Thursday, January 14, 2010

உங்கள் பக்கம்



ஜனாதிபதி பதவி தகவல்கள்!* ​ போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் நீலம் சஞ்சீவ ரெட்டி.* ​ குடியரசுத் தலைவர்களான ராதாகிருஷ்ணன்,​ வி.வி.கிரி,​ சஞ்சீவ ரெட்டி,​ வெங்கட்ராமன்,​ கே.ஆர்.நாராயணன்,​ டாக்டர் அப்துல்கலாம் ஆகியோர் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள்.* ​ 1967-ம் ஆண்டுதான் குடியரசுத் தலைவர் பதவிக்கு மிக அதிகபட்சமாக 17 பேர் போட்டியிட்டனர்.* ​ மிக அதிகமாக அவசரச் சட்டங்களை பிறப்பித்த குடியரசுத் தலைவர் பக்ருதீன் ​ அலி அஹமது. அவர் தனது பதவிக் காலத்தில் 29 அவசரச் சட்டங்களை பிறப்பித்தார்.* ​ குடியரசுத் தலைவர் தேர்தலில் மிக அதிகம் வாக்கு வித்தியாசத்தில் அதாவது,​ 9,05,659 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் கே.ஆர். நாராயணன்.* ​ குடியரசுத் தலைவர் பதவிக்கு வந்த மிகக் குறைந்த வயதுக்காரர் நீலம் சஞ்சீவ ரெட்டி ​(64-ம் வயதில்).அ.அப்துல்காதர்,​ தாம்பரம்.ஸ்நூக்கர்!​​* ​ கிரிக்கெட் ஸ்டம்ப்பின் உயரம் 28 அங்குலம்.* ​ ஸ்நூக்கர் விளையாட்டில் 22 பந்துகள் பயன்படுத்தப்படுகிறது.* ​ பார்கின்சன் என்ற நோய் மனித மூளையைத் தாக்குகிறது.* ​ ஒரு சதுர மைல் என்பது 640 ஏக்கர் ஆகும்.* ​ நியூசிலாந்தின் தேசியப் பறவை கிவி.* ​ ஒட்டகச் சிவிங்கிகள் 16 அடி உயரத்துக்கு வளரும்.நெ.இராமன்,​ சென்னை-74.சீனப் பெருஞ்சுவர்!* ​ உலகிலேயே ​பால் பண்ணைத் தொழிலில் முதலிடம் வகிக்கும் நாடு டென்மார்க்.* ​ பாலஸ்தீனத்திலுள்ள சாக்கடலில் தான் உப்பு அதிகமாக விளைகிறது.* ​ நியூயார்க் நகரிலுள்ள விநாயகர் கோயில் முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது.* ​ கடலில் வாழும் மீன்களில் பல் வலி வரக் கூடிய விலங்கு மொரே எனும் விலாங்கு மீன். ​* ​ சீனப் பெருஞ்சுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.* ​ சினிமாவுக்கு சென்சார் இல்லாத நாடு பிரான்ஸ்.ஆர்.கே.லிங்கேசன்,​ மேலகிருஷ்ணன்புதூர்.இனிப்பான தாவரம்!​​* ​ ஒரு யூனிட் ரத்தம் என்பது 350 மில்லி லிட்டர் ஆகும்.* ​ வானவில் 3 நிமிடம் மட்டுமே தோன்றும்.* ​ உலக முதியோர் தினம் அக்டோபர் முதல் தேதியன்று கொண்டாடப்படுகிறது.* ​ இரண்டு தேசிய கீதங்கள் கொண்டு நாடு ஆஸ்திரேலியா.* ​ பராகுவே நாட்டில் வளரும் யுடோரியம் ரெபாண்டியானம் என்ற தாவரம் உலகிலேயே மிக இனிப்பான தாவரமாகும். இது சர்க்கரையை விட 300 மடங்கு தித்திப்பானது.ஏ.மாலதி,​ வேலூர்.மீனம்மா... மீனம்மா..!* ​ உலகில் 368 வகையான சுறா மீன்கள் உள்ளன.* ​ இந்தியக் கடலில் உள்ள ஹில்சா என்ற மீன் இனம் ஜாலியானது. கடல் பகுதியிலிருந்து ஆற்றுப் பகுதிக்கும் இவை வந்து போகும். ஆற்றுப் பகுதியில் குஞ்சு பொரிப்பதையே இவை அதிகம் விரும்புகின்றன.* ​ லிங் என்ற ஒரு வகை கடல் மீன் ஒரே நேரத்தில் 16 கோடி முட்டைகளை இடும்.* ​ தெற்கு அமெரிக்காவில் உள்ள எலக்ட்ரிக் ஈல் மீன்களின் உடலில் பத்து மின்சார பல்புகளை ஒரே நேரத்தில் எரிய வைக்கக் கூடிய அளவு மின்சாரம் உள்ளது. ​* ​ சுறா மீன்களுக்கு 8 நாள்களுக்கு ஒரு முறை பற்கள் விழுந்து புதுப் பற்கள் முளைக்கின்றன.ஆ.விஜயலஷ்மி,​ பத்தமடை.விலங்குகளின் தாவல் தூரம்!​​* ​ சிங்கம் 20 அடி தூரம் பாயும்.* ​ தவளை ஒரே தாவலில் 14 அடி தூரம் தாண்டும்.* ​ முயல் 13 அடி தூரம் தாண்டும்.* ​ குதிரை 37 அடி தூரம் பாயும்.* ​ கங்காரு 25 அடி தூரம் பாயும்.* ​ கிரேட் ஆக் பறவை தண்ணீருக்குள் நீந்திச் செல்லும்.சு.இலக்குமண சுவாமி,​ திருநகர்.நிலக்கரியைக் கண்டுபிடித்தவர்கள்!* ​ தீயில் எரிந்து போன காகிதங்களில் எழுதியுள்ள எழுத்துகளை தெளிவாக தெரிந்துக் கொள்ள அகச்சிவப்பு கதிரை பயன்படுத்துகின்றனர்.* ​ நொதிகளைப் படிமங்களாக மாற்ற முடியும் என்பதை முதன்முதலில் கண்டறிந்தவர் ஜேம்ஸ் பி.சம்னெர். இவர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்.* ​ நிலக்கரியை முதன்முதலில் சீனர்கள்தான் கண்டுபிடித்தனர்.​ * ​ மாவீரன் நெப்போலியன் ஆர்செனிக் என்ற விஷம் கொடுத்துதான் கொல்லப்பட்டார்.* ​ அமெரிக்க அதிபர் ரீகன் வானொலி அறிவிப்பாளராக பணியாற்றியவர்.பி.ஜி.குருசாமிப் பாண்டியன்,​ சத்திரப்பட்டி.ஆரஞ்சு பழம்!​​* ​ இந்தியாவில் உள்ள மிக உயரமான சிலை கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள கோமதீஸ்வரர் சிலை.* ​ மிகப் பெரிய துறைமுகம் மும்பைத் துறைமுகம்.* ​ உலகில் அதிகமாக விளைவிக்கப்படும் பழம் திராட்சைப் பழம்.* ​ ஆரஞ்சு பழத்தை அதிகம் உற்பத்தி செய்யும் நாடு பிரேசில்.* ​ இருபது கோடி வருடங்களுக்கும் மேலாக உள்ள தாவரம் மூங்கில்.* ​ உலகப் புகழ்பெற்ற ஓவியர் லியனார்டோ டாவின்சி சிறந்த பொறியியல் வல்லுநரும் ​ ஆவார்.* ​ பைசா கோபுரத்தில் 293 படிக்கட்டுகள் உள்ளன.பா.ராதாகிருஷ்ணன்,​ சென்னை.

No comments:

Post a Comment