Friday, August 7, 2009

உங்கள் பக்கம்



சகாரா பாலைவனம்!

* உலகில் மக்கள் தொகையில் இந்தியா இரண்டாவது இடத்தை வகிக்கிறது.
* காந்திஜி உருவம் பொறித்த அஞ்சல் அட்டையை முதன்முதலில் வெளியிட்ட நாடு போலந்து.
* இத்தாலிதான் முதன்முதலில் போருக்கு விமானத்தை பயன்படுத்தியது.
* சகாரா பாலைவனம் 9 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது.
- டி.ஜெய்சிங், கோயமுத்தூர்.

சிலந்தி!

* திராட்சைக் கொடி காய்க்கத் தொடங்கினால் சுமார் இருபது ஆண்டுகளுக்குப் பயன்தரும்.
* பறவைகளிலேயே அதிக நாட்கள் அதாவது, 56 நாட்கள் அடைகாக்கும் பறவை பல்மர்.
* ஆப்ரிக்காவில் உள்ள சிட்டுங்கா என்ற மான் இனங்கள் நீரில் மிதந்து கொண்டே உறங்கும்.
* ஒரு சிலந்தி ஒரு மணி நேரத்திற்குள் சுமார் 250 அடி நீளத்துக்கு வலை பின்னும்.
* காஷ்மீரில் பூக்கும் மலர்களில் 90 சதவீத மலர்களுக்கு மணம் கிடையாது.
- வீதி.கலாநிதி, சீனிவாசபுரம்.

கடுக்காய்!

* மணிமேகலை, குண்டலகேசி, வீரசோழியம் முதலியவை பௌத்த நூல்களாகும்.
* தென்காசி காசிவிஸ்வநாதர் கோயிலை பராக்கிரம பாண்டியன் 15-ம் நூற்றாண்டில் கட்டினார்.
* கடுக்காயில் ஆறு சுவைகளில் ஐந்து சுவைகள் உள்ளன.
* சோமநாதர் கோயில் குஜராத் மாநிலத்தில் உள்ளது.
* கடற்கரைக் கோயில்கள் மகாபலிபுரத்தில் உள்ளன.
* பிரபல பத்மநாபர் கோயில் திருவனந்தபுரத்தில் உள்ளது.
- தமிழ்மதி, தாதம்பட்டி.

பிரபஞ்சம்!

* பூமியை விட சூரியன் 16 மடங்கு பெரியது.
* சூரியனுக்கு வெகு தொலைவில் உள்ள கோள் புளூட்டோ.
* சூரியனின் மையப் பகுதியில் உள்ள அதிகபட்ச வெப்பம் 1,50,00,000 டிகிரி செல்ஷியஸ்.
* சூரிய ஒளியில் இருந்து வைட்டமின்-டி கிடைக்கிறது.
- ஜி.சாயிலட்சுமி, கிருஷ்ணாபுரம்.

நல்ல தண்ணீரில் வாழும் மீன்!

* தென்னாப்ரிக்காவில் ஆரிபிஸ் என்ற ஒருவகை மான் உள்ளது. இதற்குக் குறும்புக்கார மான் என்ற பெயருண்டு.
* எலி இனத்தில் நிலா எலி என்ற இனம் ஒன்று உள்ளது. இதன் உடல் மோசமான துர்நாற்றம் உடையது.
* பைக் என்ற ஒருவகை மீன் நல்ல தண்ணீரில் மட்டுமே வாழும்.
* பழங்களை ஆராய்ச்சி செய்யும் நிறுவனம் உத்தரபிரதேசம் மாநிலம் பஸ்தி என்ற இடத்தில் உள்ளது.
* பிகார் மாநிலம் போகாரோவில் இரும்பு உற்பத்தி ஆலை அமைந்துள்ளது.
- சு.இலக்குமணசுவாமி, திருநகர்.

சண்டிகர் நகரை வடிவமைத்தவர்!

* நண்டுக்கு பற்கள் அதன் வயிற்றில் உள்ளன.
* ஈக்கள் ஒரே தடவையில் 37 லட்சம் பாக்டீரியாக்களைச் சுமந்து செல்கின்றன.
* பத்து நாட்களில் நகம் ஒரு மில்லி மீட்டர் வரை வளருகிறது.
* மனிதனைக் கடிப்பது பெண் கொசு மட்டுமே.
* பெண் நீர் யானைகளை விட ஆண் நீர் யானைகள் அதிக எடை உடையவை.
* சண்டிகர் நகரை வடிவமைத்தவர் கர்பூசியர்.
- செ.கருணாநிதி, வீரவநல்லூர்.

பென்டகன்!

* காற்றில் ஒலியின் வேகம் ஒரு விநாடிக்கு சுமார் 380 மீட்டர்களாகும்.
* வெள்ளை அணுக்கள் 12 மணி நேரம் வரையிலும், சிவப்பு அணுக்கள் 120 நாட்கள் வரையிலும் உயிர் வாழ்கின்றன.
* பறக்கும் திறன் இழந்த பறவைகள் கிரி, ரியா, நெருப்புக்கோழி.
* கம்போடியா நாட்டின் தலைநகர் நாம்பென்.
* திபெத்தில் போடாலா என்ற இடத்தில் தலாய்லாமாவின் அரண்மனை அமைந்துள்ளது.
* அமெரிக்க ராணுவத்தின் தலைமையகம் பென்டகனில் அமைந்துள்ளது.
- இரா.பாலகிருஷ்ணன், வரக்கால்பட்டு.

வால் ஸ்ட்ரீட்!

* இழந்த சொர்க்கம் உள்ளிட்ட புகழ்பெற்ற காவியங்களை படைத்த இலக்கிய மேதை மில்டன் பிறவியிலேயே பார்வையற்றவர்.
* தைரியத்திற்கு பெயர் போன மாவீரன் தைமூருக்கு ஒரு கால் கிடையாது.
* வாட்டர்லூ போரில் நெப்போலியனை எதிர்த்து வென்ற நெல்சனுக்கு ஒரு கண்ணும், ஒரு கையும் கிடையாது.
* அமெரிக்காவில் பங்குசந்தை வால் ஸ்ட்ரீட் என்ற இடத்தில் அமைந்துள்ளது.
- ஜி.சிந்தியா, ராஜபாளையம்.

No comments:

Post a Comment