Thursday, January 14, 2010

உங்கள் பக்கம்



வெடிமருந்து!​​* கிராண்ட் திட்டுப் பகுதி உலகின் முக்கிய மீன் பிடித் துறையாக விளங்குகிறது.​ இது வட அமெரிக்காவில் உள்ளது.* விண்மீன்களில் ஒன்று ஹெர்க்குலிஸ்.​ இது சூரியனை விட மிகப் பெரியது.* மாக்ஸ் முல்லர் என்ற வெளிநாட்டவர் வேதத்தை முதன்முதலில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்.* உடலில் ரத்த ஓட்டம் இடைவிடாமல் நடைபெறுகிறது என்பதைக் கண்டுபிடித்தவர் வில்லியம் ஹார்வி.* சூரியனின் பரப்பில் சுமார் 11 ஆயிரம் டிகிரி பாரன்ஹீட் வெப்பம் உள்ளது.* வெடி உப்பு,​​ கந்தகம் இவற்றின் கலவையே வெடிமருந்தாகும்.இரா.பாலகிருஷ்ணன்,​​ வரக்கால்பட்டு.வண்டுகள் மொய்க்காத பூ!​​* செண்பகப் பூ,​​ வேங்கைப் பூவில் வண்டு மொய்க்காது என்று ஒரு நம்பிக்கை உள்ளது.* மிகச் சிறிய தாவரம் உல்ஃபியா,​​ உயரமான மரம் யூகலிப்டஸ்.* இந்தியாவின் தேசிய மரம் ஆலமரம்.* மரம்,​​ காய்கறி வளர்ப்புப் பற்றி படிக்கும் கலைக்கு ஆர்போரிக் கல்ச்சர் என்று பெயர்.* நமது நாட்டில் தேசிய தாவரவியல் பூங்கா லக்னோவில் உள்ளது.* உருது மொழி முதலில் ரீக்கா என அழைக்கப்பட்டது.அ.சா.குருசாமி,​​ செவல்குளம்.மேட்டூர் அணை!​​* மேட்டூர் அணைக்கு முதன்முதலில் இட்ட பெயர் ஸ்டான்லி ரிசர்வாயர்.​ இந்த அணையைக் கட்டியவர் ஸ்டான்லி என்ற ஆங்கிலேயர்.​ பிறகு மேட்டூர் என்ற ஊரின் பெயராலேயே அணையின் பெயர் நிலைத்துவிட்டது.* ஒலிம்பிக் வளையங்களில் ஐந்தும் ஐந்து வண்ணங்களில் இருக்கின்றது.​ நீலவண்ணம் ஐரோப்பாவிற்கும்,​​ மஞ்சள் ஆசியாவிற்கும்,​​ கருப்பு ஆப்பிரிக்காவிற்கும்,​​ பச்சை அமெரிக்காவிற்கும்,​​ சிகப்பு ஆஸ்திரேலியாவையும் குறிக்கின்றன.* நைலான் 1938-ல் கண்டுபிடிக்கப்பட்டது.* இந்தியாவிலேயே முதன்முறையாக கனரா வங்கியில் தான் பொதுமேலாளர் பதவிக்கு பெண் ஒருவர் நியமிக்கப்பட்டார்.​ அவரது பெயர் கமலா.* பெல்ஜியம் நாட்டில் பேசப்படும் மொழி பிளமிஷ்.வெண்ணெய்வேலவன்,​​ திருவெண்ணெய்நல்லூர்.கங்காரு செய்திகள்!​​* கங்காருக்களில் 56 இனங்கள் உள்ளன.* பெரிய கங்காரு 90 கிலோ வரை எடையிருக்கும்.* வாலிலிருந்து மூக்கு வரை 10 அடி நீளமிருக்கும்.* ஆபத்து காலத்தில் மணிக்கு 48 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும்.* இரண்டு மீட்டர் உயரமும்,​​ 6 மீட்டர் நீளமும் ஒரே மூச்சில் தாண்டவல்லது.* பிறக்கும் போது கங்காரு குட்டியின் நீளம் ஓர் அங்குலமே.நெ.இராமன்,​​ சென்னை-74.பனிச் சிறுத்தைகள்!​​* கையெழுத்துகளை வைத்து எழுதுபவரின் குணாதிசயங்களைக் கண்டறிய உதவும் படிப்புக்கு கிராஃபோலஜி என்று பெயர்.* பெண் வண்ணத்துப் பூச்சிகள் முட்டையிட்டவுன் இறந்து விடும்.* பனிச் சிறுத்தைகள் இமயமலைப் பிரதேசத்தில் அதிகளவில் காணப்படுகின்றன.* 1915-ம் ஆண்டில் நடைபெற்ற போரின் போதுதான் முதன்முறையாக ரசாயன குண்டுகள் பயன்படுத்தப்பட்டன.* ஈரான் நாட்டில் பேசப்படும் மொழி பாரசீக மொழியாகும்.* இந்தியாவில் இந்திக்கு அடுத்து தெலுங்கு மொழியே அதிகம் பேசப்படுகிறது.த.ஜெயபிரகாஷ்,​​ கலவை.வாயில் சுரக்கும் நொதியின் பெயர்!* கர்நாடக மாநிலத்தில் கூர்க் என்ற இடத்தில் தான் காவிரி ஆறு உற்பத்தியாகிறது.* வேதிப் பொருளின் அரசன் கந்தக அமிலம்.* வாயில் சுரக்கும் நொதியின் பெயர் டயலின்.​* டாக்ஸிகள் அதிகம் உள்ள நகரம் மெக்ஸிகோ.* சைக்கிள்கள் அதிகம் உள்ள நகரம் சீனாவில் உள்ள பீஜிங்.* உலகில் முதல் அணுசோதனையை நடத்திய நாடு அமெரிக்கா.பிரபாலிங்கேஷ்,​​ மேலகிருஷ்ணன்புதூர்.மலர்ந்ததும் உடனடியாக வாடும் பூ!​​* முதன்முதலில் நாடக அரங்கத்தை அமைத்தவர்கள் கிரேக்கர்கள்.* நர்மதா பள்ளத்தாக்கின் பக்க சுவர்கள் எனப்படுபவை விந்திய மலை.* சிவப்பு அனுக்கள் 90 முதல் 120 நாட்கள் வரை உயிர் வாழும்.* மனிதன் உடலில் உள்ள விலா எலும்புகளின் எண்ணிக்கை 24.* முதலைகளால் தங்கள் நாக்கை அசைக்க முடியாது.* மலர்ந்ததும் உடனடியாக வாடி விடும் பூ பாகலிப் பூ.முருகேசன்,​​ தேனி.அதிக உயரத்துக்கு அலை அடிக்கும் இடம்!​​* புகழ்பெற்ற சாய்வு கோபுரமான பைசா கோபுரத்தின் முழுப் பெயர் டார்ரே பென்டென்டே டீ பைசா.* சி.என்.டவர் டோரன்டோ என்ற கோபுரம்தான் உலகிலேயே மிக உயரமான கோபுரம்.* கனடாவில் உள்ள ஃபன்டி வளைகுடா பகுதியில் 53 அடி உயரத்துக்கு அலை அடிக்கிறதாம்.​ உலகிலேயே உயரமாக அலை அடிப்பது இங்குதானாம்.* ஒளிபுகக் கூடிய உலோகம் மைக்கா.* கப்பல் மேல் தளம் தேக்கு மரத்தல் செய்யப்படுகிறது.* மிளகுக்கு வாசனைப் பொருள்களின் அரசன் என்று பெயர்.கே.கவின்,​​ பொள்ளாச்சி.​

No comments:

Post a Comment