Thursday, January 14, 2010

விடுகதைகள்



1.​ ஆள் இல்லாத வீட்டில் தலைகீழாக தொங்கும்.​ அது என்ன?2.​ நீரில் பிறந்தவன்,​​ நீரிலே வேகிறான்.​ அவன் யார்?3.​ உணவை உள்ளே தள்ளியவன்,​​ உடையை வீசி எறிவான்.​ அவன் யார்?4.​ தலையில் வைக்காத பூ;​ உடலுக்கு சத்தான பூ.​ அது என்ன பூ?5.​ காலைக் கடிக்கும் செருப்பு இல்லை;​ காவலுக்கு உதவும் நாயும் இல்லை.​ அது என்ன?6.​ மழைக்குப் பிறந்தவன் குடைக்கு எடுத்துக்காட்டு.​ அவன் யார்?7.​ தண்ணீரிலே வாழ்வான்;​ தலைகுளிக்க மாட்டான்.​ அவன் யார்?8.​ விறகுக்கு ஆகாத மரம்;​ வீணாக நிற்காத மரம்.​ அது என்ன?9.​ வசப்படும் என்று வால் கட்டிப் பறந்தாலும்,​​ எதுவும் புலப்படாமல் போய்க் கொண்டே இருக்கும்.​ அது என்ன?10.​ நிமிர்த்தினாலும் வளைந்து விடும்;​ துரத்தினாலும் தொடர்ந்து வரும்.​ அது என்ன?11.​ பெட்டிக்குள் இருந்தாலும் கெட்டுப் போகாத இடம்.​ அது என்ன?12.​ பெரிய உருவம் கொண்ட அண்ணாச்சிக்கு,​​ சிறிய கண்கள்.​ அது என்ன?13.​ அடுக்கடுக்காய் சீப்பு இருக்கும்;​ ஆனால் தலைவார முடியாது.​ அது என்ன?14.​ கையில் எடுத்தால்தான் வாயைத் திறக்கும்.​ தைப்பவரிடம் உதவியாய் இருக்கும்.​ அது என்ன?​​சிவன்,​​ வெண்ணெய்வேலன்விடைகள்:​​1.வெள​வால் ​ 2.மீன் 3.வாழைப்பழம் 4.வாழைப் பூ 5.முள் 6.நாய்க்குடை 7.தாமரை இலை 8.மின்கம்பம் 9.வானம் ​ 10.நாய் ​11.குளிர்சாதனப் பெட்டி ​ 12.யானை ​ 13.வாழை சீப்பு ​ 14.கத்தரிக்கோல்

No comments:

Post a Comment