Sunday, November 4, 2012

விவேகானந்தர் சிந்தனைகள்- விரிந்த உள்ளம் வேண்டும்

* பிறருக்காகச் செய்கின்ற சேவையால், நம்மைத் தூய்மைப்படுத்திக் கொள்ள முடியும். * சுயநலத்தால் சுகம் கிடைக்கும் என்று மனிதன் முட்டாள்தனமாக நினைக்கிறான். உண்மையில், தன்னலத்தை ஒழிப்பதில் தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது.* நம்மை நாமே பெரிதாக எண்ணிக் கொண்டு அகந்தை கொள்வது கூடாது. [...]
* மற்றவர்களுக்கு நன்மை ஏற்படுமானால் நரகத்திற்குக் கூட செல்வதற்குத் தயாராய் இருங்கள். மரணம் வருவது உறுதியாக இருக்கும்போது ஒரு நல்ல காரியத்திற்காக உயிரை விடுவது மேல்.* உலகில் நல்லவர்கள் பெரிய தியாகங்களைச் செய்கிறார்கள். அதன் விளைவாக வரும் நன்மைகளை மனிதகுலம் முழுவதும் அனுபவிக்கிறது.* [...]
* ஆன்மிக வாழ்வில் பேரின்பம் கிடைக்காமல் போனால் அதற்காகப் புலனின்ப வாழ்வில் திருப்தி கொள்ளக்கூடாது. இது அமுதம் கிடைக்காவிட்டால்சாக்கடைநீரை நாடிச் செல்வதற்கு சமம்.* மாபெரும் வீரனே! உறக்கம் உனக்குப் பொருந்தாது. துணிவுடன் எழுந்து நில்.* உன்னை நீயே பலவீனன் என்று நினைப்பது உனக்கு பொருந்தாது. [...]
* ஒரு கருத்தை எடுத்துக் கொண்டு அதை ஒட்டியே வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள். அதைப் பற்றிய சிந்தனையில் மூழ்கி கனவு காணுங்கள். உடலின் ஒவ்வொரு அணுவிலும் அந்த கருத்தே நிறைந்திருக்கட்டும். வெற்றிக்கு இது தான் வழி.* உலகிற்கு நன்மை செய்தால், நமக்கு நாமே தான் நன்மை செய்து கொள்கிறோம்.* கடவுள் ஒவ்வொரு [...]
* நாம் நல்ல, தீய எண்ணங்களின் உரிமையாளர்களாக இருக்கிறோம். நல்ல எண்ணங்களின் கருவிகளாக செயல்பட்டால் தூய்மை பெறுவோம்.* நாம் இருக்கும் நிலைமைக்கு நாமே பொறுப்பாளிகள். நாம் எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ, அதை நம்மாலேயே உருவாக்கிக் கொள்ள முடியும்.* புது மலர்களே இறைவனின் பாதங்களில் [...]
* நம் ஒவ்வொருவரிடமும் எல்லையற்ற ஆற்றலும், தூய்மையும், மகிழ்ச்சியும் நிறைந்திருக்கின்றன. * என்னால் முடியும் என்று நினைத்து செயலாற்றினால் அனைத்தையும் செய்து முடிப்பீர்கள்.* மனிதனைப் பிணைத்திருக்கும் பந்தம் என்னும் கட்டுகள் அனைத்தும் கடவுளின் கருணையால் மட்டுமே அவிழும்.* தூய்மையான [...]
* உங்களிடம் உள்ளதை எல்லாம் பிறருக்கு கொடுத்துவிட்டு பிரதிபலன் எதிர்பாராமல் வாழுங்கள்.* நாம் உண்பதும், உடுப்பதும், உறங்குவதும் கடவுளுக்காகவே. அனைத்திலும் எப்போதும் கடவுளையே காணுங்கள்.* ஒரு எஜமானனைப் போல கடமையைச் செய்யுங்கள். அடிமையைப் போல இருக்காதீர்கள். சுதந்திர உணர்வுடன் பணியாற்றுங்கள்.* [...]
* செல்வம் பெருகியுள்ள காலத்தில் தான் ஒருவனுக்கு பணிவு தேவை. அதே சமயம் வறுமையுற்ற காலத்தில் மனிதனுக்கு துணிவு அவசியம்.* தன்னந்தனியாக இருப்பவன் பகையைத் தேடிக் கொள்ளக்கூடாது. அவ்வாறு செய்தால் பித்துப்பிடித்தவனைப் போல அலைய நேரிடும்.* துன்பமற்ற இன்பமும், தீமையற்ற நன்மையும் அடைவது என்பது இயலாத [...]
* சோம்பேறித்தனத்தை எந்த வழியிலும் துரத்தியாக வேண்டும். சுறுசுறுப்பு என்பதற்கு "எதிர்ப்பது' என்றே பொருள்.* ஒரு நல்ல லட்சியத்தை ஏற்றுக்கொண்டு, அதை அடைவதற்காக தைரியத்துடன் போராடும் வெற்றி வீரனாகத் திகழுங்கள்.* நாம் எல்லோரும் கடவுளின் பிள்ளைகள். எதையும் சாதிக்கக் கூடிய வலிமை நமக்குள் [...]
* உங்கள் உடல், மனம், அறிவு இம்மூன்றையும் பலவீனமாக்கும் எதையும் நஞ்சென்று ஒதுக்கி விடுங்கள். அவற்றை மனதிற்குள் திணிக்காதீர்கள்.* வஞ்சனையால் எதையும் சாதிக்க முடியாது. அன்பாலும், உண்மையாலும் பெரிய செயலைக் கூட எளிதாகச் செய்து விட முடியும்.* பரந்த உலகில் பிறந்த நீங்கள், அதற்கு அடையாளமாக ஏதேனும் [...] தினமலர்

No comments:

Post a Comment