Tuesday, August 11, 2009

விடுகதைகள்



1. அனலில் பிறக்கும்; ஆகாயத்தில் பறக்கும். அது என்ன?
2. உமி போலப் பூ; சிமிழ் போல காய். அது என்ன?
3. ஊசி நுழையாத கிண்ணத்தில் ஒரு படி நீர். அது என்ன?
4. ஒரு புட்டிக்குள் இரண்டு தைலம். அது என்ன?
5. வாயிலே தோன்றி வாயாலே மறையும் பூ. அது என்ன?
6. சிவப்பு உறைக்குள் சில்லறை காசுகள். அது என்ன?
7. ஓடையில் ஓடாத நீர் ஒருவரும் அருந்தாத நீர். அது என்ன?
8. திரியில்லாத விளக்கு தினமும் எரியுது. அது என்ன?
9. எழுதி எழுதியே தேய்ஞ்சு போனான். அது என்ன?
10. சூடுபட்டுச் சிவந்தவன் வீடு கட்ட உதவுவான். அது என்ன?
11. ஆற்றையும் கடக்கும், அக்கரைக்கும் போகும்; தண்ணீரையும் கலக்காது, தானும் நனையாது. அது என்ன?
12. வெள்ளை நிலத்தில் கருப்பு விதை போட்டேன். வாயால் எடுக்கலாம், கையால் எடுக்க முடியாது. அது என்ன?
13. ஆட்டத்தில் அசர வைப்பான்; பாம்பை மட்டும் அலற வைப்பான். அவன் யார்?
14. பார்த்தால் பச்சைக்கிளி; கையில் அமர்ந்தால் சிவந்த கிளி. அது என்ன?
15. ஒன்பது பிள்ளைக்கு ஒரே குடுமி. அது என்ன?

விடைகள் :

1.புகை
2.நெல்லிக்காய்
3.தேங்காய்
4.முட்டை
5.சிரிப்பு
6.மிளகாய் வற்றல்
7.கண்ணீர்
8.சூரியன்
9.சாக்பீஸ்
10.செங்கல்
11.குரல்
12.எழுத்து
13.மயில்
14.மருதாணி
15.பூண்டு

No comments:

Post a Comment