Friday, June 26, 2009

உங்கள் பக்கம் :சிறுவர் மணி

உங்கள் பக்கம்
சிறுவர் மணி

தியாகிகளின் இளவரசர்!

* ஜான் ரங்கின் எழுதிய "அன்டு திஸ் லாஸ்ட்' என்ற ஆங்கில நாவல் குஜராத்தி மொழியில் மொழி பெயர்க்கப்பட்டது. இந்நாவலுக்கு காந்திஜி சூட்டிய பெயர் "சர்வோதயா' என்பதாகும்.
* "தியாகிகளின் இளவரசர்' என காந்திஜியால் வர்ணிக்கப்பட்டவர் சுபாஷ் சந்திர போஸ்.
* காந்திஜி சுடப்பட்டு இறந்த போது அணிந்திருந்த ரத்தக்கறை படிந்த வேட்டி, மதுரை அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
* காந்திஜியின் சுயசரிதையை குஜராத்தி மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் மகாதேவ் தேசாய்.
* காந்திஜி 2,089 நாட்கள் இந்திய சிறைகளில் இருந்துள்ளார்.
அ.அப்துல்காதர்,
மேற்குத் தாம்பரம்.

நத்தைகள் இடும் முட்டை! * மனித உடலில் நீரை சமநிலைப் படுத்தும் உறுப்பு சிறுநீரகங்கள்தான்.
* மனித ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவில் 90 சதவீதம் தண்ணீர்தான். மீதி 10 சதவீதம் திடப் பொருள்.
* ராணித் தேனீக்கள் ஒவ்வொரு நாளும் மூவாயிரம் முட்டைகள் இடுகின்றன.
* நத்தைகள் ஒரே சமயத்தில் 150 முதல் 300 முட்டைகள் இடும்.
* உயிரினங்களில் சிரிக்கத் தெரிந்த ஒரே இனம் மனித இனம் மட்டுமே. இரா.பாலகிருஷ்ணன், வரக்கால்பட்டு.

புன்னகை நாடு!

* கயிறு இழுக்கும் போட்டி முதன் முதலில் தோன்றிய நாடு சீனா.
* புன்னகை நாடு என்றழைக்கப்படும் நாடு தாய்லாந்து.
* உலகின் மிகப் பெரிய மிருகக்காட்சி சாலை அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் உள்ளது.
* ஜப்பான் மொழி தட்டெழுத்து இயந்திரத்தில் மொத்தம் 2,863 எழுத்துகள் உள்ளன. * சீனாவில் கம்யூனிஸ ஆட்சியை உருவாக்கியவர் மாசேதுங். ஆர்.ஜி.அம்பிகை ராமன், திசையன்விளை.

மயில் செய்திகள்!

* காங்கோ மயில் ஆப்ரிக்காவில் காணப்படுகிறது.
* மயிலின் தோகையின் நீளம் சுமார் 160 செ.மீ.
* ஆண் மயிலின் தோகை 6 ஆண்டுகளில் முழு வளர்ச்சியடைகிறது.
* ஒரு தடவையில் மயில் 3 முதல் 6 முட்டைகள் வரை இடும்.
* இந்தியாவின் தேசியப் பறவை மயில். நெ.இராமன், சென்னை-74. ஐ.நா.சபைக்கு பெயர் சூட்டியவர்!
* எரிமலையிலிருந்து வெளிவரும் உருகிய பாறைக் குழம்பு லாவா எனப்படுகிறது.
* சீன நாட்டு மருத்துவத்தில் தேரையை பயன்படுத்துகின்றனர்.
* ஐக்கிய நாடுகள் சபை என்று பெயர் சூட்டியவர் அமெரிக்க முன்னாள் அதிபர் ரூஸ்வெல்ட்.
* பதினேழாம் நூற்றாண்டில் ஆரம்பிக்கப்பட்ட பத்திரிகைகளில் இன்றும் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருப்பது "லண்டன் கெசட்'.
தாமஸ் மனோகரன், முதலியார்பேட்டை.

பாரத ரத்னா விருது பெற்ற முதல் தமிழர்!

* ஞானபீட விருதைப் பெற்ற முதல் இந்தியர் சங்கர குரூப். இவர் "ஓடக்குழல்' என்ற மலையாளக் கவிதை படைப்பிற்காக 1965-ம் ஆண்டு இவ்விருதினைப் பெற்றார்.
* பாரத ரத்னா விருதை தமிழகத்தில் முதன்முதலில் பெற்றவர் ராஜாஜி.
* முதன்முதலில் பாரத ரத்னா விருது பெற்ற வெளிநாட்டைச் சேர்ந்தவர் நெல்சன் மண்டேலா. இவர் 1990-ல் இவ்விருதைப் பெற்றார்.
ஆர்.பிருந்தா, மதுரை.

பெண் நீதிபதிகள் அதிகம் உள்ள நாடு ரஷ்யா!

* தமிழில் முதன்முதலாக பொங்கல் வாழ்த்து அனுப்பும் வழக்கம் 1928-ல் ஆரம்பிக்கப்பட்டது.

* பொங்கல் திருநாளை பஞ்சாபிலும், ஹரியானாவிலும் லோகிரி என்று அழைக்கின்றனர்.
* சபர்மதி ஆசிரமத்திலிருந்து தண்டி யாத்திரை புறப்பட்ட மகாத்மா காந்தி கடந்த தூரம் 388 கி.மீ.
* உலகிலேயே பெண் நீதிபதிகள் அதிகம் உள்ள நாடு ரஷ்யா.
முருகேசன், தேனி.

No comments:

Post a Comment