Tuesday, August 18, 2009

இறக்குமதிச் செ ய் தி (இம்போர்டட் சரக்கு)



அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் போர் தொடர்ந்து கொண்டே இருந்தது. இதை ஒரு முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று இரு நாடுகளுக்குமே தோன்றியது.


"இருதரப்பிலும் ஆளுக்கொரு நாய் வளர்ப்போம். அந்த இரண்டு நாய்க்கும் சண்டை வைப்போம். எந்த நாட்டு நாய் ஜெயிக்கிறதோ அந்த நாடு ஜெயித்ததாக அர்த்தம்' என முடிவெடுத்தனர்.


அதற்கு ஐந்தாண்டு அவகாசம் வழங்கப்பட்டது.


ரஷ்யர்கள் டாபர் மேன் நாயையும் ஓநாயையும் இணைத்து புதிய வகை நாய் ஒன்றை உருவாக்கினர். அதன் ஒரு ஆண் நாயை மட்டும் விட்டுவிட்டு மற்ற நாய்க் குட்டிகளைக் கொன்றனர். அந்த ஒரு நாய் மட்டும் மொத்த பாலையும் குடித்துவிட்டு பிரம்மாண்டமாக வளர்ந்தது. கனத்த இரும்பு கிராதிகள் போட்ட கூண்டில் அதைக் கொண்டு வந்து நிறுத்தினர்.


அமெரிக்கர்களோ ஒன்பதடி நீளமுள்ள, நீண்ட கழுத்து கொண்ட புதுவகையான டாஷ்வுண்ட் நாயைக் கொண்டு வந்தனர்.


இரண்டும் மோதின. அமெரிக்க நாய் ஒரே நிமிடத்தில் ரஷ்ய நாயை கடித்துக் குதறி சாப்பிட்டுத் தீர்த்தது.


ரஷ்யர்களுக்கு ஆச்சர்யம் தாளவில்லை. "எப்படி?' என்றனர்.


""நாங்கள் எந்த நாயையும் இனப் பெருக்கம் செய்யவில்லை. பிளாஸ்டிக் சர்ஜரி செய்தோம். டாஷ்வுண்ட் போலவே ஒரு முதலையை செய்தோம். ''

No comments:

Post a Comment