
இழுப்பை விரட்டும் மிளகு
மிளகு, மலை நாடுகளில் பயிராகும் ஒருவகை கொடி. இது மரங்களைச் சுற்றி
ஏறி அடர்த்தியாய் வளரும். இதன் பழத்துக்கு மிளகு என்று பெயர். இந்த
பழத்தின் பழுத்த தோல் உதிர்ந்தால் அதை வெள்ளை மிளகு என்பர். எந்திரத்தின்
மூலம் மிளகுத் தோலை உரித்து அதை வெள்ளை மிளகு என்போரும் உண்டு.பச்சை மிளகு
குன்மம், வாயு, சுவையின்மை, பக்கவாதம், ரத்த குன்மம், செரியாமை, காமாலை
முதலியவற்றை நீக்கும். காய்ந்த மிளகை குளிர் ஜிரம், வாயு நீக்கம், வயிற்று
உப்புசம், அஜீரணம் போன்ற உபாதைகளுக்கும் வைத்தியர்கள்
பயன்படுத்துவார்கள்.இதன் இலையும் மருத்துவ குணமுடையதே! மிளகுத் தூளை
கஷாயமிட்டு அருந்த தொண்டை கம்மல், தொண்டை செருமல் நீங்கும்.
மிளகு தைலத்தினால் நாட்பட்ட வலி, நோய்கள், தலைக்கனம், செவிடு போகும்,
தெளிவு உண்டாகும். மேலும் இத் தைலத்தைக் கொண்டு தலைமுழுகி வர சோபை,
பாண்டு, இருமல், நீர்க்கோவை தலைவலி, பலவகை தினவு சுரம் முதலியவை
நீங்கும்.சில வைத்தியர்கள் வாந்தி பேதி நிற்க மிளகுடன் பெருங்காயம், அபின்
கலந்து கொடுப்பார்கள். இதற்கு கபாடமாத்திரை என்று பெயர். இது
‘இம்காப்ஸில்’ கிடைக்கிறது. இம்மாத்திரையை ஒரு மணிக்கு ஒருதரம்
எச்.ஐ.வியில் பாதிக்கப்பட்டு பேதியாகும் வியாதியஸ்தர்களுக்கு கொடுக்கலாம்.
உடனே பேதியாவதும், வாந்தியும் நிற்கும்.மிளகுத்தூள், எருக்கம் வேர்,
பனைவெல்லம் தகுந்த அளவு சேர்த்தரைத்து தினை அளவு மாத்திரை செய்து தினம்
ஒருவேளை சாப்பிட்டுவர இழுப்பு நோய் வராது.
அதைப்போலவே மிளகுத்தூள், வெங்காயம், உப்பு இவைகளை சேர்த்தரைத்து தலையில்
காணும் புழுவெட்டிற்கு பூச முடி முளைக்கும்.சகாயமான விலையில் மிளகு
கிடைக்கும் போது அதனை லேசாக இடித்து, அதனுடன் சம அளவு உணவு பொருளுக்கான
ஆல்கஹாலை கலந்து சிறிது நேரம் ஊறவைத்து டிஸ்டிலேஷன் செய்தால் ஆல்கஹாலும்,
சுத்தமான மிளகு எண்ணெயும் பிரிந்துவிடும். மிளகு எண்ணெய்க்கு
வெளிநாடுகளில் நல்ல விற்பனை வாய்ப்பு உள்ளது. தொழில் முனைவேர்
முயற்சிக்கலாம்.
மிளகு எண்ணெயின் மருத்துவ பயன் மிகப் பெரியது. அதனைக் கொண்டு மிட்டாய்
தயாரிப்பு முதல் இருமல் மருந்து தயாரிப்பு வரை செய்யலாம்.நமது நாட்டை
பொறுத்தவரை கேரளம் மிளகு உற்பத்தியில் முதல் இடம் வகிக்கிறது. அவர்கள்
நேரடியாக மிளகை ஏற்றுமதி செய்கிறார்கள். உலக நாட்டில் இலங்கை மிளகு
உற்பத்தியில் முதலிடம் பெற்றிருக்கிறது. மேலும் அந்த மிளகில் எண்ணெயின்
அளவு அதிகம்.தொன்மையான சம்பார பொருளான மிளகை இன்னும் ஆய்வுகள் செய்தால் பல
பொருட்கள் அதிலிருந்து கிடைக்கும்.
No comments:
Post a Comment