வரலாற்றில் இன்று
Today in History நவம்பர்
17
- அனைத்துலக மாணவர் நாள்
- 1292 -சோன் பலியல் இசுகொட்லாந்தின் அரசன் ஆனான்.
- 1511- இசுபெயின் மற்றும் இங்கிலாந்து ஆகியன பிரான்சுக்கு எதிராக அணி திரண்டன.
- 1558 - இங்கிலாந்தின் முதலாம் மேரி இறக்க அவரது ஒன்றுவிட்ட சகோதரி முதலாம் எலிசபெத் அரசியானார்.
- 1820 - கப்டன் நத்தானியல் பால்மர் அண்டார்ட்டிக்காவை அடைந்த முதலாவது அமெரிக்கர் ஆனார். பால்மர் குடாநாடுக்கு இவரது நினைவாகப் பெயர் சூட்டப்பட்டது.
- 1831 - எக்குவாடோர் மற்றும் வெனிசுவேலா ஆகியன பாரிய கொலம்பியாவில் இருந்து பிரிந்தன.
- 1869 - சூயசுகால்வாய் அதிகாரப்பூர்வமான போக்குவரத்துக்குத் திறந்து விடப்பட்டது. மத்திய தரைக்கடலையும் செங்கடலையும் இணைக்கும் அந்தக் கால்வாய் 160 கிலோ மீட்டர் நீளமானது
- 1873 - பெசுட், பூடா, மற்றும் ஓபுடா ஆகிய நகரங்கள் இணைக்கப்பட்ட புடாபெசுட் நகரம் அங்கேரியின் தலைநகராக்கப்பட்டது.
- 1878 - இத்தாலியின் முதலாம் உம்பேர்ட்டோ மீதான முதலாவது கொலை முயற்சி இடம்பெற்றது.
- 1880 - பிரிட்டனில் இலண்டன் பல்கலைக் கழகத்தில் முதன் முதலாக மூன்று பெண்களுக்கு இளங்கலை(BA) பட்டம் வழங்கப்பட்டது
- 1903 -இரசியாவின் சமூக சனநாயக தொழிற் கட்சி போல்செவிக் (பெரும்பான்மை), மேன்செவிக் (சிறுபான்மை) என இரண்டாகப் பிளவுண்டது.
- 1922 - முன்னாள் ஓட்டோமான் பேரரசின் சுல்தான் ஆறாம் மெகமெது இத்தாலிக்கு நாடு கடத்தப்பட்டான்.
- 1933 - ஐக்கிய அமெரிக்கா சோவியத் ஒன்றியத்தை அங்கீகரித்தது.
- 1950 - 14 ஆவது தலாய் லாமா டென்சின் கியாட்சோ தனது 15வது வயதில் திபெத்தின் அரசுத் தலைவரானார்.
- 1970 - வியட்நாம் போர்: மை லாய் படுகொலைகள் தொடர்பாக அமெரிக்காவின் லெப்டினண்ட் வில்லியம் கலி விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.
- 1970 - சோவியத்தின் லூனாக்கொட் 1 சந்திரனில் தரையிறங்கியது. தொலைவில் இருந்து இயக்கக்கூடிய ரோபோ ஒன்று வேறோர் உலகத்துக்கு அனுப்பப்பட்டது இதுவே முதற் தடவை ஆகும்.
- 1970 - டக்லசு ஏங்கெல்பேர்ட் முதலாவது கணினி சுட்டி(mouse) க்கான காப்புரிமம் பெற்றார்.
- 2003 - ஆர்னோல்ட் இசுவார்செனேகர் கலிபோர்னியாவின் ஆளுநரானார்
No comments:
Post a Comment