Friday, June 26, 2009

உங்கள் பக்கம் - சுரப்பிகள்!
சிறுவர் மணி


சுரப்பிகள்!* பிட்யூட்ரி சுரப்பி மூளையின் அடிப்பகுதியில் அமைந்துள்ளது.* பினியல் சுரப்பிகள் மூளைப் பகுதியில் அமைந்துள்ளது.* தைராய்டு சுரப்பி கழுத்தில் காணப்படும்.* கழுத்தின் கீழ்ப்பகுதியில் இருக்கும் சுரப்பி தைமஸ்.* கணையச் சுரப்பி வயிற்றின் அருகில் அமைந்துள்ளது.* அட்ரினல் சிறுநீரக உச்சியில் அமைந்துள்ளன.நெ.இராமன், சென்னை-74.உலகின் முதல் குடியரசு நாடு!* வாசனையால் தன் உணவை கண்டறியும் பறவை கிவி.* எம்பரர் பென்குயின் என்ற பறவை தன் முட்டைகளை பாதத்திற்கடியில் வைத்து அடைகாக்கும்.* உலகின் முதல் குடியரசு நாடு ஆஸ்திரியா.* முதலில் உலக வரை படத்தை வரைந்தவர் இராடோஸ்தானிஸ்.* திரையரங்குகளே இல்லாத நாடு பூட்டான்.* நமது பற்கள் முழுக்க முழுக்க கால்சியத்தாலும், பாஸ்பரஸ் உப்பினாலும் உருவானவை.ஜோ.ரஞ்சித், பேரையூர்.பூமியை விட 17 மடங்கு எடையுள்ள கோள்!* ஜப்பான் மொழியிலும், அதன் அகராதியிலும் ஓய்வு என்ற வார்த்தையே கிடையாது.* அசாம் மாநிலத்தின் பழைய பெயர் காமரூப்.* இந்திய நாடாளுமன்ற கட்டடத்தின் திறப்பு விழா 1927-ம் ஆண்டு நடந்தது.* பூமியை விட 17 மடங்கு எடை கூடுதலான கோள் நெப்டியூன்.* இராமாயணத்தில் மொத்தம் 48,000 வரிகள் உள்ளன.* மகாபாரதத்தில் மொத்தம் 2,20,000 வரிகள் உள்ளன.ஆர்.ஜி.அம்பிகை ராமன், திசையன்விளை.யூகலிப்டஸ் மரத்தின் தாயகம்!* இந்தியாவில் பறவைகளுக்காகத் துவங்கப்பட்ட முதல் மருத்துவமனை புதுதில்லியில் உள்ள தி சாரிட்டி பேர்ட்ஸ் மருத்துவமனை.* மிக நீண்ட கடற்கரை கொண்ட இந்திய மாநிலம் குஜராத்.* மனிதனால் உருவாக்கப்பட்ட இந்தியாவின் மிகப் பெரிய ஏரி நாகார்ஜுன சாகர். இது ஆந்திரத்தில் உள்ளது.* யூகலிப்டஸ் மரத்தின் தாயகம் ஆஸ்திரேலியா.* அணுசக்தியால் இயங்கிய முதல் நீர்மூழ்கிக் கப்பலின் பெயர் நோட்டிலஸ்.* 22 காரட் தங்கத்தில் 91.6 சதவிகிதம் தங்கம் உள்ளது.எஸ்.சபரிஷ் சௌந்தர், பழைய பேராவூரணி.கடல் கரையான்கள்!* கெரடோ என்பது கடலில் காணப்படும் நான்கு அங்குலம் கொண்ட ஒரு புழுவின் பெயர். இதைக் கடல் கரையான்கள் என்று அழைக்கப்படுகிறது. இந்தப் புழுக்கள் கூட்டம் கூட்டமாகச் சென்று தாக்கினால் கப்பலே கூட கவிழ்ந்து விடுமாம். இந்தப் புழுக்களில் பல்வேறு இனங்கள் உண்டு. ஒரு புழு தன் இனத்தைச் சார்ந்த வேறு எந்தப் புழுவாவது தன் பாதையில் வருவது தெரிந்தால் வேறு பக்கமாக சென்று விடும்.செ.கருணாநிதி, வீரவநல்லூர்.உலகின் மிகப் பெரிய தீவுக்கூட்டம்!* உலகின் மிகப் பெரிய தீவுக் கூட்டம் இந்தோனேஷியாவில் உள்ளது.* உலகின் மிகப் பெரிய தீவு கிரீன்லாந்து.* உலகின் மிகப் பெரிய பாலைவனம் சகாரா பாலைவனம்.* உலகின் மிகப் பெரிய கண்டம் ஆசியா கண்டமாகும்.* உலகின் மிகப் பெரிய சமுத்திரம் பசிபிக் மகா சமுத்திரம்.அர.கோ.குப்புசாமி, சேலம்.கல்லீரலின் எடை!* ஒரு மணி நேரத்தில் சராசரியாக 100 காலன் காற்றை நம் நுரையீரல்கள் சுவாசிக்கின்றன. ஓர் ஆண்டில் 8,67,000 காலன் காற்றை நம் நுரையீரல்கள் சுவாசிக்கின்றன.* மனித உடலின் எடையில் ஆக்ஸிஜன் 65 சதவீதம் உள்ளது.* நமது சிறுநீரகத்தில் லட்சக்கணக்கான வடிகட்டிகள் உள்ளன. இவை தினமும் 190 லிட்டர் ரத்தத்தை வடிகட்டுகின்றன.* இரைப்பையின் எடை 4 அவுன்ஸ்.* கல்லீரலின் எடை 50 முதல் 60 அவுன்ஸ் வரை உள்ளது.இரா.பாலகிருஷ்ணன், வரக்கால்பட்டு.மிகப் பெரிய மாவட்டம்!* இந்தியாவில் உள்ள மிகப் பெரிய மாவட்டம் மத்தியப் பிரதேசத்தில் உள்ள பஸ்தார்.* முயல்கள் குட்டிகளை ஈனும் போது 24-லிருந்து 36 குட்டிகள் வரை போடும்.* ஜப்பான் தலைநகர் டோக்கியோ ஹொன்ஷு என்ற தீவில் அமைந்துள்ளது.* ரத்தத்தில் உள்ள கொழுப்பை லெசித்தின் எனும் அமிலம்தான் கரைக்கிறது.* மனித உடம்பின் எலும்புகளில் கால்சியம் பாஸ்பேட்தான் அதிகம் இருக்கிறது.* ஐந்து வயதுக் குழந்தைக்கு மொத்தம் 20 பற்களே இருக்கும்.ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.

No comments:

Post a Comment