Saturday, November 17, 2012

தெரிந்து கொள்ளுங்கள்...

தெரிந்து கொள்ளுங்கள்...

தெரியுமா ஜூடோ?
பண்டைக் காலத்தில் ஜப்பானியர்கள் தற்காப்புக்குப் பயன்படுத்திவந்த சண்டைக்கலை  "ஜூஜூட்சு' என்பதாகும். இந்தக் கலை ஜிகாரோ கானு என்பவரால் சற்று மாறுபட்ட நுணுக்கங்களுடன் "ஜூடோ' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஜூடோ என்ற சொல்லின் பொருள்: சாதுவான வழி.

கராத்தே
இந்தியாவில் வாழ்ந்த புத்த பிட்சுகள் விலங்குகளிடமிருந்து தம்மைக் காத்துக் கொள்ளக் கற்ற கலையே கராத்தே. இக்கலை, இந்தியாவில் இருந்துதான் ஜப்பானுக்குச் சென்றது என்பர். கராத்தே என்ற ஜப்பானிய சொல்லிற்கு "வெறும் கை' என்று பொருள்.
- டி.எஸ்.பாலு, சென்னை.

நண்டு
*   உலகத்தில் ஏறக்குறைய 2,000 வகை நண்டுகள் காணப்படுகின்றன.
*   நண்டுகளில் 15 வகையான நண்டுகளை மனிதர்கள் சாப்பிடுகின்றனர்.
*   இந்தியாவில் 700 வகையான நண்டுகள் உள்ளன.
*   தலாமிட்டா கிரேனேட்டா என்னும் நண்டு
5 லட்சம் வரை முட்டையிடும்.
*   பச்சை நண்டு 3 லட்சம் முதல் 5 லட்சம் வரை
முட்டையிடும்.
*   சாதாரண நண்டு 1 லட்சம் முதல் 4 லட்சம் வரை முட்டையிடும்.
*   100 கிராம் நண்டுக் கறியில் 16.9 சதவிகிதம் புரதமும் 2.9 சதவிகிதம் கொழுப்பும் 1.7 சதவிகிதம் சாம்பல் சத்தும் 1.3 சதவிகிதம் மாவுச்சத்தும் கிடைக்கின்றன.
*   நண்டுக் கறியில் மனிதர்களுக்குத் தேவையான உயிர்ச்சத்துக்களான வைட்டமின் பி1, பி2, பி6 போன்றவை கிடைக்கின்றன.
*   சிறிய நண்டுகளைப் பெரிய நண்டுகள் சாப்பிட்டுவிடும்.
- சி.செபாஸ்டியன் ஜெயராஜ்,
கும்பகோணம்.

செல்லப் பறவை மயில்!
இந்தியாவின் தேசியப் பறவை மயில். பறவை இனங்களில் வண்ண ரசக் கலவையான படைப்பு. மயில்களில் நீல நிறம், பச்சை நிறம் என இருவகை உண்டு.
இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் உள்ள மயில்கள் நீல நிற வகையைச் சேர்ந்தவை. மலேசியா, இந்தோனேசியா போன்ற தென் கிழக்கு ஆசிய நாடுகளில் வாழ்பவை பச்சை நிற வகையைச் சேர்ந்தவை. இணை மயில்கள் விலை ரூபாய் 28 ஆயிரமும் அதற்கு மேலும்.
இங்கிலாந்தில் நாரிச் நகருக்கு அருகில் ஆயிரம் மயில்களைக் கொண்ட பண்ணை உள்ளது. ஐரோப்பாவில் வீடுகளில் வளர்க்கும் செல்லப் பறவை மயில்.
- "ஆச்சா', செவல் குளம்.

20-ஆம் நூற்றாண்டு மேதைகள்!

1.    சுரங்கத் தொழிலாளியின் மகனாகப் பிறந்து சுரங்கம் வெட்டிய ஒருவர், பகலெல்லாம் ஆடு மேய்த்துவிட்டு இரவெல்லாம் பள்ளிகளில் படித்து அறிவைத் தேடிக் கொண்ட ஒருவர் - ரஷ்யாவின் பிரதமராக இருந்த குருசேவ்.
2.   புகழ் பெற்ற அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஐக், ஒரு காலத்தில் கூடையில் காய்கறிகளைத் தூக்கிச் சுமந்து விற்றவர்.
3.   எட்டு வயதில் ஏர் பிடித்து, பதினான்கு வயதில் திருமணம் செய்து பள்ளி ஆசிரியராக வர நினைத்து முடியாமல் போய் சீனப் பிரதமரானார் மா சே துங்.
4.   செல்வத்திலே பிறந்து, சிறைகளில் பல்லாண்டைக் கழித்து ஈடு இணையற்ற புகழும் பெருமையும் பெற்றவர் நேரு.
- சி.இராஜேஸ்வரி, தூத்துக்குடி.

அழியாத ஓவியம்
*  லியனார்டோ டாவின்ஸியின் அழியாப் புகழ் பெற்ற ஓவியம் மோனாலிஸô ஆகும்.
*   நிகரற்ற அழகும் செல்வமும் ஒருங்கே இணையப் பெற்ற "லிஸாகொர்டினி' என்ற பெண்ணின் உருவம்தான், "மோனாலிஸô' ஆகும். பிளாரென்ஸ் நாட்டைச் சேர்ந்த அவள் கணவனின் பெயர் மெஸ்ஸா கியோ கோண்டா என்பது ஆகும்.
*   தனது 21-வது வயதில் டாவின்ஸி படம் வரைவதற்காக லிஸா உட்கார்ந்திருந்தாள். ஆனால் ஓவியத்தை டாவின்ஸி, வரைந்து முடிப்பதற்குள் ஆறுவருடங்கள் ஆகிவிட்டன.
*   மோனாலிஸா படத்தைப் பார்த்தால் அதில் அவள் கறுப்பு உடை அணிந்திருப்பதும் மோதிரம் அணியாமல் இருப்பதும் தெரியும். அதற்குக் காரணம் யார் தெரியுமா?
அந்தப்படம் வரைய ஆரம்பிப்பதற்குச் சில தினங்களுக்கு முன்பு லிஸா கொர்டினியின் குழந்தை இறந்தது. அதற்குத் துக்கம் அனுஷ்டிக்கத்தான் அவள் அவ்வாறு கறுப்பு உடையில் காணப்படுகிறாள். அந்தப்படம் வரைய ஆறு வருடங்கள் ஆனாலும் முதலில் இருந்த சூழ்நிலையிலேயே டாவின்சி வரைந்திருக்கிறார்.
*   மோனாலிஸா ஓவியத்தை லியனார்டோ டாவின்ஸி அழியாப் பொக்கிஷம் என்றே கருதி வந்தார். அவர் அதை வரைந்த பின்னர், ஒருவருக்கும் கொடுக்கவில்லை.
*   பின்னர் அந்த ஓவியத்தை பிரான்ஸின் மன்னருக்கு 12 ஆயிரம் பிராங்குகளுக்கு விற்றார் டாவின்ஸி.
தொகுப்பு: நா.கிருஷ்ணவேலு, புதுச்சேரி.

வரலாறு படைத்தவர்களின் வரலாற்றைப் படியுங்கள்!
*  குதிரை லாயத்தின் மேற்பார்வையாளரின் மகன்?
வில்லியம் ஷேக்ஸ்பியர்.
*  வறுமையில் வாழ்ந்த புத்தக வியாபாரியின் மகன்?
சாமுவேல் ஜான்சன் (ஆங்கில அகராதியின் ஆசிரியர்).
*  வீட்டு வேலை செய்தவரின் மகன்?
சார்லி சாப்ளின்.
*  படகு செய்து வாழ்க்கை நடத்திய ஏழையின் மகன்?
தாமஸ் ஆல்வா எடிசன்.
*  மெழுகுவர்த்தி  வியாபாரியின் மகன்?
பெஞ்சமின் பிராங்க்ளின்.
*  கட்டிடத்  தொழிலாளியின் மகன்?
ஹிட்லர்
*  செருப்பு தைத்த தொழிலாளியின் மகன்?
ஆபிரகாம் லிங்கன்.
- அ.நெüபல் ஹபீப், நெல்லை.

பிராணிகளில் பச்சோந்தி மட்டுமே நிறம் மாறும் தன்மை உடையது என்று நம்பினால் அது தவறான எண்ணமாகும். ஆக்டோபஸ் கடல் பிராணியாலும் தனது நிறத்தை மாற்றிக் கொள்ள முடியும். இந்தப் பிராணியின் கடினத் தோலில் பல வண்ணங்களைக் கொண்ட பைகள் உள்ளன. இந்த வண்ணங்களைத் தேவையான சமயங்களில் தனது நரம்புகளின் மூலம் உடலில் பல பகுதிகளுக்கும் அனுப்பி சிவப்பாகவோ நீல நிறமாகவோ பர்ப்பிள், பிரெüவுன் வண்ணங்களிலோ அல்லது வரிக்குதிரைகளைப் போல் பட்டை பட்டையாகவோ தன் உடலை நிறம் மாற்றிக் கொள்கிறது இந்த உயிரினம்.
- ஏகே. நாசர், டி.ஆர். பட்டினம்.

18 செய்திகள்
*     கீதையின் அத்தியாயங்கள் 18.
*     மகாபாரதப் பருவங்கள் 18.
*     கலம்பகத்தின் உறுப்புகள் 18.
*     பாரதப் போர் 18 நாள்கள் நடைபெற்றது.
*     தேவ, அசுரப் போர் 18 ஆண்டுகள் நடைபெற்றது.
*     சித்தர்களின் எண்ணிக்கை 18 ஆகும்.
- நெ.இராமன், சென்னை.

No comments:

Post a Comment