Friday, June 26, 2009

பொதுக் குறிப்புகள்

உங்கள் பக்கம்: ஒன்பது... ஒன்பது... ஒன்பது..!
சிறுவர்மணி


* புல்லாங்குழலில் 9 துவாரங்கள் இருக்கும்.
* பிறை நிலவை விட முழு நிலா 9 மடங்கு பிரகாசமாயிருக்கும்.
* எவரெஸ்ட் சிகரத்தை அடைய 9 வழிகளுண்டு.*
புலிக் குட்டிகள் 9 நாட்களுக்குப் பின் கண்களைத் திறக்கின்றன.
* கடலின் அதிகபட்ச சராசரி ஆழம் 9 கிலோ மீட்டர்.நெ.இராமன், சென்னை-74.தமிழ்த்தாய் கோவில்!
ஐந்து கோடிக்கும் அதிகமானவர்களால் பேசப்படும் மொழிகள் உலகில் 13 மட்டுமே. இவற்றுள் தமிழ் மொழியும் ஒன்று.
* உலகிலேயே மொழிக்காக ஒரே ஒரு இடத்தில்தான் கோவில் கட்டப்பட்டுள்ளது. அது தமிழ் மொழிக்காக கட்டப்பட்டுள்ள தமிழ்த்தாய் கோவில்தான். இது கட்டப்பட்டுள்ள இடம் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில்.
* இந்தியாவிலேயே தமிழ் மொழியில்தான் முதன்முதலில் 1948-ம் ஆண்டு கலைக்களஞ்சியம் வெளியிடப்பட்டது.
* இந்திய மொழிகளிலேயே தமிழில்தான் முதன்முதலில் பைபிள் மொழி பெயர்க்கப்பட்டது.ஜி.லலித், இராஜபாளையம்.
கரையும் பொருட்கள்!

* பெட்ரோல் காற்றில் கரையும்.
* ரப்பர் பெட்ரோலில் கரையும்.
* கற்பூரம் காற்றில் கரையும்.
* சோழி எலுமிச்சைச் சாற்றில் கரையும்.
* நீரில் உப்பு கரையும்.* மண்ணெண்ணெயில் தார் கரையும்.வெ.இராஜாராம், சங்கரன்கோவில்.
அதிக சத்தம் எழுப்பும் பூச்சி!
* அதிக சத்தம் எழுப்பும் பூச்சியினம் சிகாடா.
* புணேயில் உள்ள ராஜா கெல்கா என்ற அருங்காட்சியகத்தில்தான் இந்தியாவிலேயே அதிகளவு பழமை வாய்ந்த விளக்குகள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன.
* வட பசிபிக் கடல் பகுதியில் சாலஞ்சர் டீப் என்ற 10,912 மீட்டர் ஆழமுள்ள இடம்தான் உலகின் ஆழமான இடமாகும்.
* இந்திய சர்வதேச திரைப்பட விழாவிற்கு ஒவ்வொரு ஆண்டும் 21 படங்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.
* "கணவாய்' மீனின் ரத்தம் நீல வண்ணத்தில் இருக்கும்.
இரா.பாலகிருஷ்ணன், வரக்கால்பட்டு
.
மயில்!
இந்திய தேசியப் பறவையான மயிலின் பூர்வீகம் இந்தியாதான். அந்தக் காலத்தில் பரிசுப் பொருளாக மயிலைக் கொடுத்ததால் அது உலக நாடுகளுக்கு எளிதாகப் பரவியது. இந்திய மன்னர் ஒருவர் அளித்த மயில்களை சாலமன் என்ற மன்னர் பாலஸ்தீனத்திற்கு எடுத்துச் சென்றார். இந்தியா மீது படையெடுத்த கிரேக்க மன்னர் அலெக்ஸôன்டர் மூலமாக மயில் இனம் வெளிநாட்டிற்கு பரவியது. தற்போது, ஆப்ரிக்கா, பெல்ஜியம், நேபாளம், மியான்மர், வடகொரியா போன்ற நாடுகளில் மயில் தேசிய சின்னமாகவும், ராணுவ முத்திரையாகவும் பாவிக்கின்றனர்.
என்.ஜரினா பானு, திருப்பட்டினம்.

புத்திசாலி பறவை!

* கடல்வாழ் உயிரினங்களில் புத்திசாலி டால்பின்.
* பறவைகளில் புத்திசாலி ஆந்தை.
* விலங்குகளில் புத்திசாலி மனிதக் குரங்கு.
* ஆப்ரிக்காவில் ஆண் யானை, பெண் யானை இரண்டிற்கும் தந்தம் உண்டு.
* ஆமைகளுக்கு பற்கள் கிடையாது.
* இறக்கையை அசைக்காமல் வானில் வெகுதூரம் பறந்து செல்லும் பறவையின் பெயர் ஆன்டியன் கான்ட்டர் என்பதாகும்.
த.ஜெயபிரகாஷ், கலவை.
தேனீ செய்திகள்!
* தேனீக்கு ஐந்து கண்கள் உண்டு.
* தேனீ மணிக்கு ஏழு மைல் வேகத்தில் பறக்கும்.
* தேனீயின் வயிற்றில் இரண்டு இரைப்பைகள் உண்டு.
* தேனீயின் உடலில் 12 வளையங்கள் உள்ளன.
* ஒரு தேன் கூட்டில் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை தேனீக்கள் இருக்கும்.
* தேனீக்கு நான்கு சிறகுகள் உண்டு.
* தேனீ நிமிடத்திற்கு சராசரியாக 400 முறை இறக்கையை அசைக்கும்.
எஸ்.நேசமணிகண்டன், மடிப்பாக்கம்.

No comments:

Post a Comment