Saturday, May 18, 2013

சில நகைச்சுவைகள்

சிரிப்பதற்காக சில நகைச்சுவைகள்

வாழ்க்கையில் எதற்கெல்லாமோ சிரிக்கிறோம்.. ஒரு நகைச்சுவைக்காக சிரிக்க மாட்டோமா.. நிச்சயமா சிரிப்பீங்க.. நாங்க நம்புறோம்...
செய்தியாளர் : உங்களது வருங்காலக் கணவர் எப்படி இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?
நடிகை : இப்போது இருப்பவரை விட சிறந்தவராக இருக்க வேண்டும்.
***
கோபு : நேத்து ஹோட்டல் வைத்திருப்பவர் வீட்டில் பொண்ணு பாக்க போனியே என்ன ஆச்சு?
பாபு : அத ஏன் கேக்குறீங்க.. பொண்ண பாத்துட்டு புடிக்கலன்னு சொன்னதும், குடிச்ச டீக்குக் கூட பில் போட்டு கொடுத்துட்டாங்கண்ணா பாத்துக்கோங்களேன்.
***
ஒரு பொண்ணு போன எடுத்து எடுத்துப் பார்த்தா என்ன அர்த்தம்?
புதுசா காதலிக்கிறான்னு அர்த்தம்
போன் வரும்போதெல்லாம் கட் பண்ணினா என்ன அர்த்தம்?
காதலன புடிக்கலன்னு அர்த்தம்
பொண்ணு தலை குனிஞ்சி நடந்தா என்ன அர்த்தம்?
போன்ல மெசேஜ் ப்ரீன்னு அர்த்தம்.
***
பொண்ணுங்க போன பத்தி என்னடா நினைக்கிற...
ரூ.20 ஆயிரத்துக்கே போன வாங்கினாலும், அதுல மிஸ்டுகால் மட்டும்தான் கொடுப்பாங்கடா..
***
கல்யாணம் பண்ணிக்க சொல்லி உன் பின்னாடி பொண்ணுங்களா அலையுதுன்னு சொல்லி ஏதோ பயங்கரமா பில்டப் கொடுக்கிறீயே.. அதில ஏதாவது 2 பொண்ண பத்தி சொல்லு...
ஒண்ணு எங்க அம்மா.. இன்னொன்னு எங்க பாட்டி.
***
என் பொண்டாட்டின்னா எனக்கு ரொம்ப பயம்.. நீங்க எப்படி?
அட போங்க நான் அவ்ளோ மட்டமில்லை. உங்க பொண்டாட்டிக்கெல்லாம் பயப்பட மாட்டேன்.
***

Saturday, May 4, 2013

மே 1 - உழைப்பாளர் நாள் பொன்மொழிகள்

மே 1 - உழைப்பாளர் நாள் பொன்மொழிகள்

1. தெருவில் குப்பை கூட்டுகிறவன், அரியணை அமர்ந்து அரசு புரியும் மன்னனைப் போன்ற பெருமையும் சிறப்பையும் உடையவன். - விவேகானந்தர்

2. தமது உழைப்பின் மூலம் வாழ்க்கைக்குரிய வழியைத் தேடிக் கொள்வதற்கு அனைவருக்கும் உரிமையுண்டு. எனவே, ஒரு வழக்கறிஞர் வேலைக்கு எவ்வளவு மதிப்பு உண்டோ அவ்வளவு மதிப்பு ஒரு நாவிதனின் வேலைக்கும் உண்டு.
- காந்தியடிகள்

3. மனிதன் கட்டை வண்டி இழுக்கும்போது அவனுடைய கைகால்களின் தசைநார்களைப் பார்த்தாலும் அழகாக இருக்கிறது. - மு.வரதராசனார்

4. கெட்ட நெறிக்குச் சோம்பலே காரணம். நன்மையை நாடுகின்றவன் ஒரு தொழிலைக் கற்று அதில் புகுந்து பணியாற்ற வேண்டும். - அக்பர்

5. ஆராய்ச்சியின்றி உழைப்பவனுக்கு ஆண்டவன் அருள் சுரப்பான். - காந்தியடிகள்
-தொகுப்பு: ந.கிருட்டிணவேலு

தெரிந்துகொள்ளுங்கள்...03.05.2013

தெரிந்துகொள்ளுங்கள்...

தெரியுமா?

• முதன்முதலாகத் தனியாகப் படகில் உலகம் சுற்றி வந்த பெண் என்ற சிறப்பைப் பெற்றவர் லிசா கிளேடன். இவர் இங்கிலாந்தின் பர்மிங்ஹாமைச் சேர்ந்தவர். இவர் உலகைச் சுற்றி வர எடுத்துக்கொண்ட காலம் 9 மாதங்கள்.
-முக்கிமலை நஞ்சன்

• நகல் எடுப்பதை ஜெராக்ஸ் என்று சொல்லுகிறோம். ஜெராக்ஸ் என்பது
ஒரு நிறுவனத்தின் பெயர். அந்த நிறுவனம் தயாரித்தளிக்கும் "போட்டோ
காப்பியர்' என்ற இயந்திரத்தின் மூலம் நாம் நகல் எடுக்கின்றோம்.
-த.ஜெகன், சரலூர்.

• "ஹரிக்கேன்' என்பது புயலைக் குறிக்கும் சொல். புயல் காற்றிலும் அணையாமல் எரிந்த மண்ணெண்ணெய் விளக்கே "ஹரிக்கேன் விளக்கு' என்று அழைக்கப்பட்டது. அந்தப் பெயரே இப்போதும் தொடர்கிறது.
-ஆ.திலீபன்,
திருநெல்வேலி.

• சந்திரனின் மனிதன் முதன்முதலாக ஓட்டிச் சென்ற வண்டியின் டயர்கள், பியானோ இசைக் கருவியில் பயன்படுத்தப்படும் ஒயர் கம்பிகளாலானவை.

• ஸ்பெர்ம் திமிங்கிலத்தின் நெற்றியில் மட்டும் இரண்டாயிரம் லிட்டர் அளவுக்கு எண்ணெய் இருக்கும்.

• உலகிலேயே கடல் மட்டத்துக்குக் கீழே இருக்கும் நாடுகளில் அதிகமாக மக்கள் வசிக்கும் நாடு ஹாலந்து மட்டும்தான்.
-ஜி.அருள்குமார், மன்னார்குடி.

• பாம்பு தோல் உரிப்பதற்கு ஒருவாரம் முன்பு அதன் கண்களும் உடம்பும் நிறம் மாறும்.

• சென்னை மெரீனா கடற்கரையை வடிவமைத்து அதற்குப் பெயரிட்டவர் கிராண்ட் டம் என்பவர். இவர் ஸ்காட்லாந்துக்காரர். ஆங்கிலேய ஆதிக்கத்தில் இந்தியா இருந்த சென்னை மாகாணத்தின் கவர்னராக இருந்தவர்.

• இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியை ஏற்படுத்திய ராபர்ட் கிளைவ்தான் தமிழ்நாட்டில் மைல் கற்களை சாலைகளில் முதன்முதலில் நட்டு வைப்பதற்கு ஏற்பாடு செய்தவர்.
-மல்லிகா அன்பழகன், சென்னை.

6 செய்திகள்


• இரண்டாம் உலகப் போர் 6 ஆண்டுகள் நடைபெற்றது.

• கரடி 6 மாதத்துக்குள் குட்டியை ஈனும்.

• நீரைவிட ரத்தம் 6 மடங்கு அடர்த்தியானது.

• வைரத்துக்கு 6 பட்டைகள் தீட்டப்படுகின்றன.

• கழுகு 6 கிலோமீட்டர்கள் வரை சிறகுகளை அசைக்காமல் பறக்கக்கூடியது.

• ஒட்டகம் 6 அடி உயரம் இருக்கும்.

• மனித உடலில் 6 லிட்டர் ரத்தம் உள்ளது.

• தென்றல் காற்று 6 கி.மீ. வேகத்தில் வீசும்.
-நெ.இராமன், சென்னை.

ஆட்டிசம்!

ஆட்டிசம் என்பது நோய் அல்ல குறைபாடு.
குழந்தையின் மூளையிலுள்ள நரம்பு மண்டலத்தில் ஏற்படும் வளர்ச்சிக் குறைபாடுதான் ஆட்டிசம் எனப்படுகிறது. இது குறித்தும் பெற்றோர்கள் அறிந்து கொண்டாலும் உரிய நேரத்தில் டாக்டரை அணுகுவதில்லை.
சரி, இந்தக் குறைபாட்டை எப்படிக் கண்டுகொள்வது?

• ஆறு மாதங்களாயினும் தாய் முகம் பார்த்து குழந்தை சிரிக்காமல் இருத்தல்.

• 12 மாதங்கள் ஆன பின்பும் மழலைச் சத்தங்கள் எழுப்பாமலிருத்தல்.

• எப்போதும் ஒரே இடத்தில் அமர்ந்திருத்தல்

• 18 மாதங்களில் பேசினாலும் ஒரே சப்தத்தையோ, சொல்லையோ திரும்பத் திரும்பச் சொல்லுதல்.

• கைகளை அடிக்கடி உதறுதல்.

• தூக்கமின்மை அல்லது தூங்கும் நேரம் குறைவாக இருத்தல்.

• ஒரு பொருளையோ, நபரையோ சுட்டிக்காட்ட இயலாமை.
இந்த அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று குழந்தையிடம் இருந்தாலும் தாமதிக்காமல் குழந்தை நல மருத்துவரிடம் ஆலோசனை கேட்க வேண்டும்.
-பி.சையது ஸஜ்ஜாத், 9-ஆம் வகுப்பு,
நாகமணி அம்மாள் நினைவு மெட்ரிக்
மேல்நிலைப் பள்ளி, கம்பம்.

கடி 03.05.2013

கடி

* ஜோசியர்: வாழ்க்கை எப்படி போய்கிட்டு இருக்கு?
 வந்தவர்: ஒருமாதிரி சந்தோஷமா போய்கிட்டு இருக்கு...
 ஜோசியர்: கவலைப்படாதீங்க, அந்த தோஷத்துக்கு ஒரு பரிகாரம் பண்ணிடுவோம்!
 -சாமு,
 401, 4-வது தளம்,
 மாதவ நகர் காலனி,
 மியாபூர்,
 ஹைதராபாத் 500 050,
 ஆந்திரப் பிரதேசம்.

* ஒருவர்: என்னது கூட்டம் நடக்கிற ஹாலின் நடுவில் ஒரு பக்கெட் நிறையத் தண்ணீர் வச்சிருக்காங்க...!
 மற்றவர்: ஆமா, கூட்டத்தில சில முக்கிய பிரச்னைகளை அலசி ஆராயப் போறாங்களாம்..!
 -புரூஸ்லீ ஓவியாலயம்,
 நாட்டரசன்கோட்டை.

* ஆசிரியர்: கோவிந்தசாமி சார்! உங்க பையன் உங்க பேரைக் கெடுத்துடுவான்னுதான் தோணுது!
 இவர்: என்னாச்சு சார்?
 ஆசிரியர்: விண்ணப்பத்துல தந்தையின் பெயர்ங்கிற இடத்துல "கேவிந்தசோமி'ன்னு எழுதி வச்சிருக்கான் சார்!
 -சீர்காழி ரேவதி, சென்னை.

* ஆசிரியர்: பூமி தன்னைத்தானே சுத்தி சூரியனைச் சுத்துமா? இல்லை சூரியன் தன்னைத்தானே சுத்தி பூமியைப் சுத்துமா?
 மாணவன்: எனக்குத் தலையச் சுத்துது சார்...
 -எஸ்.பவித்ரா, கொத்தூர்.

* டாக்டர்: உங்க எடை அதிகமாயிருக்கு, குறைக்கணும்...
 வந்தவர்: எடையைக் குறைக்க என்ன சாப்பிடணும்னு சொல்லுங்க டாக்டர்..!
 -டி.பச்சமுத்து, கிருஷ்ணகிரி.

* ஆசிரியர்: மாணவர்களே, தங்கம் எங்கிருந்து கிடைக்குது?
 மாணவன்: மாமியார் வீட்டிலிருந்து சார்...
 -எஸ்.கோபு, ஆண்டிபட்டி (அஞ்சல்),
 வெட்டுக்காடு (வழி), செங்கம் தாலுகா,
 திருவண்ணாமலை 606 703.