Friday, June 26, 2009

விடுகதைகள்: அடி மலர்ந்து நுனி மலராத பூ
சிறுவர் மணி


1. மண்டையில் போட்டால் மகிழ்ந்து சிரிப்பான். அவன் யார்?
2. நிலத்தில் முளைக்காத செடி; நிமிர்ந்து நிற்காத செடி. அது என்ன?
3. கணுக்கால் நீரில் கரடி நீச்சல் போடுது. அது எது?
4. மரம் வாழ்பவனுக்கு முதுகிலே மூன்று சூடு. அது என்ன?
5. ஒற்றைக்கால் கோழிக்கு வயிறு நிறைய முட்டை. அது என்ன?
6 நடக்கத் தெரியாதவனுக்கு வழிகாட்டுபவன். அவன் யார்?
7. நீரிலே உயிர் பெற்று நிலத்திலே நீர் இறைப்பான். அவன் யார்?
8. அறைகள் அறுநூறு; அத்தனையும் ஓரளவு. அது என்ன?
9. கோணல் இருந்தாலும் குணம் மாறாது. அது என்ன?
10. கண்டு காய் காய்க்கும்; காணாமல் பூ பூக்கும். அது என்ன?
11. பந்திக்கு வரும் முந்தி; வெளியே வரும் பிந்தி. அது என்ன?
12. அடி மலர்ந்து நுனி மலராத பூ. அது என்ன?
விடைகள்:1.தேங்காய்2.தலைமுடி3.தவளை4.அணில் 5.மிளகாய்6.கைத்தடி7.மின்சாரம்8.தேன்கூடு9.கரும்பு10.அத்திமரம்11.இலை12.வாழைப்பூ

1 comment: