Sunday, November 18, 2012

அறிவியல் ஆயிரம் - தகவல் சுரங்கம்

அறிவியல் ஆயிரம்

உயர்மிகு உணவுகள்
"சூப்பர் ஸ்டார் உணவுகள்'

அக்ரோட், பாதாம் பருப்பு, நிலக்கடலை, முந்திரிப்பருப்பு, பிஸ்தா ஆகியவை கொட்டை வகை உணவுகள். இவை "அதிக ஆற்றல் உணவுகள்' என கருதப்பட்டன. எனவே இவற்றை தவிர்க்க வேண்டும் அல்லது குறைவாகப் பயன்படுத்த வேண்டும் என்னும் கருத்து நிலவியது.தற்போது நடந்த ஆராய்ச்சிகள் கொட்டை வகைகளுக்கு "சூப்பர் ஸ்டார்' அந்தஸ்து வழங்கி உள்ளன. நாள்தோறும் 20 முதல் 30 கிராம் கொட்டை வகைகளைச் சேர்ப்பது இருதயத்தைக் காக்குகிறது. கொட்டை வகைகளில் கொழுப்பு மிகுதி என்றாலும், அந்த கொழுப்பு உடலுக்கு நன்மை செய்யும் கரைசலற்ற கொழுப்பு அமிலங்களாக உள்ளன.நல்ல கொலஸ்டிராலை வலுப்படுத்தவும், தீமை விளைவிக்கும் கொலஸ்டிரால்களைக் குறைக்கவும் கொட்டை வகைகள் உதவுகின்றன. ஆனால் வறுத்த மற்றும் அதிக உப்பு சேர்க்கப்பட்ட கொட்டை வகைகளைத் தவிர்க்க வேண்டும்.

தகவல் சுரங்கம்

சாதிகள் இல்லாத சமயம்

சீக்கிய சமயத்தில், ஜாதிகள் எதுவும் இல்லை. "அனைவரும் ஒரே இனம்' என்னும் கருத்து உள்ளது.துவக்க காலத்தில் குருநானக் சீக்கிய சமயத்தை உருவாக்கிய போது, எந்த ஜாதியில் இருந்து சீக்கிய சமயத்திற்குள் வந்தார்களோ, அந்த ஜாதியின் அடையாளத்துடன் சீக்கிய சமயத்தில் இருந்தனர். 10வது குருவான குரு கோவிந்த் சிங், ஜாதி வேறுபாடுகளைக் களைய வேண்டும் என்னும் நோக்கில், சீக்கிய ஆண்கள் அனைவரும் தங்கள் ஜாதியின் குடும்பப் பெயரை கைவிட்டு, தங்கள் பெயருக்குப் பின்னால் "சிங்' என்பதை மட்டும் சேர்க்க வேண்டும் என்னும் நடைமுறையை உருவாக்கினார்.

"சிங்கம்' என்னும் பொருளில் தான் "சிங்' என்ற பெயர் சேர்க்கப்பட்டது. தனது பெயரை முதலில் கோவிந்த் ராய் என்பதில் இருந்து, கோவிந்த் சிங் என மாற்றினார். பெண்களின் பெயருக்கு பின்னால் இளவரசி என்னும் அர்த்தத்தில் "கவுர்' என்னும் பெயர் சேர்க்கப்பட்டது. இவ்வாறு சீக்கிய சமயம், ஜாதிகள் இல்லாத சமயமாக உருவானது.

No comments:

Post a Comment