Thursday, January 14, 2010

விடுகதைகள்



1. விண்ணில் முட்டும்; மண்ணில் கொட்டும். அது என்ன?2. நாக்கினால் நகரும்; நல்லது பல உணர்த்தும். அது என்ன?3. தலையுண்டு முடியில்லை; உடல் உண்டு காலில்லை; நிறுத்தினால் நிற்பான். அவன் யார்?4.நிம்மதிக்கு விரியும்; நிலை மாறினால் சுருங்கும். அது என்ன?5. ஓடும் குதிரை, ஒளியும் குதிரை; தண்ணீரைக் கண்டால் தவிக்கும் குதிரை. அது என்ன?6. காதைப் பிடித்து அழுத்தினால் கண்ணீர் விட்டு அழும். அது என்ன?7. ஊரெல்லாம் ஊளையிட்டுச் செல்வான். அவன் யார்?8. பிறர் மானம் காப்பான். அவன் யார்?9. உலர்ந்த கொம்பிலே மலர்ந்த பூ. அது என்ன?10. அன்றாடம் தேயும் ஆண்டி. அவன் யார்?11. நீர் ஊற்றினால் மறையும்; நீர் வற்றினால் விளையும். அது என்ன?12. நாலு கட்டையில் உருவாகி நடுச்சுவரில் குடியிருப்பான். அவன் யார்?13. நீந்தத் தெரிந்தவனுக்கு குளிக்கத் தெரியாது. அவன் யார்?14. அழகு தர நெருப்பில் குதிக்கும். அது என்ன?15. உடல் எரியும்; உயிர் போகாது. அது என்ன?இரா.பாலகிருஷ்ணன்விடைகள்:1.மழை2.பேனா3.குண்டூசி4.பாய்5.செருப்பு6.தண்ணீர் குழாய் 7.ரயில்8.ஆடை9.குடை10.தினசரி காலண்டர்11.உப்பு12.ஜன்னல்13.கப்பல்14.தங்கம்15.மின்மினிப்பூச்சி

No comments:

Post a Comment