Monday, December 31, 2012

நாளைய சீருந்து

தொழில் நுட்பம்
இன்றைய கார்
போக்குவரத்து இடையூறைக் குறைக்க சிறிய அளவிலான கார்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒன்று இந்த ஜீமீமீறீ 50 என்ற கார்.
53 அங்குல நீளம், 39 அங்குல அகலம், 47 அங்குல உயரம் என்ற அளவில் 3 சக்கரங்களுடன் பெட்ரோலில் இயங்கும் வகையில் இக்கார் தயாரிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் பீல் கார் நிறுவனம் தயாரித்துள்ள இதில் ஒரு கதவும், இயக்கிட எளிதாக ஒரு கியர் மட்டுமே உண்டு.

நாளைய கார்....
சுற்றுச் சூழல் குறித்து உலகம் கவலைப்படத் தொடங்கியுள்ளது. அதனையொட்டி மாசு இல்லாத வாகனங்களைத் தயாரிக்க பலரும் முயன்றுவருகிறார்கள். எப்படியெல்லாம் உருவாக்கலாம் என்பது குறித்து தொழில்நுட்ப நிபுணர்கள் தங்களது கருத்துகளையும் கூறிவருகின்றனர்.
அப்படி ஒரு வடிவமைப்புதான் இந்தக் குட்டிக்கார். நீர்த்துளி வடிவில் மூன்று காந்த சக்கரங்களுடன் இதனை உருவாக்கலாம் எனவும், ஒருவர் மட்டுமே பயணம் செய்யும் வகையில் அமைத்தல் நல்லது என்றும் ஆலோசிக்கப்படுகிறது.
புகை மாசு இல்லாமலும், அனைத்து தகவல் தொடர்பு வசதிகளுடனும் இந்தக் குட்டிக் கார் உருவாகும் என்கிறார்கள் அந்தத் தொழில்நுட்ப வல்லுநர்கள்.

விந்தை உயிரினங்கள்

விந்தை உயிரினங்கள்
குரங்கின் பாசம்
ஒவ்வொரு உயிரும் தமக்கான தேவையைத் தேடிக்கொள்ளும் இயல்புடையது. விலங்குகள், பறவைகள், நீர்வாழ்வன என எல்லா உயிரினங்களும் அந்தக் கடமையில் இருந்து தவறவில்லை.
மனிதன்தான் இன்னும் யாராவது இலவசமாகத் தரமாட்டார்களா என தேடலை விட்டு சோம்பேறியாகிவிட்டான். இந்த குரங்கைப் பாருங்கள்; தன் குட்டியைக் கவ்விய படியே துன்பத்தைத் தாங்கியபடி நீர் குடிக்கிறது! நேப்பாள நாட்டின் தலைநகர் காத்மாண்டு அருகில் உள்ள சுயம்புனாத் பகுதியில் கடந்த ஜூன் மாதம் கண்ட காட்சிதான் இது.

புலி பசித்தால்...?
புலி பசித்தாலும் புல்லைத் திண்ணாது என்பார்கள்; சரிதான். ஆனால், பாலையுமா குடிக்காது. இதோ நாய்ப் பாலையே தன் தாய்ப் பாலாகக் குடிக்கிறது இந்தப் புலிக்குட்டி. இத்துடன் இதன் உடன் பிறந்த இன்னொரு புலிக்குட்டிக்கும் அந்த நாய் தன் பாலை ஊட்டி வளர்க்கிறதாம்.
ரஷ்யாவின் சோச்சி விலங்குகள் காப்பகத்தில் ஷர்பீ என்ற வகை நாயின் இந்தத் தாய்ப்பாசம் நெகிழவைக்கிறது அல்லவா! விலங்குகளே கூட இன்னொரு இன விலங்குடன் நேசம் கொள்ளாத் தொடங்கிவிட்டன. ஆனால், மனிதன்...? தன் இனத்திலேயே இன்னும் ஜாதி, மதம் பார்க்கிறானே...!

50 அய்த் தொட்ட ஓராங்குட்டான்
உலகின் மிக அதிக வயதான ஓராங்குட்டான் குரங்கு இது. மேற்கு பிரான்சிலுள்ள விலங்குகள் பூங்காவில் கடந்த ஜூலையில் தனது 50 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடியது.
1962ல் இந்தோனேசியாவில் பிறந்த இது முதலில் ஜெர்மனியில் இருந்தது. தற்போது பிரான்சில் வசிக்கிறதாம்.

Sunday, December 30, 2012

வரலாற்றில் இன்று Today in History 31/12

வரலாற்றில் இன்று   
Today in History  திசம்பர் 31

  1.     1492 - சிசிலியில் இருந்து 100,000 யூதர்கள் வெளியேற்றப்பட்டனர்.
  2.     1599 - பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி இந்தியாவுக்கான தனது கப்பல் பயணத்தைத் தொடங்கியது.
  3.     1687 – நன்னம்பிக்கை முனையை அடைவதற்காக ஃகியூகெனாட்டு எனப்படும் புரட்டசுதாந்தர்களின் முதற் தொகுதியினர் பிரான்சை விட்டுப் புறப்பட்டனர்.
  4.     1695 – இங்கிலாந்தில் பலகணி வரி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து பல அங்காடி உரிமையாளர்கள் தமது அங்காடிகளின் பலகணிகளைச் செங்கல் கொண்டு மூட ஆரம்பித்தார்கள்.
  5.     1857 – விக்டோரியா மகாராணி கனடாவின் தலைநகராக ஒட்டாவாவைத் தேர்ந்தெடுத்தார்.
  6.     1862 – அமெரிக்கப் புரட்சிப் போர்: மேற்கு வேர்சீனியாவைக் கூட்டணியில் இணைப்பதற்கான சட்டமூலத்தில் ஆபிரகாம் லிங்கன் கையெழுத்திட்டதில்  வெர்சீனியா இரண்டாகப் பிரிந்தது.
  7.     1879 - வெள்ளொளிர்வு விளக்கு முதற்தடவையாகத் தாமசு எடிசனால் காட்சிப்படுத்தப்பட்டது
  8.     1909 - மான்கட்டன் பாலம் திறக்கப்பட்டது.
  9.     1909 - வானொலியின் தந்தை என்று போற்றப்படும் மார்க்கோனிக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
  10.     1923 -இலண்டனின் பிக் பென் மணிக்கூண்டின் மணியொலி மணிக்கொரு தடவை பிபிசியில் ஒலிபரப்பு செய்ய ஆரம்பிக்கப்பட்டது.
  11.     1944 - இரண்டாம் உலகப் போர்:  அங்கேரி  செருமனி மீது போரை அறிவித்தது.
  12.     1946 - அமெரிக்க அதிபர்  அரி ட்ரூமன் இரண்டாம் உலகப் போரில் ஐக்கிய அமெரிக்காவின் பங்கு முடிவுக்கு வந்ததாக அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
  13.     1963 - மத்திய ஆப்பிரிக்கக் கூட்டமைப்பு சாம்பியா, மலாவி, ரொடீசியா என மூன்று நாடுகளாகப் பிளவுற்றது.
  14.     1981 - கானாவில் இடம்பெற்ற இராணிவப் புரட்சியில் அதிபர் இல்லா லிமான் பதவியிலிருந்து அகற்றப்பட்டார்.
  15.     1984 -  இராசீவ் காந்தி இந்தியத் தலைமையமைச்சரானார்.
  16.     1987 – ரொபேர்ட் முகாபே சிம்பாப்வேயின் அதிபராகத் தெர்ர்ந்தெடுக்கப்பட்டார்.
  17.     1991 - சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியத்தின் அனைத்து நிறுவனங்கள், மற்றும் சோவியத் ஒன்றியம் இந்நாளில் இருந்து அதிகாரபூர்வமாக கலைக்கப்பட்டன
  18.     1994 - பீனிக்சு தீவுகள்,  லைன் தீவுகளில் நேரமாற்றம் நடைமுறைப்படுத்தப்பட்டதை அடுத்து, கிரிபட்டியில் இந்நாள் முற்றாக விலக்கப்பட்டது.
  19.     1999 - போரிசு யெல்ட்சின் இரசியாவின் அதிபர் பதவியிலிருந்து விலகினார்.
  20.     1999 - 1977 ஆம் ஆண்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கு அமைய, ஐக்கிய அமெரிக்கா பனாமா கால்வாயின் அதிகாரத்தை பனாமாவிடம் ஒப்படைத்தது.
  21.     1999 – 155 பயணிகளுடன் இந்திய விமானம் ஒன்றைக் கடத்திய ஐந்து கடத்தல்காரர்கள் தாம் விடுவிக்கக் கோரிய இரண்டு இசுலாமிய மதகுருமார்கள் விடுவிக்கப்பட்டதை அடுத்து விமானத்தைக் கைவிட்டு வெளியேறினர்.
  22.     2004 - உலகின் மிக உயரமான வானளாவியான தாய்வானின் 509 மீட்டர் உயர தாய்ப்பே 101 அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.
  23.     2006 - ஐக்கிய அமெரிக்காவிடம் இரண்டாம் உலகப் போரின் போது பெற்ற கடன்களை ஐக்கிய இராச்சியம் முழுவதுமாகக் கட்டி முடித்தது

வரலாற்றில் இன்று Today in History 30 / 12

வரலாற்றில் இன்று   
Today in History  திசம்பர் 30

  1.     1853 - ஐக்கிய அமெரிக்கா தொடருந்து போக்குவரத்துப் பாதை அமைப்பதற்காக மெக்சிக்கோவிடம் இருந்து 76,770 கிமீ² பரப்பளவு கொண்ட காட்சென் என்ற இடத்தை 10 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கியது.
  2.     1880 - டிரான்சுவால் குடியரசு ஆகியது.
  3.     1896 - பிலிப்பீன்சின் தேசியவாதி  சோசே ரிசால் மணிலாவில் இசுபானிய ஆதிக்கவாதிகளால் மரணதண்டனைக்குட்படுத்தப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார். இந்நாள் பிலிப்பீன்சில் ரிசால் நாள் என்ற பெயரில் விடுமுறை நாளாகும்.
  4.     1906 - அகில இந்திய முசுலிம் லீக் கட்சி டாக்காவில் ஆரம்பிக்கப்பட்டது.
  5.     1922 - சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியம் உருவாக்கப்பட்டது.
  6.     1924 - யாழ்ப்பாணம் வாலிபர் சங்க மாநாட்டில் சாதி ஒழிப்புத் தீர்மான்ம் கொண்டுவரப்பட்டது.
  7.     1924 - பல நாள்மீன்பேரடைகளின் இருப்பு பற்றி எட்வின் அபிள் அறிவித்தார்.
  8.     1941 - மகாத்மா காந்தி காங்கிரசு தலைமைப் பதவியிலிருந்து விலகினார்.
  9.     1943 - சுபாசு சந்திர போசு அந்தமான் தீவுகளின் போர்ட் பிளையர் நகரில் இந்திய விடுதலைக் கொடியை ஏற்றினார்.
  10.     1947 - ருமேனியாவின் மன்னர் மைக்கல் சோவியத் ஆதரவு கம்யூனிச அரசால் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
  11.     1949 - இந்தியா சீனாவை அங்கீகரித்தது.
  12.     1953 - உலகின் முதலாவது NTSC வர்ணத் தொலைக்காட்சிப் பெட்டி $1,175.00 விலைக்கு விற்பனைக்கு விடப்பட்டது.
  13.     1956 - புதுச்சேரியில் கமலம்மாள் எனும் பெண்மணிக்கு ஒரு குழந்தை பிறந்தது. அதன் எடை 11 கிலோகிராம். உலகிலேயே மிக அதிக எடையுடன் பிறந்த குழந்தை.
  14.     1965 - பேர்டினண்ட் மார்க்கொசு பிலிப்பீன்சு அதிபரானார்.
  15.     1972 - வியட்நாம் போர்: ஐக்கிய அமெரிக்கா வடக்கு வியட்நாம் மீதான குண்டுத் தாக்குதல்களை இடைநிறுத்தியது.
  16.     1993 - இசுரேலும் வத்திக்கானும் தூதரக உறவுகளை ஏற்படுத்தின.
  17.     1996 - அசாம் மாநிலத்தில் பயணிகள் தொடருந்து ஒன்றில் போடோ தீவிரவாதிகளால் வைக்கப்பட்ட குண்டு வெடித்ததில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
  18.     2006 - முல்லைத்தீவு மாவட்ட கத்தோலிக்க ஆலயத்தால், கடல்கோளால் பாதிக்கப்பட்டவர்களை பராமரிக்கும் ஆண், பெண் விடுதிகள் மீதும் பொதுமக்கள் வீடுகள் மீதும் விமானத் தாக்குதல் நடைபெற்றதில் ஐந்து சிறுவர்கள் படுகாயமடைந்தனர்.

Saturday, December 29, 2012

வரலாற்றில் இன்று Today in History 29/12

வரலாற்றில் இன்று
Today in History  
திசம்பர் 29
  •  பன்னாட்டுப் பல்லுயிர் பெருக்க நாள்
  • 1813 - 1812 போர்: பிரித்தானியப் படைகள் நியூயோர்க்கில் பஃபலோ என்ற நகரை தீக்கிரையாக்கினர்.
  • 1835 - மிசிசிப்பி ஆற்றின் கிழக்கேயுள்ள செரோக்கீ இன மக்களின் நிலங்கள் அனைத்தையும் ஐக்கிய அமெரிக்காவுக்குக் கொடுக்கும் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது
  • 1845 - டெக்சாசு ஐக்கிய அமெரிக்காவின் 28 ஆவது மாநிலமாக இணைந்தது.
  • 1851 - அமெரிக்காவின் முதலாவது இளைய கிறித்தவர்களின் அமைப்பு YMCA பொசுடனில் அமைக்கப்பட்டது.
  • 1890 - தென் டகோட்டாவில் ஐக்கிய அமெரிக்கப் படைகள் பெண்கள் குழந்தைகள் உட்பட 400 ஆதிகுடிகளைப்  படுகொலை செய்தனர்.
  • 1891 - தோமசு அல்வா எடிசன் வானொலிக்கான காப்புரிமம் பெற்றார்.
  • 1911 - சுன் யாட்-சென் சீனக் குடியரசின் முதலாவது அதிபரானார்.
  • 1911 - மங்கோலியா கிங் வம்சத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
  • 1930 - அலகாபாத் நகரில் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய கவிஞரும், மெய்யியலாளருமான முகமது இக்பால் முசுலிம்களுக்கெனத் தனிநாடு கோரிக்கையைக் கொண்ட தனது இரு-நாடுகள் கொள்கையை முன்வைத்தார்.
  • 1937 - ஐரிய சுதந்திர நாடு புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தி அயர்லாந்து குடியரசு எனப் பெயரை மாற்றியது.
  • 1987 - 326 நாட்கள் விண்வெளியில் பயணித்த சோவியத் விண்வெளி வீரர் யூரி ரொமானின்கோ பூமி திரும்பினார்.
  • 1989 - ஆங்காங் வியட்நாமிய ஏதிலி(அகதி)களைப் பலவந்தமாக வெளியேற்றியதை அடுத்து அங்குக் கலவரம் மூண்டது.
  • 1993 - உலகின் மிகப்பெரிய செம்பினாலான புத்தர் சிலை ஆங்காங்கில் அமைக்கப்பட்டது.

வரலாற்றில் இன்று 28/12

வரலாற்றில் இன்று : 28/12
  1.  இந்திய டாடா குழும த் தலைவர்  இரத்தன் டாடா பிறந்த நாள் (1937)
  2.  கலிலியோ கலிலி, நெப்டியூன்  ??? கோளைக் கண்டுபிடித்தார்(1612)
  3.  தெற்கு ஆஸசுதிரேலியா, அடிலெய்ட் ஆகியன அமைக்கப்பட்டன(1836)
  4. இ லண்டனில் வெசுட்மின்சுட் தேவாலயம் திறக்கப்பட்டது(1065)

தமி​ழால் அடிப்​பேன்...​

தமி​ழால் அடிப்​பேன்...​

பரி​தி​மாற் கலை​ஞர்,​​ சிறந்த தமிழ்ப் பேரா​சி​ரி​யர்.​ ஒரு​முறை அவர் பாடம் நடத்​திக் கொண்​டி​ருந்​த​போது,​​ குறும்​புக்​கார மாண​வர் ஒரு​வர் எழுந்து,​​ ""ஆசி​ரி​யப் பெரும!​ எழுத்து,​​ அசை,​​ சீர்,​​ தளை,​​ அடி,​​ தொடை என்​ப​ன​வற்​றைப் பற்றி விரி​வா​க​வும்,​​ விளங்​கு​மா​றும்​ தாங்​கள் எடுத்​துக் கூறி​னீர்​கள்.​ அடி​க​ளை​யும்,​​ தொடை​க​ளை​யும் பற்றி விரித்த பின்​னர் மேலே விவ​ரிப்​ப​தற்கு யாது உளது?​'' என்று கேட்​டார்.​
÷அ​தற்​குப் பரி​தி​மாற் கலை​ஞர்,​​ ""அன்பு சால் மாணவ!​ யாப்​பி​லக்​க​ணத்தை யாம் விளங்​கு​மாறு எடுத்​து​ரைத்​த​தா​கத் தாம் கூறு​வ​தற்கு யாம் வந்​த​னம்...​ தந்​த​னம்...!​ தொடை இலக்​க​ணத்​திற்​குப் பிறகு எவ்​வி​லக்​க​ணம் கூறப்​ப​டும் என்று ஐயுற்ற நுமக்கு,​​ யாம் மற்​றொரு நாள் "விளக்​கு​மாற்​றால்'​ விளக்​கு​தும்!​'' என்​றார்.​
÷பே​ரா​சி​ரி​ய​ரின் பதி​லைக் கேட்ட மாண​வர் வாய​டைத்​துப்​போய் தலை​கு​னிந்​த​படி அமர்ந்​தா​ராம்!​ ​

Wednesday, December 26, 2012

வரலாற்றில் இன்று Today in History 27/12

வரலாற்றில் இன்று   
Today in History   திசம்பர்  27

  1.     உலக வங்கி நிறுவப்பட்ட நாள்
  2.     1537 ஏகியா சோபியா கட்டி முடிக்கப்பட்டது.
  3.     1703 - இங்கிலாந்துக்கு வைன்களை இறக்குமதி செய்வதற்குப் போர்த்துக்கீசருக்கு தனியுரிமை வழங்கு ஒப்பந்தம் இங்கிலாந்துக்கும் போர்த்துக்கல்லுக்கும் இடையில ஏற்பட்டது.
  4.     1831 - சார்ல்சு டார்வின் உயிரினங்களின் படிவளர்ச்சிக் கொள்கை பற்றிய ஆய்வுக்காக தென்னமெரிக்கா நோக்கிப் புறப்பட்டார்.
  5.     1845 - பிள்ளைப் பேறுக்கு ஈதர் மயக்க மருந்தாக முதற் தடவையாக ஐக்கிய அமெரிக்காவில் சியார்சியாவில் பயன்படுத்தப்பட்டது.
  6.     1864 - இலங்கையில் முதலாவது தொடருந்து சேவை கொழும்புக்கும், அம்பேபுசைக்கும் இடையில் தொடங்கப்பட்டது.
  7.     1918 -  செர்மனியருக்கெதிரான பெரும் எழுச்சி போலந்தில் ஆரம்பமானது.
  8.     1922 - சப்பானின்  ஓசோ உலகின் முதலாவது விமானம் தாங்கிக் கப்பலாக பாவிக்கப்பட்டது.
  9.     1923 - சப்பானிய மாணவன் ஒருவன் இளவரசர் இரோஃகிட்டோவைக் கொல்ல முயற்சித்தான்
  10.     1934 - பேர்சியா ஈரான் என்ற பெயரைப் பெற்றது.
  11.     1945 - 28 நாடுகள் ஒன்று கூடி World Bank எனப்படும் உலக வங்கியை நிறுவின. இன்டர்நேசனல் மானிட்டரி பண்ட் என்றழைக்கப்படும் அனைத்துலக பண நிதியமும் அமைக்கப்பட்டது
  12.     1949 - இந்தோனீசியா ஒன்றுபட்ட விடுதலை பெற்ற நாடாக நெதர்லாந்து அறிவித்தது.
  13.     1956 - தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
  14.     1968 - சந்திரனுக்கான முதலாவது மனித விண்வெளிப்பயணக் கப்பலான அப்பல்லோ 8 பாதுகாப்பாக பசிபிக் கடலில் இறங்கியது.
  15.     1978 -இசுபெயின் 40வருட காலச் சர்வாதிகார ஆட்சியின் பின்னர் மக்களாட்சி  நாடானது.
  16.     1979 - சோவியத் ஒன்றியம் ஆப்கானிசுதானைக் கைப்பற்றியது. அதிபர்  இபிசுல்லா அமீன் சுட்டுக்கொல்லப்பட்டு பப்ராக் கர்மால் தலைவரானார்.
  17.     1993 - World Trade Organization எனப்படும் உலக வர்த்தக நிறுவனம் நிறுவப்பட்டது
  18.     1996 - தலிபான் படைகள் ஆப்கானிசுதானில் பக்ராம் வான்படைத் தளத்தைக் மீளக் கைப்பற்றினர்.

வரலாற்றில் இன்று Today in History 26 / 12

வரலாற்றில் இன்று   
Today in History  திசம்பர்
26

  1.     பிரிட்டனில் திசம்பர் 26 ஆம் நாள் Boxing  நாளாககக் கொண்டாடப்படுகிறது. பிரிட்டனில் இன்று பொது விடுமுறை.
  2.     1793 - கைசுபேர்க்கு என்னும் இடத்தில் இடம்பெற்ற சமரில் பிரெஞ்சுப் படைகள் ஆசுதிரியர்களைத் தோற்கடித்தனர்.
  3.     1825 - முதலாம் நிக்கலாசு மன்னனுக்கு எதிராக மூவாயிரத்துக்கும் அதிகமான  இரசிய இராணுவத்தினர் செனட் சதுக்கத்தில் திரண்டனர். இவர்களின் கிளர்ச்சி சார் மன்னனால் முறியடிக்கப்பட்டது.
  4.     1870 - ஆல்ப்சு மலைத்தொடரூடான 12.8-கிமீ நீள தொடருந்து சுரங்கப் பாதை அமைக்கப்பட்டது.
  5.     1898 - ரேடியம் கண்டுபிடிக்கப்பட்டது.
  6.     1925 - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.
  7.     1933 - பண்பலை வானொலி காப்புரிமம் பெறப்பட்டது.
  8.     1944 - ஆங் சான் பர்மாவின் நவீன இராணுவத்தை உருவாக்கினார்.
  9.     1973 - சோவியத்தின் சோயூசு 13 விண்கலம் ஒரு வார பயணத்தின் பின் பூமி திரும்பியது.
  10.     1974 - சோவியத்தின் சல்யூட் 4 விண்கலம் விண்ணுக்கு அனுப்பப்பட்டது.
  11.     1976 - நேபாளப்பொதுவுடைமைக் கட்சி (மாவோயிசுட்) அமைக்கப்பட்டது.
  12.     1979 - சோவியத்து சிறப்புப் படையினர் ஆப்கானிசுதானின் அதிபர் மாளிகையைக் கைப்பற்றினர்.
  13.     1982 - கணினி யுகத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையிலும், அது மனுக்குலத்தில் ஏற்படுத்தப்போகும் தாக்கத்தை முன்னுரைக்கும் வகையிலும் கணினியை Man of the Year எனக் கௌரவித்துப் பிரசுரித்தது டைம்.
  14.     1986 - உலக மக்கள்தொகை 5 பில்லியனை எட்டியது (www.ibiblio.org).
  15.     1991 - சோவியத்து ஒன்றியம் கலைக்கப்பட்டது.
  16.     1998 - அயர்லாந்து, வடக்கு இங்கிலாந்து மற்றும் தெற்கு  இசுகாட்லாந்தில் இடம்பெற்ற புயலால் பலத்த சேதம் ஏற்பட்டது.
  17.     2004 - இந்து சமுத்திரத்தில் ஏற்பட்ட 9.3 ரிக்டர் அளவு நிலநடுக்கம், சுனாமி ஆழிப்பேரலையை ஏற்படுத்தி இலங்கை, இந்தியா, இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா, மாலை தீவுகள் ஆகிய நாடுகளில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. 300,000 பேருக்கு மேல் இறந்தனர்.
  18.     2006 - சதாம் உசேனின் மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டு மரணதண்டனை உறுதி செய்யப்பட்டது.



Tuesday, December 25, 2012

வரலாற்றில் இன்று Today in History 25 / 12

வரலாற்றில் இன்று   
Today in History  திசம்பர் 25
  1.     கிறிசுத்துமசு - இயேசு கிறித்துவின் பிறப்பைக் குறிக்கும் முக்கிய பண்டிகை கி.பி.440  ஆம் ஆண்டிலிருந்து உலகம் முழுவதும் டிசம்பர் 25 ஆம்   நாளையே  கிறித்துமசு  நாளாகக் கொண்டாடி வருகிறது.
  2.     800 - சார்லமேன் புனித ரோமப் பேரரசனாக முடிசூடினான்.
  3.     1000 - அங்கேரிப் பேரரசு முதலாம்  இசுடீபனின் கீழ்க் கிறித்துதவ நாடாக உருவாக்கப்பட்டது.
  4.     1066 - முதலாம் வில்லியம் இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினான்.
  5.     1643 - கிறிசுமசு தீவு உருவாக்கப்பட்டது.
  6.     1741 - ஆண்டர்சு செல்சியசு தனது செல்சியசு வெப்பமானியைக் கண்டுபிடித்தார்.
  7.     1758 -  ஏலியின் வால்வெள்ளி  சொகான் பாலிட்ச்சு என்னும்  செருமனியரால் அவதானிக்கப்பட்டது.
  8.     1868 - அமெரிக்க உள்நாட்டுப் போரில் ஈடுபட்ட அனைத்து கூட்டமைப்புப் படைவீரர்களுக்கும் பொது மன்னிப்பை அமெரிக்க அதிபர் அண்ட்ரூ  சோன்சன் அறிவித்தார்.
  9.     1892 - சுவாமி விவேகானந்தர் கன்னியாகுமரியில் கடலின் நடுவிலுள்ள ஒரு பாறையில் அமர்ந்து தனது மூன்று நாள் தியானத்தைத் தொடங்கினார்
  10.     1914 - முதலாம் உலகப் போர்:  செருமனிக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் கிறிசுத்துமசு நாள் போர்நிறுத்தம் நடைமுறைக்கு வந்தது.
  11.     1926 - சப்பானின்  தாயீசோ மன்னன் இறந்தான். அவனின் மகன்  இரோஃகிட்டோ அரசனானான்.
  12.     1941 - இரண்டாம் உலகப் போர்:  ஆங்கொங் மீதான சப்பானின் முற்றுகை ஆரம்பமாயிற்று.
  13.     1947 - சீனக் குடியரசின் அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தது.
  14.     1968 - சம்பளம் அதிகம் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட 42 தலித் மக்கள் தமிழ்நாட்டில் உயிருடன் தீயிட்டுக் கொழுத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.
  15.     1977 - இசுரேல் பிரதமர் பெகின் எகிப்திய அதிபர் அன்வர் சதாத்தைச் சந்தித்தார்
  16.     1979 - சோவியத் ஒன்றியம் ஆப்கானிசுதானில் தனது படைகளைப் பெருமளவில் இறக்கியது.
  17.     1990 - உலகளாவிய வலைத் திட்டம் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
  18.     1991 - சோவியத்துத் தலைவர் பதவியில் இருந்து மிக்கைல் கொர்பச்சோவ் விலகினார். அடுத்த நாள் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டது.
  19.     1991 - உக்ரேன் சோவியத் ஒன்றியத்தில் இருந்து விலகியது.
  20.     2003 - மார்சு எக்ஸ்பிரசு விண்கலத்தில் இருந்து திசம்பர் 19 இல் ஏவப்பட்ட பீகில் 2 விண்கலம் தரையில் இறங்குவதற்குச் சற்று முன்னர்க் காணாமல் போனது.
  21.     2004 - காசினி விண்கப்பலில் இருந்து சனிக் கோளின் சந்திரனான டைட்டானில் இறக்குவதற்காக ஃகியுசென்சு என்ற சேய்க்கலம் விடுவிக்கப்பட்டது. இது சனவரி 14, 2005 இல் டைட்டானில் இறங்கியது.

Monday, December 24, 2012

வரலாற்றில் இன்று Today in History 24 / 12

வரலாற்றில் இன்று   
Today in History திசம்பர் 24

  1.     1582 - இலண்டனில் முதன் முதலில் குழாயின் மூலமாக வீடுகளுக்குக் குடிநீர் விற்பனை செய்யும் முறை நடைமுறைக்கு வந்தது
  2.     1690 - யாழ்ப்பாணத்தில் கிறித்துமசு இரவு ஆராதனைக்காகக் கூடியிருந்த சுமார் 300 கத்தோலிக்கர்கள் டச்சுப் படைகளினால் அடித்துத் துன்புறுத்தப்பட்டனர்.
  3.     1715 - சுவீடனின் துருப்புகள் நோர்வேயை ஆக்கிரமித்தன.
  4.     1777 - கிரிட்டிமட்டி தீவு  சேம்சு குக்கினால் கண்டறியப்பட்டது.
  5.     1851 - வாசிங்டன் டிசியில் காங்கிரசு நூலகம் தீப்பிடித்ததில் பெறுமதியான நூல்கள் அழிந்தன.
  6.     1906 - ரெஜினால்ட் ஃபெசெண்டென் உலகின் முதலாவது வானொலி நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்கினார்.
  7.     1914 - முதலாம் உலகப் போர்: கிறித்துமசு நாளுக்காக போர்நிறுத்தம் நடைமுறைக்கு வந்தது.
  8.     1924 - அல்பேனியா குடியரசாகியது.
  9.     1941 - இரண்டாம் உலகப் போர்:  ஆங்காங் சப்பானியப் படைகளிடம் வீழ்ந்தது.
  10.     1941 - இரண்டாம் உலகப் போர்: மலேசியாவின் சரவாக் மாநிலத் தலைநகர் கூச்சிங் சப்பானியரிடம் வீழ்ந்தது.
  11.     1951 - லிபியா இத்தாலியிடம் இருந்து விடுதலை பெற்றது. முதலாம் ஐட்ரிசு லிபிய மன்னனாக முடிசூடினார்.
  12.     1954 - லாவோசு விடுதலை பெற்றது.
  13.     1968 - மூன்று விண்வெளி வீரர்களை ஏற்றிச் சென்ற அப்பல்லோ 8 விண்கலம் சந்திரனின் சுற்றுவட்டத்தில் நுழைந்தது.
  14.     1968 - James Lovell, William Anders, Frank Borman என்ற மூன்று அமெரிக்க விண்வெளி வீரர்கள் முதன் முதலில் நிலாவை அடைந்தனர்.
  15.     1979 - ஆப்கானிசுதானின் கம்யூனிச அரசைக் காப்பதற்காக சோவியத் ஒன்றியம் ஆப்கானிசுதானை முற்றுகையிட்டது.
  16.     1979 - ஐரோப்பாவின் முதலாவது விண்கலம் ஆரியான் விண்ணுக்கு அனுப்பப்பட்டது.

Sunday, December 23, 2012

வரலாற்றில் இன்று Today in History 23/12

வரலாற்றில் இன்று   
Today in History  திசம்பர் 23

  1.     தேசிய உழவர்கள் நாள்.
  2.     1783 -  சியார்சு வாசிங்டன் இராணுவத்தளபதி பதவியில் இருந்து விலகினார்.
  3.     1914 - முதலாம் உலகப் போர்:  ஆசுதிரேலிய, நியூசிலாந்துப் படைகள் கெய்ரோவில் தரையிறங்கினர்.
  4.     1916 - முதலாம் உலகப் போர்: எகிப்தின் சினாய்க் குடாவில் கூட்டுப் படைகள் துருக்கியப் படைகளுடன் இடம்பெற்ற சமரில் வெற்றி பெற்றனர்.
  5.     1922 - தினசரி செய்திகளை வழங்கத் தொடங்கியது பிபிசி எனப்படும் பிரிட்டிசு ஒலிபரப்புக் கழகம்.
  6.     1947 - முதலாவது டிரான்சிசுடர் பெல் ஆய்வுகூடத்தில் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது.
  7.     1948 - முன்னாள் சப்பானியப் பிரதமர் Hideki Tojo -வும் ஆறு சப்பானிய இராணுவத் தலைவர்களும் தோக்கியோவில் தூக்கிலிடப்பட்டனர். மனுக்குலத்துக்கு எதிராக அவர்கள் இழைத்த கொடுமைகளுக்காக அந்தத் தண்டனை.
  8.     1954 - முதலாவது மனித சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அமெரிக்காவின் பாசுடன் நகரில் மேற்கொள்ளப்பட்டது.
  9.     1958 - டோக்கியோ கோபுரம், உலகின் மிகப்பெரிய இரும்பினாலான கோபுரம், திறக்கப்பட்டது.
  10.     1972 - தென்னமெரிக்காவில் ஆண்டீசு மலைத்தொடரில் இடம்பெற்ற விமான விபத்தில் உயிர் தப்பிய 16 பேர் 73 நாட்களுக்குப் பின்னர் காப்பாற்றப்பட்டனர்.
  11.     1979 - சோவியத் படையினர் ஆப்கானிஸசுதானின் தலைநகர் காபூலைக் கைப்பற்றினர்.
  12.     1986 - எங்கும் தரையிறங்காமல் முதன் முதலில் உலகைச் சுற்றி வந்த வொயேசர் விமானம், டிக் ரூட்டன், சீனா யேகர் ஆகிய விமானிகளுடன் கலிபோர்னியாவில் தரையிறங்கியது.
  13.     1990 - 88% சிலொவேனிய மக்கள் யூகொசுலாவியாவில் இருந்து பிரிந்து செல்வதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
  14.     2005 - சாட் சூடானுடன் போரை அறிவித்தது.

Saturday, December 22, 2012

சிரி...சிரி...

சிரி...சிரி...

""கமலாவை நான் காதலிக்கிற விஷயத்தை, ஊர்ல இருக்கிற எல்லார்கிட்டேயும் சொல்லிட்டேன்''
 ""கமலாகிட்ட சொன்னியா?''

 ""நன்றி உள்ள பிராணி நாய்தான்ங்கிறதை இன்னிக்குத்தான் தெரிஞ்சுகிட்டேன்''
 ""எப்படி?''
 ""நேத்துதான் பக்கத்து வீட்டு நாய்க்கு சோறு வச்சேன். இன்னிக்கு என்னோட மாமியார கடிச்சிடுச்சு''
 அ.அழகப்பன், காளையார்கோவில்

 ""ஐந்தாறு வருஷங்களுக்கு முன் என்ன நீங்க பாக்கலியே! அப்ப ஸ்லிம்மா "ஃபேன்டா' பாட்டில் மாதிரி இருப்பேன்''
 ""இப்பவும் நீ ஃபேன்டா பாட்டில்தான் டியர். என்ன அப்ப ஐநூறு மில்லி ஃபேன்டா பாட்டில், இப்போ இரண்டுலிட்டர் ஃபேன்டா பாட்டில், அதுதான் வித்தியாசம்''
 கி.ராணிஜோதி, சென்னை

 ""நெஞ்சில பண்ண வேண்டிய ஆபரேஷனை வயித்துல பண்ணீட்டிங்களே டாக்டர்''
 ""உங்கள யார் ஓரடி மேலே தள்ளிப் படுக்கச் சொன்னது?''
 ஜோ.ஜெயக்குமார், நாட்டரசன்கோட்டை

 ""ஆசையே துன்பத்துக்குக் காரணம்னு இப்பத்தான் தெரிஞ்சுக்கிட்டேன்''
 ""எப்படி?''
 ""என் மனைவியை நான் ஆசைப்பட்டுத்தானே கல்யாணம் பண்ணிகிட்டேன்''

 ""அம்மா பேப்பர்ல மழை பெய்யும்னு போட்டிருக்கு''
 ""அப்படியா! பேப்பரை எடுத்து உள்ளே வைடா!''

 ஆசிரியர்: பாக்டீரியா படம் வரையச் சொன்னேனே, எங்கடா காணோம்?
 மாணவன்: பாக்டீரியா நுண்ணுயிரி. அது எப்படி சார் கண்ணுக்குத் தெரியும்.
 எஸ்.மலையாண்டி, பத்தமடை

 ""ஒரு மாசத்துல டான்ஸ் கத்துக்கிட்டேன்''
 ""எந்த மாசம்?''
 ""ஆடி மாசம்''

 பெண்: முடியாமல் இருப்பவங்களுக்கு என்ன உதவி செய்வாய்?
 தோழி: ரப்பர் பேண்டு அல்லது ரிப்பன் கொடுப்பேன்
 எஸ்.மோகன், கோவில்பட்டி

 ""மிஸ்டர் கபாலி, இது கோர்ட் இங்க "கண்டதை' எல்லாம் பேசக்கூடாது''
 ""அப்ப பொய் சொல்லச் சொல்றீங்களா எசமான்?''
 எஸ்.கார்த்திக் ஆனந்த், தாராபுரம்

 ""நம்ம ஹீரோ...அத்தை மேல ரொம்ப பாசமா இருக்கார்...அத்தை வீட்டிலேயே தங்கியிருக்கார்...அத்தையை கொன்னவங்களைப் பழிவாங்குகிறார்...''
 ""அடப்பாவி! ஆண்டி ஹீரோ சப்ஜெக்ட்னு சொன்னீயே அது இதுதானா?''
 ஏ.விக்டர் ஜான், சென்னை

 ஒருவர்: புல்லாங்குழல் வித்வான் என்ன கேட்கிறார்?
 மற்றவர்: "ஊதிய' உயர்வு வேண்டுமாம்.
 நெ.இராமன், சென்னை

 ""உங்க மகனுக்குப் பெண் பார்க்க திருப்பதிக்கு போனீங்களே பெண் எப்படி?''
 ""அதைச் சொல்லவா வேணும் லட்டுன்னா லட்டுதாங்க''
 தேனி முருகேசன்

 கூகுள்: என்கிட்ட எல்லாமே இருக்கு
 விகிபிடியா: எனக்கு எல்லாம் தெரியும்
 இன்டர்நெட்: நான் இல்லாம நீங்க எல்லாம் ஒண்ணும் கிடையாது
 மின்சாரம்: அங்க என்ன ஒரே சத்தமா இருக்கு?
 எல்லோரும் கோரஸôக: சும்மா பேசிட்டிருந்தோம் மாமா. அதான் வேறொண்ணுமில்ல...
 பெனிட்டா, பொன்னியம்மன்மேடு

 (தந்தையும் மகனும்)
 ""ஏன்டா தோட்டத்துச் செடிகளுக்கு தண்ணி ஊத்தச் சொன்னேனே?''
 ""மழை பெய்யுதேப்பா''
 ""பரவாயில்லை. குடை எடுத்துட்டுப் போய் தண்ணி ஊத்து''

 ஆசிரியர்: ஏன்டா, பாடப்புத்தகத்தை இவ்வளவு தூரத்துல வெச்சுட்டு, நீ இங்கே வந்து உட்கார்ந்திருக்க?
 மாணவன்: பிரச்னைகளை தள்ளி வைக்கணும்னு நீங்கதானே சார் சொன்னீங்க!
 ஜி.எஸ்.கார்த்திக், கோபிசெட்டிப்பாளையம்

 ""புதுசா பூட்டு சாவி பிசினஸ் ஆரம்பிக்கப் போறேன், என்னை ஆசிர்வாதம் பண்ணுங்கப்பா
 ""பெஸ்ட் ஆஃப் லாக்!''
 ஜி.மஞ்சரி, கிருஷ்ணகிரி

 ஒருவர்: இப்ப வந்த படங்கள்ல உங்க படம்தான் பாக்கற மாதிரி இருக்கு
 இயக்குநர்: அப்படியா?
 ஒருவர்: மத்த படங்களுக்கெல்லாம் கூட்டம் ரொம்ப அதிகம். பார்க்க முடியலை.
 ஜான் கிறிஸ்டோபர், கும்பகோணம்

 ஒருவர்: ஏம்பா நம்ம தலைவர் இனி சட்டை போடமாட்டாராமே?
 மற்றவர்: அதுவா அவரை யாரும் சட்டை செய்வதில்லையாம்!
 ஜி.தண்டபாணி, சென்னை

 ""நகை வாங்கப் போன கடையில பெண்ணை உரசிட்டு நின்னு தர்ம அடி வாங்குனீங்களாமே உண்மையா?''
 ""நகை வாங்கறப்ப உரசிப் பார்த்து வாங்கணும்னு நீங்கதானே சொன்னீங்க''
 கே.நேசினி, ஜமீன் ஊத்துக்குளி

சிரி... சிரி...

சிரி... சிரி...



""கல்யாணத்துக்கு அப்புறமும் இதே மாதிரி என்னிடம் பிரியமா இருப்பீங்களா சுரேஷ்''
""அதில் என்ன சந்தேகம் டார்லிங். கல்யாணமான பெண்கள் என்றால் எனக்கு எப்பவும் பிடிக்கும்''
ஜோ.ஜெயக்குமார், நாட்டரசன்கோட்டை
""உன் குடையில நீயே ஓட்டை போட்டிருக்கியே ஏன்?'' ""மழை நின்னுடுச்சான்னு பார்க்கத்தான்!''
""ஹலோ, டாக்டர் நான் உங்களப் பார்க்க வரணும். நீங்க எப்ப ஃப்ரீ''
""எப்ப வந்தாலும் ஃப்ரீ  கிடையாது. ஃபீஸ் வாங்குவேன்''
கே.நேசினி, ஜமீன் ஊத்துக்குளி.
தலைவர்: யோவ்! இங்கே வாய்யா! ஒரு பேச்சுக்கு "இசட் ப்ளஸ்' பாதுகாப்பு கேட்டேன். ஜன்னல் கம்பிக்கு அந்தப் பக்கம் பாரு. எத்தனை போலீஸ் நிக்குறாங்கன்னு!
தொண்டன்: நாசமாப் போச்சு. தலைவரே! நேத்து ராத்திரியிலேயிருந்து நாம ஜெயிலுக்குள்ளே இருக்கோம். அது ஜன்னல் கம்பி இல்லே, ஜெயில் கம்பி. அவங்கள்லாம் போலீஸ் இல்ல. ஜெயிலருங்க தலைவரே!
தலைவர்: ?...?...?
ந.சந்தானகிருஷ்ணன், சேலம்
வழுக்கைத் தலை ஆசாமி: எனக்கு இப்படி முடி கொட்டினதுக்கும் எனக்கிருக்கிற குடிப்பழக்கத்துக்கும் சம்பந்தம் உண்டா டாக்டர்?
டாக்டர்: சேச்சே! குடி குடியைத்தான் கெடுக்கும். முடியை ஏன் கெடுக்கப்போகுது!
""31 நாட்கள் கொண்ட மாதங்களைத்தான் உனக்கு ரொம்பப் பிடிக்குமா? ஏன்டா?''
""மாதம் 30 நாளும் குடிக்கமாட்டேன்னு என் பொண்டாட்டிக்கு சத்தியம் பண்ணிக் கொடுத்திருக்கிறேன்''

""விளையாட்டுக்குக் கூட இதுவரை நான் பொய் சொன்னதேயில்லே!''
""சே! விளையாடறதுக்கு உனக்கு இன்னிக்கு நான்தான் கிடைச்சேனா?''
உ.ராஜாஜி, சென்னை

""ஏன்டா, உங்க அம்மா காலைலயிருந்து எதுவுமே பேசாம இருக்கா?''
""அம்மா லிப்ஸ்டிக் கேட்டாங்க, நான் ஃபெவி குயிக் வாங்கிக் கொடுத்தேன் அதான்...''
""நீ என் மகன் இல்லை...நண்பேன்டா!''
ஏ.எஸ்.ராஜேந்திரன், வெள்ளூர்

""செய்தியாளர் சந்திப்பில தலைவர் சொதப்பிட்டாராமே!''
""ஆமாம்...விரும்பிப் படிக்கும் பத்திரிகை எதுன்னு கேட்டதுக்கு கொஞ்ச நாளா குற்றப் பத்திரிகைன்னு சொல்லிட்டாரு''
வி.ஜி.கேசவன், சென்னை.

படிப்பது எதற்காக?

படிப்பது எதற்காக?





நண்பர் ஒருவர் ஆபிரஹாம் லிங்கனிடம்,""படிப்பதால் பணம் கொட்டப் போவதில்லை. பின் ஏன் நீங்கள் எப்போதும் எதையாவது படித்துக் கொண்டே இருக்கிறீர்கள்?''என்று கேட்டார். அதற்கு லிங்கன்,""நான் பணம் சேர்ப்பதற்காகப் படிக்கவில்லை. பணம் வரும்போது எப்படி பண்போடு வாழ வேண்டும் என்பதை தெரிந்து கொள்வதற்காகப் படித்துக் கொண்டிருக்கிறேன்'' என்றார்.

உடல் நலம் காக்கும் உளுந்து

உடல் நலம் காக்கும் உளுந்து

தமிழக மக்களின் முக்கியமான உணவு இட்லி! அமெரிக்கா போன்ற வெளிநாடுகளிலும் கூட பிரசித்திப் பெற்ற உணவு இட்லிதான்! குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற உணவு அது! இட்லி மாவில் சேர்க்கப்படும் உளுந்து, மனிதனுக்கு ஆரோக்கியத்தை நல்கும் அற்புதப் பொருளாகும்.
* உளுந்தைக் கஞ்சியாகவோ, களியாகவோ அல்லது அரிசி சேர்த்து அரைத்து வேக வைத்தோ உணவாக உண்டு வந்தால், உடல் வலுவடையும். எலும்பு, தசை நரம்புகளின் ஊட்டத்திற்கு உளுந்து மிகவும் நல்லது.
* உளுந்துடன் தவிடு நீக்காத பச்சரிசி, சுக்கு, வெந்தயம் சேர்த்து அரைத்துக் களி செய்து, பனை வெல்லத்துடன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும்.
* உளுந்தைக் காய வைத்து அப்படியே அரைத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தாது விருத்தியாகும். நரம்புகளும் புத்துணர்வு பெறும்.
* உளுந்து சாப்பிட்டால் இடுப்பு வலிமையோடு திகழும்.
* பருவம் அடைந்த பெண்களுக்கும், நாற்பது வயதைக் கடந்த பெண்களுக்கும் ஊட்டச்சத்து அதிகம் நிறைந்த உளுந்தைக் கஞ்சியாகச் செய்து கொடுத்து வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
* உளுந்தை நீரில் ஊற வைத்து எடுத்த நீரை, மறுநாள் அதிகாலையில் அருந்த சிறுநீரகம் சம்பந்தமான வியாதிகள் நீங்கும்.

கடி

கடி

 ராமு: அந்தப் பாம்பு என் அந்த டீச்சர் முன்னாடி போய் நின்னு படம் காட்டுது?
 சோமு: அவங்கதான் டிராயிங் டீச்சர்!
 -எஸ்.ஆறுமுகம்,
 28, தியாகி சுப்பையா தெரு,
 கழுகுமலை 628 002.

 சுப்பு: டேய் பாபு, உன்னைப் பார்த்து ரொம்ப நாளாச்சு... அடையாளமே தெரியாம மாறிப்போயிட்டியே?
 கோபு: நான் பாபு இல்லை... கோபு..!
 சுப்பு: அட, பேரையும் மாத்திட்டியா?
 -தேனி முருகேசன், தேனி.

 ""டாக்டர் தருமராஜன்கிட்ட சிகிச்சைக்குப் போக எல்லோரும் பயப்படுறாங்க...''
 ""ஏன்?''
 ""அவரு பேருக்கு முன்னால இருக்குற இனிஷியல்தான் காரணம்...''
 ""என்ன அது?''
 ""எ.ம.''
 -ப.திருமுருகன், திருப்பூர்.

 தொண்டர் 1: நம்ம தலைவர் உலகம் தெரியாத அப்பாவியா இருக்கிறாரே?
 தொண்டர் 2: எதை வைத்து அப்படிச் சொல்றே?
 தொண்டர் 1: பின்னே என்ன? உங்களை எல்லோரும் வசைபாடுறாங்கான்னு சொன்னா, நல்ல ராகமாப் பார்த்துப் பாடச் சொல்லுங்க... நானும் வந்து கேட்கிறேன்னு சொல்றாரே!
 -வீ.பாலசந்தர், த/பெ. வீ.வீரமலை, மோ.கருப்பம்பட்டி கிராமம் (அஞ்சல்)
 முசிறி வட்டம்,
 திருச்சிராப்பள்ளி 621 210.

 ஒருவர்: என்னுடைய ஒரே லட்சியம் பெரிய எழுத்தாளராக ஆகணும்றதுதான்...
 மற்றவர்: சரி, அதுக்காக எழுத்தை இவ்ளோ பெரிசாவா எழுதறது?
 -சுரா.சுரேந்தர்,
 கந்தர்வகோட்டை.

 ஒருவர்: இது ரொம்ப காஸ்ட்லி ஹோட்டல்னு எப்படிச் சொல்றே?
 மற்றவர்: ஒரு தோசை சாப்பிட்டா, 10 கிலோ மாவு அரைச்சுக் கொடுக்கணுமாம்...
 -ஜோ.ஜெயக்குமார்,
 நாட்டரசன்கோட்டை.

பொன் மொழிகள்

பொன் மொழிகள்

1.கர்வம் வெற்றியின் புதைசேறு! - சார்லஸ் லாம்ப்

2.அறிவு கண்களில் தெரியும்; அன்பு முகத்தில் தெரியும்! - லாங்ஃபெல்லோ

3.நம்பிக்கையும் மகிழ்ச்சியுமே உண்மையான
 செல்வம்! - ஹியூம்

4.நீ வாயைத்த திறக்கும்போது உள்ளத்தைத் திறக்கிறாய்; எனவே கவனமாக இரு! - யங்

5.அதிக வேலையாக அலைபவர்களுக்கு கண்ணீர் விட நேரமில்லை! - பைரன்

6.நம்பிக்கை உடையவர்களே வெற்றி அடைய முடியும்! - வர்கீஸ்

7.சிக்கல்கள்தான் மிகப் பெரிய சாதனைகளையும் மிக உறுதியான வெற்றிகளையும்
 உருவாக்குகின்றது! - கென்னடி

8.எந்த வேலையும் இழிவல்ல; இழிவு என்பது சோம்பல்தான்! - விட்மன்

9.மாற்று வழியைக் கண்டுபிடிக்கும் ஆற்றலுக்கு விவேகம் என்று பெயர்! - பால் எல்ட்ரிட்ஸ்

10.துயரத்துக்கு ஒரே மாற்று மருந்து சாதனைதான்! - ஜார்ஜ் ஹென்றிலீவ்ஸ்
 -தொகுப்பு: விசாகன், திருநெல்வேலி.

தகவல்கள்-3

தகவல்கள்-3

மறதி!
 வெறிநாய்க் கடிக்கு மருந்து கண்ட விஞ்ஞானியான லூயி பாஸ்டருக்கு மறதி அதிகம்.
 அவரது திருமண நாளன்றுகூடத் தமது ஆய்வுக்கூடத்தில் மும்முரமாக ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார்.
 திருமண நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. லூயி பாஸ்டரைக் காணாமல் தவித்த அவரது நண்பர்கள் அவரைத் தேடி ஆராய்ச்சிக்கூடத்துக்குள் வந்தனர்.
 நண்பர் ஒருவர் வேகமாக, ""உங்களுக்குத் திருமணம். சீக்கிரம் வாருங்கள்!'' என்றார்.
 ஆனால் பாஸ்டர் அமைதியாக, ""ஏன் அவசரப்படுகிறீர்கள். முதலில் திருமணம் முடியட்டும். பிறகு வந்து கலந்து கொள்கிறேன்'' என்றார்.
 -நெ.இராமன், சென்னை.

 பண்பு!
 ஒருமுறை கல்கி தனது இல்லத் திருமணத்துக்கு தந்தை பெரியாரை அழைத்திருந்தார். காலையிலேயே பெரியார் வருவதாக இருந்தது. இருந்தாலும் அவர் வரவில்லை. இதனால் கல்கிக்கு சற்று வருத்தமாகப் போய்விட்டது.
 ஆனால் திடீரென்று மாலையில் பெரியார் திருமண வீட்டுக்கு வந்தார். கல்கிக்கு ஆச்சரியமாகப் போய்விட்டது.
 பெரியாரிடம், கல்கி, ""ஏன் காலையிலேயே வரவில்லை'' என்று கேட்டார்.
 அதற்குப் பெரியார், ""நான் கருப்புச் சட்டை அணிபவன். உங்கள் இல்லத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும்போது, உங்கள் சுற்றத்தாருக்கு அது அபசகுனமாகத் தோன்றும். எனவேதான் காலையில் வராமல் இப்போது வந்தேன்'' என்று விளக்கமளித்தார்.
 பெரியாரது உயர்ந்த பண்பு கண்டு அனைவரும் வியந்து போனார்கள்.
 -என்.காளிதாஸ், சிதம்பரம்.

 மை!
 ஒருசமயம் எழுத்தாளர் மாநாட்டில் கலந்துகொண்டு பேசும்போது கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், ""எழுத்தாளர்கள் தங்கள் பேனாவை எப்படிப்பட்ட மை தொட்டு எழுதுகிறார்கள் தெரியுமா? சிலர் பெருமையில் எழுதுகிறார்கள். வேறு சிலர் பொறாமையில் எழுதுகிறார்கள். சிலர் தற்பெருமையைத் தொட்டு எழுதுகிறார்கள். ஆனால் தொடக்கூடாத மை மடைமை, கயமை, பொய்மை, வேற்றுமை.
 நன்மை தரக்கூடிய செம்மை, நேர்மை, புதுமை ஆகியவற்றைத் தொட்டு வாசகர்களின் மனதைத் தொடும்படியாக எழுத வேண்டும்.
 எழுத்தாளர்கள் நீக்க வேண்டிய மைகள் - வறுமை, ஏழ்மை, கல்லாமை, மடைமை, அறியாமை. இந்த நோக்கத்தையே எழுத்தாளர்கள் கடமையாகவும் உரிமையாகவும் கொள்ள வேண்டும்'' என்று குறிப்பிட்டார்.
 இடம், பொருள், ஏவல் அறிந்து அதற்கேற்றபடி பேசுவதில் கலைவாணர் வல்லவர் என்பதை இந்த உரையின் மூலம் அறியலாம்.
 -ஆச்சா, செவல்குளம்.

வானொலி−யின் தந்தை இந்தியர்

வானொலி−யின் தந்தை  இந்தியர்

ஒவ்வொரு கண்டுபிடிப்புக்கும் பின்னால் ஒரு பெரிய வரலாறு புதைந்து இருக்கிறது. நம்மில் பலரும் வானொலியைக் கண்டுபிடித்தது மார்க்கோனி என்றுதான் கூறுவோம். ஆனால், அது தவறு.
 வானொலியானது ஒருவரால் மட்டுமே கண்டுபிடிக்கப்படவில்லை. இது பலரின் கூட்டு முயற்சி. அந்தக் கண்டுபிடிப்புக்குப் பிதாமகனாக இருந்தவர் ஒரு இந்தியர் என்றால் அது நமக்கு எல்லாம் பெருமையே. மேற்கு வங்காளத்தில் பிறந்த ஜெகதீஸ் சந்திரபோஸ்தான் அந்தப் பெருமைக்குரியவர்.
 அவரின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் தேசிய அமெச்சூர் வானொலி தினமாக நவம்பர் 30-ஐ நாம் கொண்டாடுகிறோம். ஜெகதீஸ் சந்திரபோஸ் 1858 நவம்பர் 30-இல் பிறந்தார். அவர் ஆற்றிய சாதனைகள் பல.
 கிரஸ்கோகிராப் கருவியைக் கண்டுபிடித்த இவர், இந்தியத் துணைக்கண்டத்திலேயே முதன் முறையாக 1904-ஆம் ஆண்டு தனது புதிய கண்டுபிடிப்புக்காக அமெரிக்காவிடமிருந்து காப்புரிமை பெற்றார். சுதந்திரத்துக்கு முன் பரந்து விரிந்த வங்காளத்தில், இன்றைய வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவிற்கு அருகில் உள்ள பிக்ராம்பூரில் பிறந்தாலும், அவர் கல்வி பயின்றது,பணியாற்றியது எல்லாமே கொல்கத்தாவில்தான்.
 மேற்படிப்புக்காக லண்டன் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படிக்கச் சென்றார். ஆனால் அவரது உடல் நிலை அதற்கு ஒத்துழைக்கவில்லை. எனவே மருத்துவப் படிப்பினை இடையிலேயே நிறுத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டார். ஆனாலும் மனம் தளராமல், நோபல் பரிசு பெற்ற லார்ட் ரேலிக் அவர்களோடு இணைந்து கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொண்டு பட்டம் பெற்றார்.
 ரிமோட் வயர்லெஸ் சிக்னல் ஆய்வில் வெற்றிகண்ட போஸ், முதன்முதலாக செமிகண்டக்டரைக் கொண்டு வானொலி அலைகளை ஒலிபரப்ப முடியும் என நிரூபித்தார். இந்த ஆய்வின் முடிவுகளை சுயநலத்தோடு வியாபாரம் ஆக்காமல் அனைவரும் இதில் மேற்கொண்டு ஆய்வு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அனைவருக்கும் கிடைக்கச் செய்தார்.
 செடி, கொடிகளின் மீது இவரின் கவனம் திரும்பியதன் பயனாக உருவானதே கிரஸ்கோகிராப். இது செடிகளின் தொடர்பியலையும், அது எப்படி பாதிக்கப்படும்போது வலிகளை வெளிப்படுத்துகிறது போன்ற அதிசயத் தகவல்களையும் ஆய்வின் மூலம் நிரூபித்தார்.
 வானொலித் துறையில் ஜெகதீஸ் சந்திரபோஸ் பல முன் முயற்சிகளை மேற்கொண்டார். குறிப்பாக அவரின் கண்டுபிடிப்பான கிரிஸ்டல் ரேடியோ டிடக்டர், வேவ்கைடு, ஹார்ன் ஆண்டனா போன்றவற்றை தனது மைக்ரோவேவ் டிடக்டரில் முதன்முறையாகப் பயன்படுத்தி சாதனை படைத்தார்.
 1893-இல் நிக்கோலஸ் டெஸ்லா வெளிநாட்டில் ஒரு பொது இடத்தில் வைத்து முதல்முறையாக வானொலி ஒலிபரப்பினை சோதனை முறையில் செய்து காட்டினார். அதற்கு அடுத்த ஆண்டே இந்தியாவில் ஜெகதீஸ் சந்திரபோஸ் கொல்கத்தாவில் உள்ள டவுன் ஹாலில் வைத்து ஒரு சோதனையை மக்கள் மத்தியில் செய்து காட்டினார்.
 போஸ் சர்வதேச ஆய்விதழ்களில் தனது கண்டுபிடிப்புகளைப் பற்றி எழுதினார். இது சர்வதேச அளவில் இவருக்குப் பெயரையும் புகழையும் ஈட்டித் தந்தது.
 இவ்வாறு உலகம் முழுவதும் உள்ள பல்வேறு அறிவியல் ஆய்வாளர்கள் வழங்கிய அரிய தகவல்களைக் கொண்டுதான் மார்க்கோனி, வானொலி ஒலி அலைகளை சாலிஸ்பெரி சதுப்பு நிலத்தில் இருந்து தொலைதூரத்துக்கு அனுப்பினார்.
 மே 1897-இல் ஜெகதீஸ் சந்திரபோஸ் அதே போன்றதொரு சோதனையை மீண்டும் கொல்கத்தாவில் செய்து, வெற்றியும் கண்டார்.
 அதன் அடிப்படையில் அவர் லண்டனில் உள்ள ராயல் சொசைட்டியில் தனது ஆய்வுக்கட்டுரையைப் படித்தார். அது அங்கு கூடிய விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதன்பின் அவர் மார்க்கோனியைச் சந்தித்து தனது ஆய்வின் முடிவுகளை விவாதித்தார். ஆனால் போஸ் தனது முடிவுகளை காப்புரிமை செய்ய விரும்பவில்லை. மார்க்கோனி முந்திக்கொன்டார். விளைவு, இன்று வானொலியைக் கண்டுபிடித்தவர் என்ற பெருமைக்குரியவராக மார்க்கோனி திகழ்கிறார்.
 இதன் மூலம் வானொலி கண்டுபிடிப்பில் போஸின் பங்களிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை நாம் அறியலாம். அதனாலேயே இவரின் நினைவாக தேசிய அமெச்சூர் வானொலி நாள், இவரது பிறந்தநாளில் கொண்டாடப்பட்டு வருகிறது.
 அமெச்சூர் வானொலி உரிமத்தினை இந்தியக் குடிமகன் யாரும் வாங்கலாம். அதற்கு அடிப்படைக் கல்வித்தகுதி இருந்தால் போதுமானது. மற்றும் 12 வயது பூர்த்தியான அனைவரும் தேர்வினை எழுதலாம். இதற்கான பிரத்யேகத் தேர்வினை எழுதித் தகுதி பெற்ற பின் உரிமம் வழங்கப்படும். அதன் பின் அதற்குத் தேவையான வானொலிப் பெட்டிகளை வாங்கி அனைவரும் அமெச்சூர் வானொலி உபயோகிப்பாளர்களாக ஆகலாம்.

 

வரலாற்றில் இன்று Today in History 22 / 12

வரலாற்றில் இன்று   
Today in History  திசம்பர் 22
  1.     1790 - துருக்கியின் இசுமாயில் நகரை இரசியாவின் சுவோரவ் என்பவனும் அவனது படைகளும் கைப்பற்றின.
  2.     1807 - வெளிநாடுகளுடனான வருத்தகத் தொடர்புகளை நிறுத்தும் சட்டமூலம் ஐக்கிய அமெரிக்காவில் கொண்டுவரப்பட்டது
  3.     1845 - பஞ்சாபில் ஃபெரோசிசா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் பிரித்தானியப் படைகள் சீக்கியர்களைத் தோற்கடித்தனர்.
  4.     1849 -  இரசிய எழுத்தாளர் பியோதர் தசுதயெவ்சுகியின் மரணதண்டனை கடைசி நேரத்தில் விலக்கப்பட்டது.
  5.     1851 - இந்தியாவின் முதலாவது சரக்கு ரயில் உத்தராஞ்சல் மாநிலத்தில் ரூர்க்கீ நகரத்தில் ஓடவிடப்பட்டது.
  6.     1895 - எக்சுரேயைக் கண்டுபிடித்த  செருமன் விஞ்ஞானி வில்ஃகெம் ரோண்ட்சென் ( Wilhelm Rontgen) முதன் முதலாக தனது மனைவியின் கையை எக்சுரே எடுத்துக் காட்டினார்
  7.     1915 - மலேசியாவின் இலங்கைத் தமிழரால் வாங்கப்பட்ட யாழ்ப்பாணம் என்ற விமானம் பிரித்தானிய வான்படைக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டது.
  8.     1937 - லிங்கன் சுரங்கம் நியூயோர்க் நகரில் பொதுமக்களுக்காகத் திறந்துவிடப்பட்டது.
  9.     1938 - எழுபது மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அடியோடு அழிந்து போய் விட்டது என்று கருதப்பட்ட கொயலாகாந்த் இன மீன் வகை அன்சூவான் தீவுக்கருகே உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டது.
  10.     1942 - இரண்டாம் உலகப் போர்: போரில் பாவிப்பதற்கென வீ-2 ஏவுகணைகளை உற்பத்தி செய்ய இட்லர் உத்தரவிட்டார்.
  11.     1944 - இரண்டாம் உலகப் போர்: வியட்நாமில் ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கெதிராக வியட்நாம் மக்கள் இராணுவம் அமைக்கப்பட்டது.
  12.     1989 - ஒரு வார சண்டையின் பின்னர் இயோன் லியெஸ்கு, கம்யூனிச ஆட்சியாளரான நிக்கலாய் செய்செசுகுவை வீழ்த்தி ருமேனியாவின் ஆட்சியைக் கைப்பற்றினார்.
  13.     1989 - கிழக்கு  செருமனியையும் மேற்கு செருமனியையும் பேர்லினில் பிரித்த "பிராண்டன்பேர்க் கதவு" 30 ஆண்டுகளின் பின்னர் திறந்து விடப்பட்டது.
  14.     1990 - மார்சல் தீவுகள், மைக்குரோனீசியா கூட்டு நாடுகள் ஆகியன விடுதலையடைந்தன

Thursday, December 20, 2012

திருக்குறள் Thirukkural 172

வெஃகாமை

திருக்குறள் - Thirukkural

  
படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர்.
- (குறள் : 172)
நடுவுநிலைமை அல்லாதவற்றைக் கண்டு நாணி ஒதுங்குகின்றவர் பிறர் பொருளைக் கவர்வதால் வரும் பயனை விரும்பி அறன் அல்லாத செயல்களைச் செய்யார்.

வரலாற்றில் இன்று Today in History 21/12

வரலாற்றில் இன்று   
Today in History  திசம்பர்  21

  1.     69 - வெசுபசியான் ரோமப் பேரரசின் ஒரே ஆண்டில் 4 ஆவது பேரரசனாக முடிசூடினான்.
  2.     1768 - நேபாளம் ஒரு குடையின் கீழ்க் கொண்டுவரப்பட்டு இன்றுவரையுள்ள நாடு தோற்றுவிக்கப்பட்டது.
  3.     1898 - pierre Curie, Marie Curie என்ற இரண்டு விஞ்ஞானிகள் ரேடியத்தின் கதிரியக்கத் தன்மையைக் கண்டுபிடித்து அறிவியல் வரலாற்றில் தங்கள் பெயரைப் பதித்து கொண்டனர்.
  4.     1902 - இலங்கையில் போவர் போர்க் கைதிகளாக இருந்தவர்கள் தென்னாப்பிரிக்காவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்.
  5.     1913 - உலகின் முதலாவது குறுக்கெழுத்துப் போட்டி "நியூயோர்க் வேர்ல்ட்" பத்திரிகையில் வெளியானது.
  6.     1948 - அன்னை தெரசாவின் சீரிய பணி தொடங்கியது. கல்கத்தாவின் மோத்திசிசு சேரியில் தனது தொண்டைத் தொடங்கினார் அந்த தெய்வத்தாய்
  7.     1968 - சந்திரனுக்கான மனிதனை ஏற்றிச் சென்ற விண்கலம் அப்பல்லோ 8 புளோரிடாவில் இருந்து ஏவப்பட்டது. புவியீர்ப்பைத் தாண்டிச் சென்ற முதலாவது மனித விண்கலம் இதுவாகும்.
  8.     1971 - ஐநா அவையின் பொதுச் செயலாராக கூர்ட்டு வால்ட்எயிம் தெரிவானார்.
  9.     1973 - அரபு-இசுரேல்  சிக்கலுக்குத்  தீர்வு காண்பதற்கான  செனீவா மாநாடு  தொடங்கியது.
  10.     1979 - ரொடீசியாவின் விடுதலைக்கான உடன்பாடு இலண்டனில் கைச்சாத்திடப்பட்டது.
  11.     1991 - கசக்சுதானின் அல்மா-ஆட்டா நகரில் கூடிய பதினொரு சோவியத் குடியரசுகளின் தலைவர்கள் தனிநாடுகளின் பொதுநலவாய அமைப்பு உருவாகியவுடன் சோவியத் ஒன்றியம் கலைக்கப்படும் என அறிவித்தனர். இதன்படி டிசம்பர் 26 ஆம் நாள் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டது.
  12.     1995 - பெத்லகேம் நகரம் இசுரேலியர்களிடம் இருந்து பாலசுதீனர்களிடம் ஒப்படைக்கப்பட்டது



வரலாற்றில் இன்று Today in History 20 / 12

வரலாற்றில் இன்று   
Today in History  திசம்பர் 20

  1.     69 - நீரோ மன்னனின் முன்னாள் தளபதியாக இருந்த வெசுபசியான் ரோமப் பேரரசனாகத் தன்னை அறிவிக்கும் பொருட்டு ரோம் நகரை அடைந்தான்.
  2.     1192 - சிலுவைப் போரை முடிவுக்குக் கொண்டு வந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டு விட்டு இங்கிலாந்து திரும்பும் வழியில் முதலாம் ரிச்சார்ட் ஆசுதிரியாவின் ஐந்தாம் லியோபோல்டினால் கைது செய்யப்பட்டான்
  3.     1606 -வெர்சினியா நிறுவனத்தின் மூன்று கப்பல்கள் ஆங்கிலேயர்களை ஏற்றிக் கொண்டு வெர்சினியாவின் சேம்சுடவுன் நகரை நோக்கிக் கிளம்பியது. இதுவே அமெரிக்காக்களில் இடம்பெற்ற முதலாவது நிரந்தர ஆங்கிலக் குடியேற்றத் திட்டமாகும்.
  4.     1803 - பிரெஞ்சுகளிடம் இருந்து லூசியானா விலைக்கு வாங்கப்பட்டதைக் குறிக்க நியூ ஓர்லென்சு நகரில் பெரும் கொண்டாட்டங்கள் இடம்பெற்றன.
  5.     1844 - இலங்கையில் அடிமைகளை வேலைக்கமர்த்துவதற்கெதிரான சட்டமூலம் கொண்டுவரப்பட்டது
  6.      1860 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: தெற்கு கரொலைனா ஐக்கிய அமெரிக்காவில் இருந்து வெளியேறிய முதலாவது மாநிலமானது.
  7.     1876 - பங்கிம் சந்திர சட்டோபாத்தியா என்பவர் "வந்தே மாதரம்" எனும் இந்தியாவின் சுதந்திர எழுச்சிப் பாடலை எழுதினார்.
  8.     1917 - சோவியத்தின் முதலாவது இரகசியக் காவற்துறை "சேக்கா" அமைக்கப்பட்டது.
  9.     1942 - இரண்டாம் உலகப் போர்: கல்கத்தா ஜப்பானியர்களின் குண்டுத்தாக்குதலுக்கு உள்ளானது.
  10.     1943 - பொலிவியாவில் இராணுவப் புரட்சி நடந்தது.
  11.     1951 - அணுவாற்றலினாலான மின்சாரம் முதற்தடவையாக ஐடஃகோவில் பிறப்பிக்கப்பட்டது. இது நான்கு மின்குமிழ்களை எரிக்கப் பயன்பட்டது.
  12.     1955 - கார்டிஃப் வேல்சின் தலைநகரமாக அறிவிக்கப்பட்டது.
  13.     1960 - வியட்நாம் விடுதலைக்கான தேசிய முன்னணி அமைக்கப்பட்டது.
  14.     1988 - போதைப்பொருள் கடத்தலுக்கெதிரான ஐநா சாசனம் வியென்னாவில் கைச்சாத்திடப்பட்டது.
  15.     1989 - பனாமாவின் அதிபர் மனுவேல் நொரியேகாவைப் பதவிலிருந்து அகற்ற ஐக்கிய அமெரிக்கா தனது படைகளைப் பனாமாவுக்கு அனுப்பியது.
  16.     1998 - Houston ஒரே பிரசவத்தில் எட்டு குழந்தைகளை ஈன்றெடுத்தார்
  17.     1999 - போர்த்துக்கல் மக்காவுவை மக்கள் சீனக் குடியரசிடம் கையளித்தது

Wednesday, December 19, 2012

வரலாற்றில் இன்று Today in History 19 / 12

வரலாற்றில் இன்று   
Today in History   திசம்பர் 19

  1.     324 - லிசீனியசு ரோமப் பேரரசன் பதவியைத் துறந்தான்.
  2.     1154- இங்கிலாந்தின் இரண்டாம்  என்றி முடிசூடினான்.
  3.     1606 - ஐக்கிய அமெரிக்காவின் 13 குடியேற்ற நாடுகளில் முதலாவதான வேர்சீனியாவின் சேம்சுடவுன் நகரில் இங்கிலாந்தில் இருந்து மூன்று கப்பல்களில் ஆங்கிலேயர்கள் வந்திறங்கினர்.
  4.     1871 - யாழ்ப்பாணத்தில் முதல் தடவையாக கத்தோலிக்க மதகுருப் பதவிகள் (ordination) வழங்கப்பட்டன.
  5.     1916 - முதலாம் உலகப் போர்: பிரான்சில் வேர்டன் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில்  செருமனியப் படைகளை பிரெஞ்சுப் படைகள் தோற்கடித்தன.
  6.     1932 - பிபிசி எனப்படும் பிரிட்டன் ஒலிபரப்புக் கழகம் முதன் முதலில் வெளிநாடு ஒன்றுக்கு ஒலிபரப்பத் தொடங்கியது. Empire Service என்ற அந்தச் சேவையைப் பெற்ற நாடு ஆசுத்திரேலியா.
  7.     1941 - அடொல்ஃப் இட்லர்  செருமனிய இராணுவத் தலைவர் ஆனார்.
  8.     1961 - போர்த்துகீச குடியேற்ற நாடான டாமன் டையூ பகுதியை இந்தியா தன்னுடன் இணைத்துக்கொண்டது.
  9.     1963 - சன்சிபார் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்று சுல்தான்  ஃகமூட் பின் முகமது தலைமையில் முடியாட்சியைப் பெற்றது.
  10.     1972 - சந்திரனுக்கு கடைசித் தடவையாக மனிதரை ஏற்றிச் சென்ற அப்பல்லோ 17 பாதுகாப்பாகப் பூமி திரும்பியது.
  11.     1983 - உலகக்கோப்பை காற்பந்துப் போட்டியில் வழங்கப்படும் பரிசுக்கிண்ணம் பிரேசிலில் அந்நாட்டு காற்பந்தாட்ட அமைப்பின் தலைமையகத்தில் வைத்துத் திருடப்பட்டது.
  12.     1984 -  ஆங்கொங்கின் ஆட்சியை ச் சூலை 1, 1997 இல் மக்கள் சீனக் குடியரசிடம் மீண்டும் ஒப்படைக்கும் ஒப்பந்தம் சீனத் தலைவர் டெங் க்சியாவோபிங், பிரித்தானியப் பிரதமர் மார்கரெட் தாட்சர் ஆகியோருக்கிடையில் கைச்சாத்திடப்பட்டது.
  13.     1986 - சோவியத் எதிர்ப்பாளி அந்திரேய் சாகரொவ் வீட்டுக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
  14.     1997 - ஆங்கிலத் திரையுலகில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய Titanic திரைப்படம் முதன் முதலில் திரையிடப்பட்டது.
  15.     2000 - யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் 3 வயதுக் குழந்தை உட்பட 8 பொதுமக்கள் இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.