்தது.
பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் ஜீன்ஸ் தனது ஆதிக்கத்தை அமெரிக்க ஐக்கிய நாடுகளில் உருவாக்கியது. நீல வண்ண ஜீன்ஸ்களை அவர்கள் பெரிதும் விரும்பினார்கள்.
இதில் ஜேக்கப் டேவிஸ், கால்வின் ரோஜர்ஸ், லெவி ஸ்ட்ராஸ் ஆகியோர் 1873-ஆம் ஆண்டுவாக்கில் விதவிதமான வடிவங்களில் ஜீன்ûஸ வடிவமைத்தனர்.
ஆரம்பத்தில் குதிரைகளில் அமர்ந்து கால்நடைகளை மேய்ப்பவர்களால் (கௌபாய்) விரும்பி அணியப்பட்ட ஜீன்ஸ் ஆடைகள், பின்னர் அனைத்து இளைஞர்களையும் கவர ஆரம்பித்தன.
அமெரிக்கா வாழ் ஸ்பானிஷ்காரர்களையும் இந்த ஆடை விட்டுவைக்கவில்லை.
இடையில் சிறிது காலம் திரையரங்குகள், பள்ளிகள், உணவு விடுதிகளில் ஜீன்ஸ் ஆடைக்குத் தடைகள் விதிக்கப்பட்டன.
சிறிது காலத்துக்குப் பிறகு மக்களின் ஆடையாக இதே ஜீன்ஸ் மகுடம் சூட்டிக் கொண்டது.
-ர.லாரா ஐஸ்வர்யா ரேன், புதுச்சேரி.

சின்னச் சின்ன செய்திகள்
•கருப்பஞ்சாற்றில் உள்ள சர்க்கரையின் பெயர் "சுக்ரோஸ்'.

•மின்னலானது விநாடி ஒன்றுக்கு இருபத்து எட்டாயிரத்து ஐந்நூறு மைல் வேகத்தில், நாம் வாழும் பூமியை நோக்கி விண்ணிலிருந்து பாய்கிறது.

•மனிதனின் கைவிரல் எலும்புகளும் தவளையின் கால் விரல் எலும்புகளும் ஒரே மாதிரியான வடிவமைப்பு கொண்டவை.
-தொகுப்பு: பாலு, சென்னை.


No comments:

Post a Comment