இந்த டாக்டர் ரொம்ப முக்கியமானவர்....

ஒருவர் (காரில் அடிப்பட்டவரிடம்) : நீ அதிர்ஷ்டசாலிப்பா.. அடிப்பட்டாலும் டாக்டர் வீட்டின் முன்னாலேதான் அடிபட்டிருக்கே..
அடிப்பட்டவர் : நாசமாய் போச்சி... அந்த டாக்டரே நான்தான்யா?
“தலைவலி, வயிற்றுவலி, அஜீரணம், ஜுரம்..”
“யாருக்கு உங்களுக்கா?”
“ஊஹும். இப்படி ஏதாவது வருகிற மாதிரி மருந்து தாங்க டாக்டர். என் மாப்பிள்ளைக்குத் தர வேண்டி இருக்கு”
பிச்சைக்காரன் :- டாக்டரையா..! டாக்டரையா..! நம்ப வாடிக்கை வீட்டிலெயெல்லாம் தீபாவளி ஸ்வீட் வாங்கி சாப்பிட்டு வயித்தை என்னமோ செய்யுதே...!
டாக்டர் : - என்ன வேணும்
பிச்சைக்காரன் :- ஏதாச்சும் மாத்திரை தர்மம் பண்ணுங்க டாக்டர்...!
ஒருவர்: வணக்கம் டாக்டர்! உங்க வைத்தியத்தால் எனக்கு பெரிய நன்மை.
டாக்டர் : உங்களுக்கு நான் வைத்தியம் பார்க்கவில்லையே?
ஒருவர் : என் மாமாவிற்குப் பார்த்தீர்கள். பலன், அவர் சொத்து முழுவதும் எனக்குக் கிடைத்துவிட்டது.
டாக்டர் :- தம்பி.! உங்களுக்கு இருக்கும் நோய் பரம்பரையா வர்றது. ஏதோ குணப்படுத்தியாச்சு. இந்தாங்க “பில்”
நோயாளி:- அப்ப இந்தப் பில்லை எங்க அப்பாவுக்கு அப்படி இல்லன்னா எங்க தாத்தாவுக்கு அனுப்புங்க.
“டாக்டர்..! டாக்டர்.. சீக்கிரம் வாங்க..! என் கணவருக்கு உடம்பு நெருப்பாக் கொதிக்குது...?
“எத்தனை டிகிரி”
“140*F”
“அப்ப... நீங்க கூப்பிடவேண்டியது தீயணைப்பு என்ஜினை”
நண்பர்:- என்ன டாக்டர்..! ஏன் டல்லா இருக்கீங்க?
டாக்டர் : ஒண்ணுமில்லே. வயதாயிடுத்து, என் ஒடம்ப “செக் அப்” பண்ணணும்..!
நண்பர் :- நீங்களே டாக்டர் தானே..!
டாக்டர் :- தெரியும்..! ஆனால் என்னுடைய பீஸ் அதிகம்...!
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி..!
No comments:
Post a Comment