Tuesday, August 11, 2009

உங்கள் பக்கம்



"தாமிர நாடு'!

* பூமியின் நிலப்பரப்பு 14,89,50,800 சதுர கிலோ மீட்டர்.
* வங்கதேசத்தின் முதல் பிரதமர் முஜிபுர் ரஹ்மான்.
* தாமிர உலோகம் அதிகம் உள்ளதால் ஆங்கிலத்தில் "கன்ட்ரி ஆஃப் காப்பர்' என்று அழைக்கப்படும் நாடு ஜாம்பியா.
* காபி அதிகளவில் உற்பத்தி செய்யப்படும் நாடு பிரேசில்.
* உலகில் உள்ள மொத்த தேக்கு மரத்தில் மூன்றில் ஒரு பங்கு மியான்மர் நாட்டில் உள்ளது.
* பாகிஸ்தானையும், ஆப்கானிஸ்தானையும் பிரிக்கும் எல்லைக் கோட்டின் பெயர் தூரந்த் கோடு.

- கலை.ராதிகா, உத்திரக்குடி.

கிஸô பிரமிடு!

எகிப்தின் கிஸôவில் உள்ள பிரமிடு பழமையானது. இது 137 மீட்டர் உயரமும், 225 மீட்டர் நீளமும் கொண்ட பிரம்மாண்டமான முக்கோண வடிவில் கட்டப்பட்டு உள்ளது பிரமிடு. இது 23 லட்சம் கற்களால் கட்டப்பட்டது. ஒவ்வொரு கல்லும் இரண்டரை டன் எடை கொண்டவை. மொத்தக் கற்களின் எடை 7 மில்லியன் டன்கள் ஆகும். ஒரு லட்சம் வேலை ஆட்களைக் கொண்டு கட்டப்பட்டது. இதைக் கட்டி முடிக்க 20 வருடங்கள் ஆனது.

- எஸ்.வெங்கடேஷ், திருக்கோயிலூர்.

தேசியப் பழம்!

* வாசனைத் துறைமுகம் என்று அழைக்கப்படுவது ஹாங்காங் துறைமுகம்.
* இலங்கை தேசியக் கொடியில் உள்ள இலைகள் ஆலமர இலைகள்.
* சார்பியல் தத்துவத்தைக் கண்டுபிடித்தவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.
* தமிழ்ப் புதுக் கவிதையின் முன்னோடி ந.பிச்சமூர்த்தி.
* நம் நாட்டின் தேசியப் பழம், மாம்பழம்.
* அமெரிக்காவின் முதல் அதிபர் ஆப்ரகாம் லிங்கன்.

- சி.இராதாகிருஷ்ணன், கலவை.

இந்திய தேசியப் படை!

* 1857-ம் ஆண்டு முதல் இந்திய விடுதலைப் போர் துவங்கியது.
* 1885-ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் துவக்கம்.
* 1920-ம் ஆண்டு ஒத்துழையாமை இயக்கம் துவங்கியது.
* 1930-ம் ஆண்டு உப்பு சத்தியாகிரகப் போர் துவங்கியது.
* 1947-ம் ஆண்டு இந்தியா விடுதலை அடைந்தது.

- த.தமிழ்சூர்யா, கன்னந்தேரி.

ஆஸ்திரேலியாவைக் கண்டுபிடித்தவர்!

* பூமி சூரியனைச் சுற்றி வருகிறது என்ற உண்மையைக் கண்டறிந்த முதல் விஞ்ஞானி ஆர்யபட்டா.
* தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்று விஞ்ஞான உலகிற்கு அறிவித்தவர் ஜகதீஷ் சந்திரபோஸ்.
* மாங்கனீஸ் தாதுப் பொருளை அதிகளவில் உற்பத்தி செய்யும் உலகின் முதல் இரண்டு நாடுகள் சீனா, தென்னாப்ரிக்கா.
* ஈஃபிள் கோபுரத்தைக் கட்டியவர் அலெக்ஸôண்டர் ஈஃபிள்.
* ஆஸ்திரேலியாவைக் கண்டுபிடித்தவர் ஜேம்ஸ் குக்.

- எஸ்.சாய் ஸ்ரீஹரிஷ், சென்னை-39.

சம்பா நடனம்!

* நயாகரா நீர்வீழ்ச்சியைக் கண்டுபிடித்தவர் லூயிஸ் ஹென்பின்.
* கத்தரிக்காயின் தாயகம் இந்தியா.
* இத்தாலி நாட்டின் தேசிய மலர் லில்லி.
* "சார்க்' அமைப்பின் தலைமையகம் நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் அமைந்துள்ளது.
* இங்கிலாந்தில் முதல் முறையாக தொழில் புரட்சி நடைபெற்றது.
* சம்பா நடனத்துக்கு புகழ் பெற்ற நாடு பிரேசில்.

- கே.காயத்ரி, அருப்புக்கோட்டை.

உலகின் மிக அழகான துறைமுகம்!

* உலகில் மிக அழகான துறைமுகம் எனப் பெயர் பெற்றது சிட்னி துறைமுகம்.
* பாராசூட்டில் இருந்து குதித்த முதல் மனிதனின் பெயர் தாமஸ் ஸ்காட் பால்டுவின். இவர் அமெரிக்காவை சேர்ந்தவர்.
* ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள கிரம்ளின் மாளிகையின் கோபுரத்தில் நிறுவப்பட்டுள்ள மணிதான் உலகிலேயே மிகப் பெரிய மணியாகும்.
* கூர்க்கா இன மக்களின் பூர்வீகம் நேபாளம் ஆகும்.
* அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரின் பழைய பெயர் நியூ ஆம்ஸ்டர்டாம் என்பதாகும்.
* பிரிட்டனின் தேசிய மலர் ரோஜாப் பூ.

- ப.சிவகாமி, என்.வளையனேந்தல்.

கருத்துக்கள்

அமெரிக்காவின் முதல் அதிபர் ஆப்ரகாம் லிங்கன். - சி.இராதாகிருஷ்ணன், கலவை. The above statement by Radhakrishnan is wrong. The First President of United States of America was George Washington. Kindly publish the correct facts.

By Prof. Antony Selvaraj
8/11/2009 8:22:00 PM

No comments:

Post a Comment