Tuesday, October 30, 2012

வரலாற்றில் இன்று : 31/10 - today in history

வரலாற்றில் இன்று : 31/10

தினமலர்
  1.  இந்திய விடுதலை ப் போராட்ட வீரர் வல்லபாய் பட்டேல் பிறந்த நாள் (1875)
  2.  இந்திய முன்னாள் தலைமையமைச்சர் இந்திரா நினைவு நாள்(1984)
  3.  முதல் தமிழ் பேசும் படமான காளிதாசு வெளியானது(1931)
  4. அமெரிக்காவின் முதலாவது நெடுஞ்சாலையான லிங்கன் நெடுஞ்சாலை திறக்கப்பட்டது(1913)

Monday, October 29, 2012

வரலாற்றில் இன்று :30/10 : today in history

வரலாற்றில் இன்று :30/10
ிர்
  1. இந்தியா ஐநாவில் இணைந்தது(1945)
  2. இந்திய விடுதலை போராட்ட வீரர் முத்துராமலிங்கம் பிறந்த நாள் (1908)
  3. இந்திய விடுதலை போராட்ட வீரர் முத்துராமலிங்கம் நினைவு நாள்(1963)
  4. செஞ்சிலுவை ச்சங்கத்தைத் தொடங்கிய  என்றி டியூனாண்ட்டு நினைவு நாள்(1910)
  5. சான்லோகி பயர்ட், பிரிட்டனின் முதல் தொலைக்காட்சி ஒளிபரப்பியை அமைத்தார்(1925)

Sunday, October 28, 2012

தெரிந்து கொள்ளுங்கள்...

தெரிந்து கொள்ளுங்கள்...

First Published : 06 October 2012 05:05 PM IST
அட அப்படியா..?


*சந்திரனைப் போல வீனசுக்கும் பிறைகள் உண்டு.

*பரப்பளவில் இலங்கையைப் போல இரு மடங்கு பெரியது தமிழகம்.

*கிவி பறவை பூனையைப் போல கத்தும்; நாயைப் போல உறுமும்.

*மனிதனைப் போல குரங்குக்கும் தலையில் வழுக்கை விழும்.

*தவில் செய்யப் பயன்படும் மரம் பலா.

*கொசுவின் தூய தமிழ்ப் பெயர் நுளம்பு.

*உலகையே மிரட்டுகின்ற கொசுவுக்கு முக்கிய எதிரி யாரென்றால் தும்பிதான். தும்பிகளுக்கு விருப்பமான உணவு கொசு.

 பலரக காற்று!



*மணிக்கு 6 கி.மீ. வேகத்தில் வீசுவது மென்காற்று

*அதற்கு மேல் 11 கி.மீ. வரை -இளந்தென்றல்

*15 கி.மீ. - 19 கி.மீ. வரை - தென்றல்

*20 கி.மீ. - 29 கி.மீ. வரை - புழுதிக் காற்று

*30 கி.மீ. - 39 கி.மீ. வரை - ஆடிக் காற்று

*40 கி.மீ. - 110 கி.மீ. வரை - கடுங்காற்று

*101 கி.மீ. - 120 கி.மீ. வரை - புயல்

*120 கி.மீ.க்கு மேல் - சூறாவளி

 -தொகுப்பு: சி.எம்.ஆறுமுகம், ஆ.விஜயலட்சுமி,
 திலீபன் கணேஷ், திருநெல்வேலி.


 உலோக விந்தைகள்...


*இரும்பை விட நான்கு மடங்கு கனமானது ராடன் என்ற வாயு.

*செம்பு உலோகத்தைவிட அதிவேகமாக மின்சக்தி பாயும் உலோகம் வெள்ளி.

*தாமிரம், வெள்ளீயம் ஆகியவை வெண்கலம் தயாரிக்கப் பயன்படும் உலோகங்கள்.

*பித்தளை ஒரு கலப்பு உலோகம்.

*இரும்பு, நிக்கல், கோபால்ட் ஆகிய உலோகங்கள் காந்தத்தால் ஈர்க்கப்படும்.

*இயற்கையில் கிடைக்கும் மிகக் கனமான உலோகமான யுரேனியம் அணுசக்தி உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

*சூனியப் பிரதேசத்தில் பறவை இறகு மற்றும் இரும்பு இரண்டும் ஒரே வேகத்தில் விழும்.

*உலோகங்களில் மிகவும் லேசானது லித்தியம்.

*சோடியத்தின் சிறப்பு - இது தண்ணீரிலும் எரியும் தன்மை உடையது.
 -மாசு.செüந்தரராசன்,
 செட்டியார்பட்டி.


 கொடிகள்...


*கருப்புக் கொடி பறந்தால் அது கடற்கொள்ளைக்காரர்களின் கப்பல்.

*சிவப்புக் கொடி பறந்தால் அது புரட்சிக்காரர்களின் கப்பல்.

*வெள்ளைக் கொடி பறந்தால் அது எந்தக் கப்பலோடும் சமாதானம் செய்து கொள்ளும்.

*மஞ்சள் கொடி பறந்தால் அது தொற்றுநோயாளிகளின் கப்பல்.
 அதிசயப் பறவைகள்...

*இயற்கையின் அதிசயப் பிறவிகளில் மனிதனுக்கு அடுத்து பறவைகள்தான் இடம் பிடிக்கின்றன. அவைகளின் குடியேற்றம் (ஆங்கிலத்தில் மைக்ரேஷன் என்பார்கள்) இன்றளவும் புரியாத புதிர்தான்!

*அவற்றுக்குத் தேவையான உணவும் பாதுகாப்பான இடமும்தான் பறவைகள் வேறு இடங்களுக்குச் செல்வதற்கு முக்கிய காரணங்கள்.

*ஆனால் சீதோஷ்ண நிலையை அனுபவிக்கவும் இனப்பெருக்கம் செய்வதற்கும் பறவைகள் குடியேற்றம் செய்கின்றன என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.


*ஆர்க்டிக் பகுதியிலிருந்து அண்டார்டிகா வரை எங்கும் நிற்காமல் பல நாட்கள் தொடர்ந்து அதாவது 15ஆயிரம் முதல் 20ஆயிரம் மைல்கள் வரை பறந்து செல்லும் கருப்பு இன வாப்ளர் (ஆப்ஹஸ்ரீந்ல்ர்ப்ப் ரஹழ்க்ஷப்ங்ழ்) என்ற பறவை இனம் இருக்கின்றது.

*ஆர்க்டிக் முனை (அழ்ஸ்ரீற்ண்ஸ்ரீ பங்ழ்ய்)என்ற பறவை 20ஆயிரம் கி.மீ. தூரம் பறந்து செல்லும் வல்லமை படைத்தது.

*கேரியர் பிஜியன்ஸ் (இஹழ்ங்ங்ழ் டண்ஞ்ங்ர்ய்ள்) என்ற புறா இனப் பறவை தனது இருப்பிடத்தைவிட்டு எவ்வளவு தூரம் சென்றாலும் குறிப்பிட்ட காலத்தில் மீண்டும் தனது இருப்பிடத்துக்குத் திரும்பி வந்துவிடும் அளவுக்கு ஞாபகசக்தி கொண்டது.

*இடம் மாறும் பறவைகள் தங்களின் வழியை மட்டுமே நினைவில் வைத்திருக்கும் ஆற்றல் பெற்றவை என்று பறவையியல் நிபுணர்கள் சொல்கிறார்கள். அதற்காக விமானத்தில் பல இடங்களுக்கு மாறி மாறிப் பயணம் செய்து எங்கோ ஒரு மூலையில் விட்டாலும் இந்தப் பறவைகள் சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே வந்து சேர்ந்த அதிசயத்தை எப்படி விவரிப்பது? பறவைகள் குடியேற்றம் இன்றளவும் அவிழ்க்கப்படாத மர்மமாகவே இருக்கின்றது.
 -மகிழ்நன், சென்னை.


 முதன் முதலில்...


*உலகின் முதல் கிண்டர்கார்டன் (நர்சரி) பள்ளியைத் தொடங்கியவர் ஜெர்மனியைச் சேர்ந்த பிரெடரிக் புரோபெல் என்பவர்.

*உலகின் முதல் நவீன பல்கலைக் கழகம் இத்தாலி நாட்டில் உள்ள போலங்கா நகரில்தான் தொடங்கப்பட்டது.

*கலிபோர்னியா எரிமலைக்குத் தெற்கில் ஒரு சிறிய ஏரி இருக்கிறது. இங்குள்ள தண்ணீர் முழுவதும் கருப்பு மை (இங்க்) நிறத்தில் இருக்கும். இந்த நீரில் வெள்ளைத் துணியை முக்கினால் உடனே அது கருப்பு நிறமாகிவிடும்.
 -கே.முருகேஸ்வரி,
 கோவை.

தெரியுமா...

தெரியுமா...  

First Published : 06 October 2012 05:07 PM IST
*நீரில் மூழ்கி இருக்கும்போது ஆழம் அதிகம் செல்லச் செல்ல நீரின் அழுத்தத்தால் மனிதனின் செவிப்பறைக்கு பாதிப்பு ஏற்படும். இதனால் செவிப்புலனையே இழக்கவும் நேரிடும்.

*பிறந்த குழந்தை ஒரு நாளில் 18 மணி நேரம் தூங்குகிறது. 3 முதல் 5 வயதாகும் குழந்தைகள் 11 மணி நேரம் தூங்குகின்றன. இது பிறகு மெல்ல மெல்லக் குறைந்து முழு மனிதனாகும்போது சராசரியாக 8 மணி நேரம் தூக்கம் தேவைப்படுகிறது.
 -எஸ்.செüமியா, தேவனாங்குறிச்சி.

வரலாற்றில் இன்று : 29/10 - today in history

வரலாற்றில் இன்று : 29/10

  1.  துருக்கி குடியரசு நாள் (1923)
  2.  தங்கனிக்கா - சன்சிபார் ஆகியவை இணைந்து தான்சானியா குடியரசு உருவானது(1964)
  3. கல்கியின் பொன்னியின் செல்வன் புதினம், முதல் முறையாக த் தொடராக வெளிவர த் தொடங்கியது.(1950)
  4.  சுவிட்சர்லாந்தில் 16 நாடுகளின் சார்பாளர்கள், பன்னாட்டுச் செஞ்சிலுவை ச் சங்கம் அமைக்க த்தீர்மானித்தனர்(1863)

Saturday, October 27, 2012

வரலாற்றில் இன்று : 28/10 - today in history

வரலாற்றில் இன்று : 28/10

தினமலர்
  1.  செக் குடியரசு -  சுலோவாக்கியா தேசிய நாள்(1918)
  2.  முதலாவது காற்றுப்பேருந்து அ300 இயக்கப்பட்டது(1972)
  3.  கனடா- அலாசுகா இடையேயான அலாசுக‌ா நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது(1942)
  4.  இசுபெயினின் முதல்  தொடரிப் பாதை (இரயில்வே) திறக்கப்பட்டது(1848)

Friday, October 26, 2012

வரலாற்றில் இன்று : 27/10 - today in history

வரலாற்றில் இன்று : 27/10

தினமலர்
  1. அமெரிக்க கடற்படை நாள்
  2.  பென்சல்வேனியாவின் ஃபிலடல்ஃபியா நகரம் அமைக்கப்பட்டது(1682)
  3. காங்கோ சனநாயக க் குடியரசு, சயீர் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது(1971)
  4. நாசா தனது முதலாவது சட்டர்ன் 1 விண்கலத்தை விண்ணுக்கு ஏவியது(1961)

Thursday, October 25, 2012

வரலாற்றில் இன்று : 26/10 : today in history

வரலாற்றில் இன்று : 26/10

தினமலர்
  1. ஆசுதிரியா தேசிய நாள் 1955)
  2. அமெரிக்க ப் பே ரவை (செனட் அவை ) உறுப்பினர்  இலாரி கிளிண்டன் பிறந்த நாள்(1947)
  3.  அமெரிக்கா, அமெரிக்க த் தேசப்பற்று ச் சட்டத்தை நிறைவேற்றியது(2001)
  4. நார்வே, சுவீடனிடம் இருந்து விடுதலை அடைந்தது(1905)
  5.  ஆசுதிரியா அணிசேரா நாடாக தன்னை அறிவித்தது(1955)

Wednesday, October 24, 2012

வரலாற்றில் இன்று : 25/10 - today in history

வரலாற்றில் இன்று : 25/10  தினமலர்
  • கசக்கிஸ்தான் குடியரசு நாள் (1990)
  •  விண்டோசு எக்சுபி வெளியிடப்பட்டது(2001)
  • இந்தியாவில் தடா சட்டத்திற்கு பதிலாக பொடா சட்டம் கொண்டு வரப்பட்டது(2001)
  •  இட்லர், முசோலினி இணைந்து உரோம்-பெர்லின் அச்சு என்ற கூட்டமைப்பை ஏற்படுத்தினர்(1936)

Tuesday, October 23, 2012

வரலாற்றில் இன்று : 24/10: today in history,

வரலாற்றில் இன்று : 24/10
  1. ஐக்கிய நாடுகள் நாள் (1945)
  2.   சாம்பியா விடுதலை நாள் (1964)
  3. இரசியாவில் அக்டோபர் புரட்சி இடம்பெற்றது(1917)
  4. சார்சு வாசிங்டன் பாலம் திறக்கப்பட்டது(1931)
  5.  பிரேசிலில் ராணுவ புரட்சி இடம்பெற்றது(1930)

Monday, October 22, 2012

வரலாற்றில் இன்று :23/10 : today in history

வரலாற்றில் இன்று :23/10
ிர்
  1. அங்கேரி தேசிய  நாள்
  2.  ஆப்பிள் நிறுவனத்தின் ஐபாட் வெளியிடப்பட்டது(2001)
  3.  ஐ.நா., சபையின் முதலாவது கூட்டத் தொடர் நியூயார்க்கில் துவங்கியது(1946)
  4. முதல் முறையாக போரில் விமானம் பயன்படுத்தப்பட்டது(1911)
  5.  இலெனின், அக்டோபர் புரட்சிக்கு அழைப்பு விடுத்தார்(1917)

Sunday, October 21, 2012

தன்னலம் வேண்டவே வேண்டா - விவேகானந்தர்

தன்னலம் வேண்டவே வேண்டா
ஜூன் 19,2012,11:06  IST

* மக்கள் எங்கெல்லாம் துன்பத்தில் வாடுகிறார்களோ அங்கு சென்று அவர்களின் துன்பத்தைப் போக்க முயலுங்கள்.
* இந்தப் பரந்த உலகில் பிறந்த நமக்கு மரணம் வருவது உறுதியானது. ஆனால், ஏதாவது ஒரு உயர்ந்த குறிக்கோளுக்காக வாழ்ந்த பின்னர் இறப்பது சிறந்தது.
* நீங்கள் உண்மையிலேயே என் குழந்தைகளாக இருந்தால் எதற்கும் அஞ்சி தயங்கி நிற்கமாட்டீர்கள். பணிகளைச் செய்து முடிப்பதற்காக சிங்கக்குட்டி போல வீறு கொண்டு எழுந்து நிற்பீர்கள்.
* ஏழைகள், அறியாமையில் சிக்கித் தவிப்பவர்கள், நசுக்கப்பட்டவர்கள் ஆகியோருக்காக இதயம் நின்றுபோகும் வரையிலும், மூளை கொதித்துப் போகும் வரையிலும் இரக்கம் கொள்ளுங்கள்.
* கடவுளின் காலடியில் உங்களை அர்ப்பணித்துக் கொள்ளுங்கள். அப்போது பூரணசக்தி, அசைக்க முடியாத மனஉறுதி எல்லாம் வந்து சேரும்.
* சுகபோக வசதிகளை மட்டும் கவனித்துக் கொண்டு, சோம்பலுடன் வாழும் சுயநலக்காரர்களுக்கு நரகத்தில் கூட இடம் கிடைக்காது.
- விவேகானந்தர்
தினமலர்

வரலாற்றில் இன்று : 22/10 - today in history

வரலாற்றில் இன்று : 22/10  - தினமலர்
  1. இந்திய விடுதலை ப் போராட்ட வீராங்கனை  சான்சி இராணி லட்சுமிபாய் பிறந்த நாள்(1828)
  2. அர்செண்டினாவிற்கு முதல் தொலைதொடர்பு ஏற்படுத்தப்பட்டது(1875)
  3. இந்தியா தனது முத‌ல் ஆளில்லா செயற்கைகோளான சந்திரயான் 1-ஐ விண்ணில் செலுத்தியது(2008)
  4. பல்கட்சிக் குழு கனடாவின் கொடிக்கான வடிவமைப்பை முடிவு செய்தது(1964)
  5. மாலி, பிரான்சிடம் இருந்து விடுதலை அடைந்தது(1960

Saturday, October 20, 2012

அரத்திப்பழத்தின் (ஆப்பிளின்) பயன்கள்

தினமணி ஞாயிறு கொண்டாட்டம்
ஆப்பிள் சிறுவர்களின் உடல் வளர்ச்சிக்கு துணை
புரிகிறது. எலும்பு வளர்ச்சிக்கும், பற்களின்
உறுதிக்கும் உதவுகிறது.
*
ஆப்பிள் பழச்சாறு அருந்தி வரத் தோல் சுருக்கம் மாறி, உடல் பளபளக்கும்.
*
ஆப்பிளை நறுக்கி தேன் கலந்து சாப்பிட அஜீரணம், வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், வாயு தீரும்.
*
ஆப்பிளை சிறு சிறு துண்டுகளாக்கி சிறிது சர்க்கரை கலந்து மெது மெதுவாக மென்று உமிழ்நீருடன் சாப்பிட நரம்புகள் பலப்படும். நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
*
ஆப்பிள் பழச்சாறு நோய் எதிர்ப்பு சக்தியைக்
கூட்டும். வாய் துர்நாற்றத்தைப் போக்கும்.
*
ரத்த அணுக்களை அதிகரித்து ரத்த சோகையை
மாற்றும்.
*
ஆப்பிளில் உள்ள பாஸ்பேட் சத்து எலும்புகளை உறுதியாக்கி மூளைக்குச் சுறுசுறுப்பைத் தரும்.
*
ஆப்பிள் இதயத்தைப் பலப்படுத்தும். ரத்த
ஓட்டத்தைச் சீர்படுத்தி வயிற்றின் அமிலத்
தன்மையை குறைக்கும்.

மொழி பெயர்ப்பு - Sopme translations

மொழி பெயர்ப்பு

First Published : 14 October 2012 03:44 PM IST

  1.  பிளேட்டோவின் "குடியரசு' என்ற நூலை உருது மொழியில் மொழி பெயர்த்தவர் : இந்திய க் கு.த. சாகிர் உசேன்.
  2.  மகாபாரதத்தை இரசிய மொழியில் மொழி பெயர்த்தவர் : போரிசு இசுமிர்னோவ்வு.
  3.  திருப்பாவையைத் தெலுங்கில் "ஆமுத்த மால்யதா' என்ற தலைப்பில் கிருட்டிண தேவராயர் மொழி பெயர்த்தார்.
  4.  திருக்குறளை ப் பிசி(பிஜி) மொழியில் மொழி பெயர்த்தவர்: சுவாமி உருத்ரானந்தா.
  5. சிலப்பதிகாரத்தை ச் செக் மொழியில் மொழி பெயர்த்தவர்  முனைவர் கமில் சுவெலபில்.

வரலாற்றில் இன்று : 21/10

  •  பிரான்சில் முதல் முறையாக பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது(1945)
  • சோசபபு ஆசுடின், போர்ட்லண்ட்டு  சிமெண்டிற்கான காப்புரிமம் பெற்றார்(1824)
  • கருநாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசுவாசி தீட்சிதர் இறந்த நாள்(1835)
  • தமிழக முன்னாள் கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா பிறந்த நாள்(1925)
  • நோபல் பரிசை க் கண்டுபிடித்த ஆல்பிரட் நோபல் பிறந்த நாள்(1833)

Friday, October 19, 2012

வரலாற்றில் இன்று :20/10

வரலாற்றில் இன்று :20/10 
 
 
  1. சீக்கிய மதத்தை த் தோற்றுவித்த குரு நானக் தேவ் பிறந்த நாள்(1469)
  2. கேரள முன்னாள் முதல்வர் வி.எசு.அச்சுதானந்தன் பிறந்த நாள்(1923)
  3. சிட்னி ஒப்பேரா மாளிகை திறந்து வைக்கப்பட்டது(1973)
  4.  இலங்கையில் முதன் முதலில் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற்றது(1982)

 dinamalar

சமையலறை ப்பொருட்களை அழகுக்கு ப் பயன்படுத்தினால் தோல்பாதிக்கும்' - மருந்து நிறுவனங்களின் சதிக்குரல்

"சமையலறை பொருட்களை அழகுக்கு பயன்படுத்தினால் சருமம் பாதிக்கும்'


இலண்டன்: "பாட்டி வைத்தியம்' என்ற பெயரில், பருக்கள் மீது வினிகர் பூசுவது, சரும பளபளப்பிற்கு எலுமிச்சை சாறு பயன்படுத்துவது போன்றவை பிரச்னையை மேலும் அதிகரிக்கத் தான் செய்யும் என, மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். பிரிட்டனைச் சேர்ந்த, "கேர்' என்ற நிறுவனம் இது குறித்து ஆய்வு நடத்தியது. சருமத்தை மிருதுவாக்க பற்பசையை பயன்படுத்துவதாக 18 சதவீதம் தெரிவித்தனர். மற்றவர்கள் சமையல் எண்ணெய், எலுமிச்சை சாறு, தேன் போன்றவற்றை பயன்படுத்துவதாகக் கூறியுள்ளனர். 65 சதவீதம் பேர், வீட்டில் இருக்கும் சமையலறை பொருட்களை, சரும பிரச்னைகளைச் சமாளிக்க தொடர்ந்து பயன்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.. சரும வறட்சிக்கு, 20 சதவீதம் பேர், கை வைத்தியத்தை பின்பற்றுகின்றனர். மேலும், 19 சதவீதம் பேர், கரும்புள்ளிகளுக்கும், 18 சதவீதம் பேர், சொறி மற்றும் படைக்கும், 8 சதவீதம் பேர், "சோரியாசிஸ்' நோய்க்கும் கை வைத்தியத்தைப் பின்பற்றுகின்றனர். கடையில் வாங்கும் மருந்துகள், தங்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துவதாலேயே, கை வைத்தியத்தைப் பின்பற்றுவதாக பலர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து, மருந்து கம்பெனி அதிகாரி ஸ்டீவ் ரைலி கூறுகையில், "இது போன்ற பொருட்கள், சருமத்தின் மேல் உபயோகத்திற்கு உகந்ததல்ல. பற்பசை, சருமத்திலுள்ள எண்ணெயை ஈர்த்து பருக்கள் காய்ந்து உதிர்வதற்கு உதவி புரிந்தாலும், செல்களில் அரிப்பையும், எரிச்சலையும் ஏற்படுத்தும். வினிகர், எலுமிச்சை சாறு இரண்டுமே அமில சத்து கொண்டவை என்பதால், அவை

பாரதியார் சிந்தனைகள்

 
 
* முயற்சி மேற்கொண்டால் வெற்றியை எட்டும் வரை கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். லட்சியத்தைத் தவிர வேறு எதையும் சிந்திக்கக்கூடாது.* ஒருவருக்கொருவர் மனதாலும் தீங்கு நினைக்காதீர்கள். யாருக்காகவும் எதற்காகவும் பயம் கொள்ளாதீர்கள். இதை பின்பற்றினால் வாழ்வில் ஒருபோதும் துன்பம் நம்மைத் தீண்டாது. [...]
* மனதில் உறுதியும், வாக்கில் இனிமையும் கலந்திருக்கட்டும். எண்ணத்தில் தூய்மை விளங்கட்டும். செயலில் மேன்மை மிளிரட்டும்.* மனம் நாம் சொல்வதைக் கேட்க வேண்டும். அவ்வாறு கேட்டால் இந்த உலகில் பல்லாண்டு வாழலாம். * உண்மை எங்கும் ஓங்கட்டும். அறிவுக்கண் திறக்கட்டும். செய்யும் செயலில் ஆர்வம் பெருகட்டும். [...]
* ஒருநாளில் இத்தனை மணிநேரத்தில் வேலைகளை முடிக்க வேண்டும் என்ற திட்டமிடுதலுடன் செயல்படுங்கள். * தர்மம், கருணை ஆகிய உயர்பண்புகளின் அடிப்படையில் பெறப்படும் வெற்றியே நிலைத்து நிற்கும்.* மனதில் எப்போதும் உறுதி வேண்டும். இனிமையான சொற்களையே பேச வேண்டும். நினைவும் தூய்மையானதாக இருக்க வேண்டும்.* [...]
* எல்லா உயிர்களையும் சமமாகக் கருதுங்கள். அதனால் பிறவித்தளையில் இருந்து நீங்கி விடுதலை காண்பீர்கள்.* பிறர் குற்றங்களை மன்னிக்கும் குணம் குற்றமற்றவர்களிடம் மட்டும் தான் காணப்படும். தான் செய்த குற்றத்தை மறப்பதும், மறைப்பதும் மூடனின் செயல்.* குடும்பத்தில் ஒழுங்கில்லாவிட்டால் நாட்டிலும் [...]
* ஒரு தனியிடத்தில் அமர்ந்து அமைதி தரும் உயர்ந்த சிந்தனைகளால் மனதை நிரப்பி தியானம் செய்யுங்கள். இதனால் மனஉறுதி மேலோங்கும்.* தன்னைத் தானே திருத்திக் கொள்ளாதவன் பிறரை திருத்துவதற்கு தகுதி பெற மாட்டான். * கோபத்தை வளர்த்துக் கொள்பவன் தன்னைத் தானே தீயால் சுட்டுக் கொள்கிறான். மனிதர்களுக்கு சாந்த [...]
* அணுவளவு கூட மற்றவர்களை ஏமாற்றுவதே கிடையாது என்று ஒருவன் பரிபூரணநிலையை அடைந்து விட்டால் அவனே கடவுள்.* நம்முடைய மனதில் தோன்றி மறையும் எண்ணங்கள் அப்படியே அழிந்து போவதில்லை. அவை விதைகளாக தங்கி விடுகின்றன.* தெய்வத்தின் தலையிலே வாழ்க்கைச் சுமையைப் போட்டு விட்டு கவலை, பயம் என்னும் நாய்களுக்கு [...]
* அச்சமே மடமை. அச்சமில்லாமையே அறிவு. அஞ்சுபவன் எத்தனை சாஸ்திரம் படித்திருந்தாலும் மூடன். துன்பம் வரும்போது எவனொருவன் நடுங்காமல் துணிவுடன் எதிர்த்துப் போராடுகிறானோ அவனே ஞானி.* வாயால் ஒரு தர்மத்தை எடுத்துச் சொல்லுதல் யாருக்கும் சுலபம் தான். ஆனால், சொன்ன வாக்கின்படி நடப்பது மிகவும் கடினமான [...]
* பிறரது குறைகளைப் பற்றி விவாதிப்பவன் பொழுதை வீணாகக் கழிக்கிறான். அவரவர் குறைகளை அவர்களே தெரிந்து கொள்வர்.* வேர்வை சிந்தும்படி நாள்தோறும் உழைக்கவேண்டும். நன்றாகப் பசித்த பின்னரே உணவு உண்ண வேண்டும். * மனிதன் தன்னைத்தானே செம்மைப்படுத்த முயற்சிக்க வேண்டும். அதுவே மகிழ்ச்சிக்குரிய வழி. தன்னைத் [...]
* பல தெய்வங்களை வணங்குவதைக் காட்டிலும் ஒரே தெய்வத்தை வணங்குவது நல்லது. இதனால், மனம் எளிதில் ஒருமைப்படும். பக்திக்கு இதுவே சுலபமான வழி.* உலகத்தை உள்ளிருந்து ஆட்டுவிக்கும் பரஞ்சுடர் ஒருவரே! அவரே நம்மைச் சூழ்ந்திருக்கும் கோடிக்கணக்கான உயிர்களாகவும் இருக்கிறார்.* தன்னிடத்தில் உலகத்தையும், [...]
* உழைப்பில் தான் சுகம் இருக்கிறது என்ற உண்மையை உணர்ந்து கொண்டவர்கள் உழைக்கத் தயங்கமாட்டார்கள். உழைப்பை உயிரெனக் கொள்ளுங்கள்.* கல்வி கற்கவும், ஆன்மிக வாழ்வில் ஈடுபடவும் வயது வரம்பு கிடையாது. ஆர்வமிருந்தால் எந்த பருவத்திலும் மேற்கொள்ளலாம்.* மதிப்புடன் வாழ்பவனுக்கு நேரும் அவமானம் மரணதண்டனையை [...]

அறிவியல் ஆயிரம்:தாவரப் பட்டுகள், தமிழுக்கு தகுதியில்லையா?

அறிவியல் ஆயிரம்

தாவரப் பட்டுகள்


வாழையில், அனைத்துப் பகுதிகளுமே பயன் உள்ளவை தான். வாழையின் நார் கூட, பூ கட்டப் பயன்படும் என்பர். ஆனால் நாம் பூ கட்டப் பயன்படுத்துவது, வாழை மரத்தில் உள்ள மேல் பட்டையை மட்டும் தான். வாழை மரத்தில் ”மார் 15 பட்டைகள் இருக்கும். இதில் ஒரு பட்டை மட்டும் பூ கட்டப் பயன்பட, மீதி பட்டைகள் வீணாகின்றன. இந்தப் பட்டையில் இருந்து தற்போது நார் எடுக்கப்பட்டு, அதில் இருந்து பட்டுப்பூச்சியின் பட்டு நூலுக்கு, இணையான பட்டு நூல் தயாரிக்கப்படுகிறது.இந்தப் பட்டு?நூலில், மற்ற பட்டுச் சேலைகளை போல வண்ணம் ஏற்ற முடியும். வாழை நாரில் இருந்து கையினால் காகிதம் செய்தனர். எனினும் காகிதத்திற்கு நல்ல விலை இல்லை. ஆனால் வாழைநாரில் பெறப்பட்ட பட்டுக்கு நல்ல விலை கிடைக்கிறது. ஒரு மரத்தில் இருந்து 2 பட்டுச்சேலைகளைப் பெறலாம்.

தகவல் சுரங்கம்

தமிழுக்கு தகுதியில்லையா?


சாகித்ய அகாடமி விருதுகள், தமிழுக்கு வழங்கப்படும் போது எப்போதும் சர்ச்சைகள் ஏற்படும். 1966ல் சாகித்ய அகாடமி விருதுக்கு, எந்தவொரு தமிழ் நூலும் தகுதியாக இல்லை என முடிவு செய்தனர்.அப்போது ஜனாதிபதியாக இருந்த ராதாகிருஷ்ணன் நேரடியாக தலையிட்டு ம.பொ.சி., எழுதிய "வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு' என்னும் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தைப் பரிசீலனை செய்யலாமே என தேர்வுக் குழுவினரிடம் பரிந்துரை செய்தார்.வள்ளலார் கண்ட ஒருமைப்பாட்டு நூலுக்காக ம.பொ.சி.,க்கு விருது வழங்கப்பட்டது. கவிஞராகவே அறியப்பட்ட கண்ணதாசனுக்கு அவர் எழுதிய சேரமான் காதலி நாவலுக்குத்தான் விருது வழங்கப்பட்டது. "புரட்சிக்கவிஞர்' பாரதிதாசனுக்கு நாடகத்திற்கு தான் விருது வழங்கப்பட்டது. இதுவரை 5 தடவை சாகித்ய அகாடமி விருது தமிழுக்கு வழங்கப்படவில்லை.

Thursday, October 18, 2012

இறை யியல் சிந்தனைகள் »குரான்

  இறை யியல் சிந்தனைகள் »குரான்
 
* விருந்தில் எல்லோரும் உண்டு முடிவடைவதற்குள், உணவில் இருந்து கையை எடுத்து விடாதீர்கள்.* உங்கள் சொற்படி நடக்கும் ஊழியர்களுக்கு, நீங்கள் உண்பதையே கொடுங்கள். நீங்கள் உடுத்துவதையே உடுத்தச் செய்யுங்கள்.* முதியோருக்கு மரியாதை செலுத்துதல் இறைவனுக்கு மரியாதை செலுத்துவதாகும்.* மறதி என்பது அறிவின் [...]
* எண்ணத்தைக் கொண்டே செயல்கள் தீர்மானிக்கப்படுகின்றன.* அறிவைத் தேடுகின்ற முயற்சியைத் தடுத்து நிறுத்துவது தீயொழுக்கமாகும்.* கற்றவண்ணம் நடப்பவரே உண்மையில் கற்றவர் ஆவார்.* நல்லமுறையில் பழகத் தெரிந்தவனும், நற்குணம் உள்ளவனுமே நண்பர்களுள் சிறந்தவன். * உழைப்பவர்களின் கூலியை அவர்களது வியர்வை [...]
* பெரும் பாவியைக் குறித்து புறம் பேசுவது குற்றமாகாது. தான் மறைவாகச் செய்கின்ற பாவங்களை வெளியில் சொல்பவனைக் குறித்துப் புறம் பேசுவது குற்றமாகாது.* உங்களுடைய பாவங்களை அல்லாஹ் மன்னித்து விடுவான். ஆனால் உங்களுடைய கடன்கள் மன்னிக்கப்படுவதில்லை. * ஆசைகளையும் தம் தேவைகளையும் குறைத்துக் [...]
* நீங்கள் ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர். ஒருவர் மீது ஒருவர் துவேசம் கொள்ளாதீர். * பொறாமை மனிதனுடைய நன்மைகளை அழித்து விடுகிறது.* வசதி இல்லாத ஒருவன் மனம் நொந்தவனாக உங்களிடம் ஏதாவது கேட்டால் அவனை விரட்டாதீர்கள். கொஞ்சமேனும் கொடுங்கள். * ஒருவர் தர்மம் செய்கிறாரென்றால் அவர் அல்லாஹ்வின் மீது [...]
* பெற்றோரின் பிரியத்தில் தான் அல்லாஹ்வின் பிரியமும் இருக்கிறது. பெற்றோரின் கோபத்தில்தான் அல்லாஹ்வின் கோபமும் இருக்கிறது.* உங்களுடைய தந்தைக்கு நீங்கள் நன்றி செலுத்துங்கள். உங்கள் மகன் உங்களுக்கு நன்றி செலுத்துவான்.* வயது வந்த பெற்றோரில் தாய் தந்தை இருவரில் ஒருவர் இருந்து அவருக்கு பிள்ளைகள் [...]
* அநியாயமான வாதங்களுக்கு துணை இருப்பவர் இறைவனின் கோபத்திற்கு ஆளாவார். * தனது வயது அதிகரிக்க அதிகரிக்க நற்செயல்களை அதிகரிக்கச் செய்பவரே உங்களில் சிறந்தவர்.* நீ நல்லவன் என்று உன் பக்கத்து வீட்டுக்காரன் சொல்வானேயானால் நீ நல்லவனே!* தகுதியுள்ள திறமையுள்ள ஒருவர் இருக்க தகுதியற்ற ஒருவரை [...]
* பெரியோர்களுக்கு கண்ணியம் கொடுக்காதவரும், சிறியோர் மீது இரக்கம் கொள்ளாதவரும் எம்மைச் சேர்ந்தவரல்ல.* பெண் குழந்தையை விட, ஆண் குழந்தைக்கு முதன்மை அந்தஸ்து கொடுக்காமல் இருக்கும் ஒருவரை நிச்சயம் அல்லாஹ் சொர்க்கத்தில் நுழைய வைப்பான்.* தன்னுடைய வரவுக்குத் தக்கபடி செலவு செய்பவனும் எல்லாச் [...]
* உங்கள் சொற்படி நடக்கும் ஊழியர்களுக்கு நீங்கள் உண்பதையே கொடுங்கள். நீங்கள் உடுத்துவதையே அவர்களையும் உடுத்தச் செய்யுங்கள். நீங்கள் மகிழும்படி நடக்காத ஊழியர்களை விலக்கி விடுங்கள். அவர்களைத் துன்புறுத்த வேண்டாம்.* வேலைக்காரன் உங்களுக்கு உணவு கொண்டு வந்தால் நீங்கள் உணவு உண்ண அமரும் போது, [...]
* அண்டை வீட்டார் பசியோடிருக்க, தான் மட்டும் வயிறார உண்டு களித்திருப்பவன் உண்மையான மனிதன் ஆக மாட்டான்.* சிறு குழந்தைகளிடம் அன்பு காட்டாதவனும், மூத்தவர்களுக்கு மரியாதை செலுத்தாதவனும் என் அன்பிற்குரியவன் அல்லன்.* அடக்கமுடைமையே எல்லா நன்மைகளுக்கும் நற்பாதை வகுக்கின்றது.* எளிமையும் [...]
* வசதி இல்லாத ஒருவன் மனம் நொந்து உங்களிடம் உதவி கேட்டால் அவனை விரட்டாதீர்கள். கொஞ்சமேனும் கொடுத்து அனுப்புங்கள். அல்லது இனிய வார்த்தைகளால் பதில் சொல்லுங்கள்.* ஒருவர் நேர்வழி பெற்றபின், வீண் தர்க்கம் செய்வதை விட்டு விட்டால் அவர் ஒருபோதும் வழிகெட மாட்டார். ஏனெனில், இறைவனிடம் மிகவும் [...]

வரலாற்றில் இன்று : 19/10

வரலாற்றில் இன்று : 19/10  
 
  1.       அல்பேனியா -  தெரசா நாள்
  2.       நியுயே - அரசியலமைப்பு நாள்(1974)
  3.       மார்டின் லூதர், இறையியலுக்கான முனைவர் பட்டம் பெற்றார்(1512)
  4.       சோ ஓயு மலையின் உச்சி முதன் முறையாக எட்டப்பட்டது(1954)

Wednesday, October 17, 2012

வரலாற்றில் இன்று : 18/10

வரலாற்றில் இன்று : 18/10
  •  நாகப்பட்டினம் மாவட்டம் அமைக்கப்பட்டது(1991)
  •  பிபிசி வானொலி  தொடங்கப்பட்டதுஆரம்பிக்கப்பட்டது(1922)
  •  டெக்சாசு இன்சுட்ருமென்ட்ஸசு நிறுவனம் முதலாவது டிரான்சிசுடர் வானொலியை அறிமுகப்படுத்தியது(1954)
  •  கணிணியைக் கண்டுபிடித்த சார்லசு பாபேசு இறந்த  நாள்(1871)
  •  அமெரிக்க கண்டுபிடிப்பாளர் தாமசு ஆல்வா எடிசன் இறந்த நாள்(1931)

Tuesday, October 16, 2012

வரலாற்றில் இன்று :17/10

  • உலக வறுமை ஒழிப்பு நாள்
  • கவிஞர் கண்ணதாசன் இறந்த நாள்(1981)
  •  அன்னை தெரசா அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார்(1979)
  •  போட்சுவானா மற்றும் (இ)லிசோதோ ஆகியன ஐ.நா.வில் இணைந்தன(1966)

Monday, October 15, 2012

வரலாற்றில் இன்று :16/10

வரலாற்றில் இன்று :
  • பன்னாட்டு உணவு நாள்
  •  சிலி ஆசிரியர் நாள்
  •  பாஞ்சாலங்குறிச்சி மன்னர் கட்டபொம்மன், ஆங்கிலேயரால் தூக்கிலிடப்பட்டார்(1799)
  •  வால்ட் டிசுனி நிறுவனம்  தொடங்கப்பட்டது.(1923)
  •  பிரிட்டன் இந்தியாவில் வங்காளப் பிரிப்பு இடம்பெற்றது(1905)
  •  தினமலர்

வரலாறு உன்னை வாழ்த்தட்டும்! - விவேகானந்தர்


வரலாறு உன்னை வாழ்த்தட்டும்! - விவேகானந்தர்
நவம்பர் 20,2011,12:11  IST

* பிறர் புகழ்ந்தாலும் சரி, இகழ்ந்தாலும் சரி, கடவுள் உனக்கு அருள்புரிவதில் இருந்து தவறமாட்டார். ஆனால் நீ, உண்மை என்னும் பாதையிலிருந்து அணுவளவு கூட பிறழக்கூடாது.
* அன்பின் மூலமாக செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டு வந்தே தீரும்.
* எல்லா உயிர்களும் தெய்வம் என்பது உண்மையே. ஆனால், அனைத்திலும் உயர்ந்த தெய்வம் மனிதனே.
* உழைப்பும், உறுதியும் மிக்க சிங்கம் போன்ற இதயம் படைத்த ஆண்மகனுக்கே திருமகளின் அருள் கிடைக்கும்.
* வாழ்வின் லட்சியம் இன்பம் என்று எண்ணி நாம் ஓடிக் கொண்டே இருக்கிறோம். ஆனால், அறிவு தான் நம் வாழ்வின் உண்மையான லட்சியம்.
* நாம் அனைவரும் இப்போது கடுமையாக உழைப்போம். இது தூங்குவதற்கான தருணம் அல்ல.
* ஆணோ பெண்ணோ, வரலாற்றில் சிறப்புடன் விளங்கினார்கள் என்றால் அதற்கு முக்கியக் காரணம் தன்னம்பிக்கை தான். என்னால் இயலாது என்று சொல்பவர்கள் வரலாற்று புத்தகத்தைக் கூட தொடுவதற்கு தகுதியற்றவர்கள்.
- விவேகானந்தர்

தினமலர் 

Sunday, October 14, 2012

வரலாற்றில் இன்று : 15/10

  •  பிரேசில் ஆசிரியர்  நாள்
  •  இலங்கை தேசிய மரம் நடும் நாள்
  • தமிழர்க்கு உதவா இந்திய முன்னாள் குடிக்கோ அப்துல் கலாம் பிறந்த நாள் (1931)
  • சீரடி சாய்பாபா சமாதி நாள் (1918)
  •  டாடா விமான நிறுவனம்(தற்போதைய ஏர் இந்தியா)தனது முதலாவது விமான ச் சேவையை  த் துவக்கியது(1932)

Saturday, October 13, 2012

வரலாற்றில் இன்று : 14/10

வரலாற்றில் இன்று :
  •  உலக தர  வரை யறை நாள்
  •  இலங்கையின் முதலாவது நாடாளுமன்றம் கூடியது(1948)
  •  சிறுவர் நூலான வின்னீ தி பூ வெளியிடப்பட்டது(1926)
  •  விண்ணிலிருந்து முதலாவது நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்பு அப்போலோ 7 விண்கலத்தில் இருந்து மேற்கொள்ளப்பட்டது(1968)
    தினமலர்

நேர்மை நம்மைக் காக்கும்

நேர்மை நம்மைக் காக்கும்
ஆகஸ்ட் 30,2012,14:08  IST

* அழிவுக்கு முன்னால் அகந்தை. விழுவதற்கு முன்னால் தற்செருக்கு. அகங்காரம் வரும்போது அதற்குப் பின்னே அவமானமும் வந்துசேரும்.
* அக்கிரமக்காரர் எதிர்பார்ப்பது அழிந்தே போகும். நேர்மையாளனோ இடுக்கண்ணிலிருந்து விடுவிக்கப்படுவான்.
* பலசாலியைவிடக் கோபம் கொள்வதில் மிதமாயிருப்பவனே சிறந்தவன். ராஜ்யங்களைக் கைப்பற்றுபவனை விடத் தன் உணர்ச்சியை அடக்கியாளுபவனே சிறந்தவன்.
* ஒடுக்கி அமுக்கப்பட்டவர்களுக்குக் கடவுளே அடைக்கலமானவர். சங்கட வேளைகளிலும் அவரே அடைக்கலமானவர்.
* அடக்குமுறைகளில் நம்பிக்கை வைத்திருக்க வேண்டாம். கொள்ளைத்தனத்தில் வீணாகிவிட வேண்டாம். செல்வம் பெருகினால் அவற்றின் மீது உங்கள் இருதயத்தை வைத்து விட வேண்டாம்.
* "கடவுளே எனக்குத் துணை. மனிதன் எனக்கு என்ன செய்வானென்று அஞ்சமாட்டேன்' என்று தைரியமாய்ச் சொல்லலாமே!
- பைபிள்
தினமலர்

பொறுமையைக் கடைபிடியுங்கள்

பொறுமையைக் கடைபிடியுங்கள்
செப்டம்பர் 03,2012,09:09  IST

* இரும்பை இரும்பு கூர்மையாக்கும். மனிதனை அவன் நண்பன் கூர்மை ஆக்குகிறான்.
* கடவுளின் படை ப்பு ஒவ்வொன்றுமே நல்லது தான். நன்றியறிதலுடன் பெற்றுக் கொண்டால் எதையும் தள்ள வேண்டியதில்லை.
* நல்ல  மனிதன் நல்ல வற்றை இதயத்தின் நல்ல  கருவூலத்திலிருந்து எடுத்துக் காட்டுகிறான். தீயவன் தீய க் கருவூலத்திலிருந்து தீயதைக் கொண்டு வருகிறான்.
* கடவுளின் ஊழியன் வழக்காடும் தன்மையுள்ளவனாய் இருக்கக்கூடாது. எல்லா மனிதர்களிடமும் கண்ணியமாகவும், போதிக்கும் திறமையுள்ளவனாகவும் பொறுமைசாலியாகவும் இருக்கவேண்டும்.
* எனக்கு வறுமையையோ செல்வப்பெருக்கையோ தர வேண்டாம். எனக்கு அன்றாடத் தேவையான உணவை மட்டும் ஊட்டும்.
* நண்பன் புண்படுத்தும் காயங்கள் உள்ளூரப் பற்றுதல் உள்ளவை. ஆனால், பகையாளி ஒருவன் வாரி வழங்கும் முத்தங்களோ உள்ளூரப் பித்தலாட்டமானவை.
- பைபிள்
தினமலர்

தந்தை சொல் கேள்

செப்டம்பர் 11,2012,09:09  IST



  தந்தை சொல் கேள்


* மாபெரும் செல்வத்தை விட நல்ல பெயர் சிறந்தது.
* பெண் இல்லாமல் மனிதன் இல்லை. மனிதன் இல்லாமல் பெண்ணும் இல்லை.
* நாமெல்லாம் கரடிகளைப் போல உறுமுகிறோம். புறாக்களைப் போல வேதனைகரமாகப் புலம்புகிறோம்.
* தந்தையின் புத்திமதியைக் கேள். தாயின் நியதியைப் புறக்கணிக்காதே.
* எல்லாருமே உங்களைப் புகழ்ந்து பேசினால் உங்களுக்குக் கேடு.
* என் வில்லை நாம் நம்புவதில்லை. என் கத்தியும் என்னைக் காப்பாற்றாது.
* தீவினையைக் கர்ப்பம் தரித்துப் பித்தலாட்டத்தைப் பெற்றெடுக்கிறான்.
* எளியவனைக் கருதிப் பார்ப்பவன் பாக்கியவான். தீங்கு நாளில் அவனைக் கர்த்தர் விடுவிப்பார்.
* கர்த்தரிடம் புதுப்பாட்டைப் பாடுங்கள். புவியனைத்தையும் கர்த்தரிடம் பாடுங்கள்.
* உன் நெஞ்சிலிருந்து வருத்தத்தை நீக்கிவிடு. உன் சதையிலிருந்து தீமையை எடுத்து விடு.
- பைபிள் பொன்மொழிகள்
தினமலர்

கருணைக்கு விலையே இல்லை

கருணைக்கு விலையே இல்லை
 
அக்டோபர் 10,2012,17:10  IST

* முட்டாளுக்கு அவனது புத்தியீனத்திற்கு ஏற்ப பதில் சொல். பதில் சொல்லாவிட்டால் அவன் தன்னை அறிவாளி என்று நம்பிக் கொண்டிருப்பான்.
* தானியத்தைப் பதுக்கி வைப்பவனைப் பொதுஜனம் சபிக்கும். ஆனால், அதை விற்பவன் தலையையோ வாழ்த்தும்.
* கடவுளின் கருணையை உன் பணத்தால் விலைக்கு வாங்கி விடலாம் என்று நீ நினைத்தபடியால், உன்னுடைய பணம் உன்னுடனே அழிந்து போகட்டும்.
* பணத்தாசை பிடித்தவர்கள் ஆசைத் தூண்டுதல்களிலும், சூழ்ச்சி வலைகளிலும் விழுகிறார்கள். பல அசட்டுத்தனமான புண்படுத்தக்கூடிய மோகங்களிலும் விழுகிறார்கள். அவை அவர்களை நரகாக்கினியில் மூழ்கடிக்கின்றன.
* நம் சரீர முயற்சியின் பலன் சிறிதளவே ஆகும். ஆனால் தெய்வீகத்தன்மையோ எல்லாவற்றையும் விட அதிகமான பலன் தருவதாகும்.
* நெருக்கடியான நேரத்தில் தளர்வாயாகில் உன் பலம் சிறிதாகிவிடும். பெண்களிடத்தில் உன் பலத்தைக் கொடுத்து விடாதே.
- பைபிள் பொன்மொழிகள்
தினமலர்

Friday, October 12, 2012

வரலாற்றில் இன்று : 13/10


வரலாற்றில் இன்று : 13/10
  • பன்னாட்டு  இயற்கை ப் பேரிடர் நாள்
  •  தாய்லாந்து தேசிய க் காவல்துறை நாள்
  • பன்னாட்டு நேரம் கணக்கிடும் இடமாகக்  கிரீன்வீச்சு தேர்வு செய்யப்பட்டது(1884)
  •  வெள்ளை மாளிகைக்கான அடிக்கல் வாசிங்டன் டிசியில் இடப்பட்டது(1792)
  •  துருக்கி த் தலைநகர் இசுதான்புல் நகரில் இருந்து அங்காராவுக்கு மாற்றப்பட்டது(1923)
  •  
  • தினமலர்

Thursday, October 11, 2012

வரலாற்றில் இன்று : 12/10

வரலாற்றில் இன்று : 12/10
  •  மல்லாவி அன்னையர் நாள்
  •  இந்திய தொழிலதிபர் கே.கே.பிர்லா பிறந்த நாள்(1918)
  •  ரிச்சர்ட்   யான்சன் என்பவர் தமிழகத்தின் முதல் செய்திப்பத்திரிக்கையான மெட்ராஸ் கூரியர் என்ற வார இதழை வெளியிட்டார்(1785)
  •  கொலம்பசு நாள் முதன் முறையாக நியூயார்க்கில் கொண்டாடப்பட்டது(1792)
  •  சார்லசு மேகின்டொசு, முதல்  மழை ஆடை (ரெயின்கோட்டு) விற்பனை செய்தார்(1823)
    - தினமலர்

Wednesday, October 10, 2012

வரலாற்றில் இன்று : 11-10

வரலாற்றில் இன்று : 11-10 
  • தமிழ்ப் புதின முன்னோடி மாயூரம் வேதநாயகம் பிள்ளை பிறந்த தினம்(1826)
  • ஆசுதிரேலியாவின் மிகப் பழமையான சிட்னி பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது(1852)
  •  யான் இசுடீவன்சு (ஜான் ஸ்டீவன்ஸ்) கண்டுபிடித்த முதலாவது நீராவிப் படகு சேவை நியூயார்க்கிற்கும் நியூசெர்சிக்கும் இடையே தொடங்கப்பட்டது(1811)
  • நாசா முதல் முறையாக 3 விண்வெளி வீரர்களை அப்பல்லோ 7 விண்கலத்தில் விண்ணுக்கு ஏவியது(1968)
தினமலர்

Tuesday, October 9, 2012

அறவழிகளில் செல்ல முயற்சி செய்யுங்கள்

உங்களை நீங்களே சோதியுங்கள்
அக்டோபர் 03,2012,11:10  IST

* யாரையும் சிறியவன், கீழானவன் என்று அவமதிக்காதீர்கள். உருவத்தைக் கண்டு ஏளனம் செய்யாதீர்கள்.
* எல்லா உயிர்களும் ஈசனின் கோயில். அதனால் அனைவருமே நம் போற்றுதலுக்கு உரியவர்கள்.
* உணவருந்தும் போது தேவையற்ற அவசரமோ, மிகவும் நிதானமோ கூடாது.
* தன்னைத் தானே சோதித்துக் கொள்ளவேண்டும். இதனால், தீமையில் இருந்து விலகி நம்மைத் திருத்தி கொள்ள முடியும்.
* பிறரிடம் எடுத்துச் சொன்னால் நாம் செய்த பாவம், புண்ணியம் இரண்டின் அளவும் குறைந்து போகும்.
* கடவுள் வழிபாடு ஒன்றே மனிதனை விலங்குகளிடம் இருந்து பிரித்து உயர்ந்தகதிக்கு அழைத்துச் செல்கிறது.
* கரையான் போல மற்றவர்களின் செல்வத்தையும், புகழையும் கெடுத்து வாழ்வது கூடாது.
* நரை தோன்றிய பிறகாவது பிறவியை ஈடேற்றும் நல்ல அறவழிகளில் செல்ல முயற்சி செய்யுங்கள்.
* எல்லா உயிர்களிடமும் தூய அன்பு செலுத்தினால் மட்டுமே, கடவுளின் அருளைப் பெற முடியும்.
- கிருபானந்த வாரியார்

Saturday, October 6, 2012

தலைவர்கள் நடத்திய இதழ்கள்

தலைவர்கள் நடத்திய பத்திரிகைகள்

First Published : 23 September 2012 12:00 AM IST
லெனின்
புராலிடேரியட், ஸ்பார்க்
---------------------------
கார்ல் மார்க்ஸ்
நைன்லாந்து கெசட்
---------------------------
மாஜினி
யங் இத்தாலி
---------------------------
ஹிட்லர்
வால்கிஷர்
---------------------------
முசோலினி
இல்-பாப்லோ டீ, இடாலியோ
---------------------------
காந்தியடிகள்
யங் இந்தியா, ஹரிஜன்
---------------------------
அன்னிபெசன்ட்
லிங்க், நியூ இந்தியா
---------------------------
பெரியார்
குடியரசு, விடுதலை
---------------------------
அண்ணா
திராவிட நாடு, காஞ்சி
---------------------------

அட அப்படியா!

அட அப்படியா!

First Published : 23 September 2012 12:00 AM IST
ஓய்வு இல்லை
ஜப்பானிய மொழியில் "உழைப்பு' என்ற அர்த்தத்தைத் தொனிக்கக் கூடிய சொற்கள் நிறைய இருக்கின்றன. ஆனால் "ஓய்வு' என்ற வார்த்தையைக் குறிக்கும் சொல் அம்மொழியில் இன்று வரை இல்லை.
திருட்டு சாஸ்திரம்
வடமொழியிலுள்ள ஓர் ஓலைச்சுவடியின் பெயர் "செüர்ய சாஸ்திரம்'. இதில் திருடுவது எப்படி என்ற முறைகளும், திருடுவதற்கு முன் திருடர்கள் கடவுளை வேண்டிக் கொள்ளும் துதிப் பாடல்களும் உள்ளன.
பாக்கெட்டில் மூளை!
அறிஞர் ஆல்ஸ்டன் குள்ளமாக இருப்பதைப் பார்த்து வழக்கறிஞர் ஒருவர் கிண்டல் செய்தார். ""உங்களை என் கோட் பாக்கெட்டில் போட்டுக் கொள்ளலாம்'' என்றார். ""அப்படிச் செய்தால் உங்கள் தலையில் இருப்பதைவிட பாக்கெட்டில் அதிக மூளை இருக்கும்'' என்று பளிச்சென்று கூறினார் ஆல்ஸ்டன்.

மியாவ்... மியாவ்...!
பைபிளில் இடம் பெறாத ஒரு பிராணி பூனை
பூனைகள் இனிப்பைத் தொடாது.
பூனையால் புவியின் காந்தப் புலனை உணர முடியும்.
ஆமைக்குப் பற்கள் கிடையாது
முதலையின் மேல் தாடையில் 40 பற்களும், கீழ்தாடையில் 30 பற்களும் உண்டு
பெண் குதிரைக்கு 40 பற்களும், ஆண் குதிரைக்கு 36 பற்களும் உண்டு.

சூளுரையும் நடைமுறையும்
டாக்டர்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய சூளுரைகளை இந்திய மருத்துவக் கவுன்சில் அறிவித்துள்ளது. அவற்றில் சில...
ஏழை நோயாளிகளை அன்போடு நேசிப்பேன்.
நோயாளிக்கு தேவையற்ற மருந்துகளைக் கொடுக்க மாட்டேன்.
தேவையற்ற பரிசோதனைகளைச் செய்ய மாட்டேன்.
என்னால் நோயைக் குணப்படுத்த முடியாத பட்சத்தில் வேறு மருத்துவ முறைகளைப் பின்பற்ற நோயாளிகளுக்கு தைரியம் கொடுப்பேன்.
உலக மனிதர்களுக்காகச் சேவை செய்வதைத் தினமும் நினைக்க மறக்க மாட்டேன்.
சரியான கட்டணத்தை மட்டும் பெறுவேன்